"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 3, 2012

பக்த மீரா தொடர்ச்சி... (4)





10.

உண்ணும்போதும் உன்நினைவே எனக்கு தந்தாய்

உறங்கும்பொழுதும் கனவாய் வந்து அணைத்தாய்

உயிரில்லா உடலாய் என்னை நடக்க விட்டாய்

உன்நாமமே சொல்லவைத்தாய் என்னை கண்ணா...

11. 

தேவகி வயிற்றில் ஜனித்தவன் நீயே

கோகுலத்தில் லீலைகள் புரிந்ததும் நீயே

பாஞ்சாலியின் துயர் தீர்த்ததும் நீயே

என்காதல் என்று உணர்வாய் கண்ணா?

12.

மன்னனுடன் வாழ்க்கை என்று ஆனபோதிலும்

மனதில் என்றும் நிலைத்து இருப்பவன் நீயே

மாயவனே உன்மனதில் இடமுண்டா எனக்கு

மீராவின் காதல் மறுப்பது ஏன் கண்ணா?

22 comments:

  1. கண்ணனை நோக்கிய பக்த மீராவின்
    பாடல் வரிகளில் இனிமை. ;)

    ReplyDelete
  2. அருமையாக காதல் உணர்வு ததும்ப எழுதிய
    கவிதை சிறப்பு .தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  3. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    கண்ணனை நோக்கிய பக்த மீராவின்
    பாடல் வரிகளில் இனிமை. ;)//

    அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார் கருத்து பதிவுக்கு.

    ReplyDelete
  4. //அம்பாளடியாள் said...
    அருமையாக காதல் உணர்வு ததும்ப எழுதிய
    கவிதை சிறப்பு .தொடர வாழ்த்துக்கள் தோழி //

    அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. கண்ணணை எண்ணி உருகும் மீராவின் அன்பை ஒவ்வொரு பாடலும் தெளிவாய். அழகாய் உணர்த்திப் போகிறது. அருமை.

    ReplyDelete
  6. மீரா என்று தேடியபோது கிடைத்த அழகான பொக்கிஷம் இது. பாடல்கள் வாசிக்க வாசிக்க மனம் நெகிழ்கிறது.

    //உண்ணும்போதும் உன்நினைவே எனக்கு தந்தாய்

    உறங்கும்பொழுதும் கனவாய் வந்து அணைத்தாய்

    உயிரில்லா உடலாய் என்னை நடக்க விட்டாய்

    உன்நாமமே சொல்லவைத்தாய் என்னை கண்ணா..//

    இந்த வரிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பாராட்டுக்கள் மஞ்சு அவர்களே.. ( அக்கா என அழைக்கட்டுமா..? )

    அமுதா.

    ReplyDelete
  7. பக்தியும் காதலும் கலந்த
    கதம்ப உணர்வுடன் கூடிய பக்த மீராவின்
    கவிதைகள் அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //பால கணேஷ் said...
    கண்ணணை எண்ணி உருகும் மீராவின் அன்பை ஒவ்வொரு பாடலும் தெளிவாய். அழகாய் உணர்த்திப் போகிறது. அருமை.//

    அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  9. தன் மன்னவனாகக் கண்ணனையே நினைத்து நினைத்து உருகும் மீராவின் வார்த்தைகள் அருமை.

    ReplyDelete
  10. //பால கணேஷ் said...
    கண்ணணை எண்ணி உருகும் மீராவின் அன்பை ஒவ்வொரு பாடலும் தெளிவாய். அழகாய் உணர்த்திப் போகிறது. அருமை.//

    அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  11. //அமுதா கணேசன் said...
    மீரா என்று தேடியபோது கிடைத்த அழகான பொக்கிஷம் இது. பாடல்கள் வாசிக்க வாசிக்க மனம் நெகிழ்கிறது.

    //உண்ணும்போதும் உன்நினைவே எனக்கு தந்தாய்

    உறங்கும்பொழுதும் கனவாய் வந்து அணைத்தாய்

    உயிரில்லா உடலாய் என்னை நடக்க விட்டாய்

    உன்நாமமே சொல்லவைத்தாய் என்னை கண்ணா..//

    இந்த வரிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பாராட்டுக்கள் மஞ்சு அவர்களே.. ( அக்கா என அழைக்கட்டுமா..? )

    அமுதா.//

    மீராவின் காதல், பக்தி மானிடராய் பிறந்து மானிடராய் வாழ்ந்தாலும் இறைபக்தி அதிகமாகி இறைவனுடனே ஐக்கியமாகும் அளவுக்கு கண்ணனிடம் உயிராய் இருந்த ஒரு அழகிய காவியம் அதுப்பா...

    அக்கா என்று அழைக்கலாமேப்பா...

    அன்பு நன்றிகள் அமுதா கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  12. //Ramani said...
    பக்தியும் காதலும் கலந்த
    கதம்ப உணர்வுடன் கூடிய பக்த மீராவின்
    கவிதைகள் அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்//

    ஆஹா ரமணி சார் வலைப்பூவின் தலைப்பே காரணமாகிவிட்டதா மீராபஜன்?? அன்பு நன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  13. //ஸ்ரீராம். said...
    தன் மன்னவனாகக் கண்ணனையே நினைத்து நினைத்து
    உருகும் மீராவின் வார்த்தைகள் அருமை//

    அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  14. அருமையான பாடல் வரிகள்...

    ReplyDelete
  15. மீரா மட்டுமல்ல நாங்களும்தான் உங்களின் வரிகளை பார்த்து நாங்களும்தான் உருகி கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  16. //சே. குமார் said...
    அருமையான பாடல் வரிகள்....//

    அன்பு நன்றிகள் குமார் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  17. //Avargal Unmaigal said...
    மீரா மட்டுமல்ல நாங்களும்தான் உங்களின் வரிகளை பார்த்து நாங்களும்தான் உருகி கொண்டிருக்கிறோம்//

    அன்பு நன்றிகள் நண்பரே கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  18. மீராவின் காதல்
    ம்ம்ம்ம் ...பின்னீட்டீங்க போங்க

    ReplyDelete
  19. தடையற்ற வார்த்தை ஓடுகிறது.
    இனிமை.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. அன்பின் மஞ்சு - பக்த மீராவின் காதல் பாடல்கள் - அதுவும் கண்ணனைக் காதலிக்கும் பாடல்கள் - அத்த்னையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. மிக அழகான பாடல்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...