"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 31, 2011

வரவேற்போமா 2012 அன்புடன்?

2011  முடிந்து 2012  ஆரம்பிக்க போகிறது…

எல்லோர் வலைப்பூவிலும் அழகழகாய் வாழ்த்துகளும் அன்பு நிறைந்த கருத்து செரிவுள்ள நல்லவைகளும் பார்த்து மனம் நிறைந்தது…

சரி நாமும் எதுனா எழுதுவோமே என்று ஆரம்பித்தால் மனம் அமைதியாக இருக்கிறது… நினைவுகள் இல்லா அமைதி…. ஆழ்ந்த அமைதி… ஒரு நாள் முன்புவரை கூட மனம் ஒரு போராட்டத்துடன் துடித்துக்கொண்டு வெளியே சிரித்துக்கொண்டு பணியிடத்தில் வேலைகள் நடந்துக்கொண்டு வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு தான் இருந்தது…

தினம் தினம் வரும் மெயிலில் இதோ இப்போது நான் பார்க்கும் அத்தனை அன்பு உள்ளங்களிடமிருந்து மெயில்கள் வந்தவண்ணம்…. என்னப்பா எப்ப வரப்போறீங்க எங்க தளத்துக்கு? உங்க பதிவும் பின்னூட்டமும் இல்லாம ஹுஹும் நல்லாவே இல்லையே’ என்ற அன்பு விசாரிப்பும்….

அக்கா இதுவும் கடந்து போகும் கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாகும் என்று சிலர், மஞ்சு நீங்க அப்படியே சோர்ந்து உட்கார்ந்தால் கவலைகள் உங்களை எழவிடாமல் தடுக்கும்… கொஞ்சம் அப்டியே வலைப்பூவுக்கு வாங்க, எங்க படைப்புகள் படிங்க…. மனசு கண்டிப்பா லேசாகும்னு சொல்லும் சிலர்,

அன்பு விதைத்தாலும் நஞ்சை ருசிக்க தரும்போது மனம் அதிர்ச்சியாகிறது தான்…. ஆனால் அதுவும் இறைவன் தரும் பிராசதமாய் எடுத்துக்கோ மஞ்சு… கடவுள் எதுவும் காரணத்தோடு தான் செய்வார் என்பதை புரிஞ்சுக்கோ அப்டின்னு பாட்டி லெவலுக்கு எனக்கு அன்பான அறிவுரை சொல்வா என் தங்கை ( என் தாய் என்று சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும் )

எத்தனை புண்ணியம் செய்திருப்பேன் போன பிறவியில்…
என்னவா பிறந்திருப்பேனோ….
நல்லது செய்தேனா? செய்ததனால் இப்பிறவியா?

நல்ல தாய், என்னை உயிராய் காக்கும் என் தங்கை, என்னை குழந்தையாய் பார்த்துக்கொள்ளும் என் அன்பு கணவர், என் மேல் அன்பை பொழியும் என் பிள்ளைகள்….

இதெல்லாம் தான் என்னை இத்தனை கட்டிப்போட்டுவிட்டதா?

குண்டு சட்டில குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்னு சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும்… ஆமாம் சின்ன வட்டத்துக்குள் அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…

இடையில் நடந்தவை எல்லாம் மறக்கமுயல்கிறேன். இறைவன் எப்பவும் சந்தோஷம் மட்டுமே தருவார்னு எதிர்ப்பார்ப்பது தப்பில்லையா? சோதனைகளும் தருவார் தானே? சந்தோஷம் தரும்போது துள்ளிக்குதித்து சோதனைகள் வரும்போது சோர்ந்து விழுந்து எழமுடியாமல் ஏன் வதைத்துக்கொள்கிறேன்..

என்னை வேண்டாம் என்பவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்…
என் நட்பு தீயாய் தகிக்கிறது என்று ஒதுங்கியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்….

மாறாமல் இன்னும் அதே அன்புடன் இருக்கும் காலம் வரை நல்லவை கண்டு நல்லவை பேசி நல்லதைக்கேட்டு நல்லதையே தருவோமே…

முத்தமிழ்மன்றம், ஈகரை, தமிழ்த்தோட்டம், நிலாமுற்றம், தமிழ்மன்றம் இப்படி சில தமிழ் தளங்கள் சென்றிருக்கேன்.. சென்ற இடத்திலெல்லாம் நல்லவரையே  நல்ல உள்ளங்களையே கண்டேன்…

இதோ இங்கு ஒவ்வொரு வலைப்பூவிலும் நான் செல்லும்போது அன்புடன் தோளணைக்கும் தாயன்பு நிறைந்த அன்பையே ஒவ்வொரிடமும் காண்கிறேன்….

