ரூம் எல்லாம் நல்லா
இருக்கணும்பா…
முன்னாடி நல்லா
டெகொரேஷன் பண்ணிருங்க..
சரிங்க சார்… அட்வான்ஸ்
பே பண்ணிட்டு போங்க..
ஓகே..
பாவா பாவா… சீக்கிரம்
கிளம்புங்க.. எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தரணும்…
ஓகே ஷோபி…
சத்திர ஓனர் :
ஏம்மா பாப்பா எந்த கிளாஸு படிக்கிறே??
ஷோபி மூக்குக்கண்ணாடியை
கில்லிப்படத்துல வர விஜய் தங்கைப்போல விசுக்குனு பார்த்துட்டு சொன்னது… ஹலோ கல்யாணமே
எனக்கு தான்…
கல்யாணத்துக்கு
சத்திரம் பார்க்க என் வீட்டுக்காரருடன் போய் ஓகே சொன்ன மணப்பெண்.. பார்க்க பொம்மை மாதிரி
அழகா இருப்பா…
குட்டிப்பொண்ணு போலவே.. க்யூட்டா… இத்தனை வயதானாலும் ஷோபி சிரித்தால்
குழந்தை சிரிப்பது போல செம்ம க்யூட்டா இருக்கும்…
ஷோபி பட்டு சாரிக்கு
மேட்சா ப்ளவுஸ் தைச்சாச்சாடி?
தைச்சாச்சு மஞ்சு…
எனக்கு ட்ரெஸ்
பாவா ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா?
முடிஞ்சுது மஞ்சு…
இப்டி தன் கல்யாணத்துக்கு
தனக்கானவையும் எடுத்து வெச்சு அழகா எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட பார்த்து
பார்த்து செய்த என் அன்புத்தங்கை… ஹுஹும் எனக்கு அம்மான்னு சொன்னா சரியா இருக்கும்…
திருமதி ஷோபிஸ்ரீதர் ( பாருடி தங்கையா இருந்தும் உனக்கு திருமதி எல்லாம் போட்டு எவ்ளோ
மரியாதையா விஷ் பண்றேன்னு ) கல்யாண நாள் இன்று 24.08.1990 இருபத்தி மூன்றாம் வருட திருமண
நாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளுடனான ஆசிகள் தம்பதியருக்கு…
ஷோபி நல்லாருந்தா
நான் கண்டிப்பா சௌக்கியமா இருப்பேன்.. இன்னும் என் தங்கையைப்பற்றி சொல்ல நிறைய இருக்கு…
அவளுடைய பிறந்தநாள் வருது.. அதில் சொல்கிறேன் ஷோபியின் சாகசங்களை…
எப்போதும் நான் வேண்டுவது என் தங்கையும் தங்கையின் கணவர், குழந்தைகள் எல்லோரும் சௌக்கியமாக நீடுழி வாழ வேண்டும் என்பதே...
ஏன்னா எங்க வீட்டின் அன்பு தேவதை என் தங்கை...
எனக்கு என்ன கஷ்டம் என்றாலும் சாமி கிட்ட சொல்லனும்னு தோணாது.. உடனே ஷோபிக்கு தான் போன் செய்வேன்... ஷோபிக்கிட்ட பேசிட்டா போறும்.. எனக்கு சரியாகிவிடும்.. உடல்நலம் சரி இல்லையென்றாலும் ஷோபிக்கிட்ட தான் முதல்ல சொல்வேன்...
ஒரு தடவை மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாகி ஷோபிக்கு கால் செய்தப்ப ஷீர்டி போயிருந்ததால் போன் அட்டெண்ட செய்யலை... ரொம்ப உடம்பு முடியாமல் நெஞ்சுவலி வந்து ஆஸ்பிட்டல் கொண்டு சென்றனர் நடுராத்திரி.. என் பலம்... எப்போதும் என் அன்புத்தங்கை... ஷோபி எனக்கு தங்கை என்று சொல்வதை விட.... என் அம்மா, என் தோழி, என் வழிக்காட்டி, என் தேவதை, என் காவல் தெய்வம்... இது தான்.. ஷோபி எனக்கு ஆசீர்வாதம் செய்தால் நாங்க எல்லோருமே சௌக்கியமா இருப்போம்..
ரொம்ப முக்கியமான விஷயம்.... என் கணவருக்கு ஷோபி ரொம்ப செல்லக்குழந்தை... ரொம்ப ரொம்ப ரொம்ப செல்லம்.... நான் எதுனா சொல்லி என் கணவர் மறுத்தால் ரெக்கமண்டேஷனுக்கு நான் போய் நிற்பது ஷோபிக்கிட்ட தான்.. ஏன்னா ஷோபி சொல்லி என் கணவர் மறுத்ததே இல்லை என்றும்....
என் பிள்ளை விக்னேஷ் ராமிடம் உன் அம்மா பெயர் சொல்லுன்னு சொன்னா டக்குனு அவன் வாயில் வருவது என் தங்கைப்பெயர் தான்... அத்தனை அந்நியோன்யம்.... குழந்தை பிறந்ததும் ஷோபி கையில தான் அதிகம் ராத்திரி எல்லாம் இருந்தான்... இன்றும் அஞ்சான் ஷோபியின் செல்லம்...
