"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 3, 2012

நீ மட்டுமே வேண்டும்....உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
இறுதிமூச்சிலும் உன்மடி சாய


நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

20 comments:

 1. ஆஹா... ரொம்ப நாளைக்கு அபறம் வந்தாலும் காதல் ததும்பற மனசுல நிறையற மாதிரி கவிதையோட வந்திருக்கீங்க. இறுதி மூச்சிலும் உன் மடிசாய நீ வேண்டும் என்றால்... எத்தனை பேரன்பு அது. அருமை தோழி.

  ReplyDelete
 2. //செய்தாலி said...
  ம்ம்ம் அருமை//

  அன்பு நன்றிகள் செய்தாலி கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 3. //பால கணேஷ் said...
  ஆஹா... ரொம்ப நாளைக்கு அபறம் வந்தாலும் காதல் ததும்பற மனசுல நிறையற மாதிரி கவிதையோட வந்திருக்கீங்க. இறுதி மூச்சிலும் உன் மடிசாய நீ வேண்டும் என்றால்... எத்தனை பேரன்பு அது. அருமை தோழி.//

  அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 4. இறுதி வரிகள் தங்கள் கவிதைகளில்
  "தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு
  முத்துப் பதித்ததைப்போலே "
  அருமையாக இட்ம்பிடித்துக் கொள்கின்றன
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை .....

  நீ மட்டுமே வேண்டும்.... ;)))))

  ReplyDelete
 6. //Ramani said...
  இறுதி வரிகள் தங்கள் கவிதைகளில்
  "தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு
  முத்துப் பதித்ததைப்போலே "
  அருமையாக இட்ம்பிடித்துக் கொள்கின்றன
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  இந்த கவிதை எனக்கும் மிக மிக பிடித்த கவிதை ரமணி சார்.... அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 7. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை .....

  நீ மட்டுமே வேண்டும்.... ;)))))//

  அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. //கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
  இறுதிமூச்சிலும் உன்மடி சாய//

  ஆஹா !! அருமையான வரிகள்

  அழகான காதல் கவிதை

  ReplyDelete
 9. இன்பம் துன்பம் அனைத்திலும் அவனே அல்லது அவளே வேண்டும் என்று சொல்லும் அருமையான கவிதை மஞ்சு அக்கா. ( அக்கா சொல்லலாம் தானே..? )

  ReplyDelete
 10. நீ மட்டும் வேண்டும் என்று சொல்லி நிற்பது பாசத்தின் ஒரு வகை.

  நீ மட்டுமே வேண்டும் என்பது அதனிலும் உச்சம்.

  வரிகள் சுமந்த பொருளும் அருமை. வடிப்பும் அருமை.

  ReplyDelete
 11. //angelin said...
  //கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
  இறுதிமூச்சிலும் உன்மடி சாய//

  ஆஹா !! அருமையான வரிகள்

  அழகான காதல் கவிதை//

  அன்பு நன்றிகள் அஞ்சு கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 12. //அமுதா கணேசன் said...
  இன்பம் துன்பம் அனைத்திலும் அவனே அல்லது அவளே வேண்டும் என்று சொல்லும் அருமையான கவிதை மஞ்சு அக்கா. ( அக்கா சொல்லலாம் தானே..? )//

  அன்பு வரவேற்புகள் அமுதா...
  அக்கா சொல்லலாமேப்பா.... எனக்கு உங்களை எங்கோ பார்த்த நினைவு போலிருக்கிறது... அக்காவென்று அழைப்பாங்க எனக்கு தெரிந்த ஒரு அமுதா கேட்பாங்க இங்கே...

  அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 13. //நீ மட்டும் வேண்டும் என்று சொல்லி நிற்பது பாசத்தின் ஒரு வகை.

  நீ மட்டுமே வேண்டும் என்பது அதனிலும் உச்சம்.

  வரிகள் சுமந்த பொருளும் அருமை. வடிப்பும் அருமை.//

  அட தம்பி சரியா வித்தியாசம் கண்டுப்பிடிச்சிட்டியே...

  அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 14. வாங்க மஞ்சுபாஷினி.பொறுமையாக நீளமாக கொடுக்கும் உங்கள் பீன்னூட்டம் பதிவர்களுக்கோர் பூஸ்ட்.அழகிய கவிதையுடன் வந்துள்ளீர்கள் இனி தொடருவீர்கள்தானே?

  ReplyDelete
 15. இரண்டு கவிதைகளுமே தொடர்ந்து படித்து ரசித்தேன்....

  நல்ல கவிதைகள் பகிர்வுக்கு பாராட்டுகள் சகோ.

  ReplyDelete
 16. //ஸாதிகா said...
  வாங்க மஞ்சுபாஷினி.பொறுமையாக நீளமாக கொடுக்கும் உங்கள் பின்னூட்டம் பதிவர்களுக்கோர் பூஸ்ட்.அழகிய கவிதையுடன் வந்துள்ளீர்கள் இனி தொடருவீர்கள்தானே?//

  அன்புநன்றிகள் ஸாதிகா வரவேற்புக்கு... தங்களைப்போன்றோரின் ஆசி தான் என்னை மீண்டும் வரவைத்தது... இறைவன் அருளால் உடலும் உள்ளமும் ஒத்துழைக்கும்வரை தொடர்ந்துக்கொண்டே இருப்பேன்பா...

  ReplyDelete
 17. //வெங்கட் நாகராஜ் said...
  இரண்டு கவிதைகளுமே தொடர்ந்து படித்து ரசித்தேன்....

  நல்ல கவிதைகள் பகிர்வுக்கு பாராட்டுகள் சகோ.//

  அன்பு நன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 18. அற்புதமான அழகான கவிதை.

  இறுதிமூச்சிலும் உன்மடி சாய
  நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

  மனதைக் கவ்விய காந்த வரிகள்.
  பாராட்டுக்கள் சகோதரி!

  ReplyDelete
 19. உணர்வின் வெளிப்பாடு மிக அழுத்தமாய்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...