"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, September 26, 2013

தெய்வம் நின்று காக்கிறது....



” உங்க மகனுக்கு கண்டம் இருக்குங்க பார்த்து வண்டி எதுவும் ஓட்டாமல் இருப்பது நல்லது “ தங்கம் சொல்லும்போது நான் அதிர்வுடன் பார்க்கிறேன்.

” என்ன தங்கம் சொல்றீங்க. அஞ்சான் எப்போதும் வண்டி ஓட்டுவதில் பைத்தியம்… அதனால் தான் அவனை ஹெல்மெட் போட்டுக்கோடா, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கோடான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

” இல்லம்மா நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க நான் சொல்ல வருவதை. பையன் வண்டி எடுத்தான்னா கண்டிப்பா விபத்து பயங்கரமா நடக்கும் அவ்ளவு தான் நான் சொல்லிட்டேன் கிளம்பறேன். ” சொல்லிவிட்டு தங்கம் இடத்தை காலி செய்துவிட்டார் என் மனதில் சுமையை ஏற்றிவிட்டு…

அஞ்சானுக்கு இன்னைக்கு போன் செய்துடணும். எப்ப பார்த்தாலும் நிம்மதி இல்லாம இருக்கிறேன். அவன் வண்டி எடுத்தான்னா அசுர வேகத்துல வண்டி ஓட்டுகிறான். இளம் வயது. பயம் இருப்பதில்லை.. சொன்னா கேட்டுப்பான்.

யோசனையில் இருக்கும்போது போன் சத்தம் என்னை இயல்புக்கு அழைக்கிறது. அட அஞ்சான்..

“ அஞ்சான் என்னம்மா எப்படி இருக்கே ராஜா? “

” நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா, தம்பி, எப்படி இருக்காங்க?”

” எல்லாரும் சௌக்கியம்பா… என்ன இந்த நேரத்துல போன்?”

” அம்மா நான் புதிதா வாங்கின வண்டியை விற்கிறேன்மா.. தப்பா நினைக்காதீங்க,. ஆசையா வாங்கிக்கொடுத்த பைக் அதுவும் இத்தனை செலவு செய்து வாங்கிக்கொடுத்தீங்க புதுசு வாங்கி ஒரு மாசம் கூட ஆகல. ஆனா நாலு முறை ஆக்சிடெண்ட் ஆகிவிட்டதும்மா அதான் விற்கலாம்னு. ”

”ஐயோ உனக்கு ஒன்னும் ஆகலையே? அதிர்ச்சியுடன் நான்.”
”இல்லைம்மா.. நான் சௌக்கியமா இருக்கேன்.”

” சரி ராஜா. விற்றுவிடு.. அப்பாட்ட நான் சொல்லி சமாளித்துக்கொள்கிறேன் ”சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். தெய்வம் இத்தனை எளிதாய் என் மகனை காப்பாற்றும்னு நினைக்கவில்லை.

வண்டி இல்லன்னா எங்கும் சுற்றமாட்டான். ஆபிசு விட்டால் வீடு. நிம்மதியாக இருக்கலாம்.. ஆசுவாசம் எனக்குள்..

வீட்டில் இவர் கத்த ஆரம்பிச்சுட்டார்.
”என்ன நினைச்சுட்டு இருக்கான். இவ்ளோ செலவு பண்ணி புது பைக் வாங்கி இப்படி அரக்கப்பரக்க விற்கனுமா என்ன?”

”எனக்கு வண்டியை விட குழந்தையின் நலன் முக்கியமா படுதுங்க.”
” எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் ” திட்டிவிட்டு நகர்ந்தார்.

”அஞ்சான் ஊருக்கு வர டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டியாம்மா? ”
”பண்ணிட்டேன்மா.. இண்டர்வ்யூல செலக்ட் ஆகிவிட்டதால்  நிம்மதி.மெடிக்கலும் முடிந்துவிட்டது. எப்ப ஜர்னின்னு சொன்னால் அன்னிக்கு கிளம்பிருவேன்மா.. ”

” அப்பாவின் என் ஆசிகள்டா ராஜா. ” சொல்லிவிட்டு போன் வைத்தேன்.
அஞ்சான் வரும் நாளை எதிர்ப்பார்த்து ஆசையுடன் காத்திருந்தோம் எல்லோருமே இங்கு.

