கதை . 5 உன்னால் முடியும் தம்பி....
என்னம்மா இன்னைக்கும் அதே இட்லி தானா என்று முகம் சுளித்தான் ராம்....
ஏன் டா இட்லி உடம்புக்கு நல்ல உணவு தானே?? அது மேல் ஏன் இத்தனை வெறுப்பு உனக்கு??
போங்கம்மா போரடிக்குது இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு..முறுகலா தோசை சுட்டு மிளகா சட்னி செஞ்சு கொடுத்தீங்கன்னா இந்தா இந்தான்னு ஒரு பத்து வெட்டி இருப்பேன்லா....
கண்ணா இப்ப உன்னுடைய உடம்பு வெயிட் எவ்ளவுப்பா??
ஏம்மா கேட்கிறீங்க?
சும்மா சொல்லேன் அம்மாக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு...
100 கிலோவை நெருங்கிக்கொண்டு இருக்கேன்மா.... :(
இப்படி உடம்பு கனம் கூடிக்கொண்டே வந்தால் உனக்கு அது அன் ஈசியா இருப்பதில்லையா ராம் என்று மகனின் தலையில் எண்ணை வைத்தப்படியே கேட்டார்...
ஐயோ அம்மா என் தலையில் ஏன் எண்ணை வெச்சீங்க.. ஐயோ இன்னைக்கு மீட்டிங் இருக்கும்மா என்று அலறினான்...
கண்ணா தலையில் முடி இருந்தால் தான் அழகு... அழகை கூட்ட நீ எண்ணை வைப்பதை நிறுத்தினால் முடி கொட்டிவிடுமே.. முடி கொட்டிவிட்டால் அப்புறம் மீட்டிங் போக அழகு கூட்ட முடிக்கு எங்கே போவியாம் என்று மூக்கை திருகினாள் தர்ஷிணி.....
டிவியில் ரித்திக் ரோஷனின் படம் க்ருஷ் ஓடிக்கொண்டிருந்தது...
அதைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டான் ராம்....
" அம்மா எனக்கு ரித்திக் ரொம்ம்ப பிடிக்கும்மா.. எனக்கும் ரித்திக் போலவே உடம்பு ஆகனும் என்ன செய்யலாம்மா?? "
கண்ணா ஒருத்தரை பிடிக்கும் என்றால் அவரை போலவே நம் உடைநடை பாவங்களை கூட மாற்றிக்கொள்ள முயற்சிப்போம் இல்லையா??
ஆமாம் என்றபடியே தலையில் இருந்த எண்ணையை துடைக்க முயன்றான் வேகவேகமாய்.
எனக்கு ரேவதின்னா ரொம்ப பிடிக்கும்... நான் காலேஜ் படிக்கும்போது ரேவதி போலவே என்னை காட்டிக்கொள்ள ரொம்ப விரும்புவேன்... என்னை பார்ப்பவரும் ரேவதி போலவே இருக்கேன்னு சொல்லும்போது ஒரே சந்தோஷமா இருக்கும்....
இப்ப எதுக்கும்மா இதெல்லாம் சொல்றீங்க? எனக்கு ரித்திக் மாதிரி உடம்பு வேணும் எனக்கு ஃபேட் பர்ன் டாப்லெட்ஸ் வாங்கி தாங்க என்றான் ராம்...
நான் வாங்கி தருவதில் ப்ரச்சனை இல்லப்பா.... ஆனால் அதற்கு முன் கூகுள் சர்ச் ல போய் இந்த உடம்பு குறைக்கும் டாப்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தேடி படிச்சுப் பாரு புரியும்...
ஐயோ அப்ப எப்படி தான் உடம்பை குறைப்பதாம் என்று அலுத்துக்கொண்டே கேட்டான்..
இப்ப கேட்டியே அது கேள்வி... எந்த ஒரு செயலும் முழு முயற்சியுடன் உடல் உழைத்து ஈடுபாட்டுடன் நேர்மையாக செயல்பட்டால் கண்டிப்பாக அதனுடைய ரிசல்ட் பாசிட்டிவா இருக்கும்...
