"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, November 16, 2011

அன்பு உள்ளங்களே உடல்நலம் சற்று தேறிவிட்டதுப்பா....

மனநலம் உடல்நலம் குன்றிய நிலையில் குவைத் வந்து சேர்ந்தேன். இந்த சில நாட்களில் கொஞ்சம் தேறிக்கொண்டிருந்த என் உடல்நலம் கடந்த மூன்று நாட்களிலும் இதோ இப்ப இந்த நிமிடமும் அதிகமாக நலிவடைந்ததால் என்னால் பதிவுகள் இடமுடியாத நிலையில் இருக்கிறேன்.

என்னை மன்னித்து பொறுத்துக்கொள்ளுங்கள்......

இறைவன் துணையுடன் உடல்நலம் மனநலம் சரியானப்பின் கண்டிப்பாக வந்து பதிவுகள் தொடர்வேன். அதுவரை என்னை மன்னிப்பீர்களாக.... :(


உடல்நலம் கொஞ்சம் தேறினதும் கை பரபரத்தது வேறெதுக்கு பதிவர்களின் பதிவுகளை படித்து கருத்து எழுத.....  மீண்டு வரவைத்த அன்பு உள்ளங்களின் அன்பை கண்டு மனம் நெகிழ்கிறது..... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா எல்லோருக்குமே....

34 comments:

 1. முன்னைவிட அதிக உடல் பலமும் மன நலனும் பெற
  உங்களுக்காக குடும்பத்துடன்
  இறைவனைப் பிரார்த்திதுக் கொள்கிறோம்
  நல்லதே நடக்கும்
  குறிப்பாக தங்களைப் போன்ற நல்லவர்களுக்கு...

  ReplyDelete
 2. மஞ்சு,தங்களின் உடல் நலம்,மன நலம் ஆகியவற்றிற்காக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  ReplyDelete
 3. மஞ்சு, மனதுக்கு பிடித்த பாடல்களை கேளுங்கள், ஏதாவது இசை மீட்ட தெரியுமானால் மனம்விட்டு இசையுங்கள் மனமும், உடலும் சரியாகும், உங்களுக்காக பிரார்த்திக்குறேன், நீங்கள் மீண்டும் நலத்துடன் திருப்ப வருவீர்கள் அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நீங்கள் முன்பைவிட வலிவுடன் தேறி வந்து நிறைய சிக்ஸர்கள் அடிப்பீர்கள். அதற்கான வலுவை உஙகளுக்கு அன்னை மீனாட்சி தருவாள். நான் வேண்டுகிறேன்...

  ReplyDelete
 5. விரைவில் உடலும் மனமும் நலமடைந்து திரும்புவீர்கள் சகோதரி..

  ReplyDelete
 6. விரைவில் நல்லபடியாக
  உடல் நலமும்,
  மன நலமும் தேறிட்
  திரும்பிடப்
  பிரார்த்திக்கிறேன்.vgk

  ReplyDelete
 7. நீங்கள் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகின்றேன்

  ReplyDelete
 8. அன்பின் ரமணி சார்,
  அன்பின் ராம்வி,
  அன்பின் நாஞ்சில் மனோ,
  அன்பின் கணேஷ்,
  அன்பின் குணசீலன்,
  அன்பின் வை கோபாலக்ருஷ்ணன் சார்,
  அன்பின் சம்பத் குமார்

  அன்பு நிறைந்த உள்ளங்களின் கனிந்த வரிகளை காணும்போது கண்கள் நிறைகிறது...

  மனநலம் குன்றினால் உடல்நலம் இத்தனை வீழ்ச்சி அடையும் என்று தெரியவில்லை.

  இறைவன் துணையுடன் எழவே முயற்சிக்கிறேன்... உங்கள் எல்லோரின் அன்பிலும் பிரார்த்தனைகளிலும் இறைவன் என் மனதை சாந்தப்படுத்தி உடல்நலத்தை வலுவாக்கி உங்கள் எல்லோரிடமும் என்னை மீண்டும் இணையவைக்க இறைவனிடம் என் பிரார்த்தனைகளும்பா.....

  அன்பு நிறைந்த எல்லோரின் பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

  நிறைந்த கண்ணீருடன்....

