"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, December 27, 2007

இரக்கமற்று கொன்றவர் உறங்குவாரா இனி???

மனிதமே மனிதமே
மனிதனின் மனதை
கொன்ற இரக்கமற்ற
தீவிரவாதமே

அரசியல்வாதியையும்
நல்லவரையும் ஒன்றாய்
கொன்று பசி அடங்குகிறாயே
பகைமை நாடு
சொல்பவர் மடையர்
தோழமைநாடு
என் சகோதர நாடு

வசிப்பதும் வதைப்பதும்
தோழனும் சகோதரனுமே
அடுத்து வசிப்பதால் தோழனே
தாய்நாட்டில் இருந்து
பிரிந்ததால் என் சகோதரனே

நாடே ரத்த கண்ணீர் வடிக்கிறதே
நல்லதை செய்யாதவரே
தீமை புரியாதீர்
நல்லது செய்பவரை
கொன்று குவிக்காதீர்

பெண்ணென்றும் பார்க்கவில்லை
இரக்கமும் தோன்றவில்லை
நாட்டை சீராக்க நினைத்து
மனித வெடிகுண்டுக்கு
இரையான சகோதரியே
பெனாசீர்பூட்டோவே

இறக்கும்போதும்
உன் நாடு இனி
போகும் அவலத்தை
நினைத்து துளிர்த்த
கடைசி துளி கண்ணீரும்
கன்னத்தில் வீழுமுன்
ரத்தக்கறையானதே

கழுத்தில் குண்டு பாய்ந்து
உயிர் கூடுவிட்டு பறந்து
அருபமாய் உன் நாட்டை கண்டு
கண்ணீர் விடுகிறாயா சகோதரி

மனிதம் தொலைத்த நாட்டை கண்டு
துடிக்கிறதா உன் ஆத்மா
இனி யார் காப்பாற்றுவார்
உன் மக்களை உன் நாட்டை
உன்னை பலிகொடுத்து
உன் நாட்டை பரிதவிக்கவிட்டதே

இரக்கமற்ற செயல் புரிந்து
உன்னை கொன்றவர்
உறங்குவாரா இனி நிம்மதியாக??

தாய்மை எத்தனை புனிதம்.....

முனகுதல் அதிகரிக்க அதிகரிக்க
இருப்பு கொள்ள முடியாமல் தவிக்கிறேன்
ஏன் இறைவா இப்படி ஒரு வலி
ஏன் படைத்தாய் இப்படி ஒரு பிறவி

சந்தோஷத்தில் பங்கு கொண்ட எனக்கு
இந்த பரிதவிப்பில் பங்கு இல்லையே
உயிர் பிழைப்பாளா உத்தம பத்தினி

உயிரை உயிருள் சுமந்து
எனக்கு ஒரு வாரிசு தர
இதோ இந்த நொடியில்
முனகல் சத்தம் அதிகமாக

எனக்கு இருப்பு கொள்ளவில்லை
ஓரிடத்தில் அமர முடியாமல்
என்ன தவிப்பு இது

சத்தம் நிற்க கதவு திறக்க
ரோஜாகொத்தை உள்ளங்கையில்
பொத்தி கொண்டு காண்பிக்க

கால் தரையில் நிற்கவில்லை
எனக்கா எனக்கேவா என் பொக்கிஷமா
என் முகமா இல்லை
என் மனைவியின் சாயலா

இரண்டும் கலந்த அழகு பிம்பமா
க்ருஷ்ண விக்ரஹமா?
என்ன சொல்வேன் எப்படி சொல்வேன்

என் சந்தோஷம் பகிர ஓடுகிறேன்
மனைவி கண்மூடி அயற்சியில்
உயிரை உலகுக்கு காண்பித்த
சந்தோஷ அலுப்பு முகத்தில்

என்னை அப்பா என்று அழைக்க
உன்னத உறவை தந்தவள்
கைகூப்பி கண்ணீரோடு பார்க்கிறேன்
தாய்மை எத்தனை புனிதம்.....

உள்ளத்து கவிக்காதலன் பாரதி....

உள்ளத்து தூய்மை பகிர்ந்திடும் தன்மை
உணரும் உண்மை அத்தனையும் தந்ததே
தானத்தில் எப்போதும் தன்னையே தந்து
அவன் அல்லாது வேறு யார் இப்புவியில்

நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை
பார்வையின் தீட்சண்யம் கொல்லும் தீயவரை
கயமை கொன்று நெருப்பில் ஜொலிக்கும்
தீப்பொறி பறக்கும் கவிதை நடையாம்

செல்லம்மாவல்லாது கற்பனையில் தனக்கொரு
காதலி அமைத்து கண்ணம்மாவென்று
உருகி தவித்து பித்தனாய் திரிந்து தெளிந்து
கவிதையில் தன்னை மொத்தமாய் இழந்து

ஒழுக்கத்தில் சீலனாம் குழந்தை உள்ளமாம்
நேர்மை உள்ளவனாம் வாய்மையில் சிறந்தவனாம்
இத்தனை சொன்னதும் சொல்லப்போவதும்
என் உள்ளத்து கவிக்காதலன் பாரதியையே

Wednesday, December 26, 2007

அகிலத்து நாயகியே....

துன்பங்களையும் தோற்பிக்க
தோல்விகளை வெற்றியாக்க
ஆசைகள் அற்றுவிட
சக்தி மிக கொடுத்துவிடு

அண்டத்தை படைத்திட்ட
அகிலத்து நாயகியே
சூலினியே பரிபூரணியே
உன்னுள் அடக்கம்
உயிர்கள் எல்லாமே

ஆளுபவனையும்
அடக்குபவனையும்
அண்டத்தை காத்து
அமைதி சேர்த்து
ரட்சித்துவிடு

நித்திய கர்மானுஷ்டங்கள்
பல புரிந்து பாபம் தொலைக்க
காசி போகும் வழிதேடி
கங்கையில் மூழ்கி

பாபத்தை தொலைத்து
உன் பதம் சேர
அருள் புரிந்திடு
லோகத்து நாயகியே
ஆனந்த ரூபினியே
அகிலாண்டேஸ்வரியே

தெளிந்த மனம்.....

வேதனைகள் வெறுப்புகள் தனை மறைத்து
காதலெனும் ஒரு சொல்லில் தனை மறந்து
ஜீவன் போகும் வழிதனில் எல்லாம் தொலைத்து

காத்திருந்த காலமெல்லாம் வெறுமை நிறைந்து
சுவாசம் தனை தடை செய்து உயிர் வலிக்க
கோபம் வேண்டாம் பிரிவு வேண்டாம்

தன்னுள் எல்லாம் அடக்கி புன்னகையில்
அன்பெனும் ஒற்றை சொல்லில் அணைத்து
காட்டாற்று வெள்ளமென எண்ணங்கள்
புதிய ராகம் பூமியெங்கும் இசைக்க

உயிர் அமுது புகட்ட உள்ளத்துள் மறைத்த
வேதனைகள் வலிகள் மறந்தே தான் போனதே
குழம்பிய மனமும் அழகாய் தெளிந்ததே

வீழ்ச்சி அடைவதே இல்லை....

வாழத்தொடங்குபவன் வீழ மாட்டான்
வீழ்ச்சியை ஏற்க மாட்டான்
தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டான்
முயற்சி முயற்சி இறுதி வரை முயற்சி
வாழத்தான் போராடுவான்
வறுமையோடும் பிணியோடும்
ஜாதி மதம் பாராட்டும் அரசியல்வாதியோடும்
பொய் புரட்டு கள்ளம் கபடம்
சொல்லி தெரியும் மனிதர்களோடும்
அன்புக்காகவும் பாசத்திற்காகவும்
காதலுக்காகவும் சொத்துக்காகவும்
வாழ்க்கையோடும் எதிர்நீச்சல் போட்டு
வாழ்த்தான் முயலுவான்
வாழ போராடுபவன்
வீழ்ச்சி அடைவதே இல்லை

Saturday, December 22, 2007

மனதை விஸ்தாரமாக்கி....

பார்க்கும் கணங்கள் சில
காணாத கணங்கள் பல
பார்க்கும் அந்த சில
கணங்களிலும்
சண்டை சச்சரவு ஏன்
மனஸ்தாபம் கொள்வதும்
நேரத்தை விரயமாக்குவதும்
நம் மனதை துன்புறுத்தி கொள்வதும்
தனிமையில் வாடி வதங்குவதும்
கழிவிரக்கம் கொள்வதும்
மனதிலுள்ள வெறுப்பையும்
தன் மேல் கொண்ட கழிவிரக்கத்தையும்
எல்லாம் தெளிந்த மனதோடு
நன்றாக துடைத்துவிடுங்களேன்
இயல்பாய் இருந்துவிடுங்களேன்
மனதில் அன்பை மலர செய்து
குற்றங்களை மன்னித்து
தவறுகளை பொறுத்து
அணைத்து செல்லுங்களேன்
நண்பர்களே புரிதல் கொள்ளுங்கள்
சமாதானம் கொள்ளுங்கள்
புன்னகைத்து விடுங்கள்
கைகளை பிணைத்து கொள்ளுங்கள்
வழியை நோக்குங்கள்
விஸ்தாரம் மனதிலும் வழியிலும்.....

கண் விற்று சித்திரம் வாங்கி....

தப்பி பிழைத்தோம்
தத்தி தவழ்ந்தோம்
நன்றாய் வளர்ந்தோம்
ஒருங்கே இணைந்தோம்
பண்பாடு கற்றோம்
அத்தனையும் விற்றோம்
கண் விற்று வாங்கிய சித்திரம்
காணமுடியாது தவிக்கிறோம்
கண்காணா தூரத்தில்
மனைவி மக்கள் ஓரிடத்தில்
எங்களை நினைத்து காத்திருக்க
கைக்கொள்ளிக்காகவும்
வாய்க்கரிசிக்காகவும்
இறுதி காலத்தில் பெற்றோர்
கண்ணீரில் கண்விழி பூத்திருக்க
முக்கா காசு சுமைக்கூலிக்காக
பாடுபடும் எங்களை
அந்நிய நாடு படுத்தும் பாடு
சம்பளமும் போதவில்லை
வாழ வழியும் தெரியவில்லை.....

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.....

கண்களில் வெளிச்சம் மின்னுகிறதே
மறைந்த காட்சிகள் வெட்டவெளிச்சமாகிறதே
காண்போரை அதிசயிக்க வைக்கிறதே
என்ன அற்புதம் கண்ணாடி இல்லாமல்
காட்சிகள் இத்தனை பளீரென்று
நேத்ராலயா சென்றேன்
கண் தெரியவில்லை என்றேன்
தேதி குறித்தார்கள்
குறித்த நாளில் காலையில் சென்றேன்
மாலையில் வீடு திரும்பினேன்
ஹப்பா இனி காணலாம்
என்றும் தடையில்லாமல்
என்னை தானே மனைவியே
இல்லை கணவனே
தொலைக்காட்சியின் தொடர்சீரியல்....

விலகி போகாதே பெண்ணே....

மனதின் வெறுமை
ஓலமாய் அலறுகிறது
ஓரமாய் உட்கார்ந்து
அழ தோன்றுகிறது
சிந்திக்க மறுக்கின்றது
மூளை செயலற்று போனது
நித்திரை கொள்ள மறக்கிறது
ஏனடி என்னை தவிக்க விட்டாய்
கோபத்தில் அறையாமல்
ஏனடி வெறுத்து ஓடினாய்
உன்னையன்றி நான் எதையும்
நினைப்பதில்லையே
உன் உருவம் என் மனதில்
அச்சாய் பதிந்த பின்
எப்படியடி மறக்க தோன்றும்
உன் காதலை மறுத்தது
என் தவறே பெண்ணே
நீ என்னையே வெறுத்துவிட்டாயே
உன் பின் என்னை
சுற்ற வைத்து விட்டாயே
உண்மை காதலை நான்
உணர்ந்த நொடி
நீ என்னை விட்டு விலகியதேன்
கோபம் கொள் ஆனால்
விலகி போகாதே
எனக்காக நீ காத்திருந்தது போய்
இதோ உனக்காக
ஒவ்வொரு விநாடியும்
எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறேன்
பெண்ணே என் தவறை பொறுத்து
ஏற்று கொள்வாயா?

பாரதி பாடிய பாட்டு

பாரதி பாடிய பாட்டு
இன்று பிள்ளைகள் படும் பாடு
பாரதி சொன்னான் அன்று
நடைமுறை படுத்தவில்லையே இன்று
காலை எழுந்தவுடன் படிப்பு
இவ்ளோ வீட்டுப்பாடம் கொடுத்தால்
படிக்க ஏதய்யா பாரதி நேரம்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
சனியனே பீடை உப்பே இல்லடி
அம்மா அப்பா உன்னை கூப்பிடறா பாரு
மாலை முழுதும் விளையாட்டு
தொடர்சீரியல் பார்க்க தொடங்கினால்
இடி விழுந்தாலும் கேட்காத அம்மாவே
நாங்கள் விளையாட விட்ட இடத்திலெல்லாம்
கட்டிடங்கள் எழுப்பினால்
எங்கே தான் விளையாடுவது.....
பாரதி இன்று பிள்ளைகள்
படும் கஷ்டங்களை பாரேன்
வீட்டு பாடம் எழுதலன்னா பள்ளியில் அடி
வீட்டு வேலை செய்யலன்னா சிற்றன்னையின் மிதி
எங்கே தான் போவார்கள் நிம்மதி தேடி......

சென்னை மாநகரம்.....

ஏதோ நடக்கிறது
ரகசியம் உடைகிறது
மௌனம் காக்கிறது
கண்ணீர் பொழிகிறது
விம்மல் வெடிக்கிறது
கலங்கி துடிக்கிறது
தடுக்க முடியாத
கையாலாகாதனத்துடன்
வேடிகை பார்க்கிறது
என்னை அடித்து
என் கூந்தல் இழுக்கும்
என் கணவர் கைகளை
கையாலாகாதனத்துடன்
வேடிக்கை பார்க்கிறது.....
தன் தவற்றை மறைத்து
என்னை அம்பலமாக்கிய
என் கணவனை
யாரும் தடுக்கவில்லை
ஆறுதல் கூறவும் இல்லை
வம்படிக்கவும் கூடுகிறது கூட்டம்
மனைவியை அடித்தாலும்
கூடுகிறது கூட்டம்
நல்லதை எடுத்து சொல்ல
ஏன் கூடவில்லை யாரும்
இது தான் சென்னை மாநகரமா.....

விவாகரத்தை ரத்து செய்ய கூடாதா?

இனப்போர் மக்களை பிரிக்கிறது
மனப்போர் மனதை வெறுமையாக்குகிறது
கை தட்டி ஓசை உண்டாக்க
காதல் ஒன்றும் விளையாட்டல்ல
விடிந்தால் கலைந்துவிடும் கனவுமல்ல
உணர்வோடு பிணைந்து
உள்ளத்தோடு இணைந்து
மனதோடு கலந்து
திருமணத்தில் முடியும்
அன்பில் தொடங்கும்
இல்வாழ்க்கை
காதலின் ஆழமான
அழுத்தமான அஸ்திவாரம்......
இதை உணராது போகும்
மனைவி கணவன் இடையே
எத்தனை மனவேறுபாடுகள்
கணக்கிலடங்கா இடர்பாடுகள்
தொடங்கினால் முடியாத
சண்டை சச்சரவுகள்
தவிர்க்க முடியாதா
விவாகரத்து தவிர்க்கவே முடியாதா
தன் மனதை வேண்டியவனுக்கு
விட்டு கொடுத்து தானே இணைந்தாய்
மனதை விட்டு கொடுத்தவளுக்கு
ஈகோவை விட்டு கொடுக்க முடியாதா
கருணை மனு இட்ட கணவனுக்காக
மறு பரிசீலனை செய்ய கூடாதா
எதிர்காலம் கேள்விகுறியாகும்
பிள்ளைகளுக்காக விட்டு கொடுக்க கூடாதா
எல்லாரும் இன்புற்று இருக்க
கொஞ்சம் பொறுத்து போக கூடாதா
விவாகரத்தை ரத்து செய்ய கூடாதா...

காது குத்தி....

மடி மேல் இருத்தி
கதறும் குரலை
சமாதானப்படுத்தி
வியர்வை வழிய
பொன் காதணி
காதில் வைத்து
குத்தும் வேளையில்
அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ
அலறும் சத்தத்தில்
வாழை பழத்தை
வாயில் நுழைக்க
கண்ணில் நிறைந்த நீர்
வாயில் நிறைந்த பழம்
திரும்ப முடியாதப்படி
இறுக்கி பிடித்த
மாமாவின் இரும்பு பிடி
காதில் ரத்தத்துடன் சேர்ந்து
பொன் காதணி மினுக்க
இனிதே நடந்தது
காது குத்தும் விழா....

உண்மை அன்பை உணர்ந்தேன்....

உண்மை அன்பு எங்கே
நன்றாய் அறிந்தேன் கண்ணே
தனக்காக வாழாமல்
எனக்காக வாழும்
உன் தியாக உணர்வே
உண்மை அன்பென உணர்ந்தேன்
தன்னை நினைக்காமல்
என்னை நினைத்து
உன்னை வருத்திக்கொள்வதே
உண்மை அன்பென உணர்ந்தேன்
காற்றில் கூட
குளிர் தொடாமல்
என்னை அணைத்ததே
உண்மை அன்பென உணர்ந்தேன்
உச்சி வெயில்
என்னை சுடாமல்
உன் முந்தானையால்
என்னை போர்த்தியதே
உண்மை அன்பென உணர்ந்தேன்
உன் ப்ரார்த்தனைகள்
என்னை கவசமாக காத்ததே
உண்மை அன்பென உணர்ந்தேன்
என் குணங்களை கூட
உன் அன்பு மனதால் சிறைசெய்து
என்னையே மாற்றிய அதிசயம்
உண்மை அன்பென உணர்ந்தேன்
இத்தனை போதும் இந்த ஜென்மத்திற்கு
இனி வரும் ஜென்மத்தில்
உனக்கே துணையாக சேர்ந்து
உன்னை பூஜிக்க உனக்கு சேவகம் செய்ய
என்னை அனுமதிப்பாயா கண்ணே

புன்னகை ஜெயிக்குமா பொன் நகையை

நகை நகை நகை
என்னடி முத்துநகை
பொன் நகை நான்
சம்பாரித்து தரும்வரை
உன் புன் "நகை"யோட
உலா வாயேன்
நகை வாங்கி தரும்வரை
நானும் நகைக்கிறேன் புருஷா
உன் சாமர்த்தியத்தை எண்ணி

நகை தந்தால் அழகு என்றாள் மாமி
நகையிட்டால் அழகு என்றாள் அம்மா
புன்னகைத்தால் அழகு என்றான் கணவன்
அளவில்லா பொன் இருந்துவிட்டால்
புன்னகையின் மென்மையை
நகையின் கனம் நசுக்கிவிடுகிறதே.....
பொன் நகையின் அழகை
புன்னகையின் அழகு ஜெயிக்குமா?

சந்தேகம் கொள்ளாதே கணவனே

மனம் ஒன்றும் சரியில்லை
வழி ஒன்றும் தெரியவில்லை
ஏக்கங்களே வாழ்வாகிவிட்டபடியால்
மனதை சமன் செய்யமுடியவில்லை

பேசாதிருந்தாலும் கவலை
பேசினாலும் தொல்லை
என்ன தான் தீர்வு இதற்கு

நிலையில்லா உலகில்
என்னை நிலைநிறுத்திக்கொள்ள
எடுக்கும் முயற்சிகள் எல்லாமே
முடிவில்லா தொடக்கங்கள்

கைபிடித்து நடைபழக்கிய
தந்தையும் இல்லை எனக்காக பேச
அடிபட்டு துவண்டு விழுந்தால்
தாயும் இல்லை தாங்கி கொள்ள

அம்மாவை அடிக்காதே அப்பா
என்று அவர் கைப்பிடிக்க
குழந்தை செல்வமும் இல்லையே

என்ன தான் செய்வேன்
இனி பொறுப்பதில்லை
அடித்தால் பொறுக்கலாம்
சுடுசொல் வீசினால்
அமைதி காக்கலாம்

சந்தேகத்தில் உமிழ்ந்தால்
அணைத்து கொள்வது தான் சரி
அக்னி பகவானே நீயே துணை
எத்தனை முறை தான்
சந்தேக தீயில் குளிப்பது

இன்னுமொருமுறை
என்னை சந்தேகப்பட்டால்
அக்னிபகவானே நீயே
என்னை அணைத்துகொள்

என்னை இழந்து
தன்னை உணரட்டும்
அவர் தவறுகளே
அவரை திருத்தட்டும்...

புன்னகை பொன்நகை

பொன்நகை அணிந்து புன்னகைப்பார் இல்லை
புன்னகை மட்டுமே அணிந்து ஜொலிப்பார் இல்லை
பொன்நகை இட்டு புன்னகை முகமூடி அணிந்து
செயற்கையாய் உலாவரும் உலகத்தில்
புன்னகை மட்டுமே போதுமென
பெண்டீர் முடிவெடுத்துவிட்டால்
பொன்நகையின் தேவை என்றும் இருக்காதே...
புன்னகை என்றுமே ஜொலிக்குமே....

காக்கவிடாதே கண்ணா...

வரம் ஒன்று தந்து விடு கண்ணா
குறையில்லா மனம் ஒன்று
தந்து விடு எனக்கு கண்ணா
குறைகள் எல்லாம் நீ
நிறைகளாக்கி விடு கண்ணா
கண்டதும் பொங்கி பெருகும்
அன்பை வாரி தந்துவிடு கண்ணா
காணாத போதிலும் உன் அழியா
அழகு புன்னகையை அனுதினமும்
நினைத்து மகிழ்ந்திட
வரம் ஒன்று தந்துவிடு கண்ணா.....
வந்தவரெல்லாம் உன்னை நினைத்தனரோ
வந்து உன்னை துதித்தனரோ
அன்பால் உன்னை நிறைத்தனரோ
வாராது வந்த உன்னை
அள்ளி அணைத்தனரோ
போற்றி பாடினரோ
மறையாமல் மறைந்து
காத்துவிடு கண்ணா.....
இனியும் என்னை காக்கவிடாதே கண்ணா....

நல்லது நடக்கும் என்றாவது என்று...

காத்திருந்து கையணைத்து
காதலித்து கைவிட்டாலும்
திருமணம் என்று இணைந்து
வேண்டாமென ஓடி போனாலும்
பிள்ளையில்லா மலடி என்று
மனதை கொல்லும் வார்த்தைகள்
எத்தனை உமிழ்ந்தாலும்
நெருப்பில் இட்டு துடிக்க வைத்தாலும்
நிழலை நம்பி ஒப்படைத்து நிஜத்தில்
கொடுமையான வாழ்க்கை கிடைத்தாலும்
அன்பு கொண்டு காத்திருக்கவேண்டும்
நல்லது நடக்கும் என்றாவது என்று....

வாக்கினிலே இனிமை வேண்டும்....

மற்றவர் வார்த்தையால் காயப்படுத்தினாலும்
கணவனின் சுடு சொல் தாங்கும்போதும்
தவறி நம் காலை யாராவது மிதித்தாலும்
பிள்ளைகள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும்
கோள்மூட்டி நம்மை மாட்டி விட்டாலும்
கையிலிருப்பதை பிடுங்கி தெருவில் தள்ளினாலும்
செய்யும் நல்லதை யாராவது தடுத்தாலும்
பின்னிருந்து இழுத்து பிச்சை கேட்டாலும்
முதியோர் இல்லமே கதியென போனாலும்
வாக்கினிலே இனிமை மட்டுமே வேண்டும்....

மனதில் உறுதி வேண்டும்....

கோழை என்று கூறி முதுகில் குத்தினாலும்
உன்னால் முடியாது என்று சலித்தாலும்
சலிக்காது உன் வெற்றியை தடை செய்தாலும்
தடையில்லாது தோல்விகளை சுமந்தாலும்
துன்பங்கள் உன்னை எழவிடாது அழுத்தினாலும்
ஏழ்மை உன்னை ஓயாது விரட்டினாலும்
முடியாது முடியாது என்று முத்திரை குத்தினாலும்
எதையும் என்னால் சாதிக்க முடியும்
என்ற வெ(ற்)றியோடு முன்னுக்கு வர
மனதில் உறுதி வேண்டும்.....

நினைவு நல்லது வேண்டும்.....