அப்டின்னா என்று தலை சொறிந்தான் ராம்...
ரித்திக் எப்படி இது போன்ற உடலமைப்பு பெற்றான்னு தெரியுமா ராம் உனக்கு??
அவங்கப்பா ராகேஷ் ரோஷன் சினிமா ஃபீல்டில் பெரிய ஆள். தன் பிள்ளைகள் நல்லா படிச்சு முன்னுக்கு வரனும்னு நினைச்சார். அதனால் சினிமா வாசமே பிள்ளைகளுக்கு படக்கூடாதுன்னு தவிர்த்தார்...ஆனால் ரித்திக் அப்பாவுக்கு தெரியாமலேயே தன் திறமைகளை நடனத்திறமையை உடலை எந்த ஒரு ஜிம்மின் உதவி இல்லாமல் வீட்டிலேயே கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை சீராக்கி திறமைகளையும் கற்று அப்பாவிடம் அதற்கு பின் வந்து நின்று கேட்டான் அப்பா நீங்க ஒரு படம் எடுங்க அதில் என்னை ஹீரோவா போடுங்க. அந்த படம் ஹிட்டானால் தொடர்ந்து நடிக்க அனுமதி கொடுங்க. இல்லன்னா உங்க விருப்பப்படி நான் செய்கிறேன் என்றான். அவனை நம்பி அவங்கப்பாவும் கஹோ நா ப்யார் ஹை படம் எடுத்தார் சூப்பர் ஹிட்டாச்சு.. இதிலிருந்து என்ன தெரியுது உனக்கு ராம் என்று அவன் தலை கலைத்தபடி கேட்டாள் தர்ஷிணி.....
ம்ம்ம்ம் கடுமையான உழைப்பிருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை அடையமுடியும்னு தெரியுது என்றான் ராம்....
கடுமையான உழைப்பு மட்டுமில்ல ராம்... நம்பிக்கை விடா முயற்சி நேர்மை ஈடுபாடு.. இதனுடன் முழு முயற்சியுடன் உழைத்தால் உன் உடம்பும் குறைந்து நல்ல வலுவுடன் நீ ஆசைப்பட்டபடி ரித்திக் போலவே உடலமைப்பு பெறலாம்...
என்னால பசி பொறுக்க முடியாதும்மா என்று அலறினான்... சாப்பிடாம இருக்க என்னால முடியாது....
உன்னை பட்டினி இருக்க சொல்லலை கண்ணா.... சாப்பிடு ஆனால் சமைத்த உணவை கொஞ்சம் நாட்கள் நிறுத்திவிட்டு பச்சை காய்கற்களும் பழங்களும் மட்டும் சாப்பிடு.. நிறைய சுடு நீர் குடிச்சிட்டு அதிகாலை தூக்கம் கொஞ்சம் தியாகம் செஞ்சுட்டு ஓடு.. ஓடி ஓடி உடம்பை ஃப்ளெக்சிபிள் ஆக்கு.. பின் உடற்பயிற்சி தொடங்கு... உன்னால் முடியும் கண்டிப்பா.. நத்திங் இஸ் இம்பாசிபிள் கண்ணா....
அதுமட்டுமில்லை கண்ணா.... நீ இந்த காலத்துப் பெண்களின் மனநிலை அறிவாயா? மாப்பிள்ளை
குண்டுன்னு வேண்டாம் அப்டி சொன்னால் உன் மனம் வேதனைப்படும்.... ஆனால் பெண்கள் ஸ்மார்ட்
ஹாண்ட்சமா பார்க்க லட்சணமா நல்ல குணமுள்ளவனா இருக்கனும்னு தான் ஆசைப்படுறாங்க.
இதைக்கேட்டதும் மிரண்டுப்போய் பார்த்தான் ராம்.....
அம்மா நாளை முதல் தொடங்குகிறேன் என்றான்...
