"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, September 13, 2012

ஓருடல் ஈருயிர்....




அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வலி தாளாமல் வைஜைந்தி அலறினாள்....

வைத்திய வசதி இல்லாத இடத்தில் கிராமத்தின் குடிசையில் வைஜைந்தியின் அலறல் சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது....

மருத்துவச்சியை அழைத்துவர அடாது மழைபெய்த வானத்தை சபிக்க மனமில்லாமல் வைத்தியநாதன் குடையை எடுத்துக்கொண்டு பதட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார்....

லாந்தர்விளக்கு அடிக்கிற காற்றுக்கு அலைபாய்ந்துக்கொண்டு இருந்தது....

உயிர் போய்விடுமோ பிறக்கும் குழந்தையை காணமுடியாமல் இறந்துவிடுவேனோ என்று பயம் நெஞ்சை அப்பிக்கொண்டது வைஜந்திக்கு...

கிருஷ்ணா கிருஷ்ணா என் குழந்தை எந்த சிரமும் இல்லாமல் இந்த உலகத்தை பார்க்கும்படி அருள்புரிப்பா வலியுடன் வேண்ட ஆரம்பித்தாள் வைஜந்தி....

அவளின் வேதனையான அழுகையை பிரார்த்தனையை ராதாகிருஷ்ண படத்தில் இருந்துக்கொண்டு வாத்சல்யத்துடன் சிரித்தார் கிருஷ்ணபகவான்....

மருத்துவச்சியை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தியநாதன்....

“ வேகமா சுடுத்தண்ணியும் வெள்ளை துணி நிறைய எடுத்துக்கொடுங்க “ விரட்டினாள் மருத்துவச்சி....

அந்த கிராமத்திலேயே இந்த மருத்துவச்சி கைராசியான கிழவி என்று சொல்லிக்கொள்வார்கள்...

இதுவரை எத்தனையோ பிரசவங்கள் பார்த்திருந்தாலும் இறப்பு சதவீதம் குறைவே இந்த மருத்துவச்சியிடம்... பெண் சிசுக்களை கொல்லாத நல்ல மருத்துவச்சி....

” மெதுவா மெதுவா தலைய தூக்கும்மா....” வைஜந்தியின் தலையை தூக்கி உயரமான தலையணையில் வைத்தாள்....

” பாட்டி பாட்டி எனக்கு நல்லபடியா பிரசவம் ஆகிடும் தானே? ” மருத்துவச்சியின் கைப்பிடித்துக்கொண்டு அழுதாள்....

“ நிறை பிள்ளைத்தாய்ச்சி இப்படி அழக்கூடாது  சாமியை வேண்டிக்கோ எல்லாம் நல்லபடியா நடக்கும் ” என்று தன் பணியை தொடர்ந்தாள்.

வயிறு அமுக்க அமுக்க குழந்தையின் தலை மெல்ல வெளியே வந்தது....

குழந்தையை இழுக்க முயன்றபோது என்னவோ தடுப்பதை மருத்துவச்சி உணர்ந்தாள்...

”ஐயோ என்னது இது அசம்பாவிதம்.. குழந்தையா இது குழந்தையா ?? “ மெல்ல இழுக்க இழுக்க இரண்டு தலைகளுடன் நான்கு கைகளுடன் நான்கு கால்களுடன் முதுகு ஒட்டி கண் இமைகள் மூடியிருக்க குழந்தையை தூக்கி பார்த்தாள் மருத்துவச்சி...

மயக்கம் வருவது போலிருந்தது குழந்தைகளின் தோற்றம்....

இரட்டை குழந்தைகள் ஆனால் முதுகு ஒட்டி.....

” இது என்ன கொடுமை இறைவா ” என்று வேகமாக மருத்துவச்சி குழந்தைகளின் வயிற்றிலிருக்கும் நஞ்சை தனியாக்கினாள்... அலறி அலறி குழந்தைகளின் இந்த ரூபத்தை பார்த்து மயங்கிவிட்டாள் வைஜைந்தி....

வைத்தியநாதன் ” ஐயோ “ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்....