இந்த அன்பு என்னை சோர்ந்து போக விடாமல் காத்ததை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்….

இனி வரும் புதுவருடத்தில் மனதில் ஒரு உறுதி எடுத்துக்கொள்கிறேன்…

  1.   என் மனம் புண்படும்படி இனி யார் எப்படி பேசினாலும் செயல்களால் காண்பித்தாலும் பதிவுகளால் தாக்கினாலும் அமைதியாக ஒதுங்கி விடுவேன்.
  2.  யார் மனமும் புண்படும்படியான எந்த சொல்லும் சொல்லமாட்டேன், பதிவும் நான் இடமாட்டேன்.

எல்லோருக்கும் என் மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா….

37 comments:

  1. என்னை உயிராய் காக்கும் என் தங்கை, என்னை குழந்தையாய் பார்த்துக்கொள்ளும் என் அன்பு கணவர், என் மேல் அன்பை பொழியும் என் பிள்ளைகள்….
    இதெல்லாம் தான் என்னை இத்தனை கட்டிப்போட்டுவிட்டதா? //

    நாங்களும் உங்க கூடவே இருக்கிறோம் மஞ்சு... கவலையே படாதீங்க..

    ReplyDelete
  2. புது வருஷத்தில் புயலாக கிளம்பி வாருங்கள் கவலைகளை உதருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  3. உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  4. உள்ளத்தெளிவு வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது
    வரும் ஆண்டு நல்லோருக்கான ஆண்டே
    நன்மைக்கான ஆண்டே
    வளர்ச்சிக்கான ஆண்டே
    வளமைக்கான ஆண்டே
    உங்களுக்கான ஆண்டே
    நன்மையும் வளர்ச்சியும் வளமையும் நலமும் பெற்று
    சிறந்து விளங்கும் ஆண்டாக வரும் ஆண்டு விளங்க
    மனதார வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. உங்கள் உறுதி நீடிக்கட்டும்.

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    vgk

    ReplyDelete
  6. காயப் பட்ட மனதின் வலிகள் வார்த்தைகளில்..
    காயம் என்ன என்று தெரியாததால், வெறும் வாழ்த்துடன் முடித்துக் கொள்கிறேன்
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  7. உங்கள் எல்லோரின் அன்பும் நலன்விசாரிப்பும் என் உடன் இருந்து என்னை வழி நடத்தி வீழ இருந்த என்னை காத்து மீட்டு வந்தது அன்பு உள்ளங்களான உங்கள் எல்லோரிடத்துமேப்பா...

    இந்த மனபலம் தான் நான் வேண்டியது இறைவனிடத்து.. துவளும் பொழுதெல்லாம் உடன் இருந்து தைரியம் கொடுத்து காப்பது....

    அன்பு நன்றிகளுடன் கூடிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மனோ....

    ReplyDelete
  8. அன்பின் ரமணி சார்,

    உண்மையை சொல்லனும்னா உங்கள் எல்லோரின் வார்த்தைகள் தெய்வ திருவாக்காகவே தான் எடுத்துக்கொள்கிறேன். மஞ்சு உன்னால முடியும்... உன்னால கண்டிப்பா முடியும்... முடியும்... இந்த தைரியத்தை சக்தியை எனக்கு தந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னை மீட்டு எப்படியோ பதிவிட வைத்துவிட்டீர்கள்.. இனி எல்லோர் படைப்புகள் படிப்பதில் என் மனம் கண்டிப்பாக ஆழ்ந்துவிடும்....

    அன்பு நன்றிகளுடன் கூடிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரமணி சார்....

    ReplyDelete
  9. அன்பின் வை கோபாலக்ருஷ்ணன் சார்,

    மன உறுதி கொஞ்ச காலம் இழந்திருந்தேன், கண்ணீரில் கரைந்து இறைவன் கால்களில் விழுந்திருந்தேன்.. இறைவன் நேரே வரமாட்டாராமே... நல்லோர் ரூபத்தில் வந்து நன்மைகள் செய்வாராமே..

    என்னை பத்திரமாக காத்து இதோ உங்கள் எல்லோரிடமும் சேர்த்த தெய்வத்தின் தூதுவர்களாகவே உங்கள் எல்லோரையும் காணமுடிகிறது...

    அன்பு நன்றிகளுடன் கூடிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  10. அன்பின் சூர்யஜீவா,

    வலிகளில்லாத வாழ்க்கை இல்லை என்று கவிதை எழுதிய எனக்கு வலிகளின் தீவிரம் உணர்த்த இறைவன் பலவிதங்களிலும் சோதனைகள் தந்தார்.... நான் அன்பு வைத்த உறவும் நட்புமே என்னை எதிர்க்கும்படி செய்தார்....குழந்தைகளே என் பலவீனம் என்பதும் இறைவனுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டாகிவிட்டது..