இன்று முதல் அதுவும் இப்பவே எனத் தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும்.. நாளை என்று ஒத்திப்போடுபவன் சோம்பேறி என்றாள் குறுஞ்சிரிப்புடன் தர்ஷிணி....
இப்பவே ஓடுகிறேன் அம்மா..
இரு கண்ணா குடிக்க ஒரு சொம்பு முழுக்க வெது வெது தண்ணீர் தருகிறேன்.. குடிச்சிட்டு ஓடு....
தானும் அழகாய் உடல் குறைந்து அழகாய் எல்லோரும் பார்க்கும்படி உடலமைப்பு பெறும் வைராக்கியத்துடன் ஓடத் தொடங்கினான் ராம்
Tweet |
கருத்தோடு இப்படி கதை சொல்வது
ReplyDeleteவெகுவாகக் குறைந்து வரும் காலம்
எழுத்தாளர் தன் திறனை காட்டத்தான்
கதை எழுதுவதாக எண்ணிக்கொண்டு
எதை எதையோ எழுதிவரும் வேளையில்
தங்கள் கதைகள் மட்டும் சொல்லும் பாணியிலும்
சொல்லுகிற விஷயத்திலும்
தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது
தொடர வாழ்த்துக்கள்
(150 கிலோ கொஞ்சம் உறுத்தலாக இருந்தது
கொஞ்சம் குறைக்கலாமா)
ஆஆஆஆஆஆஅஹ் கொஞ்சம் அதிகப்படியாகிவிட்டதோ? அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்கப்பா. அடுத்த கதையில் கவனம் செலுத்துகிறேன்...அதில் கொஞ்சம் உண்மை இருக்கு....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஐயா...
nalla kathaiyudan karuththu....
ReplyDeletearumaiyinka.....
///அதுமட்டுமில்லை கண்ணா.... நீ இந்த காலத்துப் பெண்களின் மனநிலை அறிவாயா? மாப்பிள்ளை
ReplyDeleteகுண்டுன்னு வேண்டாம் அப்டி சொன்னால் உன் மனம் வேதனைப்படும்.... ஆனால் பெண்கள் ஸ்மார்ட்
ஹாண்ட்சமா பார்க்க லட்சணமா நல்ல குணமுள்ளவனா இருக்கனும்னு தான் ஆசைப்படுறாங்க.///
இதை முதல்ல சொல்லியிருந்த அவன் ஓழுங்கா கேட்டு இருப்பான். அதுக்க பதிலாக கிருபானந்த வாரியர் மாதிரி கலச்சேபம் பண்ணிகிட்டு
நல்ல படிப்பினை தரும் கதைகள். (நீங்கள் முதலில் ஆசிரியையோ என்று தான் நினைத்தேன்.) இந்தக் கதைகளை என் மகனை படிக்கச் சொன்னேன் . மிக்க நன்றி சகோதரி.
ReplyDeleteதண்டால் எடுக்கும் குழந்தைப் படம் அழகு.
அன்பு நன்றிகள் விடிவெள்ளி.....
ReplyDeleteஅன்பு நன்றிகள் சகோதரரே....
ReplyDeleteஅன்பு நன்றிகள் சிவகுமாரன்....
ReplyDeleteஎன் மகனுக்கு நான் சொன்ன அறிவுரைகளை தான் கதையாக இங்கு வடித்தது....
நான் பழைய காலத்து ஆள்பா... அதனால் தான் கிருபானந்த வாரியார் போல் சொல்ல முடிகிறது....
ReplyDeleteஅன்பு நன்றிகள் சகோதரரே...
ன்று முதல் அதுவும் இப்பவே எனத் தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும்.. நாளை என்று ஒத்திப்போடுபவன் சோம்பேறி
ReplyDeleteஇன்றே தொடங்கிய அருமையான முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் 1
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteன்று முதல் அதுவும் இப்பவே எனத் தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும்.. நாளை என்று ஒத்திப்போடுபவன் சோம்பேறி
இன்றே தொடங்கிய அருமையான முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் 1//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா.