"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, September 18, 2012

கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா ஜூஸ்


காலை எழுந்ததும் அரக்க பரக்க ஏதோ ஒன்னு சாப்புட்டு ஓடுகிறோம்.  என்னிக்காவது நம்ம உடல்நலனில் நமக்கு அக்கறை இருக்கா? எடுத்துக்கிறோமா அதுவும் இல்லை. வீட்டில் எல்லோர் தேவைகளும் பார்த்து பார்த்து செய்கிறோம். பிரயோஜனமா இதை செய்வோமா இனி?

கறிவேப்பிலை  ஒரு கட்டு, புதினா ஒரு கட்டு, கொத்தமல்லி ஒரு கட்டு, நெல்லிக்கா முழுசு 4, இஞ்சி ஒரு துண்டு இதெல்லாம் போட்டு மிக்சில அரைச்சு ஜூஸ் எடுத்துக்கோங்க.

எலுமிச்சை ஒன்னு பிழிஞ்சு அதில் கலந்துக்கோங்க. சுகர் இருக்கிறவங்க உப்பு சேர்த்துக்கோங்க. பிபி இருக்கிறவங்க வெல்லம் சேர்த்துக்கோங்க. ரெண்டும் இருக்கிறவங்க அப்டின்னு கேட்டுராதீங்கப்பா ப்ளீஸ்....

தினமும் காலை இதை குடிங்க.... என்ன பயன்னு கேட்பீங்களே...

சரி குறிச்சுக்கோங்க...

நெல்லிக்காய் = இளமையா இருக்க உதவும், ஆயுளை நீட்டிக்கும். தோல் சுருக்கமில்லாம அழகா இருக்கும்.

புதினா, கொத்தமல்லி = ரத்தத்தை சுத்தப்படுத்தும், வாய் துர்நாற்றம் போக்கும்.

கறிவேப்பிலை = தலைமுடி உதிர்வுக்கு ரொம்ப நல்லது.

இஞ்சி = அனாவசியமான சதைகள் உடலில் சேர இடம் தராது....

எலுமிச்சை = உடல் உஷ்ணத்தை தீர்க்கும், பித்தம் போக்கும்..

போறுமா?

அப்ப நாளை முதல் உங்க வீட்டில் ஜூஸ் ரெடியா??

நானா?? நாங்க தான் தினமும் குடிக்கிறோமேப்பா...


32 comments:

  1. குடிக்கறதுக்கு... ஐ மீன் ஜுஸ் குடிக்கறதுக்கு கசக்குமா..? அதும் உடல்நலத்துக்கு நல்லதுன்னு வேற சொல்றீங்க. அடிக்கடி குடிக்க ட்ரை பண்றேன். நன்றிங்கோவ்!

    ReplyDelete
  2. நிச்சயம் செய்து பார்த்துவிடுகிறோம்
    அருமையான ஜூஸ் செய்ய
    கற்றுக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு. பதிவிட்டதுக்கு நன்றி


    இதை படித்தது என்னுள் சில கேள்விகள் எழுந்தன்.



    தினமும் காலை இதை குடிங்க.... என்ன பயன்னு கேட்பீங்களே...

    சரி குறிச்சுக்கோங்க...

    /////நெல்லிக்காய் = இளமையா இருக்க உதவும், ஆயுளை நீட்டிக்கும். தோல் சுருக்கமில்லாம அழகா இருக்கும்.//

    அப்ப இந்த முறையை பின்பற்றினால் நம் பெண்கள் உலக அழகியாக வர வாய்ப்புண்டோ?

    ///புதினா, கொத்தமல்லி = ரத்தத்தை சுத்தப்படுத்தும், வாய் துர்நாற்றம் போக்கும்.///

    ரத்தத்தை சுத்த படுத்துவதற்கு பதில் நம் மக்களின் மனதை சுத்தப்படுத்த ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்

    ///கறிவேப்பிலை = தலைமுடி உதிர்வுக்கு ரொம்ப நல்லது.///
    உதிர்வுக்கு நல்லதா அல்லது உதிர்வை தடுத்து நிறுத்துவத்ற்கு நல்லதா? அப்ப வழுக்கை தலை உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை உபயோகம் இல்லையா?