” தம்பி நீ உடனே உன் பொஞ்சாதியை குழந்தைகளை பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போப்பா... எனக்கு பயமா இருக்கு... “

” ஐயோ மழை இப்படி விடாம பெய்கிறதே என்ன செய்வேன் “... என்று அரற்றினார்....

” கவலைப்படாதே கடவுள் கண்டிப்பா உனக்கு துணை இருப்பார் என்று சொல்லிக்கொண்டே எலே மாயாண்டி வண்டி எடுத்தாடா.... இங்க பிள்ளை பிறந்திருக்கு இவரோட சம்சாரத்தோட உடம்பு ரொம்ப மோசமா இருக்கு.... பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போடா ” என்று மழை சத்தத்திற்கு ஈடாக இரைந்தாள் மருத்துவச்சி....

மாயாண்டி வேகமாக வண்டி எடுத்துக்கொண்டு வந்து நின்றான்....

இரு குழந்தைகளை மெல்லிய துணியால் சுற்றிக்கொண்டு மனைவியை கைத்தாங்கலாக ஒரு பக்கம் மருத்துவச்சியும் இன்னொரு பக்கம் மாயாண்டியும் பிடித்துக்கொள்ள நடக்க இயலாமல் நடந்தாள் வைஜைந்தி....ஆஸ்பத்திரிக்கு மாடுகளை முறுக்கிவிட்டு விரட்டினான்.

ஆசுபத்திரி நெருங்கியதும் வைஜைந்தியை எழுப்ப முனைந்தார் வைத்தியநாதன்... மூச்சிழுக்க மறந்தவளாய் கண்கள் நிலைக்குத்தி கிடந்தா வைஜைந்தி....

”வைஜைந்தி “ என்ற அவர் அலறல் மழையின் சத்தத்தில் அமுங்கியது....

குழந்தைகளை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் விரைந்தனர்....

வைஜைந்தியின் இறந்த உடல் வண்டியில் கிடக்க.... மாயாண்டி வண்டியிலேயே உட்கார்ந்திருந்தான்...

மனித வாழ்க்கையின் இறப்பு பிறப்பை ஒன்றாய் கண்டது போல் மரத்து உட்கார்ந்திருந்தான்.....

மருத்துவர்கள் குழு குழந்தைகளை டயக்னைஸ் செய்ய ஆரம்பித்து விழித்தது...

இதுபோல சாத்தியமில்லாத விஷயங்கள் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்துக்கொண்டு தான் இருந்தது....

பிறந்த குழந்தைகள் கண் சிமிட்டி பார்த்தது... அதில் ஒன்று அழ முனைந்தது....

இந்த குழந்தைகளை பிரித்து எடுப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகளை பற்றி வைத்தியநாதனுக்கு விளக்கினர்....

வைத்தியநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்துக்கொண்டு டாக்டரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார்....

சீஃப் டாக்டர் மோகன் குழந்தைகளை இங்கேயே சில நாட்கள் வைத்திருக்கவேண்டும் என்று சொல்லவும்...

வைத்தியநாதன் மீறி வந்த அழுகையை அடக்கமுடியாமல் மனைவியின் ஈமக்கிரியை சடங்குகள் முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி டாக்டரிடம் விடைப்பெற்று சென்றார்...

(தொடரும்...)

34 comments:

  1. னடந்ததை கூடவே இருந்து பார்ப்பதுபோல இருக்கு. எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  2. இப்படி ஒட்டிப் பிறக்கும் சயாமீஸ் இரட்டையர்களைப் பிரிப்பது மிகக் கடினமான செயல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மனைவியை இழந்து குழந்தைகள் பிழைக்குமா என்கிற கேள்விக்குறியுடன் வைத்தியநாதன் கதாபாத்திரத்தின் நிலை மனதைத் தொடுகிறது. அடுத்து என்ன நிகழும் என்பதை எதிர்பார்க்க வைத்து தொடரும் போட்டு விட்டீர்கள். காத்திருக்கிறேன் பேராவலுடன்,

    ReplyDelete

  3. நெஞ்சை உலுக்கும், உருக்கும் கதை!
    அடுத்த பகுதிகாண ஆவல்!

    ReplyDelete
  4. கதையின் முடிவில் மனசில் கழகமும்
    விழியில் நீரும்

    ReplyDelete
  5. சிக்கலாய் தொடரும் கதை !

    ReplyDelete
  6. அருமையான எழுத்து நடை .. நல்ல கதை தொடரட்டும்

    ReplyDelete
  7. படிக்கவே கஷ்டமாக உள்ளதே!

    [அப்புறம் என்ன ஆச்சு?
    குழந்தை அழுதுதுன்னு சொல்லாதீங்க! மஞ்சு.]

    வைத்தியநாதனுக்கு இவ்வளவு கஷ்டங்கள் சேர்ந்து வரவேண்டாம்.

    சிக்கலாய் தொடரும் கதை தான்! பார்ப்போம்.

    ReplyDelete
  8. கதை சொல்லிச் செல்லும் விதம்
    இதை கதைபோல் நினைக்க முடியவில்லை
    அத்தனை சிறப்பான நடை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வணக்கம் அக்கா..
    நலமா??
    நீண்ட நாட்களுக்குப் பின்னர் விடுமுறை கழிந்து வலைப்பக்கம்
    வருகிறேன்..
    வந்ததும் உங்கள் பதிவைக் கண்டேன்..
    மனதுக்கு மகிழ்ச்சி...

    "பட்ட காலிலே படும்
    கேட்ட குடியே கெடும்.."
    என்பதுபோல இங்கே கதையில்
    கதாபாத்திரம் வைத்தியநாதனுக்கு
    அடுக்கடுக்காய் துன்பங்கள்
    மனதை பிசைந்துவிட்டது...

    ReplyDelete
  10. அடாது மழைபெய்த வானத்தை சபிக்க மனமில்லாமல் //

    வைத்திய‌நாத‌னுக்குப் பெரிய‌ ம‌ன‌சுதான்.

    லாந்தர்விளக்கு அடிக்கிற காற்றுக்கு அலைபாய்ந்துக்கொண்டு //

    க‌வ‌ச‌மிட்ட‌ க‌ண்ணாடியையும் மீறி

    பெண் சிசுக்களை கொல்லாத நல்ல மருத்துவச்சி....//

    இப்ப‌டியான‌வ‌ர்க‌ளிருக்க‌ப் போய்த் தான் அக்கிராம‌த்தில் அடாத‌ ம‌ழை போல‌...

    மெல்ல இழுக்க இழுக்க இரண்டு தலைகளுடன் நான்கு கைகளுடன் நான்கு கால்களுடன்//

    கிருஷ்ண‌ரின் செல்ல‌மான‌ ப‌சுங்க‌ன்றோ... க‌ட‌வுளே! என்ற‌ ப‌தைப்பு அடுத்த‌ வார்த்தை ப‌டிப்ப‌த‌ற்குள்! நீங்க‌ திகில் க‌தை எழுத‌த் த‌குதியான‌வ‌ரே.

    மழை சத்தத்திற்கு ஈடாக இரைந்தாள் மருத்துவச்சி....//

    ம‌ருத்துவ‌ச்சியின் உர‌த்த‌ குர‌ல் கேட்கும் வித‌மாய் அருகிலேயே அவ‌ர‌து வீடோ... ப‌த‌ட்ட‌த்தில் அலைபேசியெடுத்து அவ‌ர் பேசிய‌தை குறிப்பிட‌ ம‌றந்து விட்ட‌தா...?

    வேகமாக வண்டி எடுத்துக்கொண்டு //

    நான்குச‌க்க‌ர‌ ம‌கிழுந்தை விட‌ இருச‌க்க‌ர‌ மாட்டுவ‌ண்டியை அப்ப‌டியெல்லாம் வேக‌மாக‌ எடுத்து வ‌ந்து விட‌ முடியுமா என்ன‌? அவ்வ‌ள‌வு துரித‌மாக‌ எடுத்து வ‌ந்த‌ அவ‌ரைப் பாராட்ட‌த் தான் வேண்டும்.

