"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, November 24, 2011

மனைவி அமைவதெல்லாம்.....

”கிருஷ்ணா உன் மாமியார் அங்க தான் இருக்கா.... அதை மனசுல வெச்சுக்கிட்டு நடந்துக்கோ புரிஞ்சுதா??” அம்மாவின் போதனையைக்கேட்டு புதுக்கல்யாணம் ஆகி மஞ்சளின் மெருகு குறையாமல் கயிறு பளபளக்க நின்றிருக்கும் கிருஷ்ணா செக்குமாடு போல் மண்டையை ஆட்டினாள்....

”எடுத்ததுமே எல்லா வேலையும் எனக்கு தெரியும் என்பது போல பாய்ஞ்சு பாய்ஞ்சு செய்துடாதே என்ன நான் சொல்வது கேக்குதா மரமண்டை போல் நிக்குறியே” என்று உலுக்கினாள் அம்மா....

”சரிம்ம்மா.... கிளம்பறோம் என்னை ஆசீர்வாதம் பண்ணு...”

”என் கண்ணே நீ இங்க எவ்ளோ சுதந்திரமா இஷ்டப்பட்டதை சாப்பிட்டு நிம்மதியா காலாட்டிக்கிட்டு இருந்தியே என் தங்கம்... இனி போகும் இடத்தில் எப்படி எல்லாம் இருப்பியோ கஷ்டப்படுவியோ தெரியலையே” என்று மூக்கு சிந்தினாள் அம்மா கற்பகம்....

”போதும் போதும் உன் போதனை முதல்ல மகளை நல்லதைச்சொல்லி அனுப்புவியா இப்படி பொல்லாப்பு விஷயங்களை உருவேத்தி அனுப்புறியே” என்று சங்கடப்பட்டார் சுந்தரம்....

இது எதுவும் கண்டும் காணாதபடி அமைதியாக தன் லேப்டாப்பில் வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீநாத்....

மருமகளை வரவேற்கும் முயற்சியில் துரிதமாக இயங்கிக்கொண்டிருந்தாள் முத்துமணி கணவனை இழந்தததால் தான் சென்று முன்பில் நிற்கவேண்டாமென்று உறவுக்கார பெண்மணியை ஆரத்தி கரைக்க தயார் செய்ய சொன்னாள்...

கணவனை இழந்தப்பின் மகனை படிக்கவைக்க எல்லா சராசரி பெண்களைப்போலவே தானும் ஒற்றையாய் நின்று போராடி ஜெயித்து தாயின் அன்பில் உருகும் மகனை நல்லமுறையில் படிக்கவைத்து வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வந்தபோதும் தன் தாய்நாட்டில் இருப்பதையே ஸ்ரீநாத்தும் விரும்பினான் இரண்டு காரணங்களால் ஒன்று தாய்மண்ணை விட்டு பிரிய இஷ்டமில்லாததால் இன்னொன்று தன் தாயை தன் தாய்நாட்டில் இருந்து பிரித்துச்செல்ல இஷ்டப்படாததால்....

”கார் வந்திருச்சு வாங்க வாங்க ஆரத்தி ரெடியா?” என்று எங்கிருந்தோ ஒரு கிழவி குரல் கொடுக்க புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து நின்றது கார் வீட்டருகே...

பெரிய மாளிகை போல் இல்லை என்றாலும் தோட்டம் நிறைந்த அழகு வீடாக தான் இருந்தது முத்துமணி கைவண்ணத்தில் உருப்பெற்ற செடிகொடிகள் மரங்கள் எல்லாமே கிருஷ்ணாவை நலம்விசாரித்தது இளங்காற்றை வீசி....

பறக்கும் தலைமுடியை அடக்கமாய் கையில் ஒதுக்கி அமைதியாக கீழிறங்கினாள் கிருஷ்ணா. பின்னே ஸ்ரீநாத்தும் இறங்கினான் லேப்டாப்பை விடாது கையில் எடுத்துக்கொண்டு....

சமையற்கட்டில் இருந்து எட்டி எட்டி தன் மருமகளின் மகனின் வரவை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் முத்துமணி....

ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்த பெண்மணியை தலைநிமிர்ந்து பார்த்து அத்தை எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் கிருஷ்ணா...

”அட அவளெல்லாம் வரக்கூடாதும்மா நல்ல காரியத்துக்கு” என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி தட்டை சுற்றத்தொடங்கினாள் அந்த பெண்மணி..

கிருஷ்ணா தடுத்து நிறுத்திவிட்டு ”அம்மா எங்க இருக்கீங்க?” என்று குரல் கொடுத்தபோது அதிர்ச்சியுடன் முத்துமணி வந்து நின்றாள் கூச்சத்துடன்...

”எங்கள் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைப்பதில் உங்களை விட மனம் நிறைந்து ஆசி தர யாரால் முடியும்? வாங்க நீங்க தான் ஆரத்தி சுத்தனும்” என்று அன்புடன் அணைத்து முன்பு இழுத்தாள் கிருஷ்ணா முத்துமணியை...

எல்லோரும் ஆ என்று வாய் பிளக்க கண்ணில் துளிர்த்த நீரை பெருமிதத்துடன் சுண்டி விட்டு ஆரத்தி சுற்றினாள் முத்துமணி...

ஆச்சர்யத்துடன் பார்த்தான் ஸ்ரீநாத்.....

வீட்டில் அங்கே மாமியார் கொடுத்த போதனை என்ன ஆனால் இவளென்னடான்னா என்று வியந்தான்....

உள்ளே வந்ததும் கூட்டம் நெம்பி தள்ளி புது மருமகளை எட்டி பார்த்தது....

முத்து மணி அவர்களை உட்காரவைத்துவிட்டு பால் பழம் கொண்டு வர ஓடினாள்...

”அம்மா இருங்க... முதலில் மாமனார் படத்திற்கு விளக்கேற்றிவிட்டு அதன்பின் சாப்பிடலாம்...” என்று சொன்னதும் முத்துமணி மனம் நெகிழ்ந்து போய் பார்த்தாள் தன் மருமகளை....

அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் இப்படி ஒரு காட்சியை தொலைக்காட்சியில் கூட கண்டு பழக்கமில்லாதோர் எப்படா மாமியார் மருமகள் சண்டை வரும் இடையில் போய் பஞ்சாயத்து செய்யலாம்னு காத்திருந்த கிழடுகள் எல்லோரும் வாயடைத்து போனர்...

இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று ஆச்சர்யப்பட்டனர்....

எல்லோரும் சாப்பிடும்போது மாமியாரை தன் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டாள் கிருஷ்ணா...

சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் ஆளாளுக்கு கிளம்ப பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடந்தது...

கிருஷ்ணா உடனே புடவையை இழுத்துக்கட்டிக்கொண்டு சாமான் எல்லாம் பர பரவென்று தேய்க்க ஆரம்பித்தாள்..

”உனக்கு ஏம்மா சிரமம் நீ போய் கொஞ்சம் ஓய்வெடு நான் செய்துப்பேன் தானே?” என்று தடுத்தாள் முத்துமணி...

மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சொன்னாள், ”அம்மா நீங்களும் தானே களைப்பா இருக்கீங்க நீங்க ஓய்வெடுங்க” என்று....

இரவு மெல்லிய வெளிச்சத்தில் நறுமணத்துடன் வந்து அமர்ந்தாள் கிருஷ்ணா ஸ்ரீநாத் அருகே...

மெல்லிய இசையில் ”ஜெய க்ருஷ்ணா முகுந்தா முராரே” பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது ரூமில்....

ஸ்ரீநாத் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்...

”என்ன பாக்குறீங்க?” என்று தலைகுனிந்தாள்..

”எனக்கு ஒரு விஷயம் புரியலை க்ருஷ்” என்றான்...

”என்னவாம்...?”

“உங்கம்மா கிளம்பும்போது உனக்கு சொன்னது என்ன ஆனால் நீ இங்க செய்வது” என்ன என்றான்...

”நீங்க நினைப்பது சரியே”....

”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...

”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”

”அது என் வீடுன்னா இதுவும் என் வீடு தானே?”

”அங்க இருப்பது என் அம்மா அப்பான்னா இங்க உங்களை நம்பி என்னையே கொடுத்தப்பின் இன்னும் என்ன வேற்றுமை? இங்க இருப்பதும் என்னை தங்கம் போல் பார்த்துக்கும் அம்மாவே தான்னு நான் நம்பி தானே என்னை கொடுத்தாங்க?”

”வீடு என்னிக்கு கோவிலாகும் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்

”ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் க்ருஷ்...தொடங்கிட்டியா லெக்சர்?” என்று கொட்டாவி விட்டான்....

”ஹே... கிண்டலா?” என்று அவன் தோளில் வலிக்காது குத்தினாள்...

”இல்லப்பா சும்மாத்தான்...”

”ஆனால் மனம் கொள்ளும் அளவுக்கு ஐயா சந்தோஷமா இருக்கேன்...”

”ஏனாம்?” நாணத்துடன் கேட்டாள்...

”என்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களை நான் சொல்லாமல் நீயே புரிஞ்சு என்னை நல்லபடி பார்த்துக்க எனக்கு தாயன்புடன் கூடிய ஒரு இணை கிடைத்ததுக்கு தான்” என்று இழுத்து அணைத்துக்கொண்டான்....

வளையல் ஓசையுடன் சிணுங்கல் ஓசை வெளியே விளக்கணைக்க வந்த முத்துமணி காதில் விழ இறைவனுக்கு நன்றி கூறி விளக்கணைத்தாள்.... நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???

கதை படிச்சதும் எல்லாரும் ஆச்சர்யமா கேப்பீங்களே என்ன ஒரு ட்விஸ்டும் இல்லை ஒரு த்ரில்லிங்கும் இல்லைன்னு.....

அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க என்பதில் என்ன சந்தேகம்?

அன்பு மட்டுமே அளவில்லாமல் இருக்கும் இடமெல்லாம் சண்டை சச்சரவு ஏது??

“ட்விஸ்ட் எதிர்ப்பார்த்து வந்தவங்களுக்கு வெவ்வெவ்வ்வ்வெவ்வ்வே... ”

49 comments:

  1. ஹா..ஹா.. ஹா.. நல்ல டிவிஸ்ட்.

    //நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???//

    உண்மைதான் மஞ்சு.

    ReplyDelete
  2. ஆஹா பெண் சிங்கம் களம் இறங்கியாச்சு...!!!

    ReplyDelete
  3. ”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...

    ”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”//

    புத்தி உள்ள பொண்ணு, தன் குணத்தால் அன்பால் கண்டிப்பாக அந்த வீட்டை கோவில் ஆக்கி விடுவாள் சந்தேகமே இல்லை...!!!

    ReplyDelete
  4. கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்குது, ரசித்தேன், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  5. very nice to read........

    ReplyDelete
  6. //அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க//
    அருமையான வார்த்தைகள் .கதை மிகவும் பிடித்திருந்தது .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி

    ReplyDelete
  7. உணர்வுபூர்வமான சிறுகதை. அம்மா சொன்னா என்ன... எங்களுக்கு புத்தி இல்லையா என்று கிருஷ்ணா கேட்பது அருமை. இவ்வளவு புரிதல் உள்ளவள்- மாமனார் படத்துக்கு விளக்கேத்திட்டு- என்றா சொல்வாள்? அப்பா படத்துக்கு என்றுதானே சொல்வாள்? என்னை மிகவும் ரசிக்க வைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  8. //அன்பு மட்டுமே அளவில்லாமல் இருக்கும் இடமெல்லாம் சண்டை சச்சரவு ஏது??//

    உண்மைதான் .. அன்பு எதையும் தாங்கும்
    அன்புடன் :
    ராஜா

    அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

    ReplyDelete
  9. கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்குது, ரசித்தேன், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  10. அருமையான கதை
    தங்கள் வரவுக்கும் அழகான அருமையான
    கதைக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  11. கதை நல்லா இருக்கு சகோ.... வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
    கதை அருமையாக உள்ளது. vgk

    ReplyDelete
  13. உணர்வு பூர்வமான கதை அக்கா பாராட்டுக்கள்

    தம்பி யூஜின்

    ReplyDelete
  14. அக்கா, திரும்ப வந்தாச்சா?
    மிக்க மகிழ்ச்சியா இருக்குது..

    ReplyDelete
  15. நல்ல மருமகள் வீட்டிற்கு வந்தாள் வீடு கோவிலாகும் என்ற வார்த்தை சத்தியமான வார்த்தைகள்..
    நான் பெரிசு நீ பெரிசுன்னு சண்டைபோட்டு கடைசியில் காலம்கடந்தபின்னர் எல்லாம் முதலிலேயே குறைத்திருந்திருக்கலாம் என்ற ஆதங்கத்துடன் வாழ்வதை விட
    முதலிலேயே அன்பை காட்டி அரவணைத்து வாழ்வதில் தவறொன்றுமில்லை..

    அழகான ஆழமான கருத்துள்ள கதை சொல்லியிருக்கீங்க அக்கா..
    நன்றிகள் பல..

    ReplyDelete
  16. சிறிய உண்மை, பெரிய செய்தி. நல்ல கதை.
    வாழ்த்துக்கள். உங்கள் நலம் கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. தோட்டம் நிறைந்த அழகு வீடாக தான் இருந்தது முத்துமணி கைவண்ணத்தில் உருப்பெற்ற செடிகொடிகள் மரங்கள் எல்லாமே கிருஷ்ணாவை நலம்விசாரித்தது இளங்காற்றை வீசி...

    நிறைவான டிவிஸ்ட்......

    ReplyDelete
  18. தங்களின் நிறைவான அருமையான வருகைக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. அருமையான கதை நிறைவான முடிவு.

    ReplyDelete
  20. நல்ல மனுஷங்களைப் பத்தி எழுதறதும் பேசறதும் எத்தனை சந்தோஷம்..

    எங்கள் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைப்பதில் உங்களை விட மனம் நிறைந்து ஆசி தர யாரால் முடியும்? வாங்க நீங்க தான் ஆரத்தி சுத்தனும்” என்று அன்புடன் அணைத்து முன்பு இழுத்தாள் கிருஷ்ணா முத்துமணியை...

    சபாஷ்.

    ReplyDelete
  21. அன்புச் சகோதரி!
    உள்ளமும் உடலும் நலமா!
    வழக்கம் போல் கதை உணர்ச்சியின் வேளிப்பாடு!தெளிந்த
    நீரோடை போன்ற நடை அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. படித்துக் கொண்டிருக்கும் போதே ,twist ஏதும் வந்துவிடக் கூடதே என துடித்தது மனம், சந்தோசமா இருக்கு சகோதரி கதையின் முடிவு.
    அது சரி ..
    நலமா? எப்போது நம்ம வீட்டுக்கு

    ReplyDelete
  23. ”எங்கள் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைப்பதில் உங்களை விட மனம் நிறைந்து ஆசி தர யாரால் முடியும்? வாங்க நீங்க தான் ஆரத்தி சுத்தனும்” என்று அன்புடன் அணைத்து முன்பு இழுத்தாள் கிருஷ்ணா முத்துமணியை...

    நெகிழ்வான காட்சி!

    ReplyDelete
  24. கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்குது, ரசித்தேன், வாழ்த்துக்கள்....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com

    ReplyDelete
  25. வணக்கம் சகோதரி நலமா?
    நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு சிறக்கும் என்பதை அழகாக சொல்லி செல்கிறீங்க அழகான கதை.!!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. [புத்தாண்டு வாழ்த்துக்கள்]

    ReplyDelete
  27. ஹா..ஹா.. ஹா.. நல்ல டிவிஸ்ட்.

    //நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???//

    உண்மைதான் மஞ்சு.

    அன்பு நன்றிகள் ராம்வி & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  28. ”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...

    ”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”//

    புத்தி உள்ள பொண்ணு, தன் குணத்தால் அன்பால் கண்டிப்பாக அந்த வீட்டை கோவில் ஆக்கி விடுவாள் சந்தேகமே இல்லை...!!!

    சரியா சொன்னீங்க மனோ.... அன்பு நன்றிகள் & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  29. // very nice to read........//

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  30. அன்பின் ஏஞ்சலின்

    // //அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க//
    அருமையான வார்த்தைகள் .கதை மிகவும் பிடித்திருந்தது .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி //

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  31. அன்பின் கணேஷ்,

    அதானே அப்பா என்று தானே சொல்லனும். தவறு நடந்துவிட்டதுப்பா... இனி கவனத்தில் கொள்கிறேன் கணேஷ்...

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  32. அன்பின் ராஜப்பாட்டை ராஜா,

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  33. அன்பின் லக்‌ஷ்மி அம்மா,

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  34. அன்பின் ரமணி சார்,

    சோர்ந்த வேளைகளில் ஆறுதல் சொல்லி எழுப்பிட்டீங்க வீழ்ந்திருந்த என்னை... இனி முழுமுயற்சியோடு பதிவுகள் தொடருவேன் ரமணி சார்....

