3.தவமின்றி கிடைத்த வரமே.....
ஸ்வேதா என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே வந்தாள் தோழி கற்பகம்...
வா கற்பகம் எப்படி இருக்கே ராத்திரி உன் முன்னாடி அப்படி நடந்ததுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று சொன்னாள் ஸ்வேதா..
மண்டு மன்னிப்பு ஏண்டி கேட்கிறே? என்னால என் தோழியை புரிஞ்சுக்க முடியாதா? மேலும் உன் தப்பு என்னத்தான் இதில்?
அப்டியில்ல கற்பகம் அவர் உன் முன்னாடி என்னை சத்தம்போட்டு பின் அறிவுரை சொன்னப்ப உன் முகம் போன போக்கை பார்த்தேன் சட்டுனு நீ கிளம்பறேன்னு சொல்லி கிளம்பினே. அதான்...
பின்ன நீ ஆனாலும் உன் புருஷனுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிறே இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை என்று வெறுப்பை உமிழ்ந்தாள் கற்பகம்..
என்ன சொல்றே கற்பகம்?
பின்ன என்ன ஸ்வேதா? நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அவருக்கு உன் மேல் இருக்கும் உரிமையை இப்படி எல்லார் முன்னாடி பிள்ளைகள் முன்னாடி உன்னை அடக்கி அதட்டி அறிவுரை சொல்லி அவரென்ன க்ளாஸ் டீச்சர்னு நினைப்பா?
இரு இரு நிறுத்து கற்பகம் என்ன நீ விட்டா என் புருஷன் மேலே குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கிட்டே போறே என்று பதட்டப்பட்டாள் ஸ்வேதா....
ஆமாண்டி நீ கொடுக்கும் இடம் தான்.. என்ன தான் நீ ஆபிசுல தப்பு செஞ்சிருந்தே ஆனாலும் அதை பிள்ளைகள் முன்னாடி சொல்லி உன்னை கண்டிக்கனுமா? தெரியாம தான் கேட்கிறேன் இன்னும் உன்னை சமமா நடத்தனும்னு கூட உன் புருஷனுக்கு தெரியலையே...
(சோர்வான முகத்துடன் ஹர்பன்ஸ் சிங் உள் நுழையும்போது அவன் கையில் இருக்கும் மல்லிப்பூவையும் அல்வாவையும் மறைக்க சிரமப்படும்போது ஸ்வேதாவின் குரலில் தன்னைப் பற்றி சொல்வதைக் கேட்டு ஒதுங்கி நின்றான்.. ஒட்டுக்கேட்கும் புத்தி இல்லைத் தான்.. ஆனால் சட்டுனு தன் பேச்சு இரு தோழிகளுக்கிடையில் வரும் காரணம்? )
ஏன் என் புருஷன் என்னை கொடுமை செஞ்சார்னு உன்னிடம் ஏதாவது சொன்னேனா?
இல்ல அவர் என்னை இழிசொல் பேசுறார்னு உன்னிடம் பஞ்சாயத்து வெச்சேனா?
அடிப்பாவி நான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினால்... மேலும் பேசவிடாமல் இடைமறித்தாள் ஸ்வேதா.
நிறுத்து கற்பகம்... நட்பு என்பது எப்படி இருக்கனும் தெரியுமா? குடும்பத்தில் சலசலப்பு இருந்தால் அதை தீர்க்க முயலனுமே தவிர நீ ப்ரச்சனையை பெரிசு பண்ணிருவே போலிருக்கே?
குழப்பத்துடன் கற்பகம் ஸ்வேதாவை ஏறிட்டு நோக்கினாள்.. இப்ப என்னத்தான் சொல்லவரே நீ?
இப்டி கேட்டியே இதை முன்னாடியே கேட்டிருந்தா இவ்ளோ லைன் வேஸ்டாகாம இருந்திருக்கும்ல?? என் புருஷன் கோவக்காரர் தான்.. ஒத்துக்கிறேன் எல்லார் முன்னாடியும் கத்துபவர் தான்.... அறிவுரை சொல்பவர் தான்..
அதை தாண்டி சொல்றேன் புருஷன் கொஞ்சுறது மட்டும் அந்தரங்கமா வைக்க கூடாதுடி... திட்றதும் சண்டை கோபதாபங்களும் இருவருக்கும் இடையில் அந்தரங்கமா தான் இருக்கணும். புருஷனுக்கு பொண்டாட்டிக்கும் இடையில் பிள்ளைகள் கூட மூணாம் நபர் தாண்டி, இப்படி இவர் பிள்ளைகள் முன்னாடி கத்தினதால் பிள்ளைகள் இவரை மதிக்கும்னா நினைக்கிறே என்று எதிர்க் கேள்வி கேட்டாள் கற்பகம்...
ஸ்வேதா சின்ன புன்னகையுடன் கற்பகத்தை ஏறிட்டு நோக்கினாள்... முதல்ல தண்ணி குடி.... நிதானமா நான் சொல்வதை கவனி...