    தொட‌ரின் இறுதியில் வைஜெய‌ந்தி இற‌ந்த‌தும், வைத்திய‌நாத‌ன் நிர்க்க‌தியாய் த‌விப்ப‌தும் ம‌ன‌சை என்ன‌வோ செய்கிற‌து தோழி. காட்சி விவ‌ர‌ணைக‌ள் ப‌டிப்போரை ப‌த‌ட்ட‌த்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்ப‌டி இருக்கிற‌து. தாம‌திக்காம‌ல் மீதிக் க‌தையை ப‌திவிட்டுவிடுங்க‌ளேன்...

    ம‌னித‌ வாழ்வின் சூட்சும‌ங்க‌ளை அறிய‌த் த‌வித்த‌ப‌டி மாயாண்டியுட‌ன் நாமும்... எல்லாம‌றிந்த‌ மாய‌க் க‌ண்ண‌னோ... எப்போதும் ந‌ம்முட‌ன்.



    ReplyDelete
  11. 'ஓருட‌ல் ஈருயிர்' என்ற‌தை வாசிப்ப‌வ‌ர்க‌ள் தாயின் வ‌யிற்று சேயுட‌ன் பொருத்தியிருக்க‌, க‌தைப் போக்கு ச‌யாமி இர‌ட்டைய‌ர்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல் கூட‌ ந‌ல்ல‌ ட்விஸ்ட்.

    ReplyDelete
  12. அடடா.... என்னவொரு சோகம்... படிக்கும் எங்களுக்கும் கதாபாத்திரத்தின் வலி புரிகிறது....


    ReplyDelete
  13. கலங்க வைத்துவிட்டீர்கள் மஞ்சு பாஷிணி! தொடர விழைகிறேன்.. கொஞ்சம் பயமாயும் இருக்கிறது..

    ReplyDelete
  14. பதைபதைக்கிறது மஞ்சுபாஷினி.காத்திருக்கிறேன் தொடருக்காக

    ReplyDelete
  15. //Lakshmi said...
    நடந்ததை கூடவே இருந்து பார்ப்பதுபோல இருக்கு. எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு//

    அன்பு நன்றிகள் லக்‌ஷ்மிம்மா தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  16. //பால கணேஷ் said...
    இப்படி ஒட்டிப் பிறக்கும் சயாமீஸ் இரட்டையர்களைப் பிரிப்பது மிகக் கடினமான செயல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மனைவியை இழந்து குழந்தைகள் பிழைக்குமா என்கிற கேள்விக்குறியுடன் வைத்தியநாதன் கதாபாத்திரத்தின் நிலை மனதைத் தொடுகிறது. அடுத்து என்ன நிகழும் என்பதை எதிர்பார்க்க வைத்து தொடரும் போட்டு விட்டீர்கள். காத்திருக்கிறேன் பேராவலுடன்,//

    அன்பு நன்றிகள் கணேஷா... தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  17. //புலவர் சா இராமாநுசம் said...

    நெஞ்சை உலுக்கும், உருக்கும் கதை!
    அடுத்த பகுதிகாண ஆவல்!//

    அன்பு நன்றிகள் ஐயா தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  18. //செய்தாலி said...
    கதையின் முடிவில் மனசில் கலக்கமும்
    விழியில் நீரும்//

    அன்பு நன்றிகள் செய்தாலி தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  19. //இராஜராஜேஸ்வரி said...
    சிக்கலாய் தொடரும் கதை !//

    சிக்கல் இனியும் சிக்கலாகாமல் எதாவது செய்ய முயல்கிறேன்பா... அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  20. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான எழுத்து நடை .. நல்ல கதை தொடரட்டும்//

    அன்பு நன்றிகள் ராஜா தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  21. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    படிக்கவே கஷ்டமாக உள்ளதே!

    [அப்புறம் என்ன ஆச்சு?
    குழந்தை அழுதுதுன்னு சொல்லாதீங்க! மஞ்சு.]

    வைத்தியநாதனுக்கு இவ்வளவு கஷ்டங்கள் சேர்ந்து வரவேண்டாம்.

