"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, April 27, 2015

ஹலோ ஹலோ சுகமா?

அன்பு நண்பர்களே,

எல்லோரும் சௌக்கியமாப்பா?

இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா...

அப்பப்ப வந்து அப்பப்ப காணாம போய் திரும்ப அப்பப்ப வந்து எட்டிப்பார்ப்பதற்கு காரணம் என்னால அதிகம் டைப் பண்ண முடியாத நிலை..

முகநூலில் கொஞ்சமா டைப் பண்ணினா போறும்னு அங்க டைப்பிட்டு இருந்தேன்...

இப்ப அங்கயும் க்ளாஸ் கட் அடிச்சாச்சு...

டைப் அதிகம் அடிக்க முடியல... வலி பின்னுது.. அதான் விஷயமே..

வை.கோ அண்ணா கிட்ட இருந்து ஒரு அவசர மெயில் வந்தது.

என்னன்னு பார்த்தால் என்னவோ என் ப்ளாக் பக்கம் போனால் அண்ணாவை ப்ளாக் பண்ணி ஏதோ விளம்பரத்தை தள்ளிவிடுகிறதாம்..

வேலை பளுவுக்கிடையே ஓடிவந்து என்னன்னு பார்த்தால் என்னையும் போடி வெளியே என்று விரட்டியது..

ஒரே டென்ஷனாகி யாரை அழைப்பது.... என்று யோசித்து ஆபத்பாந்தவன் தனபால் சாரோட மொபைல் நம்பர் எடுத்து அடித்தால் ரிங் போகவே இல்ல.

சரின்னு கூகுளில் டைப்பினேன் அனாவசியமா உள்ள வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிட்டு ஜம்முனு உட்கார்ந்துட்டு இருக்கே என்ன பண்ண அப்படின்னு?

அதுவும் சொல்லி கொடுத்தது வேண்டாத்த சங்காத்தமெல்லாம் விட்டு ஒழி என்பது போல் 3 வது பார்ட்டி கெட்ஜெட் எல்லாம் ரிமூவ் செய் என்று..

நானும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல் போய் கன்னாபின்னாவென்று என்னன்னவோ பதட்டத்தில் ரிமூவ் செய்து தள்ளிட்டேன்..

அதன்பின் தான் விளம்பரம் காஞ்சனா 2 ல வந்த முனி போல் காக்கா ஊச் ஓடியே போச்....

எல்லாரும் சேர்ந்து ஒண்ணா அடிக்க வராதீங்க. தாங்க மாட்டேன் ஆமாம் சொல்லிட்டேன் :)


ஊருக்கு போவதே கைவலிக்கு மருத்துவம் செய்துக்கொள்ள தான்....

அதனால நான் சொல்ல வரது என்னன்னா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு மஞ்சு பேச்சு அல்பாயுசுல போச்சு என்றில்லாம ஊருக்கு போய் நல்லா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்து சமர்த்தா பதிவுகள் போடலன்னாலும் முடிந்த அளவு பதிவுகள் படித்து கருத்து கண்ணாயிரமாக கண்ணும் கருத்துமாக கருத்திடுகிறேன் என்று உறுதி சொல்லிக்கொ(ல்)ள்கிறேன்






31 comments:

  1. வெல்கம் வெல்கம்...

    ReplyDelete
  2. திட்டி டைப்புவோம்னு பேனா.... ஸாரி மௌஸைக்கையில் எடுத்தேன் அப்புறம் திட்ட வேண்டாம்னு சொன்னதால் திட்டுவதை விட்டு வாழ்த்துவோம்னு நினைக்கிறேன் நலம்தானே உடல் நலத்தை பேணிக்கொள்ளவும் அவ்வப்பொழுது முடிந்ததை எழுதிக்கொல்லவும், ஸாரி எழுதிக்கொள்ளவும் என வரவேற்கிறேன். நன்றி
    தமிழ் மண இணைப்புடன் வாக்கு ஒன்று.
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஜீ :) நல்லவேளை திட்டாதீங்கன்னு எல்லோரிடமும் கேட்டுக்கொண்டேன் அன்பு நன்றிகள் ஜீ..

      Delete
  3. இப்போது OK மஞ்சு. சந்தோஷம்.

    ஒட்ட வந்த பிடாரியை ஓட ஓட விரட்டி விட்டுவிட்டீர்கள். சபாஷ். இருப்பினும் .................

    ”அவள் ....... பறந்து போனாளே ......... என்னை மறந்து போனாளே ..... ” ன்னு பாடிக்கிட்டு இருக்கேன். :)

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை அண்ணா.. சரியான நேரத்தில் எனக்கு மெயில் அனுப்புனீங்க... நானும் வந்து பார்த்தேன்... எனக்கும் அதை சரி செய்யும் விதம் தெரியல.... எப்டியோ தத்தக்கா பித்தக்கான்னு என்னத்தையோ செய்தேன்... விளம்பரம் எல்லாம் போயிருச்சு.. அன்பு நன்றிகள் அண்ணா...

