என்னிடம் உனக்கு
பிடித்ததும் பிடிக்காததும் என்ன???
பிடித்ததும் பிடிக்காததும் என்ன???
குறும்பாக
தலைசாய்த்து ஒற்றைக்கண் மூடி
கேட்கிறாய் என்னை...
உச்சிமுகர்ந்து என் நெற்றியில்
நீ
முத்தமிடும்போதெல்லாம்
என் அன்னையை நினைவுப்படுத்துகிறாய்....
என் கன்னத்தில்
நீ
கவிதை முத்திரை பதிக்கும்போதெல்லாம்
ஏக்கத்தில் ஆழ்த்திவிடுகிறாய்...
தோல்விகளில் துவளும்போதெல்லாம்
நீ
இதழ் ஒத்தடம் தந்து
என்னை உயிர்ப்பிக்கிறாய்....
என் சுவாசத்தில் முழுமையாய்
ஆக்கிரமித்து
நேசம் பகிர்கிறாய்....
இன்னும் சொல்ல நிறைய....
சொல்லி முடிக்குமுன்
உன் அணைப்பில்
நான்.....
Tweet |
கவிதை சுவாசமாய்..... நேசமாய்....
ReplyDeleteநல்லாயிருக்கு, மஞ்சு.
பாராட்டுக்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...
Deleteமெல்லிய உணர்வுகளை அழகுபட மொழிந்தீ்ரகள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் குணசீலா.. நீங்க சௌக்கியமாப்பா?
Deleteகவிதையும் எனது நெஞ்சை விட்டு அகலமாட்டேன் என நெருக்கமாய்......
ReplyDeleteசிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி மஞ்சுபாஷிணி.......
நேசத்தை வார்த்தைகளால் வடித்து தந்த மற்றுமொரு அழகான படைப்பு
ReplyDeleteஅட...! போங்க சகோதரி...
ReplyDeleteரசித்தேன்...!
இனிமையாகட்டும்
ReplyDeleteஎன் சுவாசத்தில் முழுமையாய்
ReplyDeleteஆக்கிரமித்து
நேசம் பகிர்கிறாய்.... :) கவிதை முழுமையும் மிக அழகு
தென்றலின் மென்மையைக் கவிதையில் கண்டேன்
ReplyDeleteநின்றதே மனதினில் நிலையென விண்டேன்!
நேசத்தை சுவாசித்த கவிதை
ReplyDeleteபுத்துணவுடன் உயிர்த்தெழுகிறது ..பாராட்டுக்கள்..!
சுவாசமாய் நேசம், தலைப்பும் கவிதையும் அருமை.
ReplyDeleteஎன் சுவாசத்தில் முழுமையாய்
ReplyDeleteஆக்கிரமித்து
நேசம் பகிர்கிறாய்....
-----
நேசத்தின் வாசத்தை முகரச் செய்யும் கவிதை அக்கா. வாழ்த்துக்கள்.
//இதழ் ஒத்தடம் தந்து
ReplyDeleteஎன்னை உயிர்ப்பிக்கிறாய்....// ரசித்தேன்
அருமை.
ReplyDeleteநேசத்தை அன்பின் உளி கொண்டு செதுக்கியுள்ளீர்கள்
வாங்க வாங்க தொடர்ந்து வாங்க.கவிதையும் நிறைய தாங்க
ReplyDeleteகேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலளிக்க இடந்தராமல் இது என்ன விளையாட்டு? நேசத்தில் சிக்குண்டு கிடக்கிறது மனம், சிக்கலிலிருந்து விடுபடும் வித்தையறியாமல் அல்ல, விடுபடவிரும்பாமல்! அழகான கவிதை மனந்தொட்டுப்போகும் நெருக்கம். பாராட்டுகள் மஞ்சு.
ReplyDeleteஅரையாண்டு காலம் அஞ்ஞாத வாசம் இருந்த பின்னர், கவிதையை சுவாசித்து வலைப்பதிவிற்கு நேசமாய் வந்த வரிகள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete