பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்
பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்
நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு
போக நினைப்பது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?
கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?
தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....
அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்
தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....
சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....
வாழ்ந்து தீர்க்க வேண்டும்
பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்
நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு
போக நினைப்பது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?
கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?
தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....
அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்
தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....
சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....
Tweet |
வெற்றி நிலையானதும் இல்லை
ReplyDeleteதோல்வி முடிவானதும் இல்லை-இதனை
சற்றே சிந்தித்திருந்தால்
தற்கொலை எண்ணம்
தோன்றப்போவதே இல்லை
மனத்திண்மை கூட்டிப்போகும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அம்மாவின் தோழியின் மகன் மெத்தப்படித்த தெய்வ சிந்தனை உடைய எல்லோருக்கும் உதவும் மிக அற்புத நற்குணங்கள் நிறைந்தவன்...
ReplyDeleteஅவன் வேண்டிய இடத்தில் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்றான்.
அவனுக்கு நல்லது சொல்லி அவன் மனதை மாற்ற இறைவன் துணைக்கொண்டு முயற்சித்தேன் சார்.
இப்போது நலமுடன் இருக்கிறான்.
அன்பு நன்றிகள் ஐயா கருத்து பதிந்தமைக்கு.....