    ///இஞ்சி = அனாவசியமான சதைகள் உடலில் சேர இடம் தராது.///...

    அப்ப எல்லோரும் சோமலியா மக்கள் போல ஆகிவிடுவார்களா?

    ///எலுமிச்சை = உடல் உஷ்ணத்தை தீர்க்கும், பித்தம் போக்கும்..//
    சில பதிவர்களின் பதிவை படிக்கும் போது ( சண்டை ) போகும் போது எலுமிச்சம் பழம் சாப்பிட்டலாம் போலிருக்கிறதே


    போறுமா?

    இன்னும் வேண்டும்

    அப்ப நாளை முதல் உங்க வீட்டில் ஜூஸ் ரெடியா??

    ரெடிதான் ஆனா என் குழந்தைக்கு கொடுக்க போனால் டாடி உங்களுக்கு இந்த ஐடியா கொடுத்தது யாரு என்று கொலைவெறியோடு உங்களைத் தேடுகிறாள்

    நானா?? நாங்க தான் தினமும் குடிக்கிறோமேப்பா...

    என்ன குடிகார குடும்பமா?

    எல்லாம் நகைச்சுவைக்காக சொன்னது அதனால சீரியஸா எடுத்துக்காம இது போல இரு பயனுள்ள பதிவை போடுங்கள் என்ரு சொல்லி நான் தாயாரித்த ஜூஸை குடிக்க ஆளை தேடி செல்ல்கிறேன்

    ReplyDelete
  4. ஆஹா !!! அருமையான ஹெல்தி ஜூஸ் ரெசிப்பி தந்ததற்கு மஞ்சுவிற்கு நன்றி ..எல்லாமே இங்கே கிடைக்குது செய்து உடனே குடிக்கிறோம்

    ReplyDelete
  5. ஜுஸ் தயாரிச்சுட வேண்டியதுதான்.பயனுள்ள பகிர்வு..

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்.

    எல்லாமே சரிதான். இருப்பினும் இவற்றையெல்லாம் வாங்கியாந்து, அழகாக பொறுமையாக ஜூஸ் ஆக்கி, அவ்வப்போது குடிக்கத் தந்துகொண்டே இருக்க, சகோதரி மஞ்சுவைப்போல பொறுப்புள்ள ஆசாமி ஒருவர் இங்கே என் அருகில் இருக்க வேண்டுமே!

    பதிவினில் படத்தினில் பார்க்கவும், படிக்கவும் ரொம்ப நல்லாத்தான் இருக்குது.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .... [ ஒரு பெரு மூச்சு ]

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பயனுள்ள குறிப்பிற்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  8. பார்க்கவே ஆசையாக உள்ளது. எடுத்துக் குடித்திடட்டுமா!...ம்...ம்.....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. நீங்க‌ கொடுத்துள்ள‌ பொருட்க‌ளின் அள‌வில் எத்த‌னை க‌ப் ஜுஸ் த‌யாரிக்க‌லாம் ம‌ஞ்சு? இர‌த்த‌ விருத்திக்கும் புதினா ந‌ல்ல‌து. கைப்பிடி புதினா இலை எடுத்து க‌ழுவி, சின்ன‌ ஜாரில் அரைத்து எலுமிச்சை சாறும் ச‌ர்க்க‌ரையும் சேர்த்து குடித்தால்... கோடையும் குளுகுளுக்கும் வாய் ம‌ண‌ம‌ண‌க்கும்.

    எல்லோரையும் பார்த்துக் கொள்வ‌தோடு ந‌ம் உட‌ல்ந‌ல‌த்துக்கும் ச‌ற்று நேர‌ம் ஒதுக்க‌ணும் என்ற‌ உங்க‌ க‌ருத்தை பாராட்டி வ‌ர‌வேற்கிறேன்.

    ReplyDelete
  10. ஒரு அருமையான ஆரோக்கியமான ஜூஸை பறிமாறிய மஞ்சுபாஷினிக்கு நன்றி!

    ReplyDelete
  11. கசக்குமோ இனிப்பா எதாவது சொல்லுங்க அக்கா.