அவர் கத்துறதையும் எனக்கு அறிவுரை சொன்னதையும் மட்டுமே ஒரே கண்ணோட்டத்தோட நீ பார்க்கிறே..... இன்னொரு கோணமும் இருக்கு சொல்றேன் ஆச்சர்யப்படாதே... நானும் அவரும் ஒரே ஆபிசுல தானே வேலை செய்கிறோம்? ஆபிசில் பொண்டாட்டி என்ற எண்ணத்தோட என்னை அவர் அண்டியதில்லை...
இப்படி எல்லார் முன்னாடி கத்துற மனுஷன் தனியா அறையில் குழந்தை போல் என் மடியில் தலை வைத்து தூங்க ஆசைப்படுவது தெரியுமா உனக்கு? நான் ஒரு நாள் ரொம்ப தூரம் வண்டி பஞ்சர் ஆகி தள்ளிக்கிட்டு நடந்து வந்ததை பார்த்து நான் தூங்கிட்டேன்னு நினைச்சு என் கால்களை மடியில் எடுத்து வெச்சுக்கிட்டு நைட்டெல்லாம் மெல்ல நீவி விட்டு பிடிச்சுவிட்டது தெரியுமா உனக்கு? எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சொல்லாமலயே எனக்கு வாங்கி கொடுத்து வாரத்தில் ஒரு நாள் லீவுல என்னை வேலை செய்ய விடாமல் உட்காரவைத்து மஹாராணி போல அவரே சமைச்சு பிள்ளைகள் நைட் தூங்கினதும் ஆசையுடன் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டது தெரியுமா உனக்கு? எனக்கு சின்ன தலைவலி வந்தாலும் துடிச்சு போகும் குழந்தை மனசு அவருக்கு தெரியுமா உனக்கு?
மேலும் பேசமுடியாது மூச்சு வாங்கினது ஸ்வேதாவுக்கு...
வியப்பாய் பார்த்தாள் கற்பகம்...
அருகே படித்துக்கொண்டிருந்த மகள் ஷ்ரவணி நமுட்டு சிரிப்புடன் கற்பகம் அம்மாவிடம் டோஸ் வாங்குவதை ரசித்துப்பார்த்துவிட்டு சொன்னாள்... " ஆண்ட்டி எங்கம்மா கிட்ட தப்பி தவறி நாங்களே எங்க அப்பாவை பற்றி ஒன்னும் சொல்லமாட்டோம் ஏன்னா எங்கம்மா ஃபுல் சப்போர்ட்டாக்கும் எங்கப்பாவுக்கு "
இத்தனைக் காலம் ஃப்ரெண்டா இருக்கும் உங்களுக்கு இது தெரியாம போனது பரிதாபமே.... அதுமட்டும் இல்லாம இது குடும்பம்.... பிள்ளைகள் முன்னாடி அப்பா அம்மாவை திட்டினால் அம்மாவை நாங்கள் மதிக்காம போயிருவோமா இல்ல அப்பாவை தான் மதிக்காம போயிருவோமா? தவறு செய்தால் அப்பா கண்டிப்பது உண்டு... அந்த தவறு திரும்ப நாங்களும் செய்யாமல் இருக்க இது ஒரு பாடமா எடுத்துக்குவோம்.. ஆண்ட்டி நீங்க சொன்னீங்களே திட்டிப்பதும் சண்டை போட்டுக்கவும் ரூம்ல தனியா செய்யனும்னு... ஒரே ரூம்ல குடித்தனம் நடத்தும் ஏழைக்குடும்பம் என்ன செய்யும் திட்டுவதற்கு என்று வேறு ரூம் தேட முடியுமா என்ன??
ஆண்ட்டி சின்னப் பொண்ணு நான் புத்தி சொல்றேன்னு நினைக்காதீங்க.... வீட்டுக்கு வீடு வாசப்படி புரிஞ்சுக்கோங்க... நாசுக்கா நீங்க நேத்து இங்கிதம் தெரிஞ்சு கிளம்புனீங்கன்னு நினைச்சேன்.. ஆனால் இன்னைக்கு வந்து இப்படி அம்மாவுக்கு நீங்க புத்தி சொல்லவரீங்க. எங்க குடும்பத்துல எங்களுக்கு அம்மா அப்பா ரெண்டு தூண் போல.... நாங்க இந்த தூணைப் பற்றி தான் நடக்க பழகுகிறோம்... நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுத்த அம்மா அப்பா எங்க முன்னாடி கொஞ்சிக்கிறதில்லைன்னா அவங்களுக்கு இடையில் அன்பு இல்லன்னு ஆயிருமா?? எங்களுக்கும் தெரியும் அப்பா அம்மாவுக்கு ஆசையா ஊட்டி விடுவதில் இருந்து அம்மாவுக்கு கால் பிடிச்சு விடறதுல இருந்து எல்லாமே எங்களுக்கும் தெரியும்...
ஸ்வேதா அன்புடன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கற்பகம் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தாள்...
