உன் கண்களில் உறக்கம் கூட
அழகாய் தெரிகிறது
பவழவாய் திறந்து
பட்டுக்கைகளை தூக்கி
“ நீ “
சோம்பல் முறிக்கும் அழகை
கண்கொட்டாமல் ரசிக்கிறேன்...
என் வாழ்க்கை ரசனையாக்க
வந்த அற்புதம்
“ நீ “
உன் இனிமையான செயல்களை
காணும் பாக்கியம்
என்னைப்போல் யாருக்கு
கிடைக்கும் இந்த வரம் !!!
Tweet |
ரசனையான கவிதை. உணர்வுபூர்வமான கவிதை. அருமையான கவிதை.
ReplyDeleteபெற்றெடுத்த மழலையைக் கொஞ்சும் போதுதான் பெண்மை உச்சபட்ச முழுமை அடைகிறது என்பது சரிதானே ?
ReplyDeleteத ம 2
கவிதை மென்மையாய் அழகாய் இருக்கிறது.
ReplyDeleteஆனால் .............
மஞ்சு அக்காவோட மெஸ்மரைசிங் factor ஏதோ மிஸ்ஸிங் !
நான் உங்கள் ரசிகை !
உங்கள் அடுத்தடுத்த கவிதையை ஆவலோடு எதிர்பார்ப்பவள் என்ற உரிமையில் சொன்னேன்.
தப்புன்னா சாரி!
குழந்தை! வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteஅற்புதமான அழகான ஆக்கம்,
ReplyDeleteதலைப்பைப்போலவே .......
அந்தப்படத்தைப்போலவே .......
பால்கோவா போலவே........
பாராட்டுக்கள் மஞ்சு.
பிரியமுள்ள கோபு அண்ணா
அற்புதமான வரம்...
ReplyDeleteமழலை நிச்சயம் அற்புதம் தான் மன்ச்சூ! போட்டோவில் அந்த வெளிநாட்டுத் தாயின் முகத்தில்தான் எத்தனை பெருமிதம். ரசனையான கவிதை அருமை.
ReplyDelete//உன் கண்களில் உறக்கம் கூட அழகாய்...// ஆஹா என்ன கற்பனை நயம்!
ReplyDeleteஅழகிய கவிதை அந்தக் குழந்தையைப் போலவே...
ReplyDeletekbjana.blogspot.com
குழந்தைகளைப் பார்த்து கொண்டே இருப்பது ரொம்பவும் சுகமான விஷயம். உங்கள் கவிதையும் படித்துக் கொண்டே இருக்கலாம்!
ReplyDeleteரசித்தேன்.....
என் வாழ்க்கை ரசனையாக்க
ReplyDeleteவந்த அற்புதம்
“ நீ “//
அருமை.
குழந்தைகள் வாழ்க்கையை ரசனையாக்க வந்தவர்கள் தான்.
அழகான கவிதை.. குழந்தை என்றும் ரசிக்கும் ஒரு படைப்பு..
ReplyDeleteஅழகாய் கிடைத்த அற்புத வரம்..!
ReplyDelete///// உன் இனிமையான செயல்களை
ReplyDeleteகாணும் பாக்கியம்
என்னைப்போல் யாருக்கு
கிடைக்கும் இந்த வரம் !!! /////
இது கொஞ்சம் உயர்வு நவிற்சியாக இருக்கக்கூடும்.. உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் வாய்த்திருக்கும் வரம்தான் அது..!
///// உன் இனிமையான செயல்களை
ReplyDeleteகாணும் பாக்கியம்
என்னைப்போல் யாருக்கு
கிடைக்கும் இந்த வரம் !!! /////
இது கொஞ்சம் உயர்வு நவிற்சியாக இருக்கக்கூடும்.. உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் வாய்த்திருக்கும் வரம்தான் அது..!
; நன்று!
ReplyDeleteமூணாவதா !
ReplyDeleteபொண்ணா இருந்தா
அதிருஷ்டம் தான்.
சுப்பு தாத்தா.
பச்சிளங்குழந்தை பல கவிதைகள் படைக்கும். பல இரசனைகளை உயர்விக்கும். தாயின் பெருமிதத்தை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள் மஞ்சு!
ReplyDeleteஅருமை.சகோதரி
ReplyDeleteபடிப்பு நிமித்தம் பிரிந்து சென்ற மகனை எண்ணி தவிக்கின்ற தருணத்தில் , உணர்வுகளைத் தட்டி எழுப்பிய கவிதை இது,
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
குழந்தையைப் பார்த்துக் கொண்டிருத்தல் இனிமை தான்..
ReplyDeleteஅருமை சகோதரி
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஅன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்பதிவு இன்று 26.06.2014 வலைச்சரத்தில் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பான கவிதை...
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...
http://pandianinpakkangal.blogspot.com
உண்மையில் அழகான அற்புதமான படம். அந்தப் பிஞ்சு குழந்தை போலவே கவிதையும் மிக அழகு !
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ....!
தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி
ReplyDeleteவலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
அழகான கவிதை மஞ்சுபாஷினி! நலம் தானே? என் கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்து மீண்டும் வானவில் மனிதனில் பதிவுகள் போடத் துவங்கியுள்ளேன். அவை உங்கள் பார்வைக்கு . இனி அடிக்கறி பதிவுகள் வரும். நீநாளும் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.
ReplyDelete