"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, November 1, 2011

நான் என்ற ஆணவம் அழிய.....

நான் என்ற ஆணவம் அழிய
உடற்கூட்டினை எரித்துப்பார்

ஆன்மாவில் சஞ்சரிக்கும்
அத்தனை உயிர்களுக்கும்

உடல்கொடுத்த இறைவனை
நேரில் வந்தால் கேட்டுப்பார்

தீவிரவாதமும் தீராத நோயுமாய்
ஏழையை சுரண்டும் பணக்காரனாய்

லஞ்சப்பேய் தலைவிரித்து ஆடி
வஞ்சகத்தால் பதவி பிரமாணம் செய்து

ஈவிரக்கமின்றி கொன்றுகுவிக்கும்
வெறியர்களாய் உருவாக்கியதும் ஏன்?

அன்பும் கனிவும் கருணையும் பாசமும்
பண்பும் பணிவும் ஆதரவும் அரவணைப்பும்

ஒருங்கே ஒன்றாய் கூட்டினில் அடக்கி
உலகை அமைதிப்பூங்காவாய் மாற்றாது

இப்படி விளையாடி தீர்ப்பது ஏன்??

தானும் தன் மனைவி மக்களும் மட்டும்
நன்றாய் வாழ்ந்தால் போதுமா?

நம்பி வாக்குகள் இட்டு
நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு

துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை
இறைவன் காத்திருந்து தண்டிக்ககூடாது

அன்றே அப்போதே அந்த நிமிடமே
துடிக்கவிட்டு கதறவிட்டு.....

இனியொருவன் இப்படி நாட்டை
வைத்து விளையாடமாட்டான்...

நேர்மையும் உண்மையும் இனியாவது
உயிர்த்தெழட்டும்.....

34 comments:

 1. //நேர்மையும் உண்மையும் இனியாவது
  உயிர்த்தெழட்டும்.....//
  நல்ல நோக்கம்... நல்ல கவிதையாகப் பிறந்தது....

  நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. //துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை
  இறைவன் காத்திருந்து தண்டிக்ககூடாது

  அன்றே அப்போதே அந்த நிமிடமே
  துடிக்கவிட்டு கதறவிட்டு.....//


  சுடும் வரிகள் சகோ..

  நிதர்சன பகிர்விற்க்கு நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 3. ஆம்! இந்த ரௌத்திரமும் ஆவேசமும் தேவைதான். உங்கள் மனக்குமுறலில் பிறந்த கவிதையும் அழகுதான்.

  ReplyDelete
 4. கடவுள் என்ற பிம்பத்தை நம்பி தான் நாம் கோபம் மட்டும் கொள்கிறோம்...

  ReplyDelete
 5. anbu nandrigal karuthu pagirndhamaikku venkat....

  ReplyDelete
 6. anbu nandrigal ganesh karuthu pagirndhamaikku...

  ReplyDelete
 7. kobam mattumea kolla mudigiradhuppaa... anbu nandrigal suryajeeva karuthu pagirndhamaikku...

  ReplyDelete
 8. //நேர்மையும் உண்மையும் இனியாவது
  உயிர்த்தெழட்டும்.....//

  உயிர்தெழுந்தால் நல்லதுதான்.

  அருமையான கவிதை மஞ்சு.

  ReplyDelete
 9. //நேர்மையும் உண்மையும் இனியாவது
  உயிர்த்தெழட்டும்.....//


  நல்ல கவிதை.

  ReplyDelete
 10. //நேர்மையும் உண்மையும் இனியாவது
  உயிர்த்தெழட்டும்.....//


  நல்ல கவிதை.

  ReplyDelete
 11. hai ramvi, eppadi irukeenga? anbu nandrigal karuthu pagirndhamaikkupa...

  ReplyDelete
 12. anbu nandrigal karuthu pagirndhamaikku sea kumar...

  ReplyDelete
 13. தானும் தன் மனைவி மக்களும் மட்டும்
  நன்றாய் வாழ்ந்தால் போதுமா?

  நம்பி வாக்குகள் இட்டு
  நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு//

  மொத்த குடும்பத்தையும் பிடிச்சுட்டு வந்து கட்டி போட்டு பிரம்பால் விளாசுற மாதிரி இருக்கு சூப்பர் மஞ்சு...!!!

  ReplyDelete
 14. //அன்றே அப்போதே அந்த நிமிடமே
  துடிக்கவிட்டு கதறவிட்டு.....//

  மஞ்சுபாஷிணி,

  நானும் அதையே தான் ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 15. மனசாட்சிஉள்ள ஒவ்வொரு இந்தியனின் மனகுமுறலை வெகு அழகாய் கவிதையில் வடித்து அசத்தி விட்டீர்கள் மஞ்சுபாஷினி.

  //நேர்மையும் உண்மையும் இனியாவது
  உயிர்த்தெழட்டும்.....//இதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்

  ReplyDelete
 16. தங்களின் மனக்குமறல் மிகவும் நியாயமானது தான்.