    ReplyDelete
  12. எல்லாமே ஒரு கட்டு ஒரு கட்டு என்றால் , கொஞ்சம் டோஸ் பலமா தெரியுதே சிஸ்டர். இருந்தாலும் ட்ரை பண்ணுவோம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. நானும் சாப்டு பார்கிறேன் சகோதரி பலன் இருந்தால் பீஸ் இல்ல போலி தா

    ReplyDelete
  14. அருமை..அருமை..

    ReplyDelete
  15. @ Sasi Kala said... ///கசக்குமோ இனிப்பா எதாவது சொல்லுங்க அக்கா.///

    இதைபோய் அக்காவிடம் போய் ஏன் கேட்கிறீர்கள் அக்காவுக்கு குடிச்ச மயக்கம் இன்னும் தீர்ந்து இருக்காது.ஹீ.ஹீ என்னிடம் கேட்ட சொல்லி இருக்க மாட்டேனா என்ன?

    இப்ப நான் சொல்றதை கேட்டுகோங்கோ...


    கடையில் உங்களுக்கு பிடிச்சா மிக இனிப்பான ஜூஸ் வாங்கி கொள்ளுங்கள் அதில் 1 கிலோ ஜீனியை போட்டு கலந்து கொள்ளுங்கள் அதன் பின் வேண்டிய அளவு வெல்லத்தையும் போட்டு கலந்து கொள்ளுங்கள் இறுதியாக நல்ல தேனைவாங்கி அதில் கலந்து குடித்து பாருங்கள் அதன் பின் சொல்லுங்கள் .. இது மிககககக இனிப்பான ஜூஸ் (இது நல்லது. டாகடருக்கு காரணம் இதை நீங்கள் குடித்தால் அவருக்கு வருமானம்)

    ReplyDelete
  16. //பால கணேஷ் said...
    குடிக்கறதுக்கு... ஐ மீன் ஜுஸ் குடிக்கறதுக்கு கசக்குமா..? அதும் உடல்நலத்துக்கு நல்லதுன்னு வேற சொல்றீங்க. அடிக்கடி குடிக்க ட்ரை பண்றேன். நன்றிங்கோவ்!//

    கசக்கவே கசக்காதுப்பா... லெமன் போட்டு உப்பும் போட்டு குடிச்சால் எப்படி கசக்குமாம்? நல்லாருக்கும் கணேஷா குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்கோ..

    ReplyDelete
  17. //Ramani said...
    நிச்சயம் செய்து பார்த்துவிடுகிறோம்
    அருமையான ஜூஸ் செய்ய
    கற்றுக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//

    நாளெல்லாம் புத்துணர்ச்சியாவே இருக்கலாம் ரமணிசார்.. குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்கோ...

    ReplyDelete
  18. //Avargal Unmaigal said...
    மிகவும் பயனுள்ள பதிவு. பதிவிட்டதுக்கு நன்றி


    இதை படித்தது என்னுள் சில கேள்விகள் எழுந்தன்.



    தினமும் காலை இதை குடிங்க.... என்ன பயன்னு கேட்பீங்களே...

    சரி குறிச்சுக்கோங்க...

    /////நெல்லிக்காய் = இளமையா இருக்க உதவும், ஆயுளை நீட்டிக்கும். தோல் சுருக்கமில்லாம அழகா இருக்கும்.//

    அப்ப இந்த முறையை பின்பற்றினால் நம் பெண்கள் உலக அழகியாக வர வாய்ப்புண்டோ?

    ///புதினா, கொத்தமல்லி = ரத்தத்தை சுத்தப்படுத்தும், வாய் துர்நாற்றம் போக்கும்.///

    ரத்தத்தை சுத்த படுத்துவதற்கு பதில் நம் மக்களின் மனதை சுத்தப்படுத்த ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்

    ///கறிவேப்பிலை = தலைமுடி உதிர்வுக்கு ரொம்ப நல்லது.///
    உதிர்வுக்கு நல்லதா அல்லது உதிர்வை தடுத்து நிறுத்துவத்ற்கு நல்லதா? அப்ப வழுக்கை தலை உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை உபயோகம் இல்லையா?

