"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 10, 2007

ஏன்.........காணாத நேரம் தவிப்பது ஏன்
கண்ட பின் சந்தோஷிப்பது ஏன்
கை குலுக்க துடிப்பது ஏன்
மனம் கொஞ்சம் லேசானதேன்

உன் முகம் வாட்டம் கொண்டது ஏன்
வாய் மூடி மௌனமாய் இருப்பது ஏன்
தவறே செய்யாமல் கலங்குவது ஏன்
ஆறுதல் சொல்ல தயங்குவது ஏன்

சிறிது நேரம் சம்பாஷணை ஏன்
நெடு நேரம் கண்முன் வராதது ஏன்
கண்டதும் இன்முக புன்னகை ஏன்
கண்கள் நீரை கொட்டுவது ஏன்

காதல் செய்யும் மாற்றம் ஏன்
காதல் கொண்ட அனுபவம் ஏன்
நேர்மை காதல் நிறைவேறாதது ஏன்
சாதல் கொண்டு திரிவது ஏன்

காதல் உயிர்பலி கொள்வது ஏன்
காதலை மதங்கள் பிரிப்பது ஏன்
காதலன் காதலியை கைவிடுவது ஏன்
காதலைனை மறந்து காதலி பிரிவது ஏன்

ஏன் ஏன் ஏன் இத்தனை ஏன்
காதலின் மேல் நம்பிக்கை இல்லாதது ஏன்
நம்பிக்கை கொண்டு வாழ்வதில்லை ஏன்

நம்பிக்கை இல்லாததால் தானோ??

2 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - காதல் தோவிக்ளுக்கு வெவ்வேறு காரணக்கல் உள்ளன. காதலினை நம்பினாலும் காதல் தோற்கும் - தோல்விக்குக் காரணம் கண்டு பிடிப்பது கடினம் - ந்கவிதை - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..ஏன் களை வைத்து சுவாரசியமாய் ஒரு கவிதை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...