ஒன்பதாம் வகுப்பு
படிக்கும்போது ஒரு நாள் கனவில் ஒரு வயதானவர் தலையில் வெள்ளைத்துணி முறுக்கி… திண்ணையில்
“ அப்ப எங்க வீட்டில் திண்ணை இருந்தது “ ஒய்யாரமாக
சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்…
யார் இந்த தாத்தா?
எனக்கு தெரியவில்லை.. எங்கள் குடும்பத்தில் தாத்தா யாராவது இறந்தவர் வந்தாரோ கனவில்
என்றே நினைத்தேன்..
மூன்று முறை கனவு
வந்தது.. முதல் முறை இவர் எங்க வீட்டு திண்ணையில்.. இரண்டாவது முறை ஒரே மண் திட்டு
அங்கே ஒரு கல்.. அந்த கல்லின் மேல் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது இன்னொரு கால்
வைத்துக்கொண்டு கையை அருள் பாலிப்பது போன்று… சுற்றி எந்த அரவமோ அலங்காரமோ இல்லை..
சிதிலமடைந்த இடம் போன்று… மூன்றாவது முறை எங்க வீட்டின் சுவர் மேல் உட்கார்ந்துக்கொண்டு
என்னையே பார்ப்பது போன்று….
எனக்கு தெரியவில்லை
இவர் யாரு என்று..
பள்ளிப்படிப்பு,
கல்லூரி முடிந்து திருமணம் முடிந்து பிள்ளைப்பேறும் முடிந்து என் கணவர் குவைத் செல்லும்
வாய்ப்பு வந்தபோது மும்பையில் ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனை… அப்போது அங்கிருந்த ஏதோ
ஒரு கோயிலில் நுழைந்து நல்லபடியாக குவைத் போய் சேர வேண்டும் என்று வேண்டினார்.. வேண்டிவிட்டு
பார்த்தால் அது பாபா கோயில்… அங்கிருந்தோர் சொன்னது ஷீர்டி பாபா கோயில் இது.. வேண்டிக்கிறது
எல்லாம் கண்டிப்பா நடக்கும் என்று…
முதல் விடுமுறைக்கு
நேராக சென்னை வராமல் எங்களை மும்பை வரச்சொல்லி 1993 யில் எல்லாம் நண்டு சிண்டு எங்க
குழந்தைகள் தான் நான் என் மகன் விக்னேஷ் ராம், என் தங்கை, தங்கை கணவர், அவர்களின் இரண்டு
குழந்தைகள் கணேஷ் ராம் தத், விஜய விமோஹிதா, அம்மா எல்லோரும் கிளம்பிச்சென்றோம்..
நாங்கள் ஷீர்டி
செல்வது இப்போது போல அப்போது அத்தனை எளிதன்று.. எங்கும் சாப்பாடு சரியாக கிடைக்காமல்…
குடிக்க நீர், பிள்ளைகள் மூவரும் கைப்பிள்ளைகள் அவர்களுக்கு உணவு, சுடும் வெயில்… காற்று
இப்படி எல்லாம் தாண்டி ஒருவழியாக சென்று அடைந்தோம் ஷீர்டி.. அந்த இடம் எனக்கு முன்பே
கண்டது போலவே இருந்தது..
இப்போது போல தார்
ரோடு, கடைகள் சுற்றி இப்படி இல்லை அப்போது வெறும் மணல் திட்டு தான் எங்கும்…
உள்ளே நுழைந்தால்
பாபா… என் கனவில் கண்ட பாபா.. எத்தனை கருணை பாபாவுக்கு என் மேல்…
இரண்டாவது பிரசவம்
மிக சிக்கலானபோதும், இவருக்கு ஆபிசில் ஒரு பெரிய பிரச்சனை வந்தபோதும், என் மூத்த மகன்
கார் ஆக்சிடெண்டில் பிழைத்ததும் இந்த ஷீர்டி பாபாவின் கருணையே.. அற்புதங்கள் நடக்க
ஆரம்பித்தது அன்று முதல் இதோ இன்று வரை…
| Tweet |

