4.
துன்பத்தில் என்றும் துணை நின்றவனே
துக்கங்கள் என்னை சேராது காத்தவனே
துடித்த இதயத்தில் என்றும் நிறைந்தவனே
துளியும் மாறாத அன்பு என்பேன் கண்ணா...
5.
விளையாட்டு குழந்தை நீயோ மதுசூதனா
மனதில் கள்ளம் மறைக்காதவன் நீயென்பேன்
உன்னை துதிக்கையில் என்னை மறந்தேன்
இன்னும் என்னை நோகவைப்பதும் ஏனோ கண்ணா?
6.
அசுரர்கள் ஆணவம் அழித்தாய் அன்று
அன்பெனும் இதயத்தில் மலர்வாய் என்று
கன்னத்தில் முத்தமிட்டு மகிழ துடித்து
காத்திருக்கும் மீராவை ஏமாற்றாதே கண்ணா
துன்பத்தில் என்றும் துணை நின்றவனே
துக்கங்கள் என்னை சேராது காத்தவனே
துடித்த இதயத்தில் என்றும் நிறைந்தவனே
துளியும் மாறாத அன்பு என்பேன் கண்ணா...
5.
விளையாட்டு குழந்தை நீயோ மதுசூதனா
மனதில் கள்ளம் மறைக்காதவன் நீயென்பேன்
உன்னை துதிக்கையில் என்னை மறந்தேன்
இன்னும் என்னை நோகவைப்பதும் ஏனோ கண்ணா?
6.
அசுரர்கள் ஆணவம் அழித்தாய் அன்று
அன்பெனும் இதயத்தில் மலர்வாய் என்று
கன்னத்தில் முத்தமிட்டு மகிழ துடித்து
காத்திருக்கும் மீராவை ஏமாற்றாதே கண்ணா
Tweet |
அருமை, அருமையோ அருமை.
ReplyDeleteபாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை. மீரா பஜனை தமிழில் எழுதுகிறீர்களா?
ReplyDeleteஉண்மைதான் மஞ்சு. எப்படியாவது அவருக்கு ரயிலில் இடம் கிடைத்துவிட வேண்டும்.. இறக்கி விட்டு விடக்கூடாது என்று தவித்தேன் மனசுக்குள். நல்லவேளை.. ஏசியில் இடம் இல்லாவிட்டாலும் வேறு ஜெனரல் பெட்டியில் இடம் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார் டிடி ஆர். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பின்னூட்டம் பார்த்து சந்தோஷம்.
ReplyDeleteஎனக்கு பிடித்தவர்களில் பக்தை மீரா அதை பற்றி எழுதிவரும் உங்களுக்கு எனது மனம் திறந்த வாழ்த்தும் பாராட்டுக்களும்
ReplyDeleteஏக்கங்கள் நெஞ்செங்க்கும் பரவி அதன் வழியே இவ்வளவொரு பொறுமையான சீர் வரிகளால் மீரா வேண்டி நிற்கும் காட்சி காணலரியா.
ReplyDeleteகிருஷ்ண கானம் - இனிமை..
ReplyDelete//
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
அருமை, அருமையோ அருமை.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்//
அன்பு நன்றிகள் வை.கோபாலக்ருஷ்ணன் சார் கருத்து பகிர்ந்தமைக்கு.
//
ReplyDeleteஸ்ரீராம். said...
அருமை. மீரா பஜனை தமிழில் எழுதுகிறீர்களா?//
அவ்ளோ பெரிய ஆள் இல்ல ஸ்ரீராம் நான் :) ஏதோ எழுதுகிறேன்பா...
அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பகிர்ந்தமைக்கு.
//
ReplyDeleteரிஷபன் said...
உண்மைதான் மஞ்சு. எப்படியாவது அவருக்கு ரயிலில் இடம் கிடைத்துவிட வேண்டும்.. இறக்கி விட்டு விடக்கூடாது என்று தவித்தேன் மனசுக்குள். நல்லவேளை.. ஏசியில் இடம் இல்லாவிட்டாலும் வேறு ஜெனரல் பெட்டியில் இடம் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார் டிடி ஆர். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பின்னூட்டம் பார்த்து சந்தோஷம்.//
உங்க எழுத்துகள் நிறைய படித்திருக்கிறேன்..நான் படித்தவரை நீங்கள் கருணை மனதுள்ளவர் என்று நானறிவேன்.. முன்பு ஒரு கதை என்று ஒரு குட்டிப்பையனும் தாத்தாவும் பார்க்குக்கு விளையாட வந்து ஒரு நாய்க்குட்டியை தாயிடம் விட்டு போகச்சொல்லி பையன் சொல்லுவதாக எழுதி இருந்தீர்கள்.. அந்த நிகழ்வு உங்கள் மனதை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை புரிய அதிக சமயம் எடுக்கவில்லை ரிஷபன் எனக்கு... அதனால் தான் நீங்க அந்த சமயத்தில் என்ன நினைச்சிருப்பீங்கன்னு யூகிக்க முடிந்ததை சொன்னேன்பா..
அன்பு நன்றிகள் ரிஷபன்...
//Avargal Unmaigal said...
ReplyDeleteஎனக்கு பிடித்தவர்களில் பக்தை மீரா அதை பற்றி எழுதிவரும் உங்களுக்கு எனது மனம் திறந்த வாழ்த்தும் பாராட்டுக்களும்//
அன்பு நன்றிகள் நண்பரே.. சௌக்கியமா?
//சிவஹரி said...
ReplyDeleteஏக்கங்கள் நெஞ்செங்க்கும் பரவி அதன் வழியே இவ்வளவொரு பொறுமையான சீர் வரிகளால் மீரா வேண்டி நிற்கும் காட்சி காணலரியா.//
அன்பு நன்றிகள் தம்பி....
//ரிஷபன் said...
ReplyDeleteகிருஷ்ண கானம் - இனிமை.//
அன்பு நன்றிகள் ரிஷபன்..
இன்றுதான் பார்த்தேன் பக்தமீரா
ReplyDeleteவாழ்த்துக்கள் .
மீராவின் மீள்பிரவாகம் அருமை எளிமை
// நெற்கொழுதாசன் said...
ReplyDeleteஇன்றுதான் பார்த்தேன் பக்தமீரா
வாழ்த்துக்கள் .
மீராவின் மீள்பிரவாகம் அருமை எளிமை//
அன்பு வரவேற்புகள் நெற்கொழுதாசன். பெயர் அருமை...
அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.
அன்பெனும் இதயத்தில் மலர்வாய் என்று... இந்த ஒரு வரியே கண்ணை இழுத்துடுச்சு- மனசுல ஒட்டிக்கிச்சு. மீராவின் பாடல் படிக்க மனம் ரசனையில் ஆனந்தக் குளத்தில் மிதக்கிறதுங்க.
ReplyDeleteஅன்பின் மஞ்சு - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - நல்ல கவிதைகள் - நல்வாழ்த்துகள் -= நட்புடன் சீனா
ReplyDelete