"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, September 19, 2007

நட்பை உயர்வாய் கருது..

காதலின் மேல் நம்பிக்கையில்லை
ஏனெனில் நான் காத‌லித்த‌தில்லை
ஆனால் ந‌ட்பை உய‌ர்வாய் ம‌திப்பேன்
ஏனெனில் ந‌ட்பு கொடுத்த‌து வைர‌ங்க‌ள்
அத்த‌னையும் வைர‌ங்க‌ள்
இத்த‌னை வைர‌ங்க‌ளை பெற நான்
எத்த‌னை இழ‌ந்திருப்பேன்
இழ‌ந்த‌தும் வைர‌ங்க‌ளையே...

என் பெயரை நீ உச்சரிக்கும்போது...

திரும்ப திரும்ப நீ உச்சரிக்கும்போது
தான் என் பெயருக்கு இத்தனை அழகா
என்று வியக்கிறேன்.
நீ அழைத்த அத்தனை முறையும்
நான் என்னை ச‌ற்றே ம‌ற‌ந்த‌து உண்மைய‌டா...

Monday, September 10, 2007

அன்பால் உலகை ஜெயிக்க முடியாதா?

அன்பால் உலகத்தை ஜெயிக்க
நினைத்தது தவறா?
அன்பால் மனதை அறிய‌
முயன்றது தவறா?
ஏன் இப்படி?
முடியாதா......
பிரிவை தவிர்க்கவே முடியாதா?

இரும்பு ச‌ங்கிலி

பூட்டிக்கொண்டேன் இரும்பு ச‌ங்கிலி
இஷ்ட‌ப்ப‌ட்டே தான் பூட்டிக்கொண்டேன்
அன்பு என்னை இறுக்குகிற‌து
வெளியே விட‌ ம‌றுக்கிறது
என் இத‌ய‌த்தை நொறுக்கிற‌து
ஆனாலும் அந்த‌ அன்பை
பூர‌ண‌மாக‌ அனுபவிக்கிறேன்
தூய‌ அன்ப‌ல்ல‌வா உன்னுடையது???

பிரிவில் ஏது வ‌கை?

பிரிவு என்னால் தாங்க‌ முடிய‌வில்லையே
பிரிவே இது தான் உன் வ‌லியா?
பிரிவில் ஏது வ‌கை?
காத‌லி காத‌ல‌னை பிரிந்தாலும் வ‌லி
ந‌ண்ப‌னை பிரிந்தாலும் வ‌லி
க‌ணவ‌ன் ம‌னைவியை பிரிந்தாலும் வ‌லி
தாய் த‌ன் ம‌க‌னை பிரிந்தாலும் வ‌லி
வ‌லியும் வேத‌னையும் ஒன்றுதான்
நீ த‌ரும் வ‌லி நீயே வ‌ந்து போக்க‌டா....
பிரிவு என்னால் தாங்க‌ முடிய‌வில்லையேடா...

பேச‌ மாட்டாயா? என்னுட‌ன் பேச‌மாட்டாயா?

பேச‌ மாட்டாயா? என்னுட‌ன் பேச‌மாட்டாயா?
தண்ட‌னை என‌க்கா உன‌க்கா?
என்ன‌ த‌வறிழைத்தேன் உன‌க்கு?
என் உயிரே நீ தானென்று
நினைத்த‌து என் தவ‌றா?
என் ம‌ன‌ம் என்றாவ‌து அறிய‌ முய‌ன்றாயா?
அறிந்திருந்தால் தோற்றிருப்பாய்
உன் அன்பை என் அன்பு வென்ற‌து என்று.....

மௌனப்போராட்டம்....

தொடங்கி விட்டேன் நான்
கானல் நீரல்ல என்று எனை நிரூபிக்க‌
தொடங்கி விட்டேன் என் வேள்வியை
என் நட்பு உன்னை பலப்படுத்தவே
தொடங்கி விட்டேன் என் அஹிம்ஸா போராட்டத்தை
இடமில்லா மனதில் என்
மௌன போராட்டத்தை தொடங்கிவிட்டேன்....
என் மௌனம் ஆயுதம்
என் கவிதை இனி ஆயுதம்
என் கண்ணீர் இனி ஆயுதம்
என்னடா செய்யும் உன் பாராமுகம் என்னை??

நட்பு பாரமில்லை நண்பனே....

வினையை விலை கொடுத்து வாங்காதே
நட்பை பாரமென்று விலகாதே
என் நட்பு உன்னை காயப்படுத்தாது
விலகி போக எண்ணாதே
எனை விட்டு விலகி போக எண்ணாதே
உன் கவலை மறக்க நான் வேண்டும்
உனக்கு நான் வேண்டும் என்றும் என்றென்றும்....

தனிமை வேண்டாமடா உனக்கு

தனிமை ஏனடா உனக்கு
என்ன இழந்தாய் தனித்திருந்து அழுவதற்கு?
தனிமை ஏனடா உனக்கு
அன்பு வேண்டுமா?
அரவணைப்பு வேண்டுமா?
தாய்மை வேண்டுமா?
தோழ‌மை வேண்டுமா?
என்ன‌ வேண்டும‌டா உன‌க்கு?
ஏன் உன‌க்கு த‌னிமை?
ம‌னைவி இல்லையா?
ம‌க்க‌ள் இல்லையா?
உற்றார் உற‌வின‌ர் தானில்லையா?
ஏன‌டா த‌னிமை உன‌க்கு?
த‌னித்திருந்து என்ன‌ சாதித்தாய்?
த‌னிமை மிக்க‌ கொடுமைய‌டா?
வேண்டாம‌டா த‌னிமை உன‌க்கு...
உன் த‌னிமையை போக்கும் ம‌ருந்து
ந‌ட்புக்கு உண்டுடா தோழா....
த‌னித்திருந்து அழாதே வா
என் தோளில் சாய்ந்து அழு
உன் த‌னிமை தீரும‌ட்டும் அழு...
உன் இன்ப‌ம் த‌னிமையில் இல்லை
என்று உண‌ர்ந்து அழு.....
உன் ம‌ன‌ ச‌ங்க‌ட‌ம் தீரும‌ட்டும் அழு...
த‌னிமை வேண்டாம‌டா தோழா உன‌க்கு....

Sunday, September 9, 2007

உயிராகி உருவாகி

உயிராகி உயிரணுக்களாகி
பெண்ணாகி உன் முன்
ஆளாகி உனக்கு இல்லாளாகி
உன் தாய் தந்தைக்கு (ம‌ரு) மகளாகி
உன் சகோதரனுக்கு அண்ணியாகி
உன் சுற்றத்துக்கு உறவாகி
உன் உயிரணுக்களை என்னுள் சுமந்து
உன் உயிருக்கு தாயாகி
என் பொறுப்புகளை முடித்து விட்டு
கண்ணாடி பார்க்கிறேன் ஐயோ
வருடங்கள் இத்தனை ஓடி விட்டதா?
நரை தட்டி விட்டதா? மூப்பு வந்து விட்டதா?
என்னிள‌மையை தொல‌த்த‌து உன்னிட‌த்தில் தானே
பின் ஏன் என்னை விட்டு வேறு பெண்
தேடி ஓடுகிறாய்?

காதல் என்றும் தோற்றதில்லை

காதல் தோல்வியை கொடுத்ததுண்டு ஆனால்
காதல் என்றும் தோற்றதில்லை.
மதியையும் வென்றிடும் காதல்
கற்பனை சிற‌கை த‌ட்டி விடும் காத‌ல்

காத‌ல‌ன் காத‌லியை தொலைத்தாலும்
வெறித்த‌ன‌மாக‌ நேசித்துக் கொண்டி தானிருப்பான்.
நினைவுக‌ளை அவ‌ள் நினைவுக‌ளை
அசை போட்டுக்கொண்டுதான் இருப்பான்.

அவ‌ள் உட‌லை நேசித்திருந்தால்
விட்டிருப்பான் என்றோ அவ‌ளை
க‌ர்ப்பிணியாக்கி.
உள்ள‌த்தை நேசித்த‌தால் தான் இன்று
க‌விதையாக்கி பித‌ற்றிக்கொண்டிருக்கிறான்....

காத்திருந்து காத்திருந்து....

பாசத்தில் மூழ்கி
உயிராய் உருகி
உன்மேல் காதலாய்
மனதோடு மயங்கி
உன் உயிரில் கலந்து
கண்ணீரோடு காத்திருப்பேன்
நீ திரும்பி வரும் நாளை எண்ணி.....

டி.. டீ....டீ..டீ.டி...டீடீடீடீ

என் தலையோடு ஏனடா முட்டினாய்
ஐயோ கொம்பு முளைத்து விடும்
என்னடி செய்ய சொல்கிறாய்
திரும்ப ஒரு முறை முட்டி விடடா..
முட்டி விட்டால் கொம்பு வராதா
இல்லை காதல் வரும்.....

பிரிவின் வலி

காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக‌
அப்பொழுதும் அறியவில்லை நீ
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று பிரித்துச்சென்ற‌
காலனுக்கும் புரியவில்லை என் மனக்கவலை....

நினைவுகள்

உன் நினைவுகள் என்னை
தின்று கொண்டிருக்கும் வரை
நான் உன்னை மறப்பதில்லை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
உன் நினைவுகள் என்னை விட்டு
விலகுவதுமில்லை....

கன்னிக்காதல்

நட்பாய் தொடங்கி
காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடை தந்தேன்
என் கன்னி காதலுக்கு....
Related Posts Plugin for WordPress, Blogger...