"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, August 22, 2013

முதல் பதிவு.....



முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவுக்கு என்னை அழைத்த ஸ்ரீராம் சாருக்கு என் அன்பு நன்றிகள்…

நான் பாட்டுக்கு வேலைக்கும் வீட்டுக்கும் ஒரு இயந்திரம் போல போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்தேன்… பாட்டு நடனம் வரைதல் கவிதை எல்லாம் எப்பவோ தூக்கி பரண் மேலே போட்டாச்சு..

திரு ராஜா ஐயா அவர்கள் தான் என்னை முத்தமிழ் மன்றத்தில் சேர்த்து விட்டார்…

ஆனால் அதில் ஒரு சின்ன சங்கடம்.. அங்க எல்லாமே தமிழ்ல மட்டும் தான் டைப்பணும்.. ஆனா தமிழ் டைப்பிங் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது.. முத்தமிழ் மன்றத்தில் சேர்த்து விட்ட ராஜா ஐயாவுக்கு முதற்கண் என் நன்றிகள்… அப்படி என்னை சேர்த்துவிட்டதால் இப்போது எல்லா இடத்திலும் என்னால் தமிழில் டைப்ப முடிகிறது… கருத்து எழுத முடிகிறது.. கலாய்க்க முடிகிறது…

தமிழில் மெல்ல மெல்ல டைப் அடிக்க கற்றேன் www.higopi.com மூலமா… அதன்பின் ஆகஸ்ட் மாதம் 16, 2007 நைட் விருதைக்கண்ணன் என்ற ஒருவர் மேடம் நான் எழுதி இருக்கும் கவிதையில் பிழைத்திருத்திக்கொடுங்கன்னு கேட்டார்… திருத்திக்கொடுக்கும்போது யோசித்தேன் ஏன் நாமும் தொடரக்கூடாதுன்னு.. அப்படி தொடர்ந்தது தான்..

வலைப்பூவில் என் படைப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டே வந்தேன்.. பின்னூட்டம் எல்லாம் வரனும்னு கூட தெரியாது எனக்கு.. நல்லவேளை பின்னூட்டம் போட வந்திருந்தால் என் எழுத்தை பார்த்து உதைக்க வந்தால் எங்க தப்பி ஓடுவேன்?

எனக்கும் ஸ்ரீராம் சார் போலவே படைப்புகள் தருவது விட கருத்து எழுதுவது மிக விருப்பமான விஷயம்…  அதன்படி… ஒரு நாள் கூகுளில் என் மகன் இபானுக்கு  படம் தேடிப்போனால் நேரே கொண்டு வந்து ரமணி சார் வலைப்பூவில் விட்டது என்னை… அப்ப அவர் கவிதை படித்ததும் மிக எளிதாக அதே சமயம் கருத்துள்ளதாக தோணித்து.. கருத்து எழுத ஆரம்பித்தேன்.. எழுதினேன்…. தொடங்கியது இதோ இப்ப வரை தொடர்கிறது…

முதல் பதிவின் போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட… முதல் கருத்து பதிந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே சத்தியம்….

என் முதல் பதிவின் சந்தோஷம் தொடர் எழுத அழைத்த ஸ்ரீராம் சாருக்கு மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள்…

நான் இரண்டு பேரை அழைக்கனும்ல??

ஸாதிகா
சூரி சிவா என்னும் சுப்பு அப்பா..

இருவரையும் அன்புடன் இந்த தொடர் எழுதும்படி அழைக்கிறேன்…

49 comments:

  1. 2007 லிருந்தே பதிவர்... சீனியர் நீங்கள்!

    தமிழ் டைப்பிங் அவ்வளவு கஷ்டமா? :)

    சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி விட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சீனியர் எல்லாம் கிடையாதுப்பா.. ஒன்லி சீனி முட்டாய் தான் :)

      ம்ம்ம்ம் ட்யூப்லைட்டுக்கெல்லாம் எல்லாமே கஷ்டம் தான்.. நாந்தேன் :)

      சுருக்கமா சொல்லிட்டேன்னு வருத்தமா சந்தோஷமாப்பா? நிறைய எழுத இருந்தது.. வளாவளான்னு எழுதினா மக்கள் ரசிக்கமாட்டார்களேன்னு தான் சுருக்கமா எழுதினேன்.. சுவாரஸ்யமாவாப்பா இருந்திச்சு?? :) சும்மா தானே?