      Delete

  4. சகோதரி அவர்களுக்கு, இப்போது உங்கள் வலைத்தளம் சரியாகி விட்டது. நீங்களே பதட்டம் அடையாமல் GOOGLE வழிகாட்டுதலில் படிப்படியாக சரி செய்தமைக்கு வாழ்த்துக்கள். பெரும்பாலும் GOOGLE இல் how to solve என்று நமது BLOG சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை டைப் செய்தால் தீர்வு கிடைத்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பதட்டம் அடையாமல் என்பது சும்மா அண்ணா.. பதட்டத்தில் என்னென்னவோ பண்ணிட்டேன் :) இனி நீங்க சொன்னது போலவே செய்கிறேன் அண்ணா.. அன்பு நன்றிகள் :)

      Delete
  5. என்ன ஆச்சு? கையில் அடிபட்டுவிட்டதா? இப்போதுதான் தெரியும்! விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடி படலைப்பா... எலும்பு தேய்மானம் காரணமாக கைவலியில் ஆரம்பித்து தோள்பட்டை கழுத்து முதுகு என்று அவள் ஒரு தொடர்கதையாக தொடர்ந்துக்கொண்டு இருக்குப்பா... அன்பு நன்றிகள்பா...

      Delete
  6. இப்போ டைப் செய்ய வேண்டியதில்லை ,கூகுள் கையெழுத்து அப்பிளிகேசன் வந்திருக்காமே ,முயற்சி செய்யலாமே :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அப்படி ஒன்னு இருக்கா சொல்லி கொடுங்கப்பா எப்படி எங்கே என்று எதுவும் தெரியலை எனக்கு....

      Delete
  7. வணக்கம்
    ஐயோ.... ஐயோ.. என்ன நடந்தது..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  9. வருக... வருக...

    அதே கைபேசி எண் : 09944345233

    ReplyDelete
  10. கன்னத்தில் குழிவிழ பதிவின் இறுதியில் காட்டியுள்ள அந்தப் பாப்பா ரொம்ப நல்லா அழகாயிருக்கு ! :)

    ReplyDelete
  11. கை வலி தீரட்டும். அப்ப பேச்சு இன்னும் அதிகமாயிடுச்சா? ஹிஹி.

    ReplyDelete
  12. விரைவில் நலம்பெற்று வலையுலகம் திரும்ப வாழ்த்துகள் மஞ்சு. அடிக்கடி வந்து பார்க்காத வீட்டில் அந்நியர் அராஜகம் அரங்கேறுவதைப் போல நம் வலைப்பதிவுக்குள்ளும் விளம்பர ஆக்கிரமிப்பு நடக்கிறது போலும். எழுதாவிட்டாலும் அவ்வப்போது வந்துபார்த்துக்கொள்ளுங்க மஞ்சு. சிகிச்சை முடிந்து நல்லபடியாக வந்து தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete

  13. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  14. Welcome Back! விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.....

    சில சமயங்களில் நமது வலைப்பூக்களில் அன்னிய ஆக்கிரமிப்பு இப்படித்தான் நடந்து விடுகிறது.

    ReplyDelete
  15. விரைவில் குணமடைய வேண்டுகிறேன்! எப்பொழுது வருகிறீர்கள்!

    ReplyDelete
  16. நலம் தானா மஞ்சு.. கைவலி தேவலையா?

    ReplyDelete
  17. அன்புடையீர் வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (02.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    http://blogintamil.blogspot.in/2015/06/2.html

    ReplyDelete
  18. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
    திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
    வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்
    manjusampath.blogspot.com
    இனிய இம்சை....http://manjusampath.blogspot.in/2014/11/blog-post_26.html
    http://manjusampath.blogspot.in/2014/02/blog-post.html

    நேசத்தின் நிழல்
    http://manjusampath.blogspot.in/2013/08/blog-post_5.html
    அதீத அன்பு
    http://manjusampath.blogspot.in/2012/11/blog-post_17.html
    காதலாய்
    //manjusampath.blogspot.in/2012/09/blog-post_3.html
    நீ மட்டுமே வேண்டும்
    http://manjusampath.blogspot.in/2012/09/blog-post.html
    சொல்லிவிடு
    http://manjusampath.blogspot.in/2007/12/blog-post_153.html
    திருமதியாக்கி விடேண்டா...

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  19. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    TM +1

    ReplyDelete
  20. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  21. அன்புள்ள சகோதரி திருமதி. மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வணக்கம்! தங்களது பதிவுகளை (தமிழ்மணத்தில்) தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில், நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/07/35.html

    ReplyDelete
  22. It's actually a nice and helpful piece of information. I'm glad that you shared this helpful info with us.
    Please stray us up to date like this. Thank you for sharing.


    Feeel free to surf to my weblog ... web page ()

    ReplyDelete
  23. It's going to be end of mine day, but before
    finish I am reading this great post to increase my knowledge.


    Here is my homepage :: roofers

    ReplyDelete
  24. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...