பகவானே என் பிள்ளைகளை என்றும் நான் பிரியாமல் இருக்கும்படி எனக்கு கருணை செய்துட்டேப்பா…

தினமும் ஆபிசுக்கு கிளம்புமுன் எல்லோருக்காகவும் வேண்டிக்கிட்டு கிளம்புவேன். ஆபிசு விட்டு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை…

இன்னைக்கு என்னவோ மனசு ஒரு மாதிரியா இருக்கே… ஏதோ ஒரு பயம் மனதில் அடைக்கிறதே.. அஞ்சான் வண்டி எடுத்திருப்பானோ? சே இருக்காது கண்டிப்பா இருக்காது. அவனிடம் தான் வண்டி இல்லையே.. 

இதை நினைச்சுக்கிட்டே நான் ஆபிசை விட்டு மாலை கிளம்பி ரோட் கிராஸ் செய்கிறேன். அப்ப சட்டுனு ஒரு காட்சி  கண்முன். ஒரு வண்டி வேகமாக வந்து அஞ்சான் வண்டியை வேகமாக இடிக்க அஞ்சான் வண்டியில் இருந்து மேல எழும்பி பறந்தான் வலியுடனான அவன் முகம் தெரிந்ததும் மிரண்டேன். சட்டென்று மென்மையான உடையில் பாபா வந்து அஞ்சானை தாங்குவது போல் தெரிந்தது. தலைச்சுற்ற ஆரம்பித்துவிட்டது.

” ஐயோ இப்ப தானே உடம்பு கொஞ்சம் சரியானது போல் இருந்தது. மறுபடி தலைச்சுற்றல் மயக்கம். கடவுளே நெஞ்சுவலி வந்துவிடக்கூடாது. அஞ்சானுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. ” நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.

வீட்டின் வேலைகள் சின்னவனின் எக்சாம் பாடங்கள் என்று மும்முரமாகிவிட்டேன். ராத்திரி நெஞ்சு அடைப்பது போல் இருந்தது படுக்கும் முன்னாடி.  தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.
அகால நேரத்தில் இடைவிடாது போன் சத்தம்..

அகால நேரத்தில் போன் வந்தால் உடம்பு தூக்கிப்போடுகிறது. ஊரில் யாருக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டம் அதிகமாகிறது. வேகமாக எழுந்து போன் எடுத்தால் தங்கை ஷோபி அழுகைக்குரலுடன். ” மஞ்சு மஞ்சு வேகமா ஸ்கைப்ல வா ” என்றாள்.

“என்னடி இந்த நேரத்துல என்னாச்சு ? “ என்றேன் பயத்துடன்.
“முதல்ல வா நீ ” என்றாள்…

நான் பயத்தில் கதறிய சத்தம் கேட்டு வீட்டில் எல்லோருமே எழுந்தாச்சு.. இரண்டு மணி… வேகமாக ஸ்கைப்பில் வந்தால் அழுகை முகத்துடன் ஷோபி. என்னாச்சு ஷோபி என்னாச்சு சொல்லு எனக்கு பதட்டம் அதிகமானது. மஞ்சு மஞ்சு டென்ஷனாகாதே.. பெரியம்மா நைட் கல்யாண ரிசப்ஷனுக்கு போகணும்னு சொல்லி அஞ்சானிடம் சொல்லி இருக்காங்க.

 உதவி யாரேனும் கேட்டால் மறுக்காமல் உடனே உதவிட துடிக்கும் பிள்ளை அஞ்சான். இதோ என்று உடனே கிளம்பிட்டான். நைட் ரெண்டு பெரியம்மாவையும் பின் சீட்டில் உட்காரவெச்சுட்டு கார் ஓட்டிக்கிட்டு பாடி ப்ரிட்ஜ் கிட்ட வரும்போது பின்னாடி வந்த வண்டி ஒன்று ஓவர் டேக் பண்ணும் அவசரத்தில் இவன் வண்டியை முட்டி மோதிருச்சு என்று சொல்லி முடிக்குமுன் எனக்கு மயக்கம் வந்தது.
“ஐயோ அஞ்சான் அஞ்சான் அஞ்சான் ” விழுந்தேன்.

இவர் பயந்து ” ஷோபி அஞ்சான் எங்கே அவனுக்கு ஒன்னும் ஆகலையே ”என்று எல்லோரும் கதறினார்கள்.

“இதோ இதோ அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல மஞ்சு கண் முழி அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல நல்லாருக்கான் இதோ பாரு இதோ பாரு அஞ்சான் அம்மாவை பாருடா ” என்று சொல்லி என் பிள்ளையை காட்டினாள்.

 என் பிள்ளையின் அழுத முகம்.. நான் எப்போதோ சின்ன வயதில் அடிக்கும்போது என் பிள்ளை அழுதமுகத்தை பார்த்திருக்கிறேன், அதோடு இத்தனை வருடம் கழித்து என் பிள்ளையை இப்படி பார்த்ததும் மனம் சமாதானம் ஆகலை.

 ” என்னாச்சு அஞ்சான் என்னாச்சுடா ”என்று கத்தினேன்.

”எனக்கு ஒன்னும் இல்லம்மா… வண்டி மோதினதுல கார் பல்டி அடித்து உருள ஆரம்பித்து தரையை தலைகீழ் தேய்த்துக்கொண்டே போய் சுவற்றில் இடித்து நின்றது.

ஜன்னல் கண்ணாடி உடைந்து “ சீட் பெல்ட் போடாததால் “ வெளியே போய் விழுந்துட்டேன்மா “ என்றான்.

” ஐயோ பெரியம்மாக்கு ரெண்டு பெரியம்மாவுக்கும் என்னடா ஆச்சு ” என்றேன் பதட்டத்துடன்…

” ஒரு பெரியம்மாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இன்னொரு பெரியம்மா கால் சீட்டுக்கு இடையில் மாட்டிக்கொண்டு எடுக்க வராததால் வண்டியை திருப்பி மெல்ல அவரை மீட்டோம் “ என்றான்.

”போலீஸ் விரைந்து வந்தது ஸ்பாட்டுக்கு. முகம் தெரியாதவர்கள் எல்லாம் உதவினார்கள் அம்மா ” என்றான்.

” ஐயோ கடவுளே இருவருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது..”
இரண்டு பெரியம்மாவும் போலிசிடம் ” இது எங்கப்பிள்ளை தான். இவன் பெயரில் தப்பில்லை.. பின்னாடி இருந்து வந்த வண்டி முட்டி மோதி வேகமாக போய்விட்டது. எங்களால் வண்டியை பார்க்க முடியவில்லை ” என்று சொல்ல அஞ்சான் மேல் எந்த வித கேசும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது.

இந்த விபத்தில் அஞ்சான் மட்டும் சின்ன சின்ன காயங்களோடு எப்படி தப்பினான் என்று போலிசுக்கள் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். என் தங்கையும் பெரியம்மா மகளும் சொல்றாங்க பாபா தான் அஞ்சான் உயிரை பத்திரமா காப்பாற்றி இருக்கிறார் என்று.
”சீட் பெல்ட் எப்போதும் போடுடா போடுடா ” என்றால் போடவே மாட்டான்.

அன்றும் சீட் பெல்ட் போடாததால் உயிர் தப்பியிருக்கான்.
நான் கீர்த்தி வினாயகரிடம் போய் உட்கார்ந்து அழுகிறேன். ” என் பிள்ளைக்கு ஏதாவது ஒன்று ஆனால் சத்தியமாக நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். தெரியும் உனக்கு. என் மேல் எத்தனை கருணை பகவானே உனக்கு.”

முகம் தெரியாதவர் எத்தனையோ பேர் அருகே இருந்து உதவி இருக்கிறார்கள். போலிஸ் ஸ்டேஷனிலும் ஆஸ்பிட்டலிலும் அஞ்சானைக்காப்பாற்றும் முயற்சியில் தான் இரண்டு பெரியம்மாக்களும் இருந்திருக்கிறார்கள். இருவரின் ஓயாத வேண்டுதல். அஞ்சான் நல்லபடியா குவைத் போய் சேரவேண்டும். அவன் அப்பா அம்மாவிடம் பத்திரமாக சென்று சேரவேண்டும்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் அத்தனைப்பேரும் அஞ்சானுக்காகவும். இரண்டு பெரியம்மாக்களுக்காகவும் பிரார்த்தித்தனர்.
அத்தனைப்பேரின் ஆசிகள், பிரார்த்தனைகள் பத்திரமாய் சரியாக சொன்ன தேதியில் வந்து இறங்கினான் அஞ்சான்.

கடவுளின் கருணையை நினைத்து தினமும் இடைவிடாது நன்றிகள் சொல்லிக்கொண்டு.. இந்த விபத்தில் ஒரு பெரியம்மாவுக்கு மட்டும் இன்னும் ஆபரேஷன் நடந்து படுக்கையில்.. அவரும் எழுந்து வேகமாக நடமாடவேண்டும். பூரண நலம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்ந்துக்கொண்டே….

