"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, October 6, 2011

காதல்..... காதல்......



காதல்.... காதல்...

நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்.....

அன்பைக்கொடுத்து கைக்கோர்த்தவரை
அன்பையே தந்து சொர்க்கம் காட்டிவிடும் காதல்.....

கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரை
கண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்.....

மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....


காதலுக்காக எந்த விலை கொடுக்கவும்
காதலுக்காக எதையும்  இழக்கவும்   
உலகே தயாராய் இருப்பதுவும்
உண்மையில் இதனால் தானே  

56 comments:

  1. //மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
    மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....//

    மறப்போம் மன்னிப்போம் என்று இருந்தால் காதல் மட்டும் அல்ல எந்த நட்புமே நிலைக்கும்.

    காதல் பற்றிய நல்ல கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
    நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்....///

    எனக்கு பிடித்த வரிகள். நன்றாக இருக்கிறது கவிதை

    ReplyDelete
  3. நம்பிக்கை,
    அன்பு,
    ஓகே...
    முரண்,
    மன்னிப்பு...
    ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைத்து விட்டால், அது உண்மை என்றால் அவர்கள் தப்பு செய்வதில்லை ...
    தவறுக்கு மன்னிப்பு தேவை இல்லை

    ReplyDelete
  4. நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
    நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்..../


    மிகவும் அழகான வரிகள் .மிகவும் ரசித்தேன் மஞ்சு.

    ReplyDelete
  5. காதலின் புனிதத்தை அழகான கவிதை வரிகளில் படித்தேன் ...அருமை
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. //நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
    நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்.....
    //
    அழகிய வரிகள் மஞ்சு பாஷினி.ரசிக்கத்தக்க கவிதை.

    ReplyDelete
  7. //
    அன்பைக்கொடுத்து கைக்கோர்த்தவரை
    அன்பையே தந்து சொர்க்கம் காட்டிவிடும் காதல்.....

    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  8. எங்கேயும் எதிலும் எப்போதும் காதல்...!

    ReplyDelete
  9. அருமையான கவிதைவரிகள் சகோதரி .இதை அனைவரும் அறிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில்
    இன்று ஒரு பக்திப் பாடல் அத்தோடு நீங்கள் என்னையும் கண்டு வாழ்த்தல்லாம் வாருங்கள் சகோதரி .............

    ReplyDelete
  10. காதல் காதல் காதல், காதல் இல்லை சாதல்.....!!!

    அருமையா சொல்லிட்டீங்க சூப்பர்ப் கவிதை வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  11. //.கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரைகண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்//

    அருமையான வரிகள் மஞ்சு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. காதல் பற்றிய உங்கள் வரிகள் சூப்பர்

    ReplyDelete
  13. கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரைகண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்./

    அன்பு மனதை
    அருமையாய் படம்பிடித்த
    அற்புத பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. ஒவ்வொரு எழுத்தும் கவிதை சொல்கிறது, காதல் பற்றி எழுதும்போது அருமை அக்கா...!

    ReplyDelete
  15. அருமையான காதல் கவிதை மஞ்சுபாஷிணி!

    ReplyDelete
  16. அருமையான கவிதை.காதலைப்பற்றி காதலித்தவர்களுக்குத்தான் தெரியும்.காதலைப்பற்றிய வரிகள் அனைத்தும் அருமை சகோதரி.

    ReplyDelete
  17. உண்மைக காதலைக் எடுத்து
    உரைத்தீர் மிகவும்அருமை


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. //மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
    மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....//

    ரசித்த வரிகள்.கவிதை மிகவும் அருமை

    நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  19. உண்மையே வெங்கட் நாகராஜ்...மறப்போம் மன்னிப்போம் என்னும் மனம் கொண்டவர் தெய்வத்திற்கு ஒப்பானவர்..

    அன்பு நன்றிகள் வெங்கட் நாகராஜ் கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  20. அவர்கள் உண்மைகள்...

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு சகோதரரே...

    ReplyDelete
  21. தவறு செய்யாதவங்க உண்டா சூர்யஜீவா? மனித இயல்புப்பா.. தெரிஞ்சோ தெரியாமயோ செய்துடலாம் எதுனா தவறுகள்... ஆனா அந்த தவறு பூதாகரமா கண்ல தென்படாம மன்னிக்கும் மனப்பக்குவத்தை கொண்டு வர முயன்றால் அதுவும் ஒரு முயற்சி தானே?

    அன்பு நன்றிகள் நக்கீரா.. ஹுஹும் சாரி சாரி சூர்யஜீவா :)

    ReplyDelete
  22. அன்பு நன்றிகள் லக்‌ஷ்மிம்மா கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  23. அன்பு வரவேற்புகள் தென்றல் சரவணன்...

    அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  24. அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு ஸாதிகா...

    ReplyDelete
  25. அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு ராஜப்பாட்டை ராஜா...

    ReplyDelete
  26. அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  27. அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பகிர்ந்தமைக்கு.

    இதோ வந்துட்டேன்பா...

    ReplyDelete
  28. அன்பு நன்றிகள் மனோ கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  29. அன்பு நன்றிகள் வைரை சதீஷ் கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  30. அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பகிர்வுக்கு..

    ReplyDelete
  31. அன்பு நன்றிகள் நிரோஷ் கருத்து பகிர்வுக்கு..

    ReplyDelete
  32. அன்பு நன்றிகள் மனோ அம்மா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  33. ''...மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
    மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்....''.
    "காதல்..... காதல்......"
    வாழ்க...
    நல் வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  34. காதல் பித்தா நீங்க? அருமையான வரிகள்.
    photo choreographedஆ photoshopஆ? அழகான கவிதைக்கு ஏற்ற அழகான படம்.

    ReplyDelete
  35. நிழலை இப்போ தான் கவனித்தேன். choreographedஆத் தோணுது. அருமை.

    ReplyDelete
  36. நல்லா இருக்கு அக்கா கவிதை....

    ReplyDelete
  37. மிக ரசித்தேன் மேடம் ..
    தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

    ReplyDelete
  38. மஞ்சு பாஷிணி! உங்களை என் பதிவில் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்!

    ReplyDelete
  39. காதல் அழகாகனது..
    அதனைத் தாங்கள் எடுத்துச் சொன்னவிதம்

    சுவையானது...

    ReplyDelete
  40. கருத்து பகிர்ந்த அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்வேன் ஊருக்கு போய் வந்துட்டு. நாளை இந்தியா போவதால் உடனடியாக என்னால் கருத்து சொல்லமுடியவில்லை... நவம்பர் 8 ஓடி வந்துருவேன். வந்ததும் கண்டிப்பா தொடர்வேன்.

    ReplyDelete
  41. உண்மையான காதல் எப்போதும் உயர்ந்தது என்பதை சொல்லுகிறது உங்கள் கவிதை!நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  42. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  43. appa dhuraiiiiiiiii kaiyil kuchiyodu ungalai dhaan thedittu irukkean :)

    google la irundhu eduthadhuppaa...

    eppadi irukeenga? happy diwali.. no tamil fonts, iruppadhai vechu adjust panni pottuttu irukean. anbu nandrigal appadurai..

    ReplyDelete
  44. innoru murai appadurai anbu nandrigal aanaa ungalukku adi kandippaa undu :)

    ReplyDelete
  45. anbu nandrigal nambikkai paandiyan.. kuwait vandhapin unga valaipuvai vandhu parkireanpa..

    ReplyDelete
  46. mano amma, i called u , but the message is coming as the number u have dialled is incorrect. kindly send me mail mano amma.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...