எங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள் எப்போதும் ஷோபிக்கும் ஷோபி குடும்பத்தினருக்கும்....
Tweet |
என்னது உங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணான்னு நினைச்சேன்... இதுக்கு தான் நைட் ஷிப்ட் போயிட்டு வந்து அறத்த தூக்கத்துல படிக்க கூடாதுன்னு சொல்றது...
ReplyDelete//ஷோபி நல்லாருந்தா நான் கண்டிப்பா சௌக்கியமா இருப்பேன்.. //
உங்களது அன்புத் தங்கை மற்றும் உங்களுக்கு தாயுமான ஷோபி அவர்களுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்
நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வந்து பிள்ளை பொறுப்பா பதிவர் சந்திப்பு விழாவுக்கான வேலைகளில் இருப்பதால் தான் இந்த கன்ஃப்யூஷன் சீனு... :)
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...
எப்போதும் ஷோபிக்கும் ஷோபி குடும்பத்தினருக்கும்.
ReplyDeleteஉங்களின் பிரார்த்தனைகளோடு எங்களது பிரார்த்தனைகளையும் சேர்த்து கொள்ளுங்கள்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...
Deleteஆமாம் அது என்ன உங்கள் தெய்வத்தை நீங்க ஒளிச்சு வைச்சுக்கலாமா எங்களுக்கும் அறிமுகப்டுத்துங்க...ஆது மட்டுமல்ல வலைத்தளம் ஒன்று ஒப்பன் பண்ணிக் கொடுங்கள் நாங்களும் அந்த தெய்வத்திடம் வேண்டுகோள் வைப்போம் அல்லது சும்மா கலாய்க்கவாவது செய்வோம்ல
ReplyDeleteநான் பலமுறை ஷோபிக்கிட்ட சொல்லிட்டேன்பா... ப்ளாக்ஸ்பாட்ல அழகா போய் உனக்கு தோணினதை எழுது அப்டின்னு... எனக்கு டைம் இல்ல அப்டி இப்டின்னு சொல்றா.. ஹாஹா கலாய்ப்பதா? :) நேர்ல வாங்க.. தெரியும் கலாய்ப்பது நீங்களா இருக்காது கண்டிப்பா :)
Deleteதிருமதி ஷோபி ஸ்ரீதர் 23 ஆம் வருட திருமண நாள்..வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கண்ணதாசன்.
Deleteஷோபி அக்காவுக்கு ஏன் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பென்றால் நான் மஞ்சுபாஷினி
ReplyDeleteஎனத்தான் அர்த்தம் கொண்டுள்ளேன்
அனபுக்கு பிடித்த அன்பென்றால்
அதை அளவிட முடியுமா என்ன ?
சீரோடும் சிறப்போடும் தங்கள் அன்புத் தெய்வம் வாழ
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteநானும் வாழ்த்திக்குறேனுங்க உங்கதெய்வத்தை!!
ReplyDeleteரமணி சாரின் வார்த்தைகளை அப்படியே வழிமொழிகிறேன். அன்பென்றால் மஞ்சு என்றுதான் அறிந்துவைத்திருக்கிறோம். அன்பையே அன்பால் கட்டி ஆள்பவர் என்றால் அதை அளவிட இயலுமா என்ன? அன்புத்தங்கை ஷோபிக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இனிய வாழ்த்துக்கள்.
ReplyDelete//திருமதி ஷோபிஸ்ரீதர் கல்யாண நாள் இன்று 24.08.1990 இருபத்தி மூன்றாம் வருட திருமண நாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளுடனான ஆசிகள் தம்பதியருக்கு…//
ReplyDeleteததாஸ்தூஊஊஊஊ
அதே அதே ....... சபாபதே !
எங்கள் வாழ்த்துகளும் ஆசிகளும் மஞ்சூ.
அன்புடன் கோபு அண்ணா + ம்ன்னி
எப்போதும் நான் வேண்டுவது என் தங்கையும் தங்கையின் கணவர், குழந்தைகள் எல்லோரும் சௌக்கியமாக நீடுழி வாழ வேண்டும் என்பதே...
ReplyDeleteஏன்னா எங்க வீட்டின் அன்பு தேவதை என் தங்கை...
எங்கள் வாழ்த்துகளும் :)
இப்டி தன் கல்யாணத்துக்கு தனக்கானவையும் எடுத்து வெச்சு அழகா எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட பார்த்து பார்த்து செய்த என் அன்புத்தங்கை… ஹுஹும் எனக்கு அம்மான்னு சொன்னா சரியா இருக்கும்…
ReplyDelete:)
shaadhi ke theeyis baras poore hone par aaj ham aapko maane manju ki bahen shobi aur unke pathi ko badhayiyaan dhethe hain.
ReplyDeleteகுவைத்லே இருக்காங்க இல்லையா !!