அடுத்தவர் நம்மை இகழ்ந்தாலும்
நம்மை என்றும் புறம் கூறினாலும்
தான் செய்த தவறை அசறாமல்
நம் மீது பழியாக விழுந்தாலும்
நல்லதே நினைத்து உதவி செய்து
நமக்கே கெடுதலாக முடிந்தாலும்
அடுத்தவர் பசி அறிந்து அவருக்கு
அன்போடு உணவிடும்போதும்
கை நீட்டி உதவி கேட்டு வரும்போது
செய்ய மனமிருந்து செய்தாலும்
செய்ய மனமில்லாது போனாலும்
வீண்பழியை சுமந்தாலும்
நம்மை பற்றி கலகம் மூட்டினாலும்
நம்மை வேண்டாமென ஒதுக்கினாலும்
நம்மை மறுத்து வெறுத்தாலும்
நினைவு நல்லதே வேண்டும் என்றும்.....

கனவு மெய்ப்பட வேண்டும்

எந்தன் கனவு மெய்ப்பட வேண்டும்
அதற்கு உறக்கம் மிகுதியாக வேண்டும்
உறக்கத்தில் சாய்ந்து கொள்ள அடுத்து
என் கணவனின் தோள் வேண்டும்
குறட்டை நன்றாக வரவேண்டும்
அந்த சத்தத்தில் அடுத்து இருப்பவர்
அலறி ஓட வேண்டும்
ஆயின் என் உறக்கம் கலையவேண்டாம்
கலைந்தால் கனவு எப்படி காண்பது
பின் எப்படி கனவு மெய்ப்படுவது?.....

ரோட்டோர வாழ்க்கை.....

இருளை ஒளியாக்கி
வாழ்வை வளமாக்கி
நோக்கும் திசையெங்கும்
மயக்கும் நந்தவனமாகி
பூத்து குலுங்கும் புஷ்பவனமாகி
காண்போர் மயங்கி
கண்ட இடமே சொர்க்கமென
தென்றல் தாலாட்ட
சுகமான உறக்கமாகி
கண் சொக்கி கண்ணயறும் நேரம்
எந்திரிடி இன்னும் என்ன தூக்கம்
அம்மாவின் காட்டு கத்தலில்
பரபரவென கண்விழித்தால்
ரோட்டோரம் ஆட்டோ இரைச்சல்
ஆப்பக்கடை வைத்துள்ள
அம்மாவின் அன்பு கூச்சல்
ரோட்டோர வாழ்க்கை
சுகமில்லை என்று சொன்னது யார்
உறங்கி விட்டால் எல்லாருமே
தேவர்களாக கனவு கண்டு மகிழலாமே
நன்றாய் படித்து
அதிக மதிப்பெண் பெற்று
மாநிலம் போற்றும் மாணக்கனாய்
தாயின் ஆசிர்வாதத்தில் வெற்றி பெற்று
நானும் சாதிப்பேன் என்றாவது ஓர் நாள்
ரோட்டோர வாழ்க்கை இல்லை அப்போது
ஒண்டிக்கொள்ள சொந்தமாய் ஒரு குடிசை
எங்களுக்கும் கிடைக்குமே......

வரமாட்டாயா கோபம் தணிந்து?

நீ இல்லாத வாழ்க்கை
இயந்திரமாய் போகுமே
என்னையே வெறுக்க தோணுமே
பார்ப்பவரை எல்லாம் அடிக்க ஓங்குமே
புரியாத சிறு கோபம்
உரிமையில்லா யாரை தொட்டேன்
உரிமையோடு உன்னை அடித்தேன்
அடித்தால் அன்பு மறைந்து விடுமா
வெளியில் அலைந்து திரிந்து
வேதனையோடு உள்ளே நுழைந்து
உன் முகம் பார்க்க சிரிப்பெங்கே
ஒளித்தாயோ உன் சிரிப்பை
கோபம் கண்ட என் முகத்தில்
அன்பும் மறைந்து நோக்கியதை
காண மறந்தாயோ மனைவியே
கோபம் கொண்ட குணத்தில்
அன்பும் உண்டு கண்ணே
விளையாட்டு கோபத்தில்
படி இறங்கி அம்மா வீடு போனாயே
என்னை பற்றி யோசித்தாயா
உன் முந்தானை வாசமில்லாது
எனக்கு உறக்கம் வருமா
வந்துவிடேன் மனைவியே
என் கோபம் தணிந்து
குளிர்ந்தே போனது
குளிரோ என்னை வாட்டுகிறது
வரமாட்டாயா கோபம் தணிந்து?

உறவுகள் உன்னை வெறுத்தப்போது....

வெறுக்காத உறவுகளும் இல்லை
அன்பாய் இருந்த சரித்திரமும் இல்லை
உறவுகள் உன்னை வெறுத்தாலும்
உன்அன்பு வெறுக்காதே யாரையுமே
உண்மை தானே நண்பனே?
இனிய் சொற்களால் இதமாய்
ஒத்தடம் கொடுத்தபோதும்
உன்னை தீண்டாத உறவுக்காக
அழுது தீர்க்காதே
உறவுகள் தான் உறவாய் இருக்கணுமா
உயிராய் இருப்பவர் உறவாய்
இருப்பதில் தவறேது?
வேண்டாத உறவுக்காக
காத்திருந்து சோர்ந்து போகாதே
உறவாய் இருப்பேன் உயிராய் இருப்பேன்
உன் இறுதி மூச்சு வரை உன்னை
அன்பாய் காப்பேன் என்றுரைக்கும்
உன் அன்பு மனைவியின் உறவு
உனக்கு கிடைத்தது பார்த்தாயா?
உறவுகள் உன்னை வெறுத்தபோது
உன்னை உயிர்ப்பித்தது இது தானே....
ஏற்றுக்கொள் இல்லாளின் அன்பை
பரிபூரண உறவு தந்த உரிமையோடு....

கோபம் பாபம் சர்வநாசம்...

கோபம் பாபம் சர்வநாசம்
சத்ருக்களை உண்டாக்கி
புத்தி யோசித்து சொல்லுமுன்
நாக்கு முந்திவிடும்
நெருப்பை உமிழ்ந்துவிடும்
மனதை தைக்கும் சொற்களை
அனாயசமாக வீசி விடும்
கைகள் மூளையின்
கட்டுப்பாட்டுக்குள்
அடங்காமல் ஓங்கி அறைந்துவிடும்
வெட்டி சாய்த்துவிடும்
அன்பை முறித்துவிடும்
அருகாமை விலக்கியும்
சொந்தங்களை விலக்கி
உறவுகளை வெறுத்தும்
நட்பை கொன்றும்
அம்மையப்பனை கேள்வி கேட்கும்
வார்த்தைகள் தடித்து
விரோதத்தை வளர்க்கும்
புன்னகை மறந்து
சிநேகம் தொலைந்து
கண்டாலும் முகம் திருப்பி
மனம் வருந்த வைக்கும்
கோபம் பாபம்
சர்வநாசம்
வேண்டாம் கோபம்
வீசிவிடு தூரம்
கோபத்தை விலக்கி
வந்துவிடு என்னிடம்
அன்புடன் கைக்கோர்க்க...

விழி பேசும் மௌனமொழி....

வாய்மொழி அது பேசும்மொழி
பிள்ளை மொழி அது தேன்மொழி
உந்தன் மொழி அது காதல்மொழி
காதல் சிறப்பித்த அன்பு மொழி
அன்பில் விளைந்த ஆசை மொழி
இன்பத்தில் அணைத்த கனிமொழி
காதல்வலையில் விழவைத்த மொழி
இத்தனை மொழியும் பேசும்
உன் விழி அது எந்த மொழி?
விழியது உரைக்கும் மௌனமொழி...

என்ன தவம் செய்தனை?

மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி
சந்தனம் மணக்க உடலில் பூசி
மேனி மினுமினுக்க கஸ்தூரி மஞ்சளும்
புருவம் வளர தேங்காய் எண்ணையும்
உதடு சிவக்க வெண்ணையும் தடவி
நீர்திவலைகள் வைரமாய் சிதற
கண்மணீ என்ற குரலில்
அரைகுறை குளியலில்
துவாலையை சுற்றிக்கொண்டு
கணவன் முன்பு நின்றால்
கண்சிமிட்டாமல்
பார்ப்பதை கண்டு
வெட்கி கோணி
தலை குனிந்து
கால்விரலில் கோலம் போட
ம்ம் இன்னும் எத்தனை நேரம்
இப்படி ஈரத்தோடு நிற்பாய்
சென்று உடுத்திக்கொண்டு வா
பிள்ளை தத்தெடுக்க
இன்று போகிறோம்
கருணை இல்லத்திற்கு.....
அன்பு கணவனின்
கருணை மனதை
என்னவென்று சொல்வது
பிள்ளையில்லா மலடு
உலகம் குத்திய முத்திரையை
தத்தெடுத்து துடைக்கும்
இந்த கணவன் அமைய
என்ன தவம் செய்தேன்?