    ///இஞ்சி = அனாவசியமான சதைகள் உடலில் சேர இடம் தராது.///...

    அப்ப எல்லோரும் சோமலியா மக்கள் போல ஆகிவிடுவார்களா?

    ///எலுமிச்சை = உடல் உஷ்ணத்தை தீர்க்கும், பித்தம் போக்கும்..//
    சில பதிவர்களின் பதிவை படிக்கும் போது ( சண்டை ) போகும் போது எலுமிச்சம் பழம் சாப்பிட்டலாம் போலிருக்கிறதே


    போறுமா?

    இன்னும் வேண்டும்

    அப்ப நாளை முதல் உங்க வீட்டில் ஜூஸ் ரெடியா??

    ரெடிதான் ஆனா என் குழந்தைக்கு கொடுக்க போனால் டாடி உங்களுக்கு இந்த ஐடியா கொடுத்தது யாரு என்று கொலைவெறியோடு உங்களைத் தேடுகிறாள்

    நானா?? நாங்க தான் தினமும் குடிக்கிறோமேப்பா...

    என்ன குடிகார குடும்பமா?

    எல்லாம் நகைச்சுவைக்காக சொன்னது அதனால சீரியஸா எடுத்துக்காம இது போல இரு பயனுள்ள பதிவை போடுங்கள் என்ரு சொல்லி நான் தாயாரித்த ஜூஸை குடிக்க ஆளை தேடி செல்ல்கிறேன்//

    ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்பா.... ஜூஸ் உண்மையா உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லதுப்பா... முயற்சித்து பாருங்கோ... நீங்களே சொல்வீங்க...

    ReplyDelete
  19. //angelin said...
    ஆஹா !!! அருமையான ஹெல்தி ஜூஸ் ரெசிப்பி தந்ததற்கு மஞ்சுவிற்கு நன்றி ..எல்லாமே இங்கே கிடைக்குது செய்து உடனே குடிக்கிறோம்//

    ஆமாம் அஞ்சு புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை இஞ்சி இதெல்லாம் சமையலுக்கு உபயோகப்படுத்துவது தான்..

    ReplyDelete
  20. //மதுமதி said...
    ஜுஸ் தயாரிச்சுட வேண்டியதுதான்.பயனுள்ள பகிர்வு..//

    ஜூஸ் தயாரிச்சு குடிச்சீங்களா மதுமதி?

    ReplyDelete

  21. வணக்கம்!

    பதமாய்ப் படித்தேன் சிலபக்கம்!
    பசியைப் போக்கும் நல்விருந்து!
    கதம்பம் போன்றே கமழ்கின்ற
    கவிதை! கருத்து! கனிக்கதைகள்!!
    இதமாய் நீரில் குளிக்கின்ற
    இன்பம் இந்த வலையென்பேன்!
    மிதமாய்ப் பாடும் விருத்தத்தில்
    மேலாம் பதிவைப் பதித்தனனே!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  22. புதினாவுக்கும் கொத்தமல்லிக்கும் என்ன வித்தியாசம்?
    கறிவேப்பிலை சாப்பிட்டா முடி உதிராதா? முன்னாலயே தெரியாம போச்சே? உதிர்ந்த முடி வளர ஏதாவது இலை இருந்தா சொல்லுங்க.

    ReplyDelete
  23. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்.

    எல்லாமே சரிதான். இருப்பினும் இவற்றையெல்லாம் வாங்கியாந்து, அழகாக பொறுமையாக ஜூஸ் ஆக்கி, அவ்வப்போது குடிக்கத் தந்துகொண்டே இருக்க, சகோதரி மஞ்சுவைப்போல பொறுப்புள்ள ஆசாமி ஒருவர் இங்கே என் அருகில் இருக்க வேண்டுமே!

    பதிவினில் படத்தினில் பார்க்கவும், படிக்கவும் ரொம்ப நல்லாத்தான் இருக்குது.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .... [ ஒரு பெரு மூச்சு ]

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.//

    இது சிரமமான வேலையே இல்லை அண்ணா... நான் ஊருக்கு வரும்போது மன்னிக்கிட்ட செய்து தர சொல்கிறேன். உடலுக்கும் நல்லது...