    சோதனைகளை எதிர்த்து நிற்கவும் அந்த சோதனைகளில் இருந்து வெளிவரவும் இறைவன் எப்போதும் நல்ல உள்ளங்களான உங்கள் எல்லோர் மூலமாக எனக்கு சக்தியும் தருகிறார்....

    அன்பு நன்றிகளுடன்கூடிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  11. அன்புநிறை சகோதரி,
    வணக்கங்கள் பல
    தங்களை மீண்டும் கதம்ப சரத்தில் காண
    மனம் மகிழ்கிறது.
    நம்மைப் போன்றவர்களுக்கு குடும்பம்
    தானே சகோதரி முக்கியம். அவை நன்றாக
    அமைந்துவிட்டால் அதைவிட வேறு என்ன வேண்டும்.

    இந்தப் புத்தாண்டு தங்களுக்கு எல்லா மனவலிமையையும் கொடுத்து
    இவ்வுலகில் இருக்கும் நல்லவைகள் யாவும் தங்கள் பக்கத்தில்
    இருக்க உதவட்டும்.
    என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி..!
    உங்களின் மன வலிகள் எதுவென்று எனக்கு தெரியாவிட்டாலும் வரும் புத்தாண்டில் எல்லாம் பறந்து புது பொலிவு பெற எல்லாம் வல்ல இறைவனை வெண்டுகின்றேன்..

    சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. மஞ்சு ,
    எனக்குத் தங்கள் வலி என்னவென்று தெரியாது.
    எதுவாக இருப்பினும் இந்த புத்தாண்டு ஒரு நல்ல
    மருந்தாக மாற்றாக வளமாக அமைய என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள். வாருங்கள் எங்களுடன்
    கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். ஜோதியில்
    ஐக்கியமாகுங்கள் தோழி.

    ReplyDelete
  15. Wishing You And Your Family Good Health & Prosperity In The NEW YEAR

    ReplyDelete
  16. மஞ்சு ஒரு அரசனிடம் எல்லா லட்சுமிகளும் அவனைவிட்டு போவதாக ஒரு கதை உண்டு. அந்த ராஜா எல்லாரும் போங்க தைரிய லட்சுமி மட்டும் என்கூடவே இருங்கன்னு சொல்வதுபோல கதை போகும். அதுபோல போனது போகட்டும் வந்தது வரட்டும் தைரியத்தை கெட்டியா பிடிச்சுக்கோ. எதுக்கும் கலங்காதே. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…

    -இதுதானே வாழ்வின் தத்துவம். நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் மட்டற்ற அன்பைத்தான் நாங்கள் திரும்பத் தருகிறோம். (எனக்கும் சொந்த வாழ்வில் நிறைய சிக்கல்கள் உண்டு. வலைத்தள நண்பர்களின் அன்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.) நீங்கள் தொடர்ந்து உற்சாகமாய் இயங்கவும், இப்புத்தாண்டு உங்களுக்கு நல்லனவற்றை மட்டுமே தர வேண்டும் என்றும் அன்னை மீனாட்சியை வேண்டி வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  19. அன்புச் சகோதரி,
    தங்கள் பிரச்சினைகள் தீர , மனவலிமை பெற , எனையாளும் ஈசனை இறைஞ்சுகிறேன்.
    இந்த புத்தாண்டில் சகலமும் சீராகட்டும்.

    ReplyDelete
  20. அன்பின் மகேந்திரன்,

    என் மனபலமே இதோ நீங்கள் எல்லோரும் என்மீது காட்டும் அளவில்லாத அன்பு மட்டுமே...

    ஊருக்கு போக தயாராகிட்டு இருக்கீங்க தானே மகேந்திரன் :)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா....

    ReplyDelete
  21. அன்பின் காட்டான் சகோதரன்,

    உங்கள் எல்லோரின் அன்பால் நான் கண்டிப்பாக உயிர்ப்பெற்று நலமும் பெற்று இதோ உங்களுடன் பதிவுகள் இடவும் வந்துவிட்டேன்..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
  22. அன்பின் ஸ்ரவாணி,

    தங்கள் பெயரை உச்சரிக்கும்போது ஒரு நொடி நிறுத்தி மீண்டும் உங்கள் பெயரை உச்சரித்து பார்க்கிறேன். அன்பை மட்டுமே உலகம் முழுவதும் இறைவன் தெளிக்கட்டும் எல்லோர் மனதிலும் என்ற வேண்டுதலோடும் உங்கள் அன்பின் வாழ்த்துகளும் சந்தோஷமாக ஏற்கிறேன்பா...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி...

