உயிர்ப்பித்து விளையாடுவது ஏன்?
என்றோ கொன்றாய் மனதை இறைவா
நடை பிணமாய் அலைய விட்டாய்
கர்மபலன் ஒன்றே காரணம் என்றாய்
சரி என்றே தொடர்ந்தது வாழ்க்கை
விளையாட்டை தொடங்கிவிட்டாய்
இனி வெற்றி தோல்வி யாரறிவார்
மனித விதியை உன் வசமாக்கி
மனிதரிடம் ஏன் முயற்சிக்கிறாய்
உன் சித்து மாயமெல்லாம்..
இருண்ட குகையில் வெளிச்சமாய்
நெருப்பில் இருந்து மீட்டவராய்
உயிரை கொடுத்த ரட்சகனாய்
உயிர்ப்பித்து விளையாடுவது ஏன்?
Tweet |
விதியை உன் வசமாக்கி
ReplyDeleteமனிதர்களிடம் ஏன் விளையாடுகிறாய்
அருமையான் கேள்வி வித்தியாசமான சிந்தனை
(சிந்தனைக்கும் படைப்புக்கும்
இக்கவிதையில் கொஞ்சம்
இடைவெளி இருப்பதுபோல் படுகிறது
புரிந்து கொள்வதில் என்னுடைய குறையாகக் கூட இருக்கலாம்)
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் சொன்னது சரியே ரமணிசார் இடைவெளி இருக்கிறது.... அடடா நீங்கள் புரிந்துக்கொண்டதும் சரியே.... நான் தான் மனம் அன்று இருந்த நிலையில் எழுதியது....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார்...
இறைவனின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாது..
ReplyDeleteமெல்ல மெல்ல சாகடித்து பின் உயிர்ப்பித்து உணர்வுகளோடு விளையாடும் ரட்சகனுக்கு இதெல்லாம் ஜாலி தான்.
வார்த்தைகள் உங்களுக்கு சுலபமாய் வசப்படுகின்றன..
அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்புடன் கருத்து பதிந்து அதில் கண்ணதாசனின் வரிகளை உவமையாய் தந்தது மிக சிறப்பு கலை... உன் கருத்துகளை இங்கே கண்டு அகமகிழ்கிறேன் கலை..
ReplyDelete