    ReplyDelete
  24. //சிவஹரி said...
    பயனுள்ள குறிப்பிற்கு நன்றி அக்கா.//

    அன்பு நன்றிகள் தம்பி.

    ReplyDelete
  25. //kovaikkavi said...
    பார்க்கவே ஆசையாக உள்ளது. எடுத்துக் குடித்திடட்டுமா!...ம்...ம்.....
    வேதா. இலங்காதிலகம்.//

    ஆஹா வேதாம்மா உங்களுக்கு இல்லாததா.. உங்களிடம் தொலைபேசியில் கதைத்து நாட்கள் ஆகிவிட்டன. இன்று அழைக்கிறேன்.

    ReplyDelete
  26. //நிலாமகள் said...
    நீங்க‌ கொடுத்துள்ள‌ பொருட்க‌ளின் அள‌வில் எத்த‌னை க‌ப் ஜுஸ் த‌யாரிக்க‌லாம் ம‌ஞ்சு? இர‌த்த‌ விருத்திக்கும் புதினா ந‌ல்ல‌து. கைப்பிடி புதினா இலை எடுத்து க‌ழுவி, சின்ன‌ ஜாரில் அரைத்து எலுமிச்சை சாறும் ச‌ர்க்க‌ரையும் சேர்த்து குடித்தால்... கோடையும் குளுகுளுக்கும் வாய் ம‌ண‌ம‌ண‌க்கும்.

    எல்லோரையும் பார்த்துக் கொள்வ‌தோடு ந‌ம் உட‌ல்ந‌ல‌த்துக்கும் ச‌ற்று நேர‌ம் ஒதுக்க‌ணும் என்ற‌ உங்க‌ க‌ருத்தை பாராட்டி வ‌ர‌வேற்கிறேன்.//

    நாங்க வீட்டில் 5 பேர் நிலாமகள்.... ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்தமல்லி, ஒரு கட்டு கறிவேப்பிலை, நான்கு நெல்லிக்காய், சிறுதுண்டு இஞ்சி, பெரிய எலுமிச்சைப்பழம் ஒன்று, ஒன்னரை ஸ்பூன் உப்பு இப்படி தான் செய்கிறேன்பா... 5 க்ளாஸ்கள் ஜூஸ் கிடைக்கிறது எனக்கு.

    ReplyDelete
  27. //ஸாதிகா said...
    ஒரு அருமையான ஆரோக்கியமான ஜூஸை பறிமாறிய மஞ்சுபாஷினிக்கு நன்றி!//

    அன்பு நன்றிகள் ஸாதிகா.. உங்களுடன் பேசியது எனக்கு மிகவும் சந்தோஷம்பா...

    ReplyDelete
  28. //Sasi Kala said...
    கசக்குமோ இனிப்பா எதாவது சொல்லுங்க அக்கா.//

    உப்பு, வெல்லம் போடாம குடிச்சா கசக்கும்... வெல்லம் போட்டு குடிச்சா இனிக்கும் சசி...

    ReplyDelete
  29. நல்ல பயன்னுள்ள தகவல்......உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  30. நான் நெல்லிக்காய் ஜூஸ் ஒரு நாள்,இஞ்சி ஜூஸ் ஒரு நாள்,கேரட் ஜூஸ் ஒரு நாள்,லெமன் ஜூஸ் ஒரு நாள்,பீட்ரூட் ஜூஸ் ஒரு நாள்னு வீட்டில் உள்ளவர்களுக்கு கதற கதற கொடுத்தும், நான் மட்டும் ருசித்தும் குடித்தும் வருகிறேன். இதை ஒரு நாள் செய்யணுமே.

    ReplyDelete
  31. ஆரோக்கியமான ஜூஸும் , அதன் பயன்களும் அருமை

    புதினா , இஞ்சி..லெமன் ஜூஸ்

    நெல்லிக்காய் லெமன் ஜூஸ்

    இப்படிதான் செய்து இருக்கேன்,
    இப்படி மொத்தமா செய்ததில்லை ,

    இனி செய்து பார்த்துடுவோம்.

    ReplyDelete
  32. .பயனுள்ள பகிர்வு..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...