    ReplyDelete
  23. அன்பின் சகோ (அவர்கள் உண்மைகள் )

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா..

    ReplyDelete
  24. அன்பின் லக்‌ஷ்மி அம்மா,

    தைரிய லக்‌ஷ்மி எனைக் காக்க, அன்பு லக்‌ஷ்மி நீங்க என் உடனிருக்க இறைவன் ஆசியும் உங்கள் ஆசியும் என்றும் வேண்டிடும்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டுநல்வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  25. அன்பின் கணேஷ்,

    முகம் பார்க்காத உங்களைப்போன்றோரின் எத்தனைப்பேருடைய அன்பும் தூய்மையான நட்பும் இறைவன் அருளும் மீனாட்சி அம்மனின் கருணையும் உடன் இருக்க கவலைகள் வேகமாக பனி போல் மறைந்தும்விடும்பா...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டுநல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. அன்பின் வெங்கட் நாகராஜ்,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  27. அன்பின் சிவகுமாரன்,

    உங்களைப்போன்றோரின் தூய அன்பும், இறைவனின் கருணைப்பார்வையும் ஈசனின் அருளும் என்றும் உடனிருக்க கவலைகள் தாக்குப்பிடிக்கமுடியாமல் பனியாய் கரைந்துவிடும்...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  28. இனிய வரவேற்புகள். வரும் ஆண்டு அனைத்து நலங்களையும் காட்டி நல்லனவற்றையே வாரித்தந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. வாழிய நலம்.

    ReplyDelete
  29. அன்பு வரவேற்புகள் மங்கையர் உலகம்....

    அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

    ReplyDelete
  30. அன்பின் கலை,

    மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்திற்கும் அன்பு ஆசிகளுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

    அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  31. உங்கள் கவலை என்னவென்று நான் கேட்கப் போவதில்லை. ஆனால் இதுதான் முடிவென்று எடுக்கும் தீர்மானத்திற்கு நிச்சயம் தடை சொல்வேன். பிரச்சினை இல்லாத மனிதன் உலகத்தில் யார் இருக்கின்றார்கள். துணிந்து மீண்டும் 2012 இல் விஸ்வருபம் எடுத்து நிமிருங்கள் . உங்கள் காலடியில் எல்லாம் தவிடு பொடியாகும் என்று மனதி தைரியம் கொள்ளுங்கள். மீண்டும் சகோதரி மனசு பாஷினியை எங்கும் நாம் காணவேண்டும்

    ReplyDelete
  32. குண்டு சட்டில குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்னு சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும்… ஆமாம் சின்ன வட்டத்துக்குள் அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…/

    அன்பு வாழ்த்துகள்..

    அன்பே உலக ஆதாரம்...

    ReplyDelete
  33. இந்தப் புத்தாண்டு தங்களுக்கு எல்லா மனவலிமையையும் கொடுத்து
    இவ்வுலகில் இருக்கும் நல்லவைகள் யாவும் தங்கள் பக்கத்தில்
    இருக்க உதவட்டும்.

    ReplyDelete
  34. அன்பின் சந்திரகௌரி,

    தங்களின் மனம் நிறைந்த அன்பை என்றும் மறவேன்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  35. அன்பின் ராஜராஜேஸ்வரி,

    தங்கள் அன்பினை என்னவென்று சொல்வேன்...

    அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
  36. எல்லாம் வல்ல இறைவன் அருளால் இடர்கள் துறந்து உங்களின் அன்புக்குப் பாத்திரமான இதயங்களின் தூய பிரார்த்தனைகளின் துணை கொண்டு முழு ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்...
    அன்பு சகோ அப்துல்லாஹ்.

    ReplyDelete
  37. எதன் மீதும் அழுத்தமாய் பற்று வைத்தாலும் சரி, எதன் மீதும் அழுத்தமாய் வெறுப்பு கொண்டாலும் சரி, அன்னிலை மாறி புது நிலைக்கு அதானது ஆட்படுகின்ற போது வரும் மனநிலையே இப்பதிவின் கருத்திற்கு நான் சொல்ல வேண்டிய மறுமொழி.

    ஆகட்டும் பார்க்கலாம் என்ற பெருந்தலைவரின் வாசகம், மXXராப் போச்சு என்ற கிராமத்தான் பழமொழியினை அடிக்கடி நினைவில் கொண்டால் எல்லாமே சரியாகும் அக்கா.

    நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...