அட எல்லாரும் இன்னைக்கு ஆசிரியர் தினத்தை நினைவுக்கொண்டு ஆசிரியர்களைப்பற்றி
பகிர்வு பகிர்ந்து தன் அனுபவங்களை சொல்லும்போது எனக்கும் நான் பள்ளியில் படிக்கும்போது
பண்ண சேட்டைகள் என்னை பொறுமையாக பொறுத்துக்கொண்ட ஆசிரியர்களைப்பற்றி சொல்லியே ஆகணும்னு
தோணுகிறது.. சொல்லட்டுமா?
எல் கே ஜி ல மேரி மிஸ்...
மாலை மணி 3 ஆனால் ஒரு
மசால் வடையும் ஒரு கப் டீயும் குடிப்பாங்க உதட்டில் இட்டிருக்கும் லிப்ஸ்டிக் அழியாம
இருக்கே இவங்க வடை சாப்பிட்டு டீ குடிச்சப்பின்னரும் அப்டின்னு அப்பவே எனக்கு ஒரே சந்தேகம்.
ஆனா கேட்கலை அவங்க கிட்ட...
யூ.கே.ஜி விஜி மிஸ்....
ரொம்ப ரொம்ப ஸ்வீட்.. நான் வளர்ந்தப்புறமும் பஸ்ல அம்மாவை அடையாளம்
கண்டுப்பிடிச்சு என்ன கொடுமை பாருங்க எனக்கு அடையாளம் தெரியல. அவங்களே வந்து பேசினாங்க...
ஒன்னாம் கிளாஸ் லூசி மிஸ்...
அடங்கி ஒரு இடத்துல உட்காரவே மாட்டியா நீ?? இரு உங்க அம்மாக்கிட்ட
வந்து கம்ப்ளெயிண்ட் பண்றேன்... வீட்டுக்கு வந்தாங்க கம்ப்ளெயிண்ட் பண்ண... அம்மாட்ட
ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க.. :)
இரண்டாம் கிளாஸ் டாட் மிஸ்...
ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. எந்த அளவு ஸ்ட்ரிக்ட் என்றால்
காரணம் கேட்காமலே அடிக்க விரட்டுவாங்க. அடி வாங்காம நைசா க்ளாஸ் முழுக்க ஓடி அவங்களையும்
மூச்சிறைக்க வைப்பதுண்டு...
மூன்றாம் கிளாஸ் அருணா மிஸ்....
என்ன ஒரு அழகு.. என்ன ஒரு கலர்.. ஆனா விட்டேத்தித்தனம் ஜாஸ்தி..
பிள்ளைகள் படிக்கிறாங்களா இல்லையான்னு கூட கவனிப்பதில்லை.. எப்ப பார்த்தாலும் அவங்க
பையன் படிக்கிற க்ளாஸுக்கு ஓடி போய் கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க :)
நான்காம் கிளாஸ் வசுமதி மிஸ்...
என் குறும்புத்தனத்தையும் மீறி என்னை நேசித்த மிஸ்...நடனம்னா
வெறும் பரதநாட்டியத்துலயே முட்டிக்கிட்டு இருக்காதேன்னு சொல்லி புரியவெச்ச மிஸ்....
ஐந்தாம் கிளாஸ் ஜெயந்தி மிஸ்.. ( எங்க எச் எம் பொண்ணு)
கோ எஜுகேஷன் என்பது மட்டுமில்லாம ஒரு பெஞ்ச்ல பொண்ணு பையன் அப்டி உட்காரவைச்சாங்க.
என் பக்கத்துல உட்கார பசங்க பயந்தாங்க. நம்புங்க அப்ப ரொம்ப ரௌடி… யார் கிட்டயும் வம்புக்கு
போகமாட்டேன். ஆனா என் பேச்சுக்கு வந்தா நல்லா அடிப்பேன்.. பாவம் மோஹன் தாஸ் என் பக்கம்
உட்கார்ந்த பையன்.. எச் எம் பையன் என் பேக் தூக்கி போட்டதுக்கு மோஹன் தாஸ்னு நினைச்சு
செம்ம அடி. அத்தனை அடியும் வாங்கிட்டு கடைசில சொல்றான் நான் இல்லப்பா விஜய் தான் தூக்கிப்போட்டான்னு..
ஆறாம் கிளாஸ் கௌசல்யா மிஸ்….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஆனா அவங்களே மிரண்டு போற மாதிரி ஒரு நாள் மன்ந்திலி டெஸ்ட்
சைன்ஸ்… ஆனா ஜீரம் அதிகமாகவே ரிக்ஷால ஸ்கூல்
பாட்டியை துணைக்கு வைத்து வீட்டுக்கு அனுப்பினாங்க. அம்மா டூட்டிக்கு கிளம்பிட்டு இருக்காங்க.
