"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 29, 2012

உறவுகள்....


" இந்த பிராப்ளம் சால்வ் பண்ணமுடியாதா அப்பா? “ மகன் எழிலரசனின் குரல் கேட்டு கவனம் சிதறியது சிவநேசனுக்கு...

“ என்ன பிராப்ளம் எழில் ? “ அன்புடன் மகன் எழில் தலை கலைத்து கேட்டான் அப்பா சிவநேசன்

“ அதான் மாமாவுக்கும் உங்களுக்கும் நடக்கிறதே அது தான் “

” உங்களுக்குள் பிரச்சனை என்பதால் பாருங்க எங்களால் மாமாவின் குழந்தை சாய்ரோஷனை சந்திக்கமுடியவில்லையே ” குரல் உடைந்து அழத் தொடங்கினான் எழில்.

சட்டென மனம் பதறி அணைத்துக்கொண்டான் சிவநேசன் குழந்தையை...

பெரியவர்களின் பிரச்சனையால் பிள்ளைகள் படும் அவஸ்தையை கண்டு ஒன்றும் செய்ய இயலாமல் எப்படி இந்த பிரச்சனையை சரி செய்வது என்று யோசித்தபடி எழிலுடன் வீடு வந்து சேர்ந்தான் சிவநேசன்.

“ என்னங்க குழந்தைக்கு நாளைக்கு பள்ளிக்கு எடுத்துச்செல்ல பேனா வாங்கினீர்களா? “ கேட்டுக்கொண்டே ராகினி மகனை உற்று நோக்கியபோது எழில் சுரத்து குறைந்து சோர்வுடன் இருந்ததை கண்டு பதறினாள்.

“ என்னாச்சு எழிலுக்கு? “ என்றபடி எழில் முகத்தை தன் கைகளில் ஏந்தினாள் ராகினி..

“ சாய்ரோஷனை போய் பார்க்கவேண்டுமாம் எழிலுக்கு “ ஆயாசமாக உட்கார்ந்தான் சொல்லிக்கொண்டே சிவநேசன்..

“ பழைய பிரச்சனைகளை எல்லாம் மறப்போம்.. தம்பியிடம் நீங்க பேசுங்களேன் நாளை... என் தம்பி தவறு செய்யவில்லை என்றாலும் அவன் தன் மனைவி பேச்சைக்கேட்டுக்கொண்டு நம்மை மோசமாக பேசியது குற்றம் தான் ஒத்துக்கொள்கிறேன் “

” ஆனால் அவனும் தான் என்ன செய்வான் பாவம்... மனைவி பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசினால் அவன் நிலையும் மோசமாகுமே...”

“ நீ எப்பவும் உன் தம்பிக்கே சப்போர்ட் பண்ணு. மனைவியை அடக்க துப்பில்லை அவனுக்கு.. இன்னைக்கு இங்க அவன் இருப்பது யாரால் என்ற நன்றி கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? வேகமாக பொரிந்து தள்ளினான் சிவநேசன்.

“ பொறுமையா இருங்க ப்ளீஸ்.... அவன் நம் நன்மையை உணரலைன்னாலும் பரவாயில்லை... அவன் நல்லா இருந்தாலே போதும் “ கணவன் அறியாது தன் கண்ணீரை அடக்க சிரமப்பட்டாள் ராகினி.

“ என் குழந்தை போல அவனை நினைத்தேனே... இப்படி பேசிவிட்டானே “ ஆதங்கத்தில் குமுறினான் சிவநேசன்.

“ உங்களுக்கு தெரியுமா? அவன் உங்களை வெறுக்கவில்லை உங்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருக்கிறான்.. அவன் வெறுப்பது என்னைத்தான்... என்றாவது உண்மை உணர்ந்து திருந்தி திரும்பி நம் வீட்டுக்கு வருவான் பாருங்க. எனக்கு கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது “  என்றாள் ராகினி.

“ நீ இன்னமும் எல்லோரையும் நம்பி ஏமாந்துக்கொண்டே இரு.... எல்லோரையுமே நல்லவங்கன்னு நம்பிக்கிட்டே இரு... இது கலிகாலம் ராகினி... எல்லோருமே சுயநலவாதிகள். தான் மட்டும் நல்லா இருந்தா போதும் தன் குடும்பம் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கும் சுயநலவாதிகள் “ இயலாமையால் கண்கள் கலங்கியது சிவநேசனுக்கு.