    சிக்கலாய் தொடரும் கதை தான்! பார்ப்போம்.//

    ம்ம்ம்ம் சரி சரி குழந்தை அழுததுன்னு சொல்லாமல் குழந்தைகள் அழுதன சொல்லட்டுமா அண்ணா? :) சும்மா தமாஷுக்கு சொன்னேன்...

    காத்திருங்கள் அண்ணா அடுத்த பகுதி தருகிறேன்... அன்பு நன்றிகள் அண்ணா தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  22. //Ramani said...
    கதை சொல்லிச் செல்லும் விதம்
    இதை கதைபோல் நினைக்க முடியவில்லை
    அத்தனை சிறப்பான நடை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    தங்கள் ஆசி என்றும் என்னுடன் ரமணி சார்...

    அன்பு நன்றிகள் ரமணிசார் தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  23. //மகேந்திரன் said...
    வணக்கம் அக்கா..
    நலமா??
    நீண்ட நாட்களுக்குப் பின்னர் விடுமுறை கழிந்து வலைப்பக்கம்
    வருகிறேன்..
    வந்ததும் உங்கள் பதிவைக் கண்டேன்..
    மனதுக்கு மகிழ்ச்சி...

    "பட்ட காலிலே படும்
    கேட்ட குடியே கெடும்.."
    என்பதுபோல இங்கே கதையில்
    கதாபாத்திரம் வைத்தியநாதனுக்கு
    அடுக்கடுக்காய் துன்பங்கள்
    மனதை பிசைந்துவிட்டது...//

    ஹை அட மகி எப்ப வந்தீங்க ஊரில் இருந்து? எனக்கும் ரொம்ப சந்தோஷம்பா....

    அன்பு நன்றிகள் மகி தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  24. //நிலாமகள் said...
    அடாது மழைபெய்த வானத்தை சபிக்க மனமில்லாமல் //

    வைத்திய‌நாத‌னுக்குப் பெரிய‌ ம‌ன‌சுதான்.

    லாந்தர்விளக்கு அடிக்கிற காற்றுக்கு அலைபாய்ந்துக்கொண்டு //

    க‌வ‌ச‌மிட்ட‌ க‌ண்ணாடியையும் மீறி

    பெண் சிசுக்களை கொல்லாத நல்ல மருத்துவச்சி....//

    இப்ப‌டியான‌வ‌ர்க‌ளிருக்க‌ப் போய்த் தான் அக்கிராம‌த்தில் அடாத‌ ம‌ழை போல‌...

    மெல்ல இழுக்க இழுக்க இரண்டு தலைகளுடன் நான்கு கைகளுடன் நான்கு கால்களுடன்//

    கிருஷ்ண‌ரின் செல்ல‌மான‌ ப‌சுங்க‌ன்றோ... க‌ட‌வுளே! என்ற‌ ப‌தைப்பு அடுத்த‌ வார்த்தை ப‌டிப்ப‌த‌ற்குள்! நீங்க‌ திகில் க‌தை எழுத‌த் த‌குதியான‌வ‌ரே.

    மழை சத்தத்திற்கு ஈடாக இரைந்தாள் மருத்துவச்சி....//

    ம‌ருத்துவ‌ச்சியின் உர‌த்த‌ குர‌ல் கேட்கும் வித‌மாய் அருகிலேயே அவ‌ர‌து வீடோ... ப‌த‌ட்ட‌த்தில் அலைபேசியெடுத்து அவ‌ர் பேசிய‌தை குறிப்பிட‌ ம‌றந்து விட்ட‌தா...?

    வேகமாக வண்டி எடுத்துக்கொண்டு //

    நான்குச‌க்க‌ர‌ ம‌கிழுந்தை விட‌ இருச‌க்க‌ர‌ மாட்டுவ‌ண்டியை அப்ப‌டியெல்லாம் வேக‌மாக‌ எடுத்து வ‌ந்து விட‌ முடியுமா என்ன‌? அவ்வ‌ள‌வு துரித‌மாக‌ எடுத்து வ‌ந்த‌ அவ‌ரைப் பாராட்ட‌த் தான் வேண்டும்.