அதனாலே ஷோபிsridhar க்கு உருதுலே ஆசிகள் சொல்வது
மீனாச்சி பாட்டியும் சுப்பு தாத்தாவும்.
Bahoth dhanyavaadh hai paappaa... aur mammaa...
Deleteஅப்பா அப்பா.. எனக்கு நீங்க தாத்தா இல்லை.. அப்பா.. மீனாக்ஷி அம்மா.. :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் உங்கள் ஆசி நிறைந்த வாழ்த்திற்கு...
நல்ல மனம் வாழ்க. எங்கள் வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லுங்க அவிங்களுக்கு.
ReplyDeleteரமணி ஸார், மற்றும் கீதமஞ்சரியை வழிமொழிகிறேன்.
கண்டிப்பா சொல்றேன்பா... :)
Deleteஷோபி அக்காவுக்கு ஏன் மனமார்ந்த வாழ்த்துகள்.....
ReplyDeleteவொய்ப்பா?? வொய் டூ டைம்ஸ்?? ஷோபியோட அக்காவுக்கு நவம்பர்லப்பா :)
Deleteஷோபி அக்காவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....!
ReplyDeleteஷோபி உங்களுக்கு அக்கான்னா... அப்ப நானு?? :)
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...
திருமதி ஷோபிஸ்ரீதர் இருபத்தி மூன்றாம் வருட
ReplyDeleteதிருமண நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பதியருக்கு…
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜிம்மா...
Deleteஅன்பான தங்கை ஷோபிஸ்ரீதருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள் முன்னோர்கள்.
அது போல் நீங்கள் அன்பை கொடுத்தீர்கள் எல்லோரிடமும் உங்கள் தங்கையும் அது போல் அனபை கொடுக்கிறார்கள். அன்பு ஒன்றுதான் கொடுக்க கொடுக்க வள்ர்வது.
’கொடுத்து பார் பார் உந்தன் அனபை ‘ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது கேட்டுப்பாருங்கள்.
அன்பு தெம்பு அளிப்பது என்று வரும் அந்த பாடலில். அது போல் உங்கள் தங்கை உங்களுக்கு தெம்பு தருபவர்களாய் இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள் எப்போதும் ஷோபிக்கும் ஷோபி குடும்பத்தினருக்கும்..//
எங்கள் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் ஷோபி குடும்பத்தினர்களுக்கு .
வாழ்க வளமுடன்.
இறைவனின் கருணை என்று தான் சொல்லவேண்டும்... கொடுத்துப்பார் பார் பார் உந்தன் அன்பை... பாடல் பாடி பார்க்கிறேன் மேம்...உண்மையேப்பா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மேம்...
Deleteமுதலாய் உங்கள் தளத்திற்கு வருகிறேன். வந்தால் ஒரே அன்பு மழையில் நனைந்து விட்டேன் . இந்த இடத்தை விட்டு செல்லவே மனம் வராத அளவிற்கு அன்பு மழை உங்கள் பதிவில் மட்டுமல்ல பின்னூட்டம் இட்டவர்களிடமும் கண்டேன். நானும் நனைந்தேன். சும்மா போக முடியுமா?
ReplyDeleteபிடியுங்கள் உங்களுக்கும் உங்கள் தங்கையின் குடும்பத்தினருக்கும் என் அன்பான் வாழ்த்துக்கள்.
அன்பு வரவேற்புகள் ராஜிம்மா... உங்கள் தளமும் சென்று பார்த்தேன்.. அற்புதம்..அரட்டை உலகம்னு வெச்சுட்டு அற்புதமான பயனுள்ள கருத்து சொல்லி இருக்கீங்க... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...
Deleteஎங்கள் அன்பு வாழ்த்துக்களையும் திருமதி ஷோபி ஸ்ரீதரக்கு சொல்லவும்.
ReplyDeleteஅன்பு வணக்கங்கள் ரஞ்சனிம்மா.. எப்படி இருக்கீங்க? மிஸ் பண்ணிட்டேன் உங்களை. அதனால் என்ன.. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக சந்திப்போம்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்களின் ஆசிர்வாதத்திற்கு....
Deleteஅக்கா...
ReplyDeleteஷோபி அக்காவின் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்...
உங்கள் பகிர்விலேயே தெரிகிறது தங்களின் அக்கா-தங்கைப் பாசம்.... என்றும் தொடரட்டும் உங்கள் அன்பு உறவு...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார்... உண்மையேப்பா... இறைவன் அருளால் நிலைக்கட்டும் எங்கள் அன்பு...
Deleteஇனிய வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் மாதேவி
Deleteஅன்பு மகளே! நலமா! அன்று நீயும் உன் காவல் தெய்வம் தங்கையும் என் இல்லம் வந்து உரையாடி சென்றதை மறக்க இயலுமா! நீவீர் இருவரும், உங்கள் குடும்பமும் பல்லான்டு பல் வளமும்
ReplyDeleteபெற்று வாழ எல்லாம் வல்ல வேங்கடவனை வேண்டுகிறேன்!