"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, November 7, 2013

என் மனதுக்கினிய என்ன(கண)வருக்கு
ஏன் மம்மி நகம் வளர்க்க விட மாட்டேன்றீங்க. தலைமுடியை ஃப்ரீயா விட சம்மதிக்க மாட்டேன்றீங்க. இப்படி நிறைய மாட்டேன்றீங்க. அம்மா சொன்ன ஒரு சொல். நீ படிச்சு முடிச்சதும் என்ன ஸ்டைல் வேணும்னாலும் பண்ணிக்கோ. சரி மூணாவது வருஷம் முடிஞ்சிருச்சு ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலியா இருக்கலாம்னு நினைக்கும்போது பொண்ணு பார்க்க வந்தாச்சு மாப்பிள்ளை.

நான் நல்லா இருக்கமாட்டேன். ஆனா என்னை பாக்க வந்த மாப்பிள்ளை ஹீரோ போல இருந்தார் அழகுல, மனசுல, அன்புல, பண்புல. மாப்பிள்ளையை பார்க்கும் சுவாரஸ்யம் இல்லை. அவசரமா கல்யாணம் பண்றாங்கன்ற எரிச்சல். ஆனால் எங்க சொந்தங்கள் முக்கியமா என் தங்கை எல்லாருக்கும் இஷ்டமாகிவிட்டது மாப்பிள்ளையை பார்த்ததும், மாப்பிள்ளை எல்லோருடனும் பழகின விதமும்.

ஒரு சிலர் வீட்டில் மாமியார் மருமகள் சண்டை ஓரவத்தி சண்டை நாத்தனார் சண்டை இருக்கும். எங்க வீட்டில் அதுக்கும் நோ சான்ஸ். அன்பாலயே எல்லார் மனசையும் கட்டிப்போட்டுட்டார். அவருடைய மனைவி நானும் அவர் வழி…

என் கணவர் கண்டிப்பானவர் கிடையாது. ஆனால் நிறைந்த அன்பு தரும் நேசம் நிறைந்தவர்.

ஏன் இவ்ளோ நீளமான கதைன்னு யோசிக்கிறீங்களாப்பா? பொண்ணுப்பாக்க வந்தது 08.03.1989 நிச்சயதார்த்தம் 08.06..1989 கல்யாணம் 08.11.1989 ஆமாம் முழுமையான நிறைவான சந்தோஷமான 24 வருடங்களின் நிறைவு.

அடுத்த ஜென்மத்திலும் இவரே எனக்கு புருஷனா கிடைக்கணும்னு நான் எப்போதும் போல் வேண்டிப்பேன். ஒருவேளை நான் பிறந்தால்.

இன்னும் எத்தனை நாள் இருப்போமோ தெரியாது? இறந்தால் மீண்டும் பிறப்போமோ அதுவும் தெரியாது. பிறந்தால் நம் எல்லா சொந்தங்களுடனும் நட்புகளுடனும் பிறப்போமோ அதுவும் தெரியாது. அதனால் இருக்கிற இந்த கொஞ்ச நாட்களையும் நிறைவாக சந்தோஷமாக அன்புடன் வாழ்ந்துவிடுவோமே.

எங்கள் 24 ஆம் வருட திருமண நாளை எல்லோரும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

46 comments:

 1. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் அப்பாதுரை.

   Delete
 2. மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்

  Angelin.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் அஞ்சு.

   Delete
 3. அன்புள்ள மஞ்சு,

  மிகவும் சந்தோஷமான செய்தியாக உள்ளது. மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு இதே மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக மிகவும் சந்தோஷமாக தம்பதிகள் இருவரும் சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழப்பிரார்த்திக்கிறோம் / ஆசீர்வதிக்கிறோம்.

  அன்புடன் கோபு அண்ணா + மன்னி.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் அண்ணா மன்னி

   Delete
 4. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பெண் பார்க்க வந்த தேதியைக் கூட சரியாக நினைவில் வைத்துள்ளமையைப் பாராட்டித் தான் ஆக வேண்டும்.
  மணமகளாரே, மணமகனாரே
  பெரும்புகழ் பெற்றுநீ டூழி
  இருநிலத்து வாழ்க இனிது.
  என்ற பாவேந்தரின் வரிகளாலேயே தங்களை வாழ்த்துகின்றேன் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் சார். ஆமாம்... அப்போதைய அந்த நிகழ்வு இப்போதும் கண்முன்... அப்போது அவர் பேசின வார்த்தைகளும் நினைவில் :)

   Delete
 6. பெண் பார்க்க வந்தது, நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாமே எட்டாம் தேதியில் அமைந்தது என்ன பொருத்தம்? தற்செயலா, திட்டமிட்டா?

  உங்களின் திருமண நாளுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள்பா... எதேச்சையாக அமைந்தது தான்பா...

   Delete
 7. மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் வெங்கட்..

   Delete
 8. இனிய மண நாள் நல்வாழ்த்துக்கள்
  நிறைவான வாழ்வினையும்
  அதனை அனுபவித்து வாழும் நிறைவான
  மன நிலையையும் தங்களுக்குத் தந்த ஆண்டவனுக்கு
  எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்

  ( எப்படி ஒரு ஆச்சரியமான ஒற்றுமை
  இன்று என் மூத்த மகளின் திருமண நாள்
  கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்
  தங்களையும் நினைத்துக் கொண்டபடி )

  ReplyDelete
 9. 24 ஆம் வருட திருமண நாளிக்கு நிறைவான வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. நிறைவான அன்பு நன்றிகள்பா..

   Delete
 10. இனிய வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. நிறைவான அன்பு நன்றிகள் ஸாதிகா.. எப்படிப்பா இருக்கீங்க?

   Delete
 11. மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.... சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. நிறைவான அன்பு நன்றிகள்பா.

   Delete
 12. அன்பு மஞ்சு எல்லாவித நற்பேறும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகள்.
  எங்களுக்கு எல்லாம் 4. பெண்பார்த்தது அக்டோபர் 31,
  நிச்சயம் ஜனவரி 31, திருமணம் fஎப்ரவரி 4, பிள்ளை பிறந்தது நவம்பர் 13:)

  அன்புக் கணவருக்கு அருமையாக அமைந்த மனைவிப் பெண்ணே என்றும் இன்பமாக வாழ் வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
  Replies
  1. ஹை உங்களுக்கு நாலு எங்களுக்கு எட்டு.... அன்பு நிறை நன்றிகள் வல்லிம்மா...

   Delete
 13. 25 ஆம் ஆண்டுத் தொடக்கத்துக்கு வாழ்த்துகள் ஆசிகள். உங்கள் மனம் போல் இதே கணவர் அடுத்து நீங்கள் எடுக்கும் எல்லாப் பிறவிகளிலும் அமைந்து பல்லாண்டு மன நிறைவோடும், அன்போடும் நீடூழி வாழவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் கீதா...

   Delete
 14. மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. http://www.youtube.com/my_videos?o=U
  We Bless you both All the Best.
  subbuthatha
  meenachi paatti.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நிறை நன்றிகள் அம்மா அப்பா.

   Delete
 16. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 17. இன்று போல என்றும் வாழ்க :) மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 18. wish you a happy married life as long as

  ReplyDelete
 19. அன்பு நிறை நன்றிகள்பா..

  ReplyDelete
 20. லேட்டா வந்து வாழ்த்திக்குறேனுங்க!

  ReplyDelete
 21. இனிய மண நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
 23. அன்பின் மஞ்சு - திருமணமாகி 24 ஆண்டுகள் நிறைவு செய்து - 25ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அருமைத் தங்கையே - சீரும் சிறப்புடன் இன்னும் பலப் பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் குடும்பத்தாருடன் வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 24. இன்பம் கொழிக்கும் இந்நாளை
  இறைவன் பன்மடங்காய்ப் பெருகித் தருவானே
  அன்பில் உறைந்து எந்நாளும்
  அகமே மகிழ வாழ்வீரே ...........

  மங்காப் புகழில் தமிழ் போல
  மணமே வீசிட மண வாழ்வில்
  என்றும் இன்பம் தங்கிடவே
  எங்கள் வாழ்த்தும் நிலைக்கட்டுமே

  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா .....

  ReplyDelete
 25. சம்பத் பாவாவோட குணங்களைப் பத்தி சொல்லியா தெரியணும் மன்ச்சூ! ஒருசில சந்திப்புகள்லயே எங்க மனசுல இடம் பிடிச்சவராச்சுதே...! எப்பவும் கூட இருக்கற மஞ்சுவின் மனசுல இப்படி ஒரு இடம் பிடிக்காம இருந்தாதான் வியப்பு! என்றும் மகிழ்வுடன் உங்களின் இல்லறம் தொடர இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்மா!

  ReplyDelete
 26. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 28. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. வணக்கம்
  இனிய திருமன வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
  வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 30. இனிய மண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 31. தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள் ...!

  மங்களம் பெருக வாழ்ந்திடு மஞ்சு
  திங்கள் போல பொலிவு கொண்டு
  தித்திக்கும் வாழ்வை தினமும் கண்டு
  மகிழ்ந்திடு பல வளங்கள் கொளிக்க...!

  வலைச்சர அறிமுகத்திற்கு நன்றிகள் ...! வாழ்க வளமுடன்....!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...