“ நல்லதுக்கு தான் எப்பவும் சோதனைகள் தொடருங்க. ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கு மட்டுமே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச்சொல்லி புருஷனை நம்பவைத்து நமக்கு எதிராக எதிர்த்து பேசவைத்து நம்மை பிரித்தது போதாதென்று நம்மை பற்றி இழிவாக சொல்லிக்கொண்டு இருக்கா. தம்பியும் அதை நம்பிக்கொண்டு நம்மை எதிரியாக நினைக்கிறான். நாம் நால்வரும் உட்கார்ந்து பேசினால் தம்பி மனைவி சொன்னதெல்லாம் பொய் என்பது ஊர்ஜிதமாகும் கண்டிப்பா... ஆனால் அதை அவள் விரும்பவில்லை... நம்மை அவனுடன் சேர்க்காமல் பிரிப்பதில் தான் உறுதியாக இருக்கிறாள். நான் மனிதர்களை நம்பலைங்க. ஆனா கடவுளை நம்புகிறேன். உண்மைக்கு என்னிக்கும் சக்தி அதிகம் சோதனைகளும் அதிகம்... சோதனைகளை கடந்து உண்மை உணர்ந்து தம்பி திருந்தி வருவான் நம்மிடம் அதுவரை அமைதியாக பொறுத்துக்கொள்வோம் எல்லாம் “ சொல்லி முடித்தாள் ராகினி....

“ இல்ல ராகினி என்னால் அப்படி இருக்கமுடியலை, என்னால் அவனை மறக்கவும் முடியவில்லை. நான் அவனை எல்லாம் மறந்து மன்னிக்க தயார். வா நாம இப்பவே போவோம் உன் தம்பி வீட்டுக்கு “ என்று கிளம்பத் தயாரானான் சிவநேசன்.

காரில் உட்கார்ந்திருந்த எழிலுக்கு ஒரே கொண்டாட்டம் இத்தனை நாட்கள் சாய்ரோஷனை பார்க்கவே இல்லையே. எப்படி இருப்பான் என்னிடம் நல்லா பேசுவானா என்று யோசித்தபடியே உறங்கிவிட்டான்.

சிவநேசன் ராகினியின் தம்பி ராகவன் வீட்டுக்கு காரை வேகமாக விரட்டினான்...

மூவரும் வீட்டை நெருங்கி தூங்கிக்கொண்டிருந்த எழிலை தோளில் தூக்கிக்கொண்டு ராகவன் வீடு நெருங்கி சிவநேசன் ஆவலாக காலிங் பெல் அழுத்த முனைந்தபோது உள்ளிருந்து ராகவனின் மனைவி உச்சக்குரலில் ராகவனிடம் கத்திக்கொண்டிருந்தாள்...

“ உங்களுக்கு இப்ப கார் லைசன்ஸ் கிடைச்சிட்டுது எவ்வளவோ சிரமப்பட்டு... நல்ல வேலையும் கிடைச்சு அதிக சம்பளமும் கிடைச்சுட்டுது... இனி உங்க அக்காவும் மாமாவும் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு ஓடிவந்து ஒட்டிக்கொள்ளப்போறாங்க உங்கக்கிட்ட பணம் பிடுங்க பாருங்க “ என்றாள்.

வெளியே நின்றிருந்த ராகினியும் சிவநேசனும் அதிர்ச்சியில் உறைந்து ஒன்றும் பேசாமல் வந்த வழி திரும்பி இறங்கி காருக்குள் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்தான் சிவநேசன்...

உறக்கம் கலைந்து எழில் “ அப்பா மாமா வீடு வந்துவிட்டதா?? “ என்று ஆவலுடன் கேட்டான்.

“ இல்ல தங்கமே உங்க மாமாவுக்கு போன் செய்தேன் இப்ப தான். மாமாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து அமெரிக்காவுக்கு போயாச்சாம் “ சுரத்தில்லாமல் குழந்தையிடம் பொய் சொன்ன குற்ற உணர்வோடு தலை குனிந்திருந்தனர் ராகினியும் சிவநேசனும்..

