10 நாட்கள் கழித்து.....
கண்கள் வெறித்த நிலையில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு சுவற்றின் மூலையில் உட்கார்ந்திருந்தார் வைத்தியநாதன்...
” இறைவனுக்கு ஏன் இப்படி கருணையே இல்லாமல் போனது... என் ஆசை மனைவியை என்னிடமிருந்து பிரித்து குழந்தைகளை இப்படி பிறக்கவைத்து.. என்னை தனியாக்கிட்டியே பகவானே ” துக்கத்தில் நெஞ்சடைத்தது வைத்தியநாதனுக்கு.
குழந்தைகள் மருத்துவர்கள் குழு தந்த போஷாக்கினால் அழகாய் கண்மலர்ந்து சிரித்து அழுது அமைதியாய் தூங்கி கழித்தன நாட்களை...
நேராய் குழந்தைகளை படுக்க வைக்கமுடியாததால் குழந்தைகளின் தலை ஷேப் மாறிவிடாமல் இருக்க குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொண்டு இருந்தனர்....
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் இத்தனை நாட்களாகியும் பெயர் வைக்கவில்லை
ஒரு குழந்தை எப்போதும் சிரித்து துறுதுறுவென்றும் மற்றொன்று மிக அமைதியாக தவம் செய்வது போல கண்களை மூடி மூடி திறப்பதும் காண அழகான காட்சியாக இருந்தது...
வைத்தியநாதன் அங்கே வந்து குழந்தைகளை பார்த்தார்....
குழந்தைகள் அப்பாவை கண்டதும் கைகால்களை அசைத்து கொட்டு கொட்டு என்று பார்த்தது....
டாக்டரின் அறைக்கு சென்று வைத்தியநாதன் டாக்டரிடம் பேச ஆரம்பித்தார்....
“ டாக்டர் இந்த குழந்தைகளை நான் எப்படி வளர்ப்பேன்?? ஒன்னுமே புரியவில்லை டாக்டர் “ என்று அழ ஆரம்பித்தார் வைத்தியநாதன்...
“ மிஸ்டர் வைத்தியநாதன் உங்களோட குழந்தைகள் எங்க மருத்துவத்துறைக்கே ஒரு சவாலா இருக்காங்க தெரியுமோ?? “
“ முதுகு ஒட்டி முதல் முறையா நம்ம ஊர்ல பிறந்து இன்னும் என்னென்ன சாதிக்கப்போறாங்கன்னு நாம இருந்து பார்க்க முடியலன்னாலும் பாருங்க என்னென்ன நடக்கப்போகுதுன்னு “ சிந்தனையுடன் பேசிக்கொண்டிருந்தார்....
“ அப்புறம் மிஸ்டர் வைத்தியநாதன் நீங்க இங்க இருக்கவேண்டாம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நல்ல இடம் ஒன்று சொல்றேன் அங்க கிளம்பிடுங்கோ.. கவலைப்படாதீங்க... நீங்க அங்க உங்களுக்கு வேலையும் தரச்சொல்லி என் நண்பனிடம் சொல்கிறேன்... “
“ குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க உங்களுக்கு நிறைய கௌன்சிலிங் தேவைபடுகிறது “
உங்க மனதை முதலில் தயார் பண்ணிக்கோங்க.... குழந்தைகளை தனி தனியா சமாளிப்பதே ரொம்ப சிரமம்... ஆனால் இந்த குழந்தைகளோ ஒட்டி பிறந்தவை... இதுகளுக்கு தேவையானபடி வசதிகளை செய்து தர வேண்டும்... அதுமட்டுமில்லை.. இந்த பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலத்தில் இன்னும் நிறைய பிரச்சனைகளை நீங்கள் எதிர்க்கொள்ள வேண்டி வரும்....
எல்லாத்துக்கும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும்.. எந்த நொடியிலும் உங்க கோபத்தையோ இயலாமையையோ பிள்ளைகள் எதிரில் காட்டிவிடாதீர்கள்....
அன்பு அன்பு அன்பு முழுமையான அன்பை குழந்தைகளிடம் செலுத்தி குழந்தைகள் மனதில் நீங்க ஒரு நல்ல அப்பா மட்டுமல்ல ஒரு தாயாகவும் இருக்கவேண்டும்... சொல்லி நிறுத்தினார் டாக்டர்...
கண்டிப்பாக டாக்டர்.....
நிலம், வீடு, சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தார் மும்பை நோக்கி....
பிள்ளைகள் வளர வளர வைத்தியநாதனின் பொறுப்புகளும் கூடியது....
பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களையும் கவனித்துக்கொண்டு வேலைக்கு செல்ல இயலாததால் வேலையை விட்டுவிட்டார்..
குழந்தைகளுக்கு கவுன்கள் அழகாய் குட்டி குட்டியாய் தைத்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்... சின்ன குடவுனில் ஆரம்பித்த இந்த தொழில் நல்லமுறையில் வெற்றிகள் கண்டது....
குழந்தைகளுடன் பொழுது போக்கும்போது மனைவி இல்லாத கவலைகளை மறந்தார்...
குழந்தைகளுக்கு முறையே விவான் இபான் என்று பெயர்கள் வைத்தார்....
விவான் = கிருஷ்ணனின் பெயர்
இபான் = பிள்ளையார் பெயர்
விவான் அமைதியாக எப்போதும் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பான்... பிரச்சனைகள் தரவே மாட்டான்...
ஆனால் இபான் ரொம்ப துறுதுறு.... விவான் அமைதியாக இருந்தாலும் இவன் திடிரென்று எழுந்து எதிர்திசையில் ஓட ஆரம்பிப்பான்... விவான் நிலைதடுமாறி விழுந்து எழுந்து இழுபட்டு அவனுடனே புரண்டோடுவான்....
விவான் கோபமே இல்லாத மனநிலை...
இபானுக்கு மூக்குநுனியில் எப்போதும் கோபம் நிற்கும்....
இபான் பலமுறை இழுத்த இழுப்பில் விவான் பக்கவாட்டில் விழுந்து நெற்றிப்பொட்டில் கால் முட்டியில் என்று அடிபடுவான்... அதைப்பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இபான் விளையாட்டில் கவனம் செலுத்துவான்....
( தொடரும் )
Tweet |
ஒட்டிப் பிறந்த இரட்டையரின் குணாதிசயங்களில் தான் என்னே வேறுபாடு. விவான். இபான் என்கிற பெயர்கள் புதிதாய் தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாய் நகர்கிறது கதை. ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காய்...
ReplyDeleteகதைபோலத் தெரியவில்லை
ReplyDeleteநேரடியாகக் கண்டதை விவரிப்பது போல் உள்ளது
சுவாரஸ்யமாகத் தொடர்கிறது பதிவு
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....
ஆஹா, அதற்குள் குழந்தைகள் ஓடியாடி விளையாட ஆரம்பித்து விட்டனவா? நேற்று தான் [முதல் பதிவில்] பிறந்தது போல உள்ளது. சபாஷ்.
ReplyDelete//அன்பு அன்பு அன்பு முழுமையான அன்பை குழந்தைகளிடம் செலுத்தி குழந்தைகள் மனதில் நீங்க ஒரு நல்ல அப்பா மட்டுமல்ல ஒரு தாயாகவும் இருக்கவேண்டும்... சொல்லி நிறுத்தினார் டாக்டர்...//
ரொம்ப ஈஸியாக டாக்டர் சொன்னதாக நம் கதாசிரியர் மஞ்சு சொல்லிட்டாங்க .......
இன்னும் அடுத்த பகுதிகளில் என்னென்ன சொல்லப்போறாங்களோ .... பார்ப்போம்.
வித்யாசமான சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டு அழகாக கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். தொடருங்கள் ... நாங்களும் தொடர்கிறோம்.
பிரியமுள்ள
VGK
மிக அருமையாக கதையைத் தொடர்ந்து கொண்டு செல்கிறீர்கள். கற்பனை போல் தெரியவில்லை.
ReplyDeleteவைஜெயந்திக்கும் வைத்யனாதனுக்கும் பிறந்த குழந்தைகளுக்கு வேறு மொழியில் பெயர் வைக்க என்ன காரணம்?
அடுத்த பகுதிக்காக ஆவலுடன்
ReplyDeleteஒட்டிப் பிறந்த குழந்தைகள்! மனதில் ஒட்டிக் கொண்ட கதை! தொடரத் தொடர்வேன்.
ஆர்வத்தைக் கூட்டுகிறது.
ReplyDeleteநல்ல கேள்வி சிவகுமாரன்.
ReplyDeleteஇன்னும் குழந்தைகளை தனியே பிரிக்கலீயா?
ReplyDeleteஇப்போ, பாவம் வைத்தி நிரம்ப சிரமப்படுவார்ல..
அடுத்த பாகம் படிக்கின்றேன் அக்கா.
தங்கள் இரு கதைகளும் வாசித்தேன் அப்பப்பா என்ன கற்பனை.
ReplyDeleteநல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.