  அனைவரின் எதிர்பார்ப்பும் அதுவே தான். எல்லோர் மனதிலும் உள்ளதை தாங்கள் குமுறிப்போய் கொப்பளித்து விட்டீர்கள்.

  சிந்திக்கத்தூண்டும் பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.நன்றிகள்.
  vgk

  ReplyDelete
 17. அருமையான ஆழமான வரிகள். தலைப்பை இன்னும் அழுத்தமா வைத்திருக்கலாம், இல்லை நான் என்பதை “தன்” என்று போட்டிருக்கலாம்.

  ReplyDelete
 18. அன்பு சகோதரி.
  எழுத்துக்களில் உள்ள ஆவேசம் தான்
  எத்தனை எத்தனை...
  அத்தனையும் முத்துமுத்தாய்
  கோர்த்தேடுக்கப்பட்ட வார்த்தைகள்.

  வீட்டிலிருந்து நாடுவரை அத்தனை போரையும்
  விலாசித்தள்ளிவிட்டீர்கள்.

  அருமை அருமை.

  ReplyDelete
 19. வணக்கம் சகோதரி .மனதில் எழுந்த ஆதங்கம் அழகிய புரட்சிக் கவிதையாய் புறப்பட்டுள்ளது தீவிரவாதிகளை தீயென நின்று கொல்ல!....வாழ்த்துக்கள் அருமையான கவிதைப் படைப்பிற்கு .மிக்க நன்றி பகிர்வுக்கு ..............

  ReplyDelete
 20. வணக்கம் சகோதரி
  அருமையான நல்ல நோக்கமுள்ள கவிதை பகிர்வு..

  வாழ்த்துக்கள் சகோதரி..

  ReplyDelete
 21. முதல் வரி மிகவும் அருமை. அந்த ஸ்பார்க் மற்ற வரிகளில் வராதது வருத்தமே.
  நான் என்னும் subjective விசயத்தை சமுக அதுவும் உடகங்களில் பேசப்படும் மேல்மட்டு பிரச்சனைகளில் தேடுவது அழமான உணர்வாக தோன்ற வில்லை.
  நான் என்ற ஆணவம் அழிய
  உடற்கூட்டினை எரித்துப்பார்
  இந்த இரண்டு வரிகளில் உள்ள தீவிரம் ஆழம் அருமை

  ReplyDelete
 22. காரமான வரிகள்.. உடல்கூட்டினை எரித்துப்பார் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  (ஊரிலிருந்து திரும்பியாச்சா?)

  ReplyDelete
 23. நேர்மையும் உண்மையும் இனியாவது
  உயிர்த்தெழட்டும்...../

  உயிர்தெழ்ப் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 24. உயிர்த்தெழுந்திருக்கிறது தங்கள் கவிதை. கம்பீரமாய். சகோதரி.

  ReplyDelete
 25. என் கவிதைகள் எதுவுமே முழுமை அடையவில்லை - தங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கிடக்கின்றன.

  ReplyDelete
 26. well said akka...!

  really very superb...!

  ReplyDelete
 27. துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை
  இறைவன் காத்திருந்து தண்டிக்ககூடாது

  அன்றே அப்போதே அந்த நிமிடமே
  துடிக்கவிட்டு கதறவிட்டு.....//

  ReplyDelete
 28. சகோதரி
  இன்றுதான் தங்கள் வலைதனைக் கண்டேன்
  எப்பொழுது வந்தீர்
  இடையில் நான உடல்கெட்டு
  ஒரு வாரம் மருத்துவ மனையில்
  இருந்து வீடு திரும்பினேன்
  மீண்டும் ஓய்வாக எழுதுகிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. Madam, Please go through the following link & read my reply to the comments given by Asiya Omar. vgk

  http://gopu1949.blogspot.com/2011/11/happy-happy.html#comments

  ReplyDelete
 30. நேர்மையும் உண்மையும் இனி
  உயிர்த்தெழும்.....என்ற நம்பிக்கையில் வாழ்வோம் நாம்.

  ReplyDelete
 31. தங்கள் கவிதை அருமை.
  கோபம் தெறிக்கிற வார்த்தைகளில்
  வீரம் இருக்கிறது.

  நீதி
  நேர்மை -
  நியாயம் -
  மனிதாபிமானம் -
  கருணை-
  உண்மை-
  எல்லாம்....
  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக
  மறுக்கப்படுகிற என் தேசத்துக்கு
  யார் பதில் தரபோகிறர்கள்.

  தர்மம் வெல்லும் என்கிற
  நம்பிக்கையோடு போராடி
  நசுக்கப்பட்டிருக்கிற என்னினத்துக்கு
  இனி யார் தருவார் விமோசனம்.

  கடவுள்களும்
  கைவிடப்பட்ட தேசமாயிற்று
  எம் அன்னை மண்.

  தங்கள் கவிதை
  களிம்பு தடவுகிறது
  என் ஆறாத ரணத்துக்கு.

  இப்போதைக்கு அது போதும்.

  தீபிகா
  theepikatamil.blogspot.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...