நிம்மதி உறக்கம் கல்லறையிலும் இல்லையே..

என்னை புதைத்து
என் நினைவுகளையும் புதைத்து
என் காதலையும் சேர்த்தே
புதைத்து விட்டாயோ காதலியே
என் கல்லறையில்.....:(

என் வாழ்வும் சாவும் காதலியே
உன் கைகளில் என்றாகிவிட்டதே
காதலை பூப்பூக்க வைத்த என் நெஞ்சில்
நெருப்பு பற்ற வைக்க முடிந்ததே
எப்படி காதலியே

உன் காதல் பொய்யானதே
என் அன்பு மெய்யானதே
மனம் வேண்டாம்
பணம் மட்டும் போதுமென
என்னை தவிக்க விட்டாயே

கல்லறையில் கூட
என்னால் உறங்க முடியவில்லை
உன் நினைவுகள்
என்னை படுத்துகிறதே
நீ மட்டும் எப்படி நிம்மதியாய்
உறங்கி கொண்டிருக்கிறாய்
சுகமான மெத்தையில்?

இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானை பிரித்து....

இந்தியாவில் பிறந்து
இந்தியாவில் இருந்து
பாகிஸ்தானை பிரித்து
மதம் பிடித்து ஆடும்
மதவெறி பிடித்த
மடையர்களே
உங்கள் துர்போதனை
உங்கள் பிள்ளைகளுக்கு
போதிப்பதேன்
இந்தியாவின் ஒரு அங்கமாக
இருந்தவர் தானே நீங்களும்
திடிரென பகைவராகிவிட்டனரோ
எத்தனை நீங்கள் வதைத்தாலும்
உங்களை வதம் செய்ய
நாங்கள் அவதாரங்கள்
எதுவும் எடுக்கவில்லை
அன்பை தவிர வேறு
ஆயுதமும் பயன்படுத்தவில்லை
உங்கள் பிள்ளைகளுக்கு
இருதய நோயென்றாலும்
இந்திய மருத்தவரிடம்
ஓடி வருகிறீரே
அன்பை கொட்டி
மருத்துவம் செய்து
மனிதாபிமானமுள்ள
இதயத்தை பொருத்தும்
எங்கள் நாட்டுக்கும்
எங்கள் அன்புக்கும்
நீங்கள் தான்
வைக்கவேண்டும்
ஒரு சலாம்.....

உறவு தந்து உறவுக்கு பெயரும் தந்து....

நான் அன்பை மட்டுமே பகிர்ந்தேன்
நீ ஏன் உன் உயிரை எனக்கு தருகிறாய்
உறவு சொல்லி அழைக்கிறாய்

காணாமல் துடிக்கிறாய்
கண்ட பின் கண்ணீர்விடுகிறாய்
கேட்டால் உன்னை கண்டதில்
கண்களில் மழை பெய்கிறது என்கிறாய்
சந்தோஷத்திலும் அழுது தீர்க்கிறாய்

என்ன தான் செய்ய போகிறேன்
உன் நட்பு எனக்கு கிடைக்க
ஏதேனும் நல்லது இந்த ஜென்மத்தில்
செய்த ஞாபகமும் இல்லை எனக்கு

பதறி துடிப்பதேன் நான் அவஸ்தைப்பட்டால்
என்ன உறவாய் இருந்தோம் முற்பிறவியில்
அன்பாய் பிணைந்து
பாசத்தோடு இணைந்து
உறவுக்கு பெயரும் கொடுத்து
இன்னும் என்னென்னவோ

சோகங்களை இத்தனை சுமக்காதே
இறக்கி வைக்க ஆள் தேடாதே
கண்முன்னே நிற்கிறேன் பார்
மெதுவே இறக்கி வை என்னிடம்

நானும் துடைக்கிறேன்
உன் கண்ணீரையும் முடிந்தால்
உன் சோகத்தையும் முழுதாக

சோகமும் சுகம் தான் என்று
சோகப்பாட்டு பாடாதே
சந்தோஷக்கூச்சலில்
உன்னையும் சேர்த்துக்கொள்கிறேன்

கரைந்து விடட்டும் உன் சோகங்கள்
மறைந்து விடட்டும் உன் ப்ரச்சனைகள்
கைக்குள் பொத்தி கொள்ள முடியவில்லை
அதனால் மனதுள் பொத்தி வைக்கிறேன்
உன் நினைவுகள் என்னும் பொக்கிஷத்தை....

சந்தோஷம் உன்னிடமே நண்பனே....

சிரிப்பும் சுறுசுறுப்பும் போயே போச்சு
இப்படி பேசினால் சரியாச்சா?
ஆரோக்கியம் குறைந்தால்
சந்தோஷமுமா மறையும்

ப்ரச்சனைகள் தலை தூக்கினால்
சந்தோஷம் காணாம போயிருமா
வறுமையில் சந்தோஷமாக இருந்தேன்
பணம் வந்தது நிம்மதி சந்தோஷம்
ஒன்றாக கொள்ளை போய் விட்டது
இப்படி சொன்னால் எப்படி நண்பா?

உன் சந்தோஷத்தை நிர்ணயிப்பது
பணமா? நட்பா? உறவா?
எதுவுமே இல்லை அன்பு நண்பனே

சந்தோஷமும் துக்கமும்
கோபமும் வெறுப்பும்
இரக்கமும் அருவெறுப்பும்
எல்லாமே நம் மனதை பொறுத்தது

நண்பா மனதை சந்தோஷமாக
அன்பாக வைத்துக்கொள்வது
உன் கையில் மட்டுமே

இதை நீ யாரிடமும்
கேட்கவும் முடியாது
பெறவும் முடியாது...

இன்பமும் துன்பமும்
அவரவர் மனதிலே நண்பா....
இன்பத்தில் பொங்கி
துன்பத்தில் மூழ்காதே
அவசரத்தில் முடிவெடுத்து
அவஸ்தை படாதே

நின்று நிதானி மனமே
என்று நீ கட்டளையிடு நண்பா
உன் சொல்படி கேட்க
உன் மனதுக்கு கட்டளையிடு

யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....

வேஷம் போடுவதெல்லாம் வேஷம்

கண்டிப்பான தந்தை வேஷம்
அலுவலகத்திலோ கடுமையான
முதலாளி வேஷம்
மனைவிக்கோ அன்பான கணவன் வேஷம்
வேஷங்கள் படங்களில் ஏற்று
நடித்து சலித்து இதோ
உண்மை முகத்துடன்
உறவான மனைவியுடன்
பிறந்த குழந்தையுடன்
குனிந்து முத்தமிட
டேக் டூ ஆக்ஷன்
என்று சத்தம் கேட்க
காத்திருக்கிறேன்
வேஷம் என்று கலையும்?
நான் நானாக என்று வாழ்வேன்
குடும்பத்தில் ஒரு அங்கமாக
மனைவிக்கு கணவனாக
என் குழந்தைக்கு தந்தையாக
என்று வேஷம் களைவேன்?
உழைத்து வேஷமிட்டு சலித்து
கண்கள் கீழே கருவளையம்
என் பிள்ளைக்கு பிள்ளை பிறந்தும்
இன்னும் நான் கதாநாயகனாக
என்று கலையும் என் வேஷம்
சண்டையிட தெம்பில்லையென
எனக்காக மற்றொருவன்
என் வேஷமிட்டு இறக்கும்
இந்த அவலம் என்று தீரும்
வேஷமிட்டது போதும் இனி
எனக்கு துணையாக வாழ்க்கையில்
கணவன் வேஷமிட்டு
இனியாவது இருங்களேன்
மனைவியின்
சுருக்கம் நிறைந்த
ஏக்க முகம் கண்ணீருடன்
என் கண்முன்
ஸ்டார்ட் ஆக்ஷன்
கண்ணே என்னை தொலைத்தேன்
மீட்பாயா என்னை உன்னிடமிருந்து.....

திருமதியாக்கி விடேண்டா...