ஸ்வேதா அன்புடன் கற்பகத்தின் தோளை மெல்ல அழுத்தி சொன்னாள் " இதனால் நம் நட்புக்கு எந்த குறைவும் வராது கற்பகம்.. எப்பவும் போல் நீ என் இனியத் தோழி தான் "
( இதையெல்லாம் ஹர்பன்ஸ் சிங் கேட்டதும் அவன் கண்ணில் ஒரு சொட்டு நீர் வந்து கன்னத்தை நனைத்து மனைவியையும் மகளையும் நினைத்து பெருமைக் கொண்டது)
அப்போது தான் உள்ளே நுழைவது போல் ஹாய் கற்பு ஹௌ ஆர் யூ என்றபடி முகத்தில் மலர்ச்சியைத் தேக்கிக்கொண்டு கேட்டான்...
கற்பகம் ஆ வென்று வாயைப் பிளந்தாள்.. நேற்று நடந்த கோபத்தின் சுவடே முகத்தில் தெரியாமல் கை நிறைய மல்லிகைப்பூவும் ஸ்வீட்டும் வாழ்க்கை இன்பமயமாக்கும் அற்புத சாதனங்களாக அவளுக்கு தோன்றியது... வெட்கத்துடன் ஸ்வேதாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் கற்பகம்.
ஸ்வேதா கனிவுடன் ஹர்பன்ஸ் சிங்கை நோக்கினாள்....
ஷ்ரவணி வேகமாய் தன் ரூமுக்கு ஓடினாள்...
ஹர்பன்ஸ் சிங்கும் ஸ்வேதாவும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்..
ஹர்பன்ஸ் சிங் அதுவரை காத்திருந்ததே பெரிய அவஸ்தை என்பது போல் வெகமாய் அவளைத் தள்ளிக் கட்டிக்கொண்டான்.
என்னாச்சு ஐயாவுக்கு என்று அவன் மூக்கை நிமிண்டினாள் ஸ்வேதா...
மல்லிப்பூவை அவளுக்கு வைத்துவிட்டு அல்வாவின் தித்திப்பை இருவரும் சுவைத்தனர்.
மிகவும் சந்தோஷ மூடில் ஹர்பன்ஸ் சிங் தன் பாஷையில் பாடத் தொடங்கினான்..
தில் தேதியா ஜான் துமே தேங்கே
தஹா நஹி கரேங்கே சனம்...
ரபு கீ கஸம்....
இன்சாப் கருலோ
முஜே மாஃப் கருலோ...
கண்மூடி ரசித்தாள் பாட்டையும் அவன் அன்பையும் அல்வாவின் தித்திப்பையும் மல்லிகைப்பூவின் மணத்தையும்....
அவளும் பாடினாள்...
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்க்கையில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் தாமரை
உன்னைக் கண்டால் மலர்கிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்
உன்னை மடியினில் ஏந்துகிறேன்.....

Tweet |
கதையும் பிரமாதமாகச் சொல்கிறீர்கள்
ReplyDeleteஇது அனைத்து குடும்பத்திலும் உள்ள பிரச்சனைதான்
ஆனாலும்
அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து
தீர்வும் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
ஹை ரமணி சார் எப்படி இருக்கீங்க :)
ReplyDeleteநீங்க வலி சுமக்க முடியா நிலைக்கு போட்ட கமெண்ட் காக்கா ஊச் :( காணோம் எனக்கு கதைகள் பகுதியில் கதைகளை பதிக்க தெரியலை.
எடிட் பண்ணினப்பா உங்க கமெண்ட்டும் காணாம போச்சு :(
அன்பு நன்றிகள் ஐயா...
சின்னச் சின்ன ஊடல்களுக்குப் பின் மிகப் பெரிய சந்தோஷங்கள் ஒளிந்திருந்ததைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது உங்கள் கதை.
ReplyDeleteஅழகாய் கருத்து சொல்லியிருக்கிறீர்கள்
சின்ன சின்ன ஊடல்கள் இல்லன்னா வாழ்க்கை ருசிப்பதும் இல்லை ரிஷபன். அன்பு நன்றிகள்பா வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும்.
ReplyDeleteகதை அருமையாக இருக்கிறது.
ReplyDeleteஊடலும், கூடலும் இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கதை சொல்லியவிதம் மிக நன்றாக இருக்கிறது.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
கதை அல்வாவாக இனித்தது.
ReplyDeleteமல்லிகைப்பூவாக மணத்தது.
உண்மையான அன்பான கணவன் மனைவுக்கு நடுவில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களை
மிக அழகாக வர்ணித்துள்ளது அழகோ அழகு.
நல்லாவே அனுபவித்து எழுதியுள்ளீர்கள், மஞ்சு. ;)
நானும் நல்லாவே அனுபவித்துப் படித்தேன்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
தவமின்றி கிடைத்த வரமே
ReplyDeleteஇனி வாழ்க்கையில் எல்லாம் சுகமே
நிறைவான கதை ..பாராட்டுக்கள்..