எப்போதும் சிறு வயதில் இருந்து அஞ்சானிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். “ ஸ்வாமி கிட்ட கண்மூடி உட்காருடா கொஞ்சம் நேரமாவது. “எனக்காக உட்காருவான். நான் சொல்கிறேனே என்று உட்காருவான். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்னர் தினமும் ஸ்வாமி கிட்டே உட்காருகிறான் ஒரு மணி நேரம். பிரார்த்திக்கிறான்.

இந்த விபத்து நடந்தப்பின் நண்பர்களும் உறவினர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே போல்…

” அஞ்சான் நல்லப்பையன். உதவி என்று கேட்டால் எப்போதும் இன்முகத்துடன் செய்பவன். அவனுக்கு என்றும் நல்லதே நடக்கும்.  ”

”அம்மா அப்பா நீங்கள் இருவருமே யாருக்கும் ஒரு கெடுதலும் செய்ததில்லை. மனதாலும் நினைத்ததில்லை. நாங்கள் இருவரும் செய்த நல்லவையே என் பிள்ளையின் உயிரை காப்பாற்றியதாக சொல்கிறார்கள் எல்லோரும்…”

இது நடந்தது மார்ச் மாதம்.. இறைவன் அருளால்.. எல்லோரின் ஆசீர்வாதத்தால்.. அஞ்சான் என்னும் விக்னேஷ்ராம் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான்.“ இந்த வேலை கிடைத்ததும் என் அன்புத்தோழியின் உதவியால் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் என் தோழியை “ வேலை வாங்கித்தந்த என் தோழி சொல்கிறாள் இப்போது

“ மஞ்சு சீக்கிரம் பையனுக்கு பொண்ணு பாரு.. கல்யாணச்சாப்பாடு எப்பப்போடப்போறே? “

எல்லாமே பகவான் செய்துக்கொண்டிருக்கிறார்… முயற்சி மட்டுமே நம்முடையது.  அந்தந்த நேரம் வரும்போது தானாகவே நல்லது நடக்கும் ஜெம்னி என்று சொன்னேன் ஆசுவாசம் ஆனது எனக்கு.


நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..

எனக்கு கெடுதல் செய்ய நினைப்போருக்கும் சரி, எனக்கு கெடுதல் செய்வோருக்கும் சரி, என்னைத்தூற்றுவோருக்கும் சரி நான் பதிலுக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை. இனியும் செய்யப்போவதில்லை..என்னைப்பொறுத்தவரை எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும். நான் பட்ட இந்த அவஸ்தைகள் யாருக்கும் வராதிருக்கவே வேண்டுகிறேன்.

33 comments:

  1. கடைசி வரி வரை இப்படி பயந்துகொண்டே
    படிக்க வைத்துவிட்டீர்களே
    கடைசிப் பத்தி மிக மிக அருமை
    எல்லோரும் இப்படி இருந்து விட்டால்
    எவ்வளவு நல்லா இருக்கும் என்கிற
    பேராசை மனதில் வந்து போகிறது
    சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்கள்
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. இப்படி நடந்தபோது மூன்று நாட்கள் நாங்கள் வீட்டில் சமைக்காது சாப்பிடாது அஞ்சானுக்காகவும் பெரியம்மா இருவருக்காகவும் வேண்டிக்கொண்டும் அழுதுக்கொண்டும் இருந்தோம் ரமணிசார்.. இறைவன் கிருபையால் நலம். எப்போதும் ஒரேபோல் இருக்கிறேன் ரமணிசார். மனதளவில் கூட யாருக்கும் தீங்கு நினைப்பதில்லை. உங்கள் ஆசீர்வாதம், வாக்கு நடக்கட்டும் சார்...

      Delete
  2. திக் திக் என்று இருந்தது... // எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல், நல்லதே நினைத்து, நல்லதே பேசி, நல்லதே பகிர்கிறோம்.... // என்றும் நல்லதே நடக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ததாஸ்து ! அன்பு நன்றிகள் டிடி.

      Delete
  3. நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..

    எனக்கு கெடுதல் செய்ய நினைப்போருக்கும் சரி, எனக்கு கெடுதல் செய்வோருக்கும் சரி, என்னைத்தூற்றுவோருக்கும் சரி நான் பதிலுக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை. இனியும் செய்யப்போவதில்லை..என்னைப்பொறுத்தவரை எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும். நான் பட்ட இந்த அவஸ்தைகள் யாருக்கும் வராதிருக்கவே வேண்டுகிறேன்.