நான் வருவதை பார்த்து என்னது ஜுரமா? அதே சைக்கிள் ரிக்ஷால ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய்
“ டாக்டர் பெயர் சம்பத்குமார் “ ஊசிப்போட்டு சூடா பாலுடன் மருந்து கொடுத்து அதே ரிக்ஷால
உட்காரவெச்சு ஸ்கூலுக்கு திருப்பி விட்டுட்டாங்க. மிஸ் மிரண்டு போய் இப்படி ஒரு அம்மாவானாங்களே
பார்க்கணும்…
ஏழாம் கிளாஸ் சரோஜா
மிஸ்…
ரொம்ப கனிவான மிஸ்..
பிள்ளைகள் எல்லோருமே தன் பிள்ளைகள் போல பார்த்துக்கிட்டாங்க. யாராவது சாப்பிடாம வந்தா
உடனே ஒரு பன் வாங்கி தருவாங்க சாப்பிட.. எங்க மாடி வீடு திடிர்னு தீப்பற்றி எரிந்தப்ப
என்ன சொல்லி ஸ்கூல்ல லீவ் கேட்கலாம்னு யோசிச்சு இதைச்சொல்லி சரோஜா மிஸ் கிட்ட நின்னப்ப உடனே ப்யூனை கூப்பிட்டு பன் வாங்கி வரச்சொல்லி பிடிக்காத
பன்னை என்னை தின்ன வெச்சாங்க பாருங்க….
ரங்கமணி மேத்ஸ்
மிஸ்… அதே ஏழாம் கிளாஸ் தான்..
எல்லாரும் இனிமே
க்ளாஸ்ல ஆங்கிலத்துல தான் பேசனும்னு சர்க்குலர் வந்தப்ப ” இங்கிலிஷ் பீரியட்ல இங்கிலீஷ்ல
பேசனும், தமிழ் பீரியட்ல தமிழ்ல பேசனும் அப்டின்னு “
என் போறாத நேரம்
என் நாக்கில் சனீஸ்வரர் டிஸ்கோ ஆடிண்டிருந்தார்… சும்மா இருந்தாரா? மிஸ் இங்கிலிஷ்
பீரியட்ல இங்கிலீஷ்ல பேசனும், தமிழ் பீரியட்ல தமிழ்ல பேசனும் மேத்ஸ் பீரியட்ல மேத்ஸ்ல
பேசனுமா? அப்டின்னு நான் கேட்டப்ப அவங்க மூக்குகண்ணாடி தாண்டி முறைச்சதை இப்பவும் நினைச்சு
பார்க்கிறேன்..
அதே மிஸ் பாரதியார்
பாட்டுப்போட்டிக்கு ஜட்ஜா மூணு பேர்ல ஒருத்தரா வந்து உட்காரணுமா ? மூணுல ஒருத்தர் இவர்
இன்னொருத்தர் லலிதா மிஸ் என் பாட்டு டீச்ச்சர்.. இன்னொருத்தர் வேற.
நான் ரொம்ப சுவாரஸ்யமா முப்பது கோடி முகமுடையாள் அப்டின்னு
பாடும்போது இதோ இந்த பொண்ணு தான் இப்படி கேட்டு என்னை டென்ஷனாக்கினதுன்னு போட்டு உடைக்க..
ஐயோ எனக்கு பரிசு கிடைக்காதோன்னு பயந்தேன். ஆனால் எப்போதும் போல் எனக்கே முதல் பரிசு
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா..
எட்டாம் கிளாஸ்
சரோஜா பேர் ஒன்னு ஆனா வேற மிஸ்…
இந்த வருடத்தில்
இருந்து தான் ஆங்கிலமீடியமா இருந்தாலும் தமிழ் பீரியட்ல வர மிஸ்ஸை ” வணக்கம் ஆசிரியை
“ அப்டி சொல்ல சொன்னாங்க. க்ளாஸ் முடிஞ்சு போகும்போது “ நன்றி ஆசிரியை “ அதனால் தான்
என்னால் இயல்பாய் வயதில் மூத்தவர்களை ஐயான்னு கூப்பிடமுடிகிறதுன்னா அப்ப தொடங்கின பழக்கம்
தான்…
ஒன்பதாம் கிளாஸ்
தனலக்ஷ்மி மிஸ்…
எதையும் கண்டுக்கமாட்டாங்க.
ஆனா கோபம் வந்தால் யாரேனும் மிஸ்சிவ்ஸ் பண்ணினா நேரா ப்ரின்ஸ்பல் ரூமுக்கு அனுப்பிருவாங்க.
பத்தாம் கிளாஸ்
சியாமளா மிஸ் (தேவதை என்னைப்பொறுத்தவரை)
சியாமளா என்ற பெயர்
கேட்டால் எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு.. இத்தனை அழகான தேவதை முதல் நாள் கிளாசுக்குள்
நுழைந்தப்ப ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன அழகு அப்படின்னு எல்லோரும் ஆச்சர்யப்பட்டோம்..
நீளமான தலைமுடி.. வலது கையில் தான் வாட்ச்.. தங்கக்கைக்கெடிகாரம்… அழகு முகம்.. மஹாலக்ஷ்மி
களை… ஆங்கிலத்தில் ஃப்ளூயண்டா பேச வைத்த பெருமை இவர்களுக்கு தான் சேரும்.. நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்..
ஐயோ ஐயோ முடிச்சதுமே
கொண்டு போய் அம்மா திருச்சில எஸ் ஆர் சி ல பி என் ஆர் எம் பாலிடெக்னிக் ல தள்ளிட்டாங்க..
புதிய இடம், புதிய
மாணவிகள், புதிய அசிரியர்கள்.. ஆமாம் ஆசிரியர்களும் உண்டு..
முக்கியமா ரமேஷ்பாபு
மாஸ்டர்.. எனக்கு பயம்னா பயம்… தினமும் வந்து எதுனா கேள்வி கேட்டு எழுந்து நிக்க வைப்பார்..
பிடிக்கவே பிடிக்காது எனக்கு… தினமும் தவறாம வேண்டிப்பேன். பகவானே இன்னைக்கு மாஸ்டர்
பாத்ரூம்ல வழுக்கி விழுந்து வரக்கூடாது க்ளாசுக்கு என்று.. ஆனா ஒரு நாள் கூட லீவ் எடுக்காமல்
வந்தார் மாஸ்டர்.. 3 வருஷம்.
எல்லா ஆசிரியர்களும்
என் வால்தனத்தை பொறுத்துக்கொண்டதற்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்…. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..
Tweet |
இனிமை...
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
அன்பு நன்றிகள்பா...
Deleteதீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html
வந்து கலந்துக்கொள்வோர் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்பா..
Deleteஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போதே பதிவு எழுத துவங்கி விட்டீர்கள் போல இருக்கிறதே !
ReplyDeleteசுப்பு தாத்தா.
அப்பாஆஆஆஆஆஆ.. கிண்டலு? :)
Deleteபதிவு சுவாரஸ்யம். ஒன்றாம் வகுப்பிலிருந்தே கவர் செய்து விட்டீர்கள்! சுப்பு தாத்தாவின் கமெண்ட் சூப்பர்!
ReplyDeleteஹுஹும் எல் கே ஜி ல இருந்து :) ஏன்னா அப்ப ப்ரீ கே ஜி இல்லப்பா... சுப்பு அப்பா கிண்டல் செய்கிறார்ப்பா :)
Deleteஅன்புள்ள மஞ்சு,
ReplyDeleteஅருமையாக ... ஒவ்வொரு க்ளாஸ் ஆக பொறுமையாக ..... எழுதி அசத்திட்டீங்கோ.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...
Delete//முக்கியமா ரமேஷ்பாபு மாஸ்டர்.. எனக்கு பயம்னா பயம்… தினமும் வந்து எதுனா கேள்வி கேட்டு எழுந்து நிக்க வைப்பார்.. பிடிக்கவே பிடிக்காது எனக்கு… தினமும் தவறாம வேண்டிப்பேன். பகவானே இன்னைக்கு மாஸ்டர் பாத்ரூம்ல வழுக்கி விழுந்து வரக்கூடாது க்ளாசுக்கு என்று.. //
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
//ஆனா ஒரு நாள் கூட லீவ் எடுக்காமல் வந்தார் மாஸ்டர்.. 3 வருஷம்.//
அடடா, நல்லவேளை இதைக்கண்டு நீங்க வழுக்கி விழாமல் இருந்தவரை சந்தோஷம், மஞ்சு.
