ஒன்பதாம் வகுப்பு
படிக்கும்போது ஒரு நாள் கனவில் ஒரு வயதானவர் தலையில் வெள்ளைத்துணி முறுக்கி… திண்ணையில்
“ அப்ப எங்க வீட்டில் திண்ணை இருந்தது “ ஒய்யாரமாக
சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்…
யார் இந்த தாத்தா?
எனக்கு தெரியவில்லை.. எங்கள் குடும்பத்தில் தாத்தா யாராவது இறந்தவர் வந்தாரோ கனவில்
என்றே நினைத்தேன்..
மூன்று முறை கனவு
வந்தது.. முதல் முறை இவர் எங்க வீட்டு திண்ணையில்.. இரண்டாவது முறை ஒரே மண் திட்டு
அங்கே ஒரு கல்.. அந்த கல்லின் மேல் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது இன்னொரு கால்
வைத்துக்கொண்டு கையை அருள் பாலிப்பது போன்று… சுற்றி எந்த அரவமோ அலங்காரமோ இல்லை..
சிதிலமடைந்த இடம் போன்று… மூன்றாவது முறை எங்க வீட்டின் சுவர் மேல் உட்கார்ந்துக்கொண்டு
என்னையே பார்ப்பது போன்று….
எனக்கு தெரியவில்லை
இவர் யாரு என்று..
பள்ளிப்படிப்பு,
கல்லூரி முடிந்து திருமணம் முடிந்து பிள்ளைப்பேறும் முடிந்து என் கணவர் குவைத் செல்லும்
வாய்ப்பு வந்தபோது மும்பையில் ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனை… அப்போது அங்கிருந்த ஏதோ
ஒரு கோயிலில் நுழைந்து நல்லபடியாக குவைத் போய் சேர வேண்டும் என்று வேண்டினார்.. வேண்டிவிட்டு
பார்த்தால் அது பாபா கோயில்… அங்கிருந்தோர் சொன்னது ஷீர்டி பாபா கோயில் இது.. வேண்டிக்கிறது
எல்லாம் கண்டிப்பா நடக்கும் என்று…
முதல் விடுமுறைக்கு
நேராக சென்னை வராமல் எங்களை மும்பை வரச்சொல்லி 1993 யில் எல்லாம் நண்டு சிண்டு எங்க
குழந்தைகள் தான் நான் என் மகன் விக்னேஷ் ராம், என் தங்கை, தங்கை கணவர், அவர்களின் இரண்டு
குழந்தைகள் கணேஷ் ராம் தத், விஜய விமோஹிதா, அம்மா எல்லோரும் கிளம்பிச்சென்றோம்..
நாங்கள் ஷீர்டி
செல்வது இப்போது போல அப்போது அத்தனை எளிதன்று.. எங்கும் சாப்பாடு சரியாக கிடைக்காமல்…
குடிக்க நீர், பிள்ளைகள் மூவரும் கைப்பிள்ளைகள் அவர்களுக்கு உணவு, சுடும் வெயில்… காற்று
இப்படி எல்லாம் தாண்டி ஒருவழியாக சென்று அடைந்தோம் ஷீர்டி.. அந்த இடம் எனக்கு முன்பே
கண்டது போலவே இருந்தது..
இப்போது போல தார்
ரோடு, கடைகள் சுற்றி இப்படி இல்லை அப்போது வெறும் மணல் திட்டு தான் எங்கும்…
உள்ளே நுழைந்தால்
பாபா… என் கனவில் கண்ட பாபா.. எத்தனை கருணை பாபாவுக்கு என் மேல்…
இரண்டாவது பிரசவம்
மிக சிக்கலானபோதும், இவருக்கு ஆபிசில் ஒரு பெரிய பிரச்சனை வந்தபோதும், என் மூத்த மகன்
கார் ஆக்சிடெண்டில் பிழைத்ததும் இந்த ஷீர்டி பாபாவின் கருணையே.. அற்புதங்கள் நடக்க
ஆரம்பித்தது அன்று முதல் இதோ இன்று வரை…
Tweet |
பாபாவின் அருள்.
ReplyDeleteஉங்கள் கனவில் அவர் யாரென்று தெரியுமுன்னே வந்தது விசேஷம்.
கனவு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, என் அம்மா காலமான பிறகு ஒரு மாதத்துக்குள் என் கனவில் வந்து என்னை அவர் என்னைத் தேற்றியது போலப் பேசியதுதான்.
அற்புதம்... அம்மாவுக்கு உங்கள் மீது எத்தனை பாசம் என்று அறியமுடிகிறதுப்பா...
Deleteஅற்புதங்கள் நடக்க ஆரம்பித்தது
ReplyDeleteஅன்று முதல் இதோ இன்று வரை…
அற்புதமாய் ஒரு பகிர்வு..!
ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜிம்மா...
Deleteமூன்று முறை கனவு வந்தது.. முதல் முறை இவர் எங்க வீட்டு திண்ணையில்.. இரண்டாவது முறை ஒரே மண் திட்டு அங்கே ஒரு கல்.. அந்த கல்லின் மேல் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது இன்னொரு கால் வைத்துக்கொண்டு கையை அருள் பாலிப்பது போன்று… சுற்றி எந்த அரவமோ அலங்காரமோ இல்லை.. சிதிலமடைந்த இடம் போன்று… மூன்றாவது முறை எங்க வீட்டின் சுவர் மேல் உட்கார்ந்துக்கொண்டு என்னையே பார்ப்பது போன்று….//
ReplyDeleteஅற்புத அனுபவம்.