பக்கங்கள் நீள்கிறது
மனமோ அலைகிறது
உன்னை பார்க்க துடிக்கிறது
கடிதங்கள் பல எழுதுகிறது
நகம் கடித்து குதறுகிறது
கனவில் உன் முகம்
காணும்போதெல்லாம் உன்
நினைவுகள் என்னை கொல்கிறது
எங்கே என்ன செய்கிறாயோ
மாலையிட வருவாயோ
வழி மாறி போவாயோ
என்று கலங்கி தவிக்கிறது
காதலில் விழுந்து
தணலில் இட்டது போல
மனம் இன்னும் துடிக்கிறது
ஒன்றான இருமனங்கள்
இணைவது திருமணத்தில்
வந்து விடேன் காதலா....
கடிதம் எழுதி எழுதி
ஓய்ந்து போன கைகள்
ஓய்ந்து போகாத எண்ணங்கள்...
மனங்கள் இணைந்து
எண்ணங்களும் இணைந்து
என் கடிதங்கள் கிடைத்து
வேகம் வந்து என்னை உன்
திருமதியாக்கி விடேண்டா.....

அம்மா....

நான் கண்ட கனவிலும் நீ
என் கற்பனையில் மிதப்பதும் நீ
காணும் பொருளனைத்திலும் நீ
என் நினைவிலும் நீ
என் மதியிலும் நீ
என் சொல்லும் நீ
என் எழுத்தின் வடிவமும் நீ
நான் உள்வாங்கி விடும் மூச்சும் நீ
என் உயிரும் நீ உணர்வும் நீ
உயிர்மூச்சு இறுதியில் என்
கூட்டை விட்டு பிரியும் போதும்
ஓங்காரமாய் கதறி உச்சரித்து பிரியும்
அம்மா அம்மா என் அம்மா நீ என்று....

உலகத்தின் முதல் காதல்....

இன்றைய மனிதர்களின்
காலடி தடங்களால்
சிதைக்கப்படாத
வனாந்திரத்தில்
தானே தோன்றி
தானே வளர்ந்து
தனிமையில் நடமாடி
களங்கம் இல்லாமல்
மறைந்து மறைக்காமல்
வாழ்ந்தாலும்
காதல் மட்டும் மனதில்
புகுந்ததெப்போது?
ஏவாள் அவனை
நெருங்கியது எப்போது
ஆதாம் ஏவாளை நினைத்து
காதல் கடிதங்கள் வரைந்தானா?
காதல் மட்டும் பொதுவானதோ
பிறந்த முதல் மனிதனுக்கு
வந்த காதலில்
இதோ உலகம் பரந்து விரிந்து
காதல்மணம் பரப்பிக்கொண்டிருக்கிறதோ?

மோகத்தை கொன்று விடு

மோகத்தை கொன்று விடு
இல்லையெனில் உன்னையே
நீ அழித்து விடு
உணர்ச்சிகளை அடக்கு - அதற்கு
நீ அடிமையாகாதே
பெண் ஜென்மமென நீ பிறந்தது
காம சுகத்தில் மிதக்க அல்ல
பாசம் தனிடத்தில் காமம்
தோற்று விடுமடி பெண்ணே
வலியது வலியது அன்பெனும் ஊற்று
கொடியது கொடியது காமமெனும் பேய்
வற்றாத ஊற்றென அன்பிருக்க
காமத்தை ஏனடி நீ தேடுகிறாய்
மனதில் கொழுந்து விட்டெரியும்
காமத்தீயை குளிர்ந்த தென்றலாய் மாற்றி விடு
காமம் காதலாகி கசிந்துருகி
கண்ணிராய் வெளியேற்றி விடு...

நட்பே உன் வயதென்ன

நட்புக்கு வயதுண்டா
வயது முதிர்ந்து
மூப்பு தொடர்ந்து
ஊன்று கோலுடன்
கண்பார்வை மங்கி
காது மந்தமாகி
செரிக்க முடியாத உணவை
என் தோழனே
உன் நினைவுகள்
செரிக்கிறதே....

என்னை காண வருவாயா
முதிர்ந்த கிழவியாயினும்
உன் தோழியல்லவா நான்
சண்டையிட்ட நாட்கள்
கோபமுடன் முகம் திருப்பி
அமரும்போதெல்லாம்
என்னை வெறுப்பேற்றியே
சிரிக்க வைப்பாயே நண்பா

என் பேரப்பிள்ளைகளுக்கும்
நண்பர்கள் உண்டுடா
நான் கொண்ட நட்பை
வாய் பிளந்து பார்த்தனர்
எங்கே நீயென கேட்டனர்

எங்கே நண்பா நீ
இந்த தோழியின் நினைவு
உனக்கும் வருவதுண்டா?
என்னை போல நீயும்
நம் நட்பு கொண்ட நாட்களை
அசை போடுகிறாயா
உலகை விட்டு மறையுமுன்
ஒரே ஒரு முறை
என் கண்பார்வை மங்கி போகுமுன்
ஒரே ஒரு முறை
உன்னை பார்க்கும் சந்தர்ப்பம்
மீண்டும் வருமா நண்பா?

எனக்கு ஏன் இப்படி?

காலண்டரின் தாள்கள் கிழிக்க
என் நாட்களும் கிழிக்கப்படுகிறதே
பிறந்தவர் என்றாவது இறப்பார் தான்
ஆனால் என் சாவு ஏன் இப்படி?

வரதட்சனை தந்தார்
வண்டி வாங்கி தந்தார்
நகையாக இழைத்தார்
என் பெற்றோர்

பதிலுக்கு என் கணவர்
எனக்கு தந்ததெல்லாம்
வயிற்றில் குழந்தையும்
உயிர்கொல்லி எய்ட்ஸும்...:(

தவறு செய்த கணவனுக்கு
தண்டனை மரணம் கிடைத்தது
தவறு செய்யாத எனக்கு ஏன்?
வயிற்றில் பூத்திருக்கும்
பிஞ்சு குழந்தைக்கு ஏன்
தடுக்க முடியாதா எய்ட்ஸை? :(

நீ மட்டும் என்னுடையவளானால்....

மௌனங்களை கூட மொழிபெயர்ப்பேன்
நீ மட்டும் பேசினால்
வாழ்க்கையின் வெறுமைகளுக்கு
வண்ணம் தீட்டுவேன்
நீ மட்டும் என் தூரிகையானால்
என் இதயம் கூட பறக்கும்
சந்தோஷ சிறகு கொண்டு
நீ மட்டும் உடனிருந்தால்
காற்றிலேயே கவிதை எழுதுவேன்
நீ மட்டும் என் உணர்வானால்
உயிர்களை வருத்தாமல்
உள்ளங்களை மட்டுமே வாங்குவேன்
நீ மட்டும் என் உயிரானால்
பூக்கள் இல்லாமலே
மணத்தை நுகர்வேன்
உன் நினைவு என் மனதில் பூத்தால்
காணும் கனவெல்லாம்
நிஜமாக்கி கொள்வேன்
நீ என் மதியானால்
கானல் நீரை கூட
பார்த்து மகிழ்வேன்
நீ என் நினைவானால்
காலங்களை கடந்தும்
காத்திருப்பேன்
உன் வரவு மட்டும் நிஜமானால்
உன்னை என்னுடையதாக்கி கொள்வேன்
நீ மட்டும் என் வாழ்வானால்
இறந்தாலும் பிரியாது
உன்னுடனே சங்கமிப்பேன்
நீ மட்டும் என்னுடையவளானால்....

என் தவிப்பு உன்னை என்னிடம்....

கனவு காண்பது சுகம்
கற்பனையில் சஞ்சரிப்பது இதம்
கண்களில் நீர் மறைக்க
உன்னை நினைத்து
அழுது கொண்டிருக்க
என் தவிப்பு உன்னை
அழைத்து வருமோ என்னிடம்....

எங்கே சென்றாய்...

நினைவுகளை மட்டும் எனக்கு
சொந்தமாக்கிவிட்டு
எங்கே சென்றாய்
என்னை தவிக்கவிட்டு...

காதல் படுத்தும் பாடு....

உண்மையை நேசிப்பவன் நீ
அழகை ரசிப்பவன் நீ
உள்ளத்தை கொள்ளை கொள்வதும் நீ
ரசனையை உள்ளடக்குவதும் நீ
உடலை தீண்டாது மனதை வெல்பவன் நீ
உயிராய் இருப்பவன் நீ
உண்மையை உரைப்பவன் நீ
காண்போரையெல்லாம்
உனக்கே ரசிகனாக்குவது நீ
இத்தனை செய்த நீ
இப்படி செய்ததேனடா?
காதலை உள்புகுத்தி
மனதை கொல்வது ஏனடா....