      Delete
  2. முதல் பதிவின் போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட… முதல் கருத்து பதிந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே சத்தியம்….

    ஆஹா.. அருமையா சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
    Replies
    1. அப்டியாப்பா ரிஷபா?? அப்ப கண்டிப்பா ஒரு கிலோ பாதாம் அல்வா வாங்கி கொரியர்ல குவைத்துக்கு அனுப்பிருங்க.. :)

      Delete
  3. மொத முறையா உங்க வலைப்பூவில் காலடி எடுத்து வைக்கிறேன்.. பேசுற மாதிரியே எழுதியிருக்கீங்க.. அருமை. இன்னும் கொஞ்சம் பதிவை பத்தி விரிவா எழுதியிருக்கலாமோன்னு தோணித்து..

    ReplyDelete
    Replies
    1. வருக வருக.. ஹே பத்திரம்... பார்த்து ஆனந்த்... கைகள் எப்படி இருக்கு இப்ப??


      பேச ஆரம்பிச்சாலும் நானா நிறுத்தினா தான் உண்டு.. பகவானே பகவானே இந்த வரி மட்டும் அப்பாதுரை கண்ல பட்ரவே கூடாது.. அப்புறம் அவர் எங்க வீட்டுக்கு வரவே மாட்டார்...

      பேசறதும் நான்ஸ்டாப்... எழுதறதும் நான்ஸ்டாப்.. ஆகமொத்தம் நான்ஸ்டாப் நான்ஸென்ஸ் :) நான் தான்... பேசற மாதிரியே மட்டும் தான் எழுத தெரியும் ஆனந்த்... :) இன்னும் அதிகமா எழுதினா யாரும் பயந்து ஓடிப்போயிட்டா ??? அதான் :)

      Delete
  4. அமர்க்களம் அக்கா
    முதல் பதிவைப் பற்றிய - அதன்
    அனுபவம் சுற்றிய கருத்துக்கள்
    அருமையோ அருமை.

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது மஞ்சு. தமிழ் மணத்தில் மேய்ந்த போது இது தட்டுப் பட்டு வாசித்தேன்.சுவையாக உள்ளது. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.


    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வேதாம்மா...

      Delete
  6. முதல் பதிவு..... அனுபவம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது. பென்சிலை வாயில் கடிக்கும் குழந்தைப்படமும் அருமை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா....

      அந்தப்படம் கூகுளில் கிடைத்தது அண்ணா...

      Delete
  7. //முதல் பதிவின் போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட… முதல் கருத்து பதிந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே சத்தியம்….//

    இப்போதும் மஞ்சு எழுதும் கருத்துக்களே மஞ்சுவை எல்லோருக்கும் தனியே அடையாளம் காட்டி சிறப்பித்து வருகிறது.

    பதிவின் நீள அகல ஆழத்தைவிட, அதிகமான நீள அகல ஆழத்துடன் அல்லவோ கருத்துக்கள் எழுதி அசத்துகிறீர்கள். அது தான் மஞ்சுவின் ஸ்பெஷாலிடி.

    பாரட்டுக்கள்.

    ReplyDelete
  8. என்னங்க மஞ்சு ரொம்ப சிம்பிளா சொல்லிட்டு போய்டீங்க....

    ReplyDelete
    Replies
    1. ஹே... நான் போகலப்பா.. இங்கயே தான் இருக்கேன்.. :) இனி போனால் உதைக்க ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்கு :) சிம்பிளா எழுதினதால் தான் ஈசியா எல்லாருக்கும் படிக்க முடிகிறது வேகமாவும்....

      Delete
  9. விருதைக்கண்ணன் அவர்களுக்கு நன்றி.
    உங்கள் மகனுக்கு நன்றி. அருமையான அன்பான பதிவர் வலை உலகத்திற்கு கிடைத்தது இல்லையா!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதே போல உங்களை அறிந்தது வை.கோ. அண்ணா மூலமாக.. அதனால் வை.கோ அண்ணாவுக்கும் அன்பு நன்றிகள்... அன்பானவர் மனதில் என்னை நிலைக்க வைத்தமைக்கு....

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...