    என் கதையை - நினைவை மீண்டும் படிப்பதுபோல் அதிர்ந்துபோனேன் ..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் இராஜிம்மா... இறைவனருள் என்றும் உண்டு உங்களுக்கு.

      Delete
  4. பாபா வந்து அஞ்சானை தாங்குவது போல் தெரிந்தது. //

    முகம் தெரியாதவர் எத்தனையோ பேர் அருகே இருந்து உதவி இருக்கிறார்கள். போலிஸ் ஸ்டேஷனிலும் ஆஸ்பிட்டலிலும் அஞ்சானைக்காப்பாற்றும் முயற்சியில் தான் இரண்டு பெரியம்மாக்களும் இருந்திருக்கிறார்கள். இருவரின் ஓயாத வேண்டுதல். அஞ்சான் நல்லபடியா குவைத் போய் சேரவேண்டும். அவன் அப்பா அம்மாவிடம் பத்திரமாக சென்று சேரவேண்டும்.//

    பாபாவின் அருளும், உங்கள் ஆசியும்,,அன்பானவர்களின் வேண்டுதல்களும் உங்கள் மகனை காப்பாற்றியது.
    இறைவன் அருளால் நல்ல வாழ்க்கை துணை கிடைத்து அஞ்சான் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் பிள்ளைக்கு இருக்கட்டும் கோமதிம்மா.. அன்பு நன்றிகள்.

      Delete
  5. மிகுந்த படபடப்புடன் படித்து முடித்தேன், மஞ்சு. நல்லவேளையாக இத்தோடு விட்டது. மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    நானும் ஒருமுறை இதே வேதனையை நன்கு அனுபவித்துள்ளேன். என் சின்ன பிள்ளைக்கு பெங்களூரில் ஏற்பட்டதோர் விபத்தினால்.

    ReplyDelete
    Replies
    1. அந்த நிமிடங்களில் உடல் மனம் எல்லாமே மரத்து போகிறது அண்ணா... எதைப்பற்றியும் சிந்திக்க முடியாததொரு நிலை. அன்பு நன்றிகள்.

      Delete
  6. தெய்வம் எட்டு கையோசு, சிம்ம, மயில் வாகனத்துலலாம் வராது மஞ்சும்மா! கீரைக்காரம்மா, இஸ்திரி வண்டிக்கார ஐயா, பேப்பர் பொறுக்கும் பையன், காரோட்டி போகும் அல்ட்ரா மாடர்ன் பொண்ணு ரூபத்துலதான் தெய்வம் வரும் இனி. எப்படியோ அஞ்சான் நல்லபடியா பிழைச்சு வந்ததே போதும். பையனுக்கு இருந்த திருஷ்டி கழிந்ததுன்னு நினைச்சுக்கோங்க. பையனுக்கு என் ஆசிகள். உங்களுக்கு என் ஆறுதல்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராஜி நீங்க சொன்னது சத்தியமான வார்த்தைகள். சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த நம்பிக்கை எப்போதும் உண்டுப்பா... மனிதரில் தெய்வத்தை நான் எப்போதுமே காண்பதுண்டு. தெய்வம் ஒருபோதும் நேரில் வந்து அருள் பாலிப்பதில்லை. மனித ரூபத்தில் தான் நமக்கு வந்து உதவுகிறார். அம்மா பாஸ்போர்ட் தொலைந்தபோதும் இப்படித்தான்பா.. அஞ்சான் விபத்திலிருந்து தப்பியதும் இப்படித்தான்பா... உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் என் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும்பா...நிறைவான அன்பு நன்றிகள் ராஜி.

      Delete
  7. இறையருள் காப்பாற்றியது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாதேவி... இறைவன் அல்லாது வேறு யார் இருக்கின்றார் நம்மை காக்க.

      Delete
  8. என்ன மகளே! ஏதோ பதிவென்றே படித்தேன்! உண்மைச் சம்பவம் என்று. உணர்ந்தவுடன் ஆடிபோயிட்டேன்! நான் வணங்கும் வேங்கடவன் என்றும், உனக்கும் உன் குடும்பத்திற்கும்
    துணையிருப்பான்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசீர்வாதம் இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை அப்பா.. உடல்நலன் பார்த்துக்கோங்க.

      Delete

  9. நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..

