"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, June 6, 2011

நினைவுகளின் நெடி....


நினைவுகளின் நெடி
நிலைகுலைய வைக்கிறது
துரோகங்களின் கணக்கோ
தலைச்சுற்ற வைக்கிறது
பிரிவின் வேதனையோ
உயிரை வதைக்கிறது

செய்த தவறுகளை
மறந்து மன்னித்துவிட்டால்
ஆசுவாசம் கிடைக்குமா?
மன்னிக்கும் மனப்பாங்கு
மனிதனுக்கு இருக்குமா?
மறக்கும் சக்தி
உள்ளத்துக்கு உண்டா?

விடை தெரியாத கேள்விகள்
விடியும்வரை அலைக்கழிக்கிறது
உறக்கம் மறுத்த விழிகளோ
விட்டம் வெறிக்கிறது
முடிவற்ற தொடராய்
நெஞ்சம் வலிக்கச்செய்கிறது

செயல்களின் காரணகர்த்தா
இறைவன் என்றால்
விதி என்றுச்சொல்லி
சமாதானம் அடையலாம்

மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
இருந்துவிடலாம்

11 comments:

  1. இறைவனின் செயல் என்றால் விதி என்ற சமாதானம் சரி. மனிதனின் சதி என்றால் மௌனம் - சரிதானா ?
    ரௌத்திரம் பழகு என்றும் , கொடுமையை எதிர்த்து நில் என்றும் சொன்னானே பாரதி .

    ReplyDelete
  2. நினைவுகளின் நெடி
    தூரம் கடந்து எங்களுக்குள்ளும்
    வார்த்தைகள் மிக அருமையாக
    அமையப்பெற்ற கவிதை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான வரிகள் பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  4. மனமும் உடலும் ஒருசேர சோர்ந்துவிட்ட நிலையில் மூளை மரத்து விட்டால் எதுவும் செய்ய இயலாமல் மனம் ஸ்தம்பிக்கும் நிலையில் உதிர்ந்த கவிதை இது சிவகுமாரன். என்னும் உடல்நிலை சரியாகவில்லை.... நெஞ்சுவலி விடாமல் இருந்துக்கொண்டே இருக்கிறது. அம்மாவை பார்க்கவேண்டும் என்று மனம் அழுகிறது. தங்கையின் மடியில் சற்றே சாய்ந்து படுக்கவேண்டும் போலிருக்கிறது.. ரௌத்திரம் எல்லாம் மறந்து மாமாங்கம் ஆகிறது சிவகுமாரன். அமைதி மட்டுமே இப்ப....

    அன்பு நன்றிகள் சிவகுமாரன்.

    ReplyDelete
  5. ரமணி சார்.....
    உண்மையே எண்ணங்களின் வடிகால் கவிதை என்ற நிலையில் கொட்ட முடிகிறது மனம் தான் லேசாகவில்லை இன்னும்...

    அன்பு நன்றிகள் ரமணி சார்...

    ReplyDelete
  6. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் யூஜின்....

    ReplyDelete
  7. நீங்கள் அயல்நாட்டில் இருக்கிறீர்கள். நான் வேலை தேடிய தொடக்க நாட்களில் சென்னையில் புழுதியும் புழுக்கமும் நிறைந்த கிடங்கில் கிடந்த நாட்களில் என் நண்பன் கடிதம் எழுதினான் காசிற்காக ஓடும்போது கனவுகளை மிதித்துக்கொண்டுதான் ஓடவேண்டியிருக்கிறது. நம்முடைய தேவைகளும் உறவுகளும் துரத்த திசைக்கொருவராய் ஓடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் கவிதைகளில் கண்டதுபோது நான் அனுபவித்து இருக்கிறேன். துவண்டும் போயிருக்கிறேன். ஆனாலும் கடைசிவரை எனது தன்னம்பிக்கையையும் துணிவையும் விட்டதேயில்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கிறேன். எல்லாவற்றையும் என்பது துரோகங்கள், விஷமாக்கிய உறவுகளின் வலைகள், அவமானங்கள், அசிங்கங்கள், ஏக்கங்கள், ஆதங்கங்கள், எனவே இவையெல்லாம் நிரந்தரமானவையல்ல. நீங்கள் கடப்பீர்கள். மனதிடம் மாமலையையும் சுமக்கவைக்கும் சுமையென உணரும்போது அதையே வீசியெறியவும் வைக்கும். அனுபவம்தான் வாழ்க்கை. வலியும் துயரும் மகிழ்ச்சியும் துள்ளலும் சமமானவையே. கடந்துவாருங்கள். உற்சாகமாகுங்கள். சிவகுமரனுக்கு எழுதிய பதிலையும் படித்துவிட்டுதான் இந்தப் பகிர்வு. கடப்பதற்குதான் வாழ்க்கை. கடந்துபோவோம். நமக்கான வாழ்க்கையும் வளமும் அமைதியும் காத்திருக்கின்றன. நன்றி சகோதரி.

    ReplyDelete
  8. அன்பின் ஹரணி சார்,
    மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு.... உங்களுக்கு இருக்கும் எத்தனையோ வேலைகளுக்கு இடையில் எனக்காக வந்து இதோ இத்தனை அன்பான வரிகளை பதித்து மனதுக்கு தைரியத்தை கொடுத்து இதுவும் கடந்து போகும் என்ற அன்பான தாய்மை கலந்த வார்த்தைகள் மனதுக்கு அமைதி தருகிறது. நேற்றே அம்மா,தங்கை ஷீர்டில இருந்து வந்ததும் அவங்க கிட்ட பேசினதும் எத்தனை மன நிம்மதி கிடைத்ததுன்னு சொல்ல வார்த்தைகள் இல்லை. அன்பான கணவன், அன்பான குழந்தைகள், அன்பான அம்மா, அன்பான தங்கை தம்பி இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்க இறைவன் எத்தனை கருணையானவர். எல்லாம் என்னிடமே இருக்கும்போது சந்தோஷமாக வாழ வேற என்ன வேண்டும் எனக்கு? இதோ அன்புச்சகோதரனாய் எனக்கு அறிவுரைகளை சொல்ல நீங்க இருக்கீங்க. தெளிந்து வருவேன் கம்பீரமாக என்ற நம்பிக்கை இருக்கிறது ஹரணி சார்.அன்பு நன்றிகள் ஹரணி சார்.

    ReplyDelete
  9. கேள்விகேட்டு பதிலைதரும் கவிதை.
    கதம்ப உணர்வுகள் மிக அருமை..வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. அட மலிக்கா எப்படி இருக்கேப்பா? ஏன் ஈகரைல உன்னைக்காணோம் பலநாட்களாய்? உன் தொலைபேசி எண் என் தனிமடலுக்கு அனுப்பு நான் உன்னை அழைக்கிறேன் மலிக்கா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...