    தொட‌ரின் இறுதியில் வைஜெய‌ந்தி இற‌ந்த‌தும், வைத்திய‌நாத‌ன் நிர்க்க‌தியாய் த‌விப்ப‌தும் ம‌ன‌சை என்ன‌வோ செய்கிற‌து தோழி. காட்சி விவ‌ர‌ணைக‌ள் ப‌டிப்போரை ப‌த‌ட்ட‌த்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்ப‌டி இருக்கிற‌து. தாம‌திக்காம‌ல் மீதிக் க‌தையை ப‌திவிட்டுவிடுங்க‌ளேன்...

    ம‌னித‌ வாழ்வின் சூட்சும‌ங்க‌ளை அறிய‌த் த‌வித்த‌ப‌டி மாயாண்டியுட‌ன் நாமும்... எல்லாம‌றிந்த‌ மாய‌க் க‌ண்ண‌னோ... எப்போதும் ந‌ம்முட‌ன்.//

    அட ரசித்து வாசித்தேன் நிலாமகள் தங்களின் பின்னூட்டம்....

    அலைபேசி உபயோகிக்கும் காலத்தில் அவர்கள் இல்லையேப்பா...

    திகில் கதையா நானா? அச்சச்சோ யாராச்சும் என்னை அடிக்க வந்துட போறாங்க நிலாமகள் :)

    அடுத்து என்னாகிறது என்று பார்ப்போம்...

    தங்களின் பின்னூட்டம் ரசிக்கவைத்ததுப்பா அன்பு நன்றிகள் தங்களின் ரசிக்கவைத்த பின்னூட்டத்திற்கு.


    ReplyDelete
  25. //நிலாமகள் said...
    'ஓருட‌ல் ஈருயிர்' என்ற‌தை வாசிப்ப‌வ‌ர்க‌ள் தாயின் வ‌யிற்று சேயுட‌ன் பொருத்தியிருக்க‌, க‌தைப் போக்கு ச‌யாமி இர‌ட்டைய‌ர்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல் கூட‌ ந‌ல்ல‌ ட்விஸ்ட்.//

    சமர்த்துப்பிள்ளை கண்டுப்பிடிச்சிட்டீங்களே...

    ReplyDelete
  26. //வெங்கட் நாகராஜ் said...
    அடடா.... என்னவொரு சோகம்... படிக்கும் எங்களுக்கும் கதாபாத்திரத்தின் வலி புரிகிறது....//

    அன்பு நன்றிகள் வெங்கட் தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  27. //மோகன்ஜி said...
    கலங்க வைத்துவிட்டீர்கள் மஞ்சு பாஷிணி! தொடர விழைகிறேன்.. கொஞ்சம் பயமாயும் இருக்கிறது..//

    பயப்படாதீங்கப்பா.. நீங்களே இப்படி சொன்னால் எப்படி? அன்புநன்றிகள் மோகன் ஜி தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  28. //சிவகுமாரன் said...
    பதைபதைக்கிறது மஞ்சுபாஷினி.காத்திருக்கிறேன் தொடருக்காக//

    அடுத்தபகுதி தொடர்கிறேன் சிவகுமாரன்...

    அன்புநன்றிகள் தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  29. //முனைவர்.இரா.குணசீலன் said...
    கதை அருமையாக உள்ளது.//

    அன்பு நன்றிகள் குணசீலன் தங்களின் மேலான கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  30. பதைக்கும் மனதுடன் தொடர்கிறேன். இதுபோல் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் பிழைப்பதே அரிது. அப்படிப் பிழைத்தாலும் அவர்களை வளர்ப்பது அரிதிலும் அரிது. தாயும் இறந்துவிட்டாள். இனி குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறிதான். மனம் பிசையச் செய்யும் கதை. தொடரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன் மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  31. ஆ! என்ன 'தொடரும்' போட்டிருக்கீங்க?

    //பெண் சிசுக்களை கொல்லாத நல்ல மருத்துவச்சி....
    நடுங்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  32. முதல் பாகமே திருப்பம் நிறைந்த காட்சியாய் நகர்கின்றதே அக்கா.!

    பாவம் வைஜயந்தி.. தவிக்க விட்டு போய்விட்டாரே.

    அடுத்த பாகமும் படிக்கின்றேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...