      Delete
  10. இனிய வணக்கம் அக்கா...
    எத்தனைக் குழந்தைகள் பெற்றாலும்
    எதிர்பார்த்து ஆவலுடன் அதீத கனவுகளுடன்
    பெற்றெடுத்த முதல் குழந்தை அல்லவா இந்த முதல் பதிவு..
    அருமையா எழுதிட்டீங்க அக்கா..

    ReplyDelete
    Replies
    1. உண்மையே மகி... என்னச்சொன்னாலும் முதல் குழந்தை.... ம்ம்ம்ம் ஆமாம் ஆமாம்.. அதீத எதிர்ப்பார்ப்புகளுடன் அதீத கனவுகளுடன் ஆசைகளுடன்..... சௌந்தர்ய தருணங்கள் மகி.. அதே போல தான் முதல் பதிவும்.... அன்பு நன்றிகள் மகி..

      Delete
  11. முதல் பதிவு
    கணினியில் மட்டுமல்ல
    மனத்திலும்
    என்றென்றும் பதிந்திருக்கும்
    நினைக்க நினைக்கு
    மகிழ்வினைத் தரும்
    அருமை சகோதரி

    ReplyDelete
    Replies
    1. உண்மையே சார்... உங்களை இங்கு..சந்தித்தது எனக்கு மிகவும் சந்தோஷம்... அன்பு வணக்கங்கள்.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

      Delete
  12. உங்களின் கருத்துரை உற்சாக டானிக்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார்...

      Delete
  13. வேலைப்பளுவா
    மிகச் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள்
    ஒருவேளை படமே நிறையச் சொல்லிவிட்டது என
    நினைத்து முடித்து விட்டீர்களோ
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நிறைய சொல்ல ஆரம்பித்தால் போர் அடிக்கிறதுன்னு சொல்லிருவாங்களோன்னு பயந்து முடித்துவிட்டேன் ரமணி சார்...

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

      Delete
  14. Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்...

      Delete
  15. முதல் கருத்து வந்தவுடன் வரும் சிலிர்ப்பு இருக்கே வாவ் சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் உண்மை தான் மனோ...

      Delete
  16. நல்லாச் சொல்லியிருக்கீங்க...
    உங்கள் கருத்துரைகள் ஒரு பதிவைப்போல அழகானவை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார்...

      Delete
  17. வலைப்பூவில் என் படைப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டே வந்தேன்.. பின்னூட்டம் எல்லாம் வரனும்னு கூட தெரியாது எனக்கு

    கதம்பமாய் மணக்கும் அழகான பகிர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜிம்மா...

      Delete
  18. போட்டோ பாப்பாவின் கண்களில் உங்கள் முதல் பதிவின் சந்தோசம் மின்னுகிறதே !மஞ்சு 'சபாஷி'னியின் பதிவுகள் தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. அன்பு வரவேற்புகள் சார் தளத்திற்கு....

      உங்கள் தளம் வந்து பார்த்தேன்... அற்புதம்..

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்....

      Delete
  19. பரண் மேலே போட்டதை தூசு தட்டி எடுங்க. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இப்படித்தான் வீணை வாசிப்பதை நிறுத்தி இப்போது மறுபடி எடுத்து மிகுந்த மன நிறைவோடு வாசிக்கிறார். திருமணம் குழந்தைகள் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக சிலர் தம் மனதுக்குப் பிடித்ததை நிறுத்துவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

    (ஒரு வேளை உங்க பாட்டு நடனம் எல்லாம் கொஞ்சம் ப்ப்ப்ப்யங்கரமா இருந்துச்சோ? நிறுத்தாம பாடிக்கிட்டே இருந்தீங்களோ? ஹிஹி.. அடிக்க வராதிங்க.. இந்தொனெசியாவுல உங்க கோவக்குரல் கேக்குது போலிருக்கே?)

    நான் யாருனு சொல்ல மாட்டம்பா.

