"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, July 28, 2013

சுவாசமாய்..... நேசம்....


என்னிடம் உனக்கு
பிடித்ததும் பிடிக்காததும் என்ன???

குறும்பாக
தலைசாய்த்து ஒற்றைக்கண் மூடி
கேட்கிறாய் என்னை...

உச்சிமுகர்ந்து என் நெற்றியில்
நீ 
முத்தமிடும்போதெல்லாம்
என் அன்னையை நினைவுப்படுத்துகிறாய்....

என் கன்னத்தில் 
நீ
கவிதை முத்திரை பதிக்கும்போதெல்லாம்
ஏக்கத்தில் ஆழ்த்திவிடுகிறாய்...

தோல்விகளில் துவளும்போதெல்லாம்
நீ
இதழ் ஒத்தடம் தந்து
என்னை உயிர்ப்பிக்கிறாய்....

என் சுவாசத்தில் முழுமையாய்
ஆக்கிரமித்து
நேசம் பகிர்கிறாய்....

இன்னும் சொல்ல நிறைய....

சொல்லி முடிக்குமுன்
உன் அணைப்பில்
நான்.....

Friday, July 26, 2013

அன்பு உள்ளங்களே சௌக்கியமா எல்லோரும்???

அன்பு உள்ளங்களே சௌக்கியமா எல்லோரும்?

வலைப்பூவில் நான் கருத்து எழுதவில்லை என்றாலும் முகநூலில் இருப்பதால் இங்கிருக்கும் பலரையும் அங்கு சந்திப்பதாலும்...  கருத்து எழுத உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று வலைப்பூவுக்கு வராமல் இருந்தேன்..

இந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது வலைப்பூ நண்பர்கள் சந்திப்பில் அன்பாய் திட்டின அன்பு உள்ளங்கள் (பேரா?? ஹுஹும் சொல்லமாட்டேன்... :)  கண்டிப்பா நான் இனிமே வலைப்பூவுக்கு வந்து எழுதறேன்னு சொன்னேன்...

நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் பண்றோம்பா என்று நிறையப்பேர் சொன்னப்பின் இன்னமும் வராமல் இருந்தால் கண்டிப்பாக அடித்தே அன்பாகத் தான் :) விடுவார்கள் என்று வந்துட்டேன்பா...

இனிமே ஒழுங்கா சமர்த்தா வரேன் இங்கும் எங்கும்......

எல்லாம் மறந்துப்போச்சு.. த.ம ஐடி பாஸ்வர்ட் உள்பட :(Related Posts Plugin for WordPress, Blogger...