22 comments:

  1. “ நல்லதுக்கு தான் எப்பவும் சோதனைகள் தொடருங்க. ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கு மட்டுமே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச்சொல்லி புருஷனை நம்பவைத்து நமக்கு எதிராக எதிர்த்து பேசவைத்து நம்மை பிரித்தது போதாதென்று நம்மை பற்றி இழிவாக சொல்லிக்கொண்டு இருக்கா. தம்பியும் அதை நம்பிக்கொண்டு நம்மை எதிரியாக நினைக்கிறான். நாம் நால்வரும் உட்கார்ந்து பேசினால் தம்பி மனைவி சொன்னதெல்லாம் பொய் என்பது ஊர்ஜிதமாகும் கண்டிப்பா... ஆனால் அதை அவள் விரும்பவில்லை... நம்மை அவனுடன் சேர்க்காமல் பிரிப்பதில் தான் உறுதியாக இருக்கிறாள். நான் மனிதர்களை நம்பலைங்க. ஆனா கடவுளை நம்புகிறேன். உண்மைக்கு என்னிக்கும் சக்தி அதிகம் சோதனைகளும் அதிகம்... சோதனைகளை கடந்து உண்மை உணர்ந்து தம்பி திருந்தி வருவான் நம்மிடம் அதுவரை அமைதியாக பொறுத்துக்கொள்வோம் எல்லாம் “ சொல்லி முடித்தாள் ராகினி....

    மனம் கவர்ந்த பகிர்வு .இன்று அநேகமான குடும்பங்களில் நடக்கும் உண்மைச் சம்பவமும் இதுதான்
    தோழி !....இதனால் ஏற்படும் துன்பத்திற்கு ஒரு அளவே இல்லை .இந்த சமூகம் மாற வேண்டும் அல்லது உறவுகள் இருந்தும் இல்லை
    என்று வாழும் அவல நிலைதான் பெருகும் .மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .மேலும் தொடர
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. அட அம்பாளடியாள் சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு....
    உண்மையேப்பா... இன்று நிறைய குடும்பத்தில் நிகழும் கொடுமைகள் தான் இதெல்லாம்...

    ReplyDelete
  3. மஞ்சு ...ரொம்ப நாளாச்சு உங்க சிறு கதைகள் படிச்சு.. மீண்டும் அருமையான ஒரு கதையில் வாயிலாக ..நம் நாட்டில் வீட்டில் குடும்பங்களில் நடக்கும்ம் பிரச்சினையை சொல்லியிருக்கீங்க .
    எல்லா ப்ரசினைக்கும்காரணம் சுயநலமே.

    .

    ReplyDelete
  4. :)

    என் சிரிப்பின் அர்த்தம் உங்களுக்கு மட்டும் புரியும் அக்கா..

    புரியுமுன்னு நம்பிக்கொள்கிறேன்..

    சிறுகதை அருமை.!

    ReplyDelete
  5. பல உறவுகள் இப்படி தொலைந்து போய்விடுகின்றன. உறவினை இழப்பது மிகவும் கொடுமை சகோ....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. உறவுகளால் உதரப்படும் உறவுகள். சோகமான முடிவு தான்.
    நல்லாவே எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. நல்லதுக்கு தான் எப்பவும் சோதனைகள் தொடருங்க. ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கு மட்டுமே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச்சொல்லி புருஷனை நம்பவைத்து நமக்கு எதிராக எதிர்த்து பேசவைத்து நம்மை பிரித்தது போதாதென்று நம்மை பற்றி இழிவாக சொல்லிக்கொண்டு இருக்கா. தம்பியும் அதை நம்பிக்கொண்டு நம்மை எதிரியாக நினைக்கிறான். நாம் நால்வரும் உட்கார்ந்து பேசினால் தம்பி மனைவி சொன்னதெல்லாம் பொய் என்பது ஊர்ஜிதமாகும் கண்டிப்பா... //

    பெரியவர்கள் கருத்து வேறுபாட்டால் குழந்தைகள் மன வ்ருத்தம் அடைவது வேதனைப்படுத்துகிறது!