அழகு.....

அழகு என்ற மூன்றெழுத்திற்காய்
தலையணை நனைத்த நாட்கள் பல
என் தங்கையும் அழகு
என் அம்மையப்பனும் அழகு
என் தோழியரும் அழகு
பக்கத்து வீட்டு அக்காவும் அழகு
நான் மட்டும் ஏனிப்படி அழகில்லாமல்
விகார உதடுகளும் குச்சி உருவமும்....
அடுத்தவரின் அழுக்கு எண்ணங்களுக்காக
என்னை வருத்திக்கொண்டதும் உண்டு
பின் தானறிந்தேன் அதன் சூட்சமத்தை
ப்ரம்மன் என்னை படைத்ததின் அர்த்தத்தை
அழகினை ரசிப்பவனின் அந்தரங்கத்தில்
ஒருமுறையேனும் பாஞ்சாலியாவேன்
அதனால் இப்போது அழகின்மையால்
அழுவதே இல்லை நான்..
அழகில்லை என்பவரின் வார்த்தையையும்
அலட்சியபடுத்துகிறேன் ஆனந்தத்தோடும்
அலட்சியமாய் உதட்டை சுழிக்கும் சிரிப்போடும்....

சுகமான சுமையான நினைவுகள்

நான் செல்லும் இடமெல்லாம்
உன் நினைவுகள் என்னோடு
சஞ்சரிப்பது ஏனடா?
என் மனதில் நீ இருப்பதனாலா?
நான் முடிந்து விட்டால்
என் முடிவை என் நினைவுகள்
உனக்கு தகவல் தெரிவிக்குமாடா?
உன் நினைவுகளை நான் சுமப்பது போல்
என் நினைவுகளை நீ சுமக்கிறாயா
விட்டு பிரிய மனமில்லாமல்
உன்னை விட்டு சென்று விட்டால்
உயிர் முச்சு பிரிந்து விட்டால்
என்னுள் உறங்கும் உன் நினைவுகள்
உயிர் பெற்று எழுமா?
காற்றோடு கலந்து உன்னிடம் சேருமா
சேர்ந்த நினைவுகள் நலம் விசாரிக்குமா
என் பிரிவு உன்னை வருத்தும்போதெல்லாம்
உன் கண்ணீரை துடைக்குமா?
விளையாட்டு வினையாகவேண்டாம்
உன்னை நான் பிரியவும் வேண்டாம்
நம் நினைவுகள் என்றும் நம்மோடு
இடம் மாறி உன்னோடது என்னோடு
என் நினைவுகள் உன்னோடு
வாழ்வோம் நினைவுகளை சுமந்து
பிரிவு உடலுக்கே ஆன்மாவுக்கில்லையே
ஆதலால் கடப்போம் நாட்களை
நினைவுகள் சுமந்த சுகமான சுமையோடு.....

காதல் வாழ்க்கையாகுமா?

காதலில் தோன்றி
அன்பில் திளைத்து
பாசத்தில் மூழ்கி
முத்துக்களை பெற்றெடுத்தோமே
காதலல்லாது வேறென்னவாம்.....

பசித்தால் தானும் பகிர்ந்துண்டு
வலித்தால் தானும் துடித்து தவித்து
மரணித்தால் அழுது புரண்டு
உண்டானால் மகிழ்ச்சியில் திளைத்து
காதல் அல்லாது வேறென்னவாம்

உலகமே காதலில் தோன்றியது
காதல் இல்லாத உயிரினமும் இல்லை
மிருகங்களுக்கும் காதல் உண்டு
பட்சிகளுக்கும் காதல் உண்டு
மனிதருக்கு காதல் இல்லாமல்
வாழ்க்கையே இல்லை....

குழந்தையில் பொம்மை மேல் காதல்
பள்ளி வயதில் புத்தகத்தின் மேல் காதல்
பருவ வயதிலோ முதல் காதல்
திருமணத்தின் பின்னோ உண்மை காதல்
முதிர்ந்த பின் துணையின் மேல் காதல்
மரணம் நெருங்க இறைவன் மேல் காதல்

உலகமே காதலின் பிடியில்
இதில் உண்மை காதலென்ன
உடையாத காதலென்ன
பிரியாத காதலென்ன
பிடிபடாத காதலென்ன
பார்க்காத காதலென்ன

பெண்ணை பிடிக்க காதலை முயற்சிக்கிறான்
பிடித்த பின்னோ காதலை முறிக்கிறான் தேவன்
முறித்த காதலின் வலியில் துடிக்கிறான் காதலன்
காதலனை காக்க வருகிறாள் மற்றொருத்தி மனைவியாக

காதல் வார்த்தை மட்டுமல்ல
காதல் வாழ்க்கை கூட
காதல் இல்லா கவிதையும் இல்லை
காதல் இல்லா வாழ்க்கையும் இல்லை

தடையில்லா வாழ்க்கை பயணம்

முடிவில்லா பயணம் தடையில்லா பயணம்
நல்லது நாலும் செய்யும் மனமும்
உதவி என்றும் செய்யும் குணமும்
இறந்தும் செய்யும் உடலுறுப்பு தானமும்
மற்றோரை என்றும் வாழவைக்குமே
தடையில்லா வாழ்க்கை பயணமே
தானம் பெற்றோர் மனதில் நாமும்
என்றும் இறையாய் நிலைப்போமே....

ஏனம்மா அனுப்பினாய் தனியே....

துணை வா என்றேன்
இருட்டிலும் துணை வந்தாய்
துன்பத்திலும் என்னுடன் இருந்தாய்
என் கண்ணீர் காண சகிக்கமாட்டாய்
பின் ஏனம்மா எனக்கு
திருமணம் செய்து வைத்தாய்
இத்தனை தூரம் ஏனம்மா அனுப்பிவைத்தாய்
வேரோடு பிடுங்கி தெரியாதவர்
வீட்டில் என்னை விட்டுவிட்டாயே
பயம்மாக இருக்கிறது அம்மா
என்னை தனியாக அனுப்பினாயே
வரதட்சனை போதவில்லையாம்
போட்ட நகைகள் போதவில்லையாம்
என்னை எரித்து விட்டார்கள் அம்மா
என் உடம்பு எரிகிறதும்மா
அம்மா என்னை உன் மடியில்
தலை சாய்த்துக்கொள் அம்மா
ஒரே உறக்கம் அதிகமாகிறது அம்மா
தாகம் எடுக்கிறது அம்மா
மடியில் சாய்த்துக்கொள்ளேன் அம்மா.....

வெறுப்பது ஏனோ...

ஆன்மாவை உள்ளடக்கி
உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
வாரிசை சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்து
பரவசத்தோடு எட்டி பார்த்து
மாமி அலுத்து கொள்கிறாள்
சே இதுவும் பொண்ணு தானா
கணவனோ வந்தும் பார்க்கவில்லை
பெண்ணில்லாத உலகமும் உண்டோ
பெண்னில்லாத தெய்வமும் உண்டோ
மனிதரே பெண்குழந்தை மட்டும்
வெறுப்பது ஏனோ?

சொல்ல முடியாமல்.....

என் பார்வை
உனை தழுவும்போதும்
வார்த்தை வெளிவராமல்
என் காதலை சொல்ல முடியாமல்
உதடுகளை கடிக்கும்போதும்
சிதறும் ஒரே ஒரு
துளி ரத்தமும்
உன்னை தான் காதலிப்பேன்
என்று அடம்பிடிப்பது ஏனடா?

தாய்மை....

எத்தனை முறை சண்டையிட்டாலும்
பொறுத்து போவதும் உன் குணம்
எத்தனை முறை கோபப்பட்டாலும்
நிதானிப்பதும் உன் குணம்
எத்தனை முறை சந்தோஷித்தாலும்
புன்னகை செய்யும் உன் குணம்
நிலை தவறி போனாலும்
தாங்கி கொள்வதும் உன் குணம்
தாய்மையில் இத்தனை குணமா
அத்தனையும் எனக்கு இல்லையே
ஏனம்மா உனக்கு இத்தனை அன்பு
பெறாத பிள்ளை என் மேல்?
தத்து தானே எடுத்தாய்
உன் உயிராக என்னை ஏன் நினைக்கிறாய்
உன் முகமோ உன் குணமோ
ஒன்றும் இல்லாத என்னை
ஏனம்மா இத்தனை நேசிக்கிறாய்
தாயென்றாலே அதன் தன்மை
வந்துவிடுமா அம்மா சொல்லேன்
உன் தாய்மை என்னையும்
தாயாக்குமா அம்மா?