நம்பினவர்களை காக்கும் மஹான்.
வாழ்க வளமுடன்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கோமதிம்மா...
Deleteவியாழனுக்கான அருமையான
ReplyDeleteசிறப்புப் பதிவு
பாபாவின் கருணை மழை தொடர்ந்து
தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும்
பொழிய வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்...
Deleteஅருமையான வியக்க வைக்கும் அனுபவம் மஞ்சு.
ReplyDeleteமுழுவதும் பொறுமையாகப்படித்தேன். ரஜினி நடித்த பாபா படம் பார்த்தது பொல இருந்தது.
எல்லாமே நம்பிக்கை தான்.
நம்பிய பேர்களுக்கு நல்லதே நடக்கும்;
வாழ்த்துகள். மஞ்சு.
பாபாவையே கனவில் வரவழைத்துள்ள மஞ்சு யூ ஆர் க்ரேட் !
நம்பினவர்களுக்கு கடவுள் அண்ணா....
Deleteபாபாவை நான் கனவில் வர வைக்கல அண்ணா..
பாபாவே வந்தார்...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...
பாபா அற்புதங்கள் நிறைந்தவர்தான்...
ReplyDeleteஅவரை வணங்கினால் வெற்றி நிச்சயம் அக்கா..
உண்மையே குமார்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...
Deleteஎன்றாவது சீர்டி சாய்பாபா கோவில் செல்ல வேண்டும். நெடுநாளைய ஆசை... என் அப்பாவின் இஷ்ட தெய்வம் சாய்பாபா
ReplyDeleteகவலையேப்படாதீங்க. பாபாவின் அழைப்பு கிடைக்குமன்று நீங்க ஷீர்டியில் பாபாவை தரிசிப்பீங்க.
Deleteநான் சென்னையில் வேலைபார்க்கும் போது ஒவ்வொருவியாழன் காலையில் மயிலாப்பூரில் உள்ள ஷிர்டி சாய்பாபா கோயிலுக்கு செல்வது வழக்கம். அங்கு நடக்கும் பஜன் கேட்பதற்கு நன்றாக இருக்கும் பிரசாதம் கூடத்தான்
ReplyDeleteஆஹா.... அற்புதம்பா சகோ..
Deleteஎனக்கு ஒரு அனுபவம் மைலாப்பூர் ஷீர்டி பாபா கோயிலில்...
என் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக போலிஸ் வீட்டுக்கு வந்தபோது நான் கோயிலுக்கு போய் இருந்ததால் என்ன கோபமோ திருப்பி அனுப்பி விட்டார்...
பாஸ்போர்ட் வர தாமதம் ஆகி ஆகி... ஒன்றும் இயலாமல் பின்னர் பாபா கோயிலில் போய் பின் பக்கம் பாபாவின் திருவடி இருக்கும் இடத்தில் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தேன் சிறிது நேரம்...
கண் திறந்து பார்த்தால் கூட்டமே இல்லாத அந்த நிமிடம் என் மடியில் பாபா திருவடி மேல் இருந்த ரோஜாப்பூ ஒன்று இருந்தது...
அன்றே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்றால் பெரியம்மாவிடம் படித்த மாணவர் அங்கு ஊழியராக... வேலை எளிதாக முடிந்து பாஸ்போர்ட் கையில்...
இதுவும் அற்புதமே... ஆமாம் நாங்கள் ஏதாவது வேண்டிக்கொண்டால் பிரசாதம் செய்து எடுத்துக்கொண்டு போய் கோயிலில் கொடுப்பதுண்டு.. பிரசாதம் வாங்கி சாப்பிடுவதும் உண்டு.. கோயில் பிரசாதம் எப்போதுமே ருசி அதிகம் தான்பா..
உங்கள் சாய்பாபா அனுபவம் மெய் சிலிர்க்கும் அனுபவமாக இருக்கிறது.
ReplyDeleteநம்பினால் நிச்சயம் நடக்கும். உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராஜிம்மா..
Deleteநம்பிக்கை வைப்பவர் என்றும் வீண் போனதில்லை.. இறையருள் எப்படிக் கிட்டும் என்று யூகிக்கவே முடியாது.. சாய்பாபா அருள் எப்போதும் உங்களோடு இருக்க என் பிரார்த்தனையும்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரிஷபா....
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணிசார்..
ReplyDeleteஅருமை. எனக்கும் பலவித அனுபவங்கள். நம்பினோர் கெடுவதில்லை. ஓம் சாய்ராம்.
ReplyDeleteஒரு உண்மையான சாயி பக்தை. அவர் கண்கண்ட தெய்வம் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு நாளூம் ஏதாவது விதத்தில் உதவி செய்து விடுவார்.காலையில் காகட் ஆரத்தி பார்க்க ஆரம்பித்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ReplyDeleteஅந்தப் பெரிய மஹானின் அருட்கடாக்ஷம் எப்பொதும்நம் மேல் இருக்க அவ்ர் அருள் இருக்க வேண்டும்.
அன்பின் மஞ்சு -0 இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருகிறது - அதன் மூலமாகத்தான் இங்கு வந்தேன் - சாய்பாபா பற்றிய பதிவு அருமை - சாய்பாபாவின் கருணை உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் என்றுமிருக்க பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDelete