25.
உடுத்தும் உடையிலும் நீ
வணங்கும்
இறையிலும் நீ
உரசிச் செல்லும்
காற்றிலும் நீ
என்னிலும் நீ
எந்தன் பாட்டிலும் நீ
26.
நீ எங்கே எங்கே
என்று
தேடி அலையும் என்
மனதில்
உன்னை முழுதும்
நிறைந்தவன் நீ
காணும் பொருளினும்
உன்னை
காண்பித்தவனும் நீ
27.
கண்ணா கண்ணா என்று உருகி அழைக்க
மாயவனாய் வந்து மறைந்து போகும்
உந்தன் போக்கு வேண்டாம் கண்ணா
கண்ணாய் எந்தன் இமையாய்
என்றும் நீ இருந்துவிடு கண்ணா...
Tweet |
கிருஷ்ண் ஜெயந்தி அன்று
ReplyDeleteமீண்டும் தொடர்ந்த
மீரா பஜன் தொட்ர்ந்து தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்கள் அனைவரின் ஊக்கமும் ஆசியும் என்னை தொடரவைக்கிறது ரமணி சார்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...
Deleteஉங்கள் கவிதைகளைப் படிக்கச் சின்ன கண்ணன் குதித்து ஓடி வருகிறானாம் இன்று மாலை! ஸ்ரீஜயந்தி வாழ்த்துகள்.
ReplyDeleteஅப்டியே உங்க வீட்டுக்கும் வந்து சீடை முறுக்கு சாப்பிடலாம்னு நினைத்தேனேப்பா :) உங்களுக்கும் ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்....
Deleteஎன்னிலும் நீ எந்தன் பாட்டிலும் நீ
ReplyDeleteஅவனன்றி வேறேது..
அதானே.. அவனன்றி வேறேது.. முழுவதும் வியாபித்தவன் அல்லவா கண்ணன்...
Deleteஆஹா.. அருமையான வரிகள் அக்கா..
ReplyDeleteமீராவும் கண்ணனும் கண்முன்னே வந்து போனார்கள்..
//கண்ணாய் எந்தன் இமையாய்
என்றும் நீ இருந்துவிடு கண்ணா...//
மீராவின் உணர்வுகளை சொல்லும் அற்புத வரிகள்..
//கண்ணா கண்ணா என்று உருகி அழைக்க
ReplyDeleteமாயவனாய் வந்து மறைந்து போகும்
உந்தன் போக்கு வேண்டாம் கண்ணா
கண்ணாய் எந்தன் இமையாய்
என்றும் நீ இருந்துவிடு கண்ணா..//
அப்படியே அப்படின்னு சொல்லிட்டு
அடுத்த ப்ளேனைப் புடிச்சு,
குவைத்துக்கு வரானாம் கண்ணன்.
ஆமாம். இன்னிக்கு சரியா மாலை
ஆறு மணிக்கு, today GOKULASTAMI.
மஞ்சு பாஷிணி வீட்டிலே
கண்ணன் பிறக்கப்போரானாம்.
welcome to Lord Kanna Krishna Mukuntha Meera Manaala.
எல்லாரும் வாங்க.
கல்கண்டு வாங்கிகிட்டு போங்க.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
www.subbuthatha.blogspot.com
அனைத்திலும் அவன் தான் மஞ்சு. அழகாகச் சொல்லிட்டீங்கோ. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇனிய கோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.
அன்புடன் கோபு
மீண்டும் பிறந்த கண்ணனுக்கு
ReplyDeleteகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
கண்ணா கண்ணா என்று உருகி அழைக்க//எனது http://kaviyazhi.blogspot.in/2013/08/blog-post_28.html?showComment=1377707011921#c7517355530756701680 பக்கத்தையும் பாருங்களேன்
ReplyDeleteகண்ணா கண்ணா என்று உருகி அழைக்க
ReplyDeleteமாயவனாய் வந்து மறைந்து போகும்
உந்தன் போக்கு வேண்டாம் கண்ணா
கண்ணாய் எந்தன் இமையாய்
என்றும் நீ இருந்துவிடு கண்ணா...//
இன்று வந்த கண்ணன் உங்களுடன் இருந்து விட்டானே!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2013/09/3.html?showComment=1379545194911#c5940160482125873396
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-