என் வழி தேடி....

விதைக்கப்பட்டேன்
விடியாத வேளையிலே
இஷ்டமில்லாமலே

கருவில் வளர்ந்தேன்
எதிர்பார்ப்புகளுடன்
ஆசைகளுடன்

எதிர்பார்ப்பு தந்த
ஏமாற்றத்தில்
வெறுக்கப்பட்டேன்

ராசிகெட்டவளாம்
விடியாமூஞ்சியாம்
எதிரே வந்ததால்
துலங்காது காரியமாம்

என் தவறு எங்கே
கண்ணீர் கோடுகள்
கன்னத்தில் காய்கிறதே
முகத்தில் தெரியுமா ராசி

அன்பிலார் உளம்
நல்லவரல்லாத இடம்
எனக்கும் வேண்டாம்
போகிறேன் என் வழி தேடி

கட்சி தொண்டு.....

ஆட்சியில் கலவரமா
எரியுங்கடா பஸ்ஸை
ஜாதிக்காரனை வெட்டிப்புட்டானா
எரியுங்கடா பஸ்ஸை
ஆளுங்கட்சியா இருந்தா
கண்டிப்பா ஜெயில் தண்டனை இல்லை
எதிர்கட்சியா இருந்தா
தண்டனையே இல்லை (அடுத்த ஆட்சியில்)
என்ன செய்தாலும்
தவித்து உயிர் விடுவது
மக்களே மூட மக்களே
நீங்கள் தானே
மறப்பது ஏனோ இதை
உயிர் இழப்பது ஏனோ
பலமுறை....
கொன்று குவிப்பதும்
செத்து மடிவதும்
யாரோ ஒருத்தரின்
சுயநலத்திற்காக மட்டுமே
குடும்பத்தை மறந்து
தன்னை கட்சியில் இழந்து
கிடைப்பது ஒன்றுமே இல்லையே..:(
வீட்டை காத்து நாட்டை காத்து
பின் செய்யுங்கடா கட்சி தொண்டு....

முயற்சி கொடுப்பது வெற்றி அல்லது அனுபவம்....

வெற்றியும் தோல்வியும் உந்தன் கைகளில்
வாழ்வின் பெரும் பகுதி உந்தன் வெற்றியில்
முயற்சியில் சிறிதே பின் தங்கினாலும்
முதல் முயற்சியில் ஒரு படி சறுக்கினாலும்
சோர்ந்து போய் உட்கார்ந்துவிடாதே

வெற்றிக்கு சின்ன இடைவெளி தராதே
முயற்சிக்கு பலன் வெற்றி இல்லையெனினும்
அனுபவத்தை கொடுத்துவிட்டு செல்கிறதே

சொல்லிலும் செயலிலும் நேர்மை
பேசும் வார்த்தையில் என்றும் இனிமை
தகிக்கும் வார்த்தைகளுக்கும் பதிலில் குளுமை
அத்தனையும் உனக்கு தருவது வெற்றியே

தூற்றுவோரை புன்னகையோடு நின்று பார்
அதுவும் உனக்கு வெற்றியே
முயற்சியில் சற்றே கலங்கினாலும்
மனம் மட்டும் தளர்ந்து விடாதே

வெற்றி கனி கையில் கிட்டினாலும் சரி
தோல்வியின் அனுபவமாக பாடம் ஆனாலும் சரி
முயற்சியை மட்டும் விடவே விடாதே
உந்தன் வெற்றிக்கு முதல் படி
என்றும் முயற்சி ஒன்று தான்

நம்பிக்கையோடு முயற்சித்து பார்
மனிதரின் மனம் உன் வசம்....
நேசத்தை கொடுத்து மனதை வசமாக்கு

யார் சாட்சி....

மாலையில் மெல்ல மறையும்
சூரியன் கிசுகிசுப்போடு
என் காதில் உரசி
உரைக்கும் வார்த்தைகள்
நான் மறைகிறேன் மெல்ல
காதலன் வருகைக்கு
காத்திருக்கும் பெண்ணே
என் பின்னே நீ
வருவதெப்போது?
காதலன் உண்மையானவனா
உன்னை அதிகம் நேசிப்பவனா
திருமணத்திற்கு இசைபவனா
உன் காதலுக்கு
மறைந்து கொண்டிருக்கும்
நான் சாட்சி
நான் மறைவதை கண்ட
நீ சாட்சி
உன்னை விட்டு அதோ
உன் காதலன்
வழி மாறி போனதற்கு
யார் சாட்சி?
காத்திருக்கும் உன்
வேதனைக்கு யார் சாட்சி?

அந்த காலம் இந்த காலம்

நம் காலமா இப்போதிருக்கும் நிலை?
பெரியவர் பேச்சு கேட்டு
அதன்படி நடந்து
இஷ்டமில்லா படிப்பும் படித்து
இஷ்டமில்லா வாழ்வும் வாழ்ந்து
இதோ பெற்றேன் நல்முத்து பிள்ளைகளை
என்னை கண்டித்து வளர்த்த
என் தாய் தந்தை போலல்லாமல்
அன்பாய் அரவணைத்தேன்
அதிக சுதந்திரம் தந்தேன்
நான் அறியாததெல்லாம்
என் பிள்ளை செய்து
என்னை அசத்தியப்போது
அசந்து நின்று பாராட்டினேன்
கொண்டாடினேன் திறமைகளை
அதிக செல்லமும் கொடுத்தேன்
பலனை அனுபவிக்கிறேன்
சிறு வார்த்தை கூட பொறுக்காமல்
என்னிடம் சொல்லாமல்
ஓடி போகிறேன் என்கிறானே
என்னை பயமுறுத்தும்
என் பிள்ளையை கண்டு
அதிர்ச்சியாய் நிற்கிறேன்
என் காலம் வேறு
என் பிள்ளையின் காலம் வேறு
பெற்றோர் பேச்சை மீறாமல்
சொல்பேச்சு கேட்டது அந்த காலம்
பிள்ளை பேச்சு மீறாமல்
பிள்ளையின் அட்டகாசத்தை கண்டு
அமைதியாய் இருக்கணும்
அது இந்த காலம்...
அறிவாய் பேசும் பிள்ளைக்கும்
என்னை போலவே
மூக்கு நுனியில் கோபம் நிற்குமா?
மெத்தப்படித்தும் அடங்கி இருந்தது
அந்த காலம்
மெத்த படித்து முன்னுச்சி முடிஒதுக்கி
காலரை தூக்கி விட்டு கொள்வது
இந்த காலம்...
அடித்து திருத்தியது அந்த காலம்
அன்பாய் அரவணைத்து
நல்லுரை கூறவேண்டும் என்பதே
இந்த காலம்
அடியை வெறுக்கும் பிள்ளைகள்
சுடுசொல் தாங்கா பிள்ளைகள்
வெறுப்பை உமிழும் பிள்ளைகள்
மூக்கு நுனியில் கோபம்
துன்பத்திலும் அசரா பிள்ளைகள்
நாமும் தான் சற்றே இளகுவோமே
அன்பாய் சொல்லி பார்ப்போமே
கேட்காமல் போவார்களா பிள்ளைகள்
நம்பிக்கையோடு முயற்ச்சிக்கிறேன்
பிள்ளைகளே இக்காலத்து பிள்ளைகளே
அன்பாய் இருந்தால் தீருமா உங்கள் கோபம்?

Tuesday, December 18, 2007

பிரிவின் வலி

காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும்
வலியை உணர்கிறேன்
சில நாட்கள் காக்க வைத்தாய்
விளையாட்டாக‌
அப்பொழுதும் அறியவில்லை
நீ என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று
பிரித்துச்சென்ற‌ காலனுக்கும்
புரியவில்லை என் மனக்கவலை....

நினைவுகள்

உன் நினைவுகள் என்னை
தின்று கொண்டிருக்கும் வரை
நான் உன்னை மறப்பதில்லை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
உன் நினைவுகள் என்னை விட்டு
விலகுவதுமில்லை....

கன்னிக்காதல்

நட்பாய் தொடங்கி
காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடை தந்தேன்
என் கன்னி காதலுக்கு....
Related Posts Plugin for WordPress, Blogger...