    ReplyDelete
    Replies
    1. என்னைப்பற்றி இத்தனை தூரம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்கன்னா கண்டிப்பாக நீங்க என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் அன்புள்ளமாக தான் இருக்கவேண்டும்.. நடனமும் இசையும் என் இறுதி மூச்சு வரை தொடரும்பா... நிறுத்தவே மாட்டேன் கண்டிப்பாக..... எனக்கு பேரக்குழந்தைகள் பிறந்தாலும்.... மூப்பு வந்தாலும்.... எனக்கு கோபம் வரவைக்க முயன்றால் உங்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்... இடையில் சில நாட்கள் கோபம் வரும்படியான நிகழ்வுகள் நடந்தது.... ஆனால் இப்போது? மனம் பக்குவப்பட்டாச்சு... கடவுளிடம் பாரத்தை இறக்கியும் வெச்சாச்சு.... அதனால இந்தோனேசியாவில் என் குரல் கேட்க சாத்தியம் இல்லை :) நீங்க யாருன்னு தெரிஞ்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்... பரவாயில்லை... நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சௌக்கியமாக இருக்க இறைவனிடம் என் பிரார்த்தனைகள்பா....

      Delete
  20. நீண்ட நாளாயிற்று உங்கள் பதிவுகளைப் படித்து என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் முகநூளில் இந்த பதிவைப் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன்.

    ரொம்பவும் சுருக்கமாக முடித்துவிட்டீர்களே! unlike மஞ்சு!

    தொடர்ந்து எழுதுங்கள். கருத்துரைகளும் கொடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ச்சுவீத்து ரஞ்சும்மா அன்லைக்காம் :) செம்ம க்யூட்.... இந்த வரிகள் படிச்சதும் எனக்கு இப்படித்தான் தோணித்து....

      கருத்து மட்டும்தான் நிறைய எழுதுவேன்.... என் படைப்பு துளியாக தான் இருக்கும் எப்போதும் ரஞ்சும்மா.. நீங்க சௌக்கியமா?

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரஞ்சும்மா....

      Delete
  21. எளிய இனிய கவிதை நீங்கள் மஞ்சு.

    ReplyDelete
    Replies

    1. அன்னையின் மடியில் தலை வைத்து படுக்கும்போது....தலைமுடி கோதிக்கொண்டே சொன்ன அன்னையின் வரிகள் போல....

      கவிதையாக என்னைச்சொன்னது....

      மென்மையான மனதிடம் இருந்து அழகிய காம்ப்ளிமெண்ட் எனக்கு.....

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

      Delete
  22. அனுபவம் அசத்துகிறது. கருத்தைக் கவரும் கருத்துக்கள் எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை மஞ்சு. அடுத்தவர் படைப்புகளை ஆழமாய் ரசித்து உள்வாங்கி இடும் சிறப்பான பின்னூட்டங்களாலேயே பல மனங்களில் இடம்பிடித்தவர் என்றால் மிகையில்லை. பாராட்டுகள் மஞ்சு.

    ReplyDelete
    Replies
    1. மிஸ் யூ கீதா...

      எப்படி இருக்கீங்கப்பா?

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா....

      Delete
  23. //முதல் பதிவின் போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட… முதல் கருத்து பதிந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே சத்தியம்….// வித்தியாசம்... ஏன் அப்படி முதல் பதவி விட முதல் கருத்து இடும் போது உங்களுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்

    ReplyDelete
    Replies
    1. விஷயம் இது தான் சீனு...

      பெறுவதில் இருக்கும் சந்தொஷம் விட கொடுப்பதில் இருக்கும் சந்தோஷம் அலாதி..

      கருத்தை பகிர்ந்துவிட்டு படைப்பாளி தன் படைப்புக்கான அங்கீகாரத்தை நடுநிலையான விமர்சனத்தில் தேடும்போது... அது கிடைத்த சந்தோஷம் அவர் முகத்திலும் அடுத்து அவர் தரப்போகும் படைப்பில் இன்னும் கூடுதல் முயற்சியும் உற்சாகமும் ஊக்கமும் தெரிகிறது.. இது தான் சீனு....

      Delete
  24. எளிமையா, சுருக்கமா, அழகா சொல்லி அசத்திட்டீங்க மன்ச்சூ...! எனக்கும் சீனியரா நீங்க...! அடடே!

    ReplyDelete
    Replies
    1. ஹூஹூம்.... இல்லவே இல்ல.. நான் சீனியரே இல்லப்பா :)

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா...

      Delete
  25. சுருக்கமா, அழகா சொல்லி இருக்கீங்க மஞ்சு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...