    ReplyDelete
  8. மேடம் நீங்கள் தான் பதிவுலக பின்னூட்டத் தென்றல் அப்படின்னு ரமணி சார் இந்த பதிவில் சொல்லிருக்கார்

    http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_2765.html

    நான் கவனிச்சதே இல்லை உங்களை. நானும் தினம் ஒரு பதிவு எழுதுறேன். எப்பவாவது எட்டி பாருங்க

    ReplyDelete
  9. எலாவற்றுக்கும் இருந்து அமைதியாக கதைத்தால் தீர்வு உண்டு.ஆனால் கதைக்க கூடிய சூழலை உருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் இன்னும் இன்னும் பிரச்சனையை பெரிதுபடுத்துகின்றன.அருமையான சிறுகதை. இன்றைய உறவுகளுக்கும் குடும்பங்களுக்கும் பொருந்திப்போகிறது .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உணர்வுகளின் தொகுப்பு அருமை

    ReplyDelete
  11. //
    angelin said...
    மஞ்சு ...ரொம்ப நாளாச்சு உங்க சிறு கதைகள் படிச்சு.. மீண்டும் அருமையான ஒரு கதையில் வாயிலாக ..நம் நாட்டில் வீட்டில் குடும்பங்களில் நடக்கும்ம் பிரச்சினையை சொல்லியிருக்கீங்க .
    எல்லா ப்ரசினைக்கும்காரணம் சுயநலமே//

    புரிதலின்மையும் அவசரமும் நிதானமின்மையும் யோசிக்க அவகாசம் எடுத்துக்கொள்ளாமையும் நம்பிக்கையின்மையும் கூட காரணங்கள்பா அஞ்சு...

    அன்பு நன்றிகள் அஞ்சு கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  12. //சிவஹரி said...
    :)

    என் சிரிப்பின் அர்த்தம் உங்களுக்கு மட்டும் புரியும் அக்கா..

    புரியுமுன்னு நம்பிக்கொள்கிறேன்..

    சிறுகதை அருமை.!//

    அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  13. //வெங்கட் நாகராஜ் said...
    பல உறவுகள் இப்படி தொலைந்து போய்விடுகின்றன. உறவினை இழப்பது மிகவும் கொடுமை சகோ....

    நல்ல பகிர்வு.//

    உண்மையேப்பா...அன்பு நன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  14. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    உறவுகளால் உதரப்படும் உறவுகள். சோகமான முடிவு தான்.
    நல்லாவே எழுதி இருக்கிறீர்கள்.//

    அதன் வலியும் தீரவே தீராது... அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார் கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  15. //இராஜராஜேஸ்வரி said...
    நல்லதுக்கு தான் எப்பவும் சோதனைகள் தொடருங்க. ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கு மட்டுமே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச்சொல்லி புருஷனை நம்பவைத்து நமக்கு எதிராக எதிர்த்து பேசவைத்து நம்மை பிரித்தது போதாதென்று நம்மை பற்றி இழிவாக சொல்லிக்கொண்டு இருக்கா. தம்பியும் அதை நம்பிக்கொண்டு நம்மை எதிரியாக நினைக்கிறான். நாம் நால்வரும் உட்கார்ந்து பேசினால் தம்பி மனைவி சொன்னதெல்லாம் பொய் என்பது ஊர்ஜிதமாகும் கண்டிப்பா... //

    பெரியவர்கள் கருத்து வேறுபாட்டால் குழந்தைகள் மன வ்ருத்தம் அடைவது வேதனைப்படுத்துகிறது!//

    ஆமாம் ராஜேஸ்வரி... பெரியவர்களின் பிரச்சனையால் குழந்தைகளின் சந்தோஷம் பிரச்சனையாகிறதுப்பா...அன்பு நன்றிகள் இராஜேஸ்வரி கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  16. //மோகன் குமார் said...
    மேடம் நீங்கள் தான் பதிவுலக பின்னூட்டத் தென்றல் அப்படின்னு ரமணி சார் இந்த பதிவில் சொல்லிருக்கார்

    http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_2765.html

    நான் கவனிச்சதே இல்லை உங்களை. நானும் தினம் ஒரு பதிவு எழுதுறேன். எப்பவாவது எட்டி பாருங்க//

    அன்பு வரவேற்புகள் மோகன்குமார்...

    ரமணி சாருக்கு அன்பு நன்றிகள் உங்களை அறிமுகம் செய்தமைக்கு...

    எட்டிப்பார்த்துட்டேனே.. பதிவும் போட்டேனே. நீங்க பாக்கலையாப்பா?

    ReplyDelete
  17. //நெற்கொழுதாசன் said...
    எலாவற்றுக்கும் இருந்து அமைதியாக கதைத்தால் தீர்வு உண்டு.ஆனால் கதைக்க கூடிய சூழலை உருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் இன்னும் இன்னும் பிரச்சனையை பெரிதுபடுத்துகின்றன.அருமையான சிறுகதை. இன்றைய உறவுகளுக்கும் குடும்பங்களுக்கும் பொருந்திப்போகிறது .வாழ்த்துக்கள்//

    அன்பு வரவேற்புகள் நெற்கொழுதாசன்...

    உண்மையேப்பா... அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  18. //
    கிராமத்து காக்கை said...
    உணர்வுகளின் தொகுப்பு அருமை//
    அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு பூபாலன்.

    ReplyDelete
  19. முதலையும் மூர்க்கணும்
    கொண்டது விடா என்கிற பழமொழிதான்
    கதையைப் படித்ததும் ஞாபகத்திற்கு வந்து போனது
    சிலருக்கு வாழ்வின் தீய பக்கங்க்கள் தெரியாததைப்போலவே
    சிலருக்கு வாழ்வின்நல்ல பக்கங்கள் தெரிய சந்தர்ப்பமே இல்லை
    காலம்தான் அவர்களை மாற்றும். ஆனால் அதற்காக
    அவர்கள் கொடுக்கவேண்டிய விலை கொஞ்சம்
    கூடுதலாக இருக்கும்
    உணர்வுபூர்வமான படைப்பு
    மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. பொய் சொல்வது பாவமே இல்லை தோழி இந்த மாதிரி சந்தர்ப்பங்களில். பல உறவுகள் பணத்தை மட்டுமே பெரிதாக நினைத்து மதிப்பை அறியாமல் இப்படிப் பிரிந்து விடும் கொடுமையை நடைமுறையில் நானே அனுபவித்தவன் என்பதால் என் மனதை அசைத்து விட்டது உங்களின் கதை. நிறைய சொல்லணும் போலருக்கு- வார்த்தைகள் வரலை. நன்றிம்மா.

    ReplyDelete
  21. //Ramani said...
    முதலையும் மூர்க்கணும்
    கொண்டது விடா என்கிற பழமொழிதான்
    கதையைப் படித்ததும் ஞாபகத்திற்கு வந்து போனது
    சிலருக்கு வாழ்வின் தீய பக்கங்க்கள் தெரியாததைப்போலவே
    சிலருக்கு வாழ்வின்நல்ல பக்கங்கள் தெரிய சந்தர்ப்பமே இல்லை
    காலம்தான் அவர்களை மாற்றும். ஆனால் அதற்காக
    அவர்கள் கொடுக்கவேண்டிய விலை கொஞ்சம்
    கூடுதலாக இருக்கும்
    உணர்வுபூர்வமான படைப்பு
    மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    உண்மையே ரமணி சார்.... வார்த்தைகளின்றி .... அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  22. //பால கணேஷ் said...
    பொய் சொல்வது பாவமே இல்லை தோழி இந்த மாதிரி சந்தர்ப்பங்களில். பல உறவுகள் பணத்தை மட்டுமே பெரிதாக நினைத்து மதிப்பை அறியாமல் இப்படிப் பிரிந்து விடும் கொடுமையை நடைமுறையில் நானே அனுபவித்தவன் என்பதால் என் மனதை அசைத்து விட்டது உங்களின் கதை. நிறைய சொல்லணும் போலருக்கு- வார்த்தைகள் வரலை. நன்றிம்மா.//

    எல்லோருமே வாழ்க்கையில் இந்த நிலையை கடந்து வரும் கொடுமையை பார்த்திருக்கிறோம்பா.. கவலை வேண்டாம். மனதை அமைதி படுத்துங்கள். அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...