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  35. அன்பின் வெங்கட் நாகராஜ்,

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  36. அன்பின் வை கோபாலகிருஷ்ணன் சார்,

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  37. அன்பின் தமிழ்த்தோட்டம் யூஜின்,

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  38. அன்பின் மகேந்திரன்,

    துவளும்போதெல்லாம் அக்கா மனம் தளராதீர்கள், நல்லது நடக்கும் என்று உடன் வந்தமைக்கு எப்படி நன்றி சொல்வேன்?

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  39. அன்பின் அப்பாதுரை,

    படைப்புகளில் புதுமை கொண்டுவந்து நலம் விசாரிப்பதில் நட்பு தொடர்ந்து இதோ இன்றும் என்னை வழி நடத்தி செல்கிறது உங்கள் எல்லோரும் அன்பு...

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  40. அன்பின் ராஜராஜேஸ்வரி,

    எப்போதும் தெய்வீக மணம் கமழ்ந்துக்கொண்டே இருக்க, பின்னூட்டங்களில் உற்சாகமும் ஊக்கமும் தென்பட இன்றும் நான் வியக்கும் பெண்மணி தாங்கள்....

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  41. அன்பின் ஸாதிகா,

    தன்னில் இருக்கும் அன்பை கண்களில் கொண்டுவந்து எல்லோரையும் பார்க்கும்போது எல்லோரும் அன்பானவராகவே தெரிகிறார் என்று சொன்ன அன்பு மனத்தவர் நீங்கள்..

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  42. அன்பின் ரிஷபன்,

    கண்களின் தீட்சண்யம், எழுத்துகளில் அற்புதம், தாயின் அன்பில் கரையும் மனம்.....

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  43. அன்பின் இராமானுசம் ஐயா,

    உடல்நலம் சரியில்லை என்றாலும், எழுத்துகளின் தீவிரம் குறைப்பதில்லை...

    தனிமை உங்களை நெருங்கிவிடாமலிருக்க நட்பை கவசமாக்கிக்கொண்டீர்கள்...

    தொடர்கிறோம் உங்களை ஐயா..

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  44. அன்பின் சிவகுமாரன்,

    அருமையாய் பிரகாசிக்கவைக்கும் கவிதைகள் தந்துக்கொண்டே இருந்து திடிரென்று காணவில்லை...

    தேடி என்னை நலம் விசாரிக்க வரும்போது நான் காணாமல போய்விட்டேன்...

    ஆனால் அன்பு இருக்கே அது எத்தனை அற்புதமானது என்பதை புரியவைக்கவே இத்தனை நல்லவர்களை எனக்கு அடையாளம் காட்டியது....

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  45. அன்பின் ரிஷ்வன்,

    அன்பு வரவேற்புகள்....

    உங்கள் வலைதளம் வந்து பார்த்தேன், மிக அருமைப்பா...

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  46. அன்பின் சகோதரன் காட்டான்,

    காணாமல் போனாலும் அக்கா என்ற அன்பு அழைப்போடு நலமா என்று கேட்கும் அன்பு குணம்......

    அன்பு நன்றிகள் அருமையான பின்னூட்டத்திற்கு & அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    ReplyDelete
  47. அருமையான கதை.தற்காலத்திறகு
    மிகவும் தேவையான கருத்துக்கள்.
    இதுதான் ட்விஸ்ட் என்று நினைக்கிறேன்.
    அம்மா உருவேற்றிய பிறகும் தான்
    நினைத்ததையே செயது(ஓய்வு கூட எடுக்காமல் உடனடியாக வேலையில்
    உதவி) மாமியாரை அனபால் அபிஷேகம்
    செய்யும் புத்தம் புதிய மருமகள்.
    மருமகள் அமைவதெல்லாம்-------
    என்றுதான் பாடத்தோன்றுகிறது.
    அருமையான கதைக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  48. ரமணிசார் கவிதைக்கு உங்கள் விரிவான
    மனம் திறந்த நீண்ணண்ணட பின்னூட்டம் மிக அருமை. பாராட்டவும்
    தாராள மனம் வேண்டும்.
    நன்றி அம்மா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...