"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

பெண்ணாய் பிறக்க.....

பெண்ணாய் பிறக்க மாதவம் புரிந்திருக்க வேண்டுமாமே
கணவன் குடித்து விட்டு மனைவியை எட்டி உதைக்கிறான்
அப்போதும் சொல்லனுமா பெண்ணாய் பிறக்க.........
 

மனைவியின் சம்பளம் தன்னை விட சற்று உயரும்போது
அடக்கி மனைவியை வீட்டில் உட்கார வைக்க துடிக்கும்போது
அப்போதும் சொல்லனுமா பெண்ணாய் பிறக்க.....
 

தனக்கென ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் எல்லாம்
கணவனுக்கே சம்பாத்தியம் முழுவதும் கையில் கொடுத்துட்டு
அப்போதும் சொல்லனுமா பெண்ணாய் பிறக்க.....
 

வீட்டிலும் வேலை குழந்தை வளர்ப்பு ஆபிசில் வேலைப்பளு
இதையறியாது துன்புறுத்தும் கணவன் வாய்க்கும்போது
அப்போதும் சொல்லனுமா பெண்ணாய் பிறக்க......
 

பெண்ணாய் பிறந்ததலாயே சக்தி எரிக்கப்பட்டாள் சிவனால்
அடித்து துன்புறுத்தப்பட்டாள் கம்சனின் தங்கை தேவகி
ராமனின் கூற்று மெய்க்க தீ குளிக்கப்பட்ட சீதை
 

மாதவம் செய்து இப்படி ஒரு பிறப்பு பாவப்பட்ட பெண்ணுக்கு
திருமணத்தால் தொலைந்தது சுதந்திரம் என்னும் மனிதரே
உண்மையில் தொலைத்தது தன் உறவை தன் முகவரியை
 

தன்னை தொலைத்து தன் முகவரியை தொலைத்து
தன் தனித்தன்மையை தொலைத்து தன் உறவை தொலைத்து
பாவமப்பா பெண்கள் மாதவம் புரிந்து வேண்டாமப்பா பெண்பிறவி.......

3 comments:

  1. அப்படிச் சொல்லாதீர்கள் சகோதரி. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. என் அம்மாவை அப்பா நடத்தியது போல் நான் என் மனைவியை நடத்துவது இல்லை . என் பிள்ளையின் காலத்தில் பெண்களின் மதிப்பு இன்னும் முன்னேறி இருக்கும். உரிமைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் . கேட்டுக் கொண்டிருந்தால் கிடைக்காது.
    " பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா " என்றான் பாரதி.

    ReplyDelete
  2. உண்மையே சிவகுமாரன்...

    இது நான் என்றோ எழுதி வைத்த கவிதை வரிகள்....

    பெண்களின் சாதனைகளுக்கு ஒரே உதாரணம் இம்முறை பள்ளித்தேர்வில் பெண்கள் பிடித்த முதலிடம் என்பதை அன்புடன் நானும் நினைவு கூர்கிறேன்....

    அன்பு நன்றிகள் சகோதரரே இங்கு வருகை தந்தமைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும்... அன்பு வரவேற்புகள்...

    ReplyDelete
  3. மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...