"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 29, 2012

பக்தமீரா பகுதி 3


7.
ராமனாய் பூவுலகை காத்தவனே அன்பனே
சாரதியாய் நின்று அர்ஜுனனைக் காத்தவனே
ஒரே ஒரு முறை என்னை ஏற்பாயோ நீயும்
உன்னில் என்னை தொலைப்பேனே நானும் கண்ணா

8.
என்னிதழ்கள் என்றும் துதிப்பது உன் நாமமே
என்னிதயம் பூஜிப்பது உன்னை என்றுமே
என் பாவங்கள் உன் பாதத்தில் தொலைக்க
உன்னையே சரண் என அடைந்தேன் கண்ணா

9.
உந்தன் ஸ்பரிசம் தீண்ட நானும் வேண்டி
உயிராய் உருகி நிற்பேன் காலங்கள் கோடி
உன் கருணை என்றே காத்திருந்து நானும்
உன்னடியே சேர்வேன் உறுதி இது கண்ணா...

23 comments:

 1. கிருஷ்ண பக்தியில் கரை(த்) ந்து விட்டீர்கள்.

  ReplyDelete
 2. நல்லாயிருக்கு. தொடருங்கள். ;)

  ReplyDelete
 3. ராமனாய் பூவுலகை காத்தவனே அன்பனே
  சாரதியாய் நின்று அர்ஜுனனைக் காத்தவனே

  அருமையான வரிகள்.. பாராட்டுக்கள் !

  ReplyDelete
 4. அருமையாகவுள்ளது. தொடருங்கள்.

  ReplyDelete
 5. வரிகளில் பக்தி மணம் பரவுகிறது..!

  பாடல் எண் 8 : எதுகையினையும், பாடல் எண் 9 : மோனையினையும் அழகாக பொருந்திடும் வண்ணம் இயைந்த வரிகள் படைத்திருப்பது அழகு.

  தொடருங்கள் அக்கா.!

  ReplyDelete
 6. மனதை மீண்டும் இறைவன் பக்கம் திருப்பிவிடுமோ என்று பயமாய் இருக்கிறது.உங்களுக்கு இசைபற்றிய அறிவும் உண்டு என நினைக்கிறேன்.
  வாழ்த்துக்கள் தொடருங்கள் ..........

  ReplyDelete
 7. கண்ணனின் ’மீளா’ பக்தி மனதிற்கு அமைதியை தரும்.

  ReplyDelete
 8. இயல்பான பக்தி வரிகள் பாடலாய் ஒரு ஹாரம் கண்ணனுக்கு.. வாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி.

  ReplyDelete
 9. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  good post.. thanks//

  அன்பு நன்றிகள் “ என் ராஜப்பாட்டை “ ராஜா கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 10. //
  ஸ்ரீராம். said...
  கிருஷ்ண பக்தியில் கரை(த்) ந்து விட்டீர்கள்.//
  அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 11. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  நல்லாயிருக்கு. தொடருங்கள். ;)//

  அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 12. //இராஜராஜேஸ்வரி said...
  ராமனாய் பூவுலகை காத்தவனே அன்பனே
  சாரதியாய் நின்று அர்ஜுனனைக் காத்தவனே

  அருமையான வரிகள்.. பாராட்டுக்கள் !//
  அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 13. //Rasan said...
  அருமையாகவுள்ளது. தொடருங்கள்.//
  அன்பு வரவேற்புகள் ராசன்... அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 14. //சிவஹரி said...
  வரிகளில் பக்தி மணம் பரவுகிறது..!

  பாடல் எண் 8 : எதுகையினையும், பாடல் எண் 9 : மோனையினையும் அழகாக பொருந்திடும் வண்ணம் இயைந்த வரிகள் படைத்திருப்பது அழகு.

  தொடருங்கள் அக்கா.!//

  எதுகை மோனை எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது தம்பி... இலக்கணம் தெரியாம ஏதோ மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்பா.. அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 15. //நெற்கொழுதாசன் said...
  மனதை மீண்டும் இறைவன் பக்கம் திருப்பிவிடுமோ என்று பயமாய் இருக்கிறது.உங்களுக்கு இசைபற்றிய அறிவும் உண்டு என நினைக்கிறேன்.
  வாழ்த்துக்கள் தொடருங்கள் ..........//

  மனதை இறைப்பக்கம் திருப்பிவிட்டால் என்றும் நன்மையே நெற்கொழுதாசன்.. ஆம். இசையும் நடனமும் முறைப்படி கற்று முடித்திருக்கிறேன்பா.. அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 16. //சத்ரியன் said...
  கண்ணனின் ’மீளா’ பக்தி மனதிற்கு அமைதியை தரும்.//
  அன்பு நன்றிகள் கண்ணன் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 17. //மோகன்ஜி said...
  இயல்பான பக்தி வரிகள் பாடலாய் ஒரு ஹாரம் கண்ணனுக்கு.. வாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி.//
  அன்பு வரவேற்புகள் மோகன் ஜீ.... அன்பு நன்றிகள் தங்களின் கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 18. ராமனாய் பூவுலகை காத்தவனே அன்பனே
  சாரதியாய் நின்று அர்ஜுனனைக் காத்தவனே
  ஒரே ஒரு முறை என்னை ஏற்பாயோ நீயும்
  உன்னில் என்னை தொலைப்பேனே நானும் கண்ணா

  மிகவும் சிறப்பான வரிகள் தொடர வாழ்த்துக்கள்
  தோழி !!.......

  ReplyDelete
 19. கடைசி நான்கு வரிகள் மனதில் நின்று விட்டன. அப்படி ஒரு அசையாத பக்தி பூணுகிற பட்சத்தில் அந்தக் கண்ணன் ஓடி வந்துவிட மாட்டானா என்ன? அருமை.

  ReplyDelete
 20. //அன்பு உள்ளம் said...
  ராமனாய் பூவுலகை காத்தவனே அன்பனே
  சாரதியாய் நின்று அர்ஜுனனைக் காத்தவனே
  ஒரே ஒரு முறை என்னை ஏற்பாயோ நீயும்
  உன்னில் என்னை தொலைப்பேனே நானும் கண்ணா

  மிகவும் சிறப்பான வரிகள் தொடர வாழ்த்துக்கள்
  தோழி !!.......//

  அன்பு நன்றிகள் தோழி தங்களின் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 21. //பால கணேஷ் said...
  கடைசி நான்கு வரிகள் மனதில் நின்று விட்டன. அப்படி ஒரு அசையாத பக்தி பூணுகிற பட்சத்தில் அந்தக் கண்ணன் ஓடி வந்துவிட மாட்டானா என்ன? அருமை.//

  மீராவின் பக்தி என்றென்றும் கண்ணனிடம் மட்டுமே... அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 22. அன்பின் மஞ்சு - அருமையான பாடல்கள் - கண்ணனையே அனுதினமும் நினைத்து - அவன் புகழ் பாடி - அவனையே அடைய வேண்டுமெனப் பிரார்த்தித்ட்5ஹு - பக்த மீரா பாடுவதாகப் பாடல்கள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...