    பதட்டத்துடன் படிக்க வைத்துவிட்டீர்கள்... தங்கள் மகன் விபத்தில் இருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நிறைவான அன்பு நன்றிகள் குமார். அன்று நான் இருந்த நிலையை அப்படியே எழுதினேன்பா..

      Delete
  10. நல்லா இருக்கட்டுங்க.

    ReplyDelete
    Replies
    1. நிறைவான அன்பு நன்றிகள்பா உங்கள் ஆசீர்வாதத்திற்கு.

      Delete
  11. நானும்கூட வீட்டில் பூஜையறைப் பக்கம் போவதே இல்லையென்று அம்மாவிடம் திட்டு வாங்கிக கொண்டு (எனக்காக அம்மாவே வேண்டிக்குவாங்க) இருக்கேன். அஞ்சான் கிட்ட என்னையும் மஞ்சுகிட்ட எங்கம்மாவையும் பாக்கறேன். டோன்ட்வொர்ரி மஞ்சு...! பெரிய கண்டத்தைச் சந்திச்சு மீண்டு வந்த அஞ்சான் இனி எதிலும் வெல்வான். மனம் நிறைய வாழ்த்துக்களும் ஆசிகளும்!

    ReplyDelete
    Replies
    1. அம்மா இருக்கும் வரை உங்களுக்கு என்றும் எந்தக்குறைவும் இல்ல கணேஷா. அம்மாவை பார்த்தது இன்னும் கண்களில் நிற்கிறது. அம்மாக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கோங்கப்பா...

      Delete
  12. பாபா வந்து அஞ்சானை தாங்குவது போல் தெரிந்தது. //
    இது போதும் மஞ்சு. அவர் எப்போதும் கைவிடமாட்டார்.
    டென்ஷன் மனதில் வைக்காதீர்க்ள் உடலுக்கு நல்லதில்லை.
    மகன் நன்றாக இருப்பான் இன்னும் இரண்டு வருஷத்தில் பேரனோ பேத்தியோ எதிர்பார்க்கிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசிர்வாதம் என்றென்றும் என் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் வல்லிம்மா.. பிள்ளைகளும் கணவரும் சௌக்கியமாக இருந்தால் நானும் சௌக்கியம் வல்லிம்மா.. ஆஹா உங்கள் வாக்கு பலிக்க இன்னும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும்.

      Delete
  13. மனதளவில் கூட யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை ... இப்படி எல்லோருமே இருந்து விட்டால் எத்தனை அன்பான உலகமாயிருக்கும். அன்பும்,ப்ரியமும்தான் அடுத்தவர் துயரை கண்டு தாங்கிக்கொள்ள முடியாத நிலையை தருகிறது. பெண்ணும், தாய்மை உணர்வும் மலரினும் மென்மை..! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம்!

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நினைப்போம் என்ற உங்கள் மென்மையான அன்பு மனதை தாய்மையை உரைக்கிறது உங்கள் கருத்துப்பா.. நிறைந்த அன்பு நன்றிகள்.

      Delete
  14. பெற்ற தாயின் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும் என்று உணர முடிகிறது. உங்கள் பிள்ளை, உங்கள் நல்ல மனதிற்கும், எங்கள் அனைவரின் பிரார்த்தனையுடனும் வாழ்வாங்கு வாழுவான்.
    நடந்து முடிந்ததை எண்ணி வருந்தாதீர்கள், மஞ்சு. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
    கூடிய விரைவில் கல்யாண சாப்பாடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நிறைந்த அன்பு நன்றிகள் தங்கள் ஆசிர்வாதத்துக்கு ரஞ்சனிமேம். கண்டிப்பாக மேம்.

      Delete
  15. திக் திக் என்றிருந்தது. நல்லவர்க்கு என்றும் நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  16. இந்த பதிவை படித்து முடிக்கும் வரை அஞ்சானுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது என்ற படபடப்பு. பிள்ளைகளுக்கு பைக் போன்ற வண்டிகளை வாங்கி கொடுத்து விட்டு பெற்றோர் மனம் படும்பாடு பெற்றவர்களுக்கு மட்டுமே புரியும். என் பெற்றோருக்கு நான் ஒரே பையன் என்பதால் பயந்து கொண்டு எனக்கு சைக்கிள் வாங்கித்தரவே இல்லை. நான் வேலைக்கு சேர்ந்த பிறகுதான் முதல் சைக்கிள் வாங்கினேன்.

    // நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..//

    நல்லதே நினைப்போம். இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்.


    ReplyDelete
  17. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது மஞ்சு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...