இதுவும் கடந்து போகும்...
சோகம் யாருக்கில்லை
ப்ரச்சனை யாருக்கில்லை
விதியின் விளையாட்டு
காரணகர்த்தா என்றும்
நீயில்லை உன் ராசியுமில்லை...
முற்பிறவியின் கர்மபலன்
இதோ இப்பிறவியில்
ஜனித்து தீர்த்து
கொண்டிருக்கிறோம்....
நல்லதே நினைப்போம்
நல்லதே நடத்துவோம்
கைமீறி நடப்பதெல்லாம்
அவன் செயலன்றி யார்?
பிறக்கும்போதே
நிர்ணயிக்கப்பட்ட விதி...
மிக வலியது விதி
வாழ்க்கையை புரட்டி போடும்
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்
நல்லவரை தீயவராக்கும்...
செய்யும் நற்செயல்கள்
புண்ணியமாக சேர்ந்து
கொண்டே இருக்கும்
இது சோதனை மட்டுமே
விதி வலியது ஆனால்
ப்ரார்த்தனை அதனினும் வலியது...
கண்திறக்க வைக்கும்
புன்னகை புரியவைக்கும்
எழுந்து நிற்கவைக்கும்...
நீ எழுந்து நடமாடி
என் விதியை விட
மன்ற நட்புகள்
செய்த ப்ரார்த்தனைகள்
வலிமை அதற்கு அதிகம்
ப்ரார்த்தனையும்
கணவனின் நம்பிக்கையும்
என்னை குணமாக்கின
என உரக்க கூறேன் தோழி.....
Tweet |
அன்பின் மஞ்சுபாஷினி - பிரார்த்தனைகலூம் கணவனின் நம்பிக்கையும் வலைமை வாந்தவை - எத்துயரத்தினையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவை. கவிதை நன்று - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்லதே நினைப்போம்
ReplyDeleteநல்லதே நடத்துவோம்
கைமீறி நடப்பதெல்லாம்
அவன் செயலன்றி யார்?
தெம்பூட்டி தூக்கி நிறுத்தும் வரிகள்.
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மஞ்சுபாஷினி - பிரார்த்தனைகலூம் கணவனின் நம்பிக்கையும் வலைமை வாந்தவை - எத்துயரத்தினையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவை. கவிதை நன்று - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...
//ரிஷபன் said...
ReplyDeleteநல்லதே நினைப்போம்
நல்லதே நடத்துவோம்
கைமீறி நடப்பதெல்லாம்
அவன் செயலன்றி யார்?
தெம்பூட்டி தூக்கி நிறுத்தும் வரிகள்.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் கருத்து பகிர்வுக்கு ரிஷபா....
என்ன நடந்தது என்னாச்சு
ReplyDelete