மனசுல பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாம நாங்களும் 3 வருஷம் சமர்த்தா முடிச்சிட்டோம்ல அண்ணா :)
Delete//எல்லா ஆசிரியர்களும் என் வால்தனத்தை பொறுத்துக்கொண்டதற்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்…. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..//
ReplyDeleteவாலில்லா மஞ்சுவின் வால்தனங்களுக்குப் பாராட்டுக்கள். மகிழ்ச்சியான பகிர்வு. ;)
யெஸ் கரெக்ட் அண்ணா.. அப்ப தான் நான் வாலு, இப்ப சமர்த்தாச்சே நானு :)
Delete//பாவம் மோஹன் தாஸ் என் பக்கம் உட்கார்ந்த பையன்.. எச் எம் பையன் என் பேக் தூக்கி போட்டதுக்கு மோஹன் தாஸ்னு நினைச்சு செம்ம அடி. அத்தனை அடியும் வாங்கிட்டு கடைசில சொல்றான் நான் இல்லப்பா விஜய் தான் தூக்கிப்போட்டான்னு..//
ReplyDeleteமோஹன்தாஸ் என்னைப்போல ஒரு அப்பாவிப்பையன் போலிருக்கு. ;)
//பத்தாம் கிளாஸ் சியாமளா மிஸ் (தேவதை என்னைப்பொறுத்தவரை)//
வர்ணனை A1 .... ஹைய்யோஓஓஓஓ ;)))))
சபாஷ் !
மோஹன் தாஸ் அப்பாவி சரி தான்.. ஆனா உங்களைப்போலவா? ஆஆஆஆஅஹ் அண்ணா நீங்க அப்பாவியாக்கும்? இருங்க மன்னி கிட்ட கேட்டால் நிறைய கம்ப்ளெயிண்ட்ஸ் இருக்கே உங்க மேலே :)
Deleteஇவ்வளவு ஞாபக சக்திக்குக் காரணம்
ReplyDeleteஅடித்தளமாய் அன்பு மேலோங்கிய மனமாகத்தான்
இருக்கக் கூடும்
உண்மையில் என்னால் இப்படி பட்டியலிடமுடியவில்லை
அருமையான சிறப்புப் பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
உண்மையே ரமணி சார்.... நிறைந்த அன்பு.... எப்போதும் உண்டு மனதில்... யாரையும் வெறுப்பதில்லை.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்..
Deleteவணக்கம் அக்கா...
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
அதற்கான சுட்டி இதோ....
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html
நன்றி.
நட்புடன்
மனசு சே.குமார்
ஓ அன்பு நன்றிகள்பா இதோ இப்பவே வந்து பார்க்கிறேன்...
Deleteமனம் கவர்ந்த அத்தனை ஆசிரியர்களையும்
ReplyDeleteமனம் மலர்ந்து ஆசிரியர் தினத்தன்று அறிமுகப்படுத்திய்தற்கு பாராட்டுக்கள்..
ஹை... இராஜிம்மா மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஎந்த வருட ஆசிரியரையும் மறக்காமல் இருக்கிங்க அக்கா.. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நன்றிகள் சசி...
Deleteஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஜனா...
Deleteஎன்னுடைய வலைப்பக்கத்திலிருந்து வர இயலவில்லை...நீங்கள் கொடுத்த லிங்கில் வந்தேன்...அட்டகாசக் குழந்தையை பொறுத்து அட்டகாசமாக்கிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஹா எழில், அன்பு நன்றிகள்பா... என்ன பிரச்சனை என் வலைப்பூவில் என்று தெரியலப்பா...
Deleteஅன்பு நன்றிகள் ரமணி சார்..
ReplyDeleteஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் ஆசிரியர்களை மட்டும் மறக்க முடியாது. அவ்ர்களின் நினைவுகளை ஏதோ தரு்ணத்திலாவது அசைப் போட்டு விடுவோம். பகிர்வு பள்ளி பருவத்திற்கு அழைத்து சென்றது. அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு மனத்திற்கு சொந்தக்காரர் தாங்கள் என்பது பதிவின் மூலம் பளிச்சிடுகிறது. நன்றி.
ReplyDeleteஉங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்திங்க !! எல்கேஜி ல இருந்து சொல்லியிருக்கீங்களே..:)மிஸ் பண்ணாம பிடிச்ச எல்லா மிஸ்ஸையும் சொல்லிட்டீங்க, //பத்தாம் கிளாஸ் சியாமளா மிஸ் (தேவதை என்னைப்பொறுத்தவரை)//
ReplyDeleteசியமளா என்ற பெயருக்கு கருப்புப் பெண் என அர்த்தம் (sanskrit) :)
அருமையான பகிர்வு
ReplyDeleteஅருமையான பகிர்வு.அனைவரையும் நினைவு வைத்து பெயரோடு பகிர்ந்தமை ஆச்சரியம்.
ReplyDeleteஅன்பு மஞ்சு அந்த பேபி க்ளாஸ் போட்டோ ஒண்ணு போடக் கூடாதாம்மா!! இந்தத் தேவதையை வளர்த்து பதிவுலகிற்குக் கொடுத்த அத்தனை ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் என் வணக்கங்கள்.
ReplyDeleteஉங்களுக்கு வாழ்த்துகள்.:)