  ReplyDelete
 9. அன்புநிறை சகோதரி,
  கலக்கம் வேண்டாம்...
  மனமது புண்பட்டால் உடலது வெறும் தோகையே...
  நல்ல மனது உள்ள தங்களைப் போன்ற நல்லோர்கள்..
  நிச்சயம் நன்றாக இருக்க வேண்டும்..
  உங்களின் துன்பம் நீங்கி
  மீண்டும் நல்ல உறுதியுடன் வலைத்தளங்களில் எதிர்பார்க்கிறோம்

  இறைவனிடம் அனுதினம் தங்களுக்காக
  பிரார்த்தனை செய்கிறேன்..

  ReplyDelete
 10. தாங்கள் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் ..

  ReplyDelete
 11. அன்பு சகோதரி மஞ்சு பாஷினி,

  தைரியமாக இருங்கள்.மேலும் உடல்,மன பலத்துடன் நொய்நொடிகளின்றி ஆரோக்கிய வாழ்வு பெற எல்லாம்வல்ல இறைவனிடன் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.விரைவில் எங்களுடன் வலை உலகில் சந்தோஷமாக உலா வருவீர்கள்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறோம்!

  ReplyDelete
 13. விரைவில் நலம் பெறவும், நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் பதிவுகள் எழுதவும் எனது பிரார்த்தனைகள்....

  ReplyDelete
 14. அக்கா மீண்டு வர அன்புச் சகோதரனின் பிரார்த்தனைகள்..!

  ReplyDelete
 15. மீண்டும் உடல் நலம் நன்கு தேறி பதிவு எழுத வாங்க. நாங்க வெயிட் பன்ரோம்.

  ReplyDelete
 16. வணக்கம் சகோதரி!
  அப்படி என்ன அவசரம்? உடம்பை நன்றாக தேற்றிவிட்டு பதிவு எழுத வாருங்கோ.. காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 17. அன்புச் சகோதரி
  முதலில் மனநலம் பெறுங்கள்
  தானே உடல் பெற்றுவிடும்
  அந்த வேங்கடவன்
  துணையிருப்பான்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. Hi Manjusubhashini
  Wishing that each day brings your renewed strength, brighter times and a healthier, happier you

  I’m confident you’ll win again.
  Hang in there, and you’ll see.
  You’ll be back on top in no time,
  Tackling life courageously.

  im at work now so i cant type in tamil.sorry

  Take care

  ReplyDelete
 19. விரைவில் நலமடைவீர்கள். ஆண்டவன் அதற்கான சக்தியை உங்களுக்கு அருளுவான். தைரியமாக இருங்கள்.

  ReplyDelete
 20. அன்பின் மகேந்திரன்,
  அன்பின் ராஜா,
  அன்பின் ஸாதிகா,
  அன்பின் ஜனா,
  அன்பின் வெங்கட் நாகராஜ்,
  அன்பின் நிரோஷ்,
  அன்பின் லக்‌ஷ்மிம்மா,
  அன்பின் காட்டான் சகோ,
  அன்பின் ராமானுசம் ஐயா, உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது ஐயா?
  அன்பின் அவர்கள் உண்மைகள் சகோ,
  அன்பின் ரசிகன்,

  எல்லோரின் அன்பு பிரார்த்தனைகளும் நீங்கள் எல்லோரும் தரும் ஆத்மபலமும் இறைவன் விரைவில் எல்லாம் சரியாக்கி திரும்ப உங்களிடம் இணைய அருள் புரிவார் என்று நம்புகிறேன்.....

  உள்ளம் நிறைந்த அன்பினை தரும் எல்லோருக்குமே என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா....

  ReplyDelete
 21. நல்ல உள்ளம் வாடிவிடக் கூடாது என்பதால் நான் இன்றும் உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன்
  இங்கு நான் படித்ததை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


  மனம் தளராதே!

  செல்லும் வழியெங்கும் முட்கள் இருக்கலாம். சேற்றுச் சகதிக்குள் உறன்கவும் வரலாம்.
  நீ! நடக்கும் பாதையெங்கும் நரிகள் வரலாம். நாரதர் பலர் உன்னை நளினம் செய்யாலாம்.

  தோல்விகளே தொடர்கதையாய் தொடர்ந்து வரலாம்.காயங்காளால் காயம் கனமும் ஆகலாம்.
  நீ! நம்பி இருந்தோர் நயவஞ்சகர் ஆகலாம். நாயே, என்றும் உன்னை நடு த்தெருவில் ஏசலாம்.

  குறவர் கூட்டம் உன்னை " குத்தி" காட்டி பேசலாம்.குறைகள் கண்டு உன்னை குரைத்தும் காட்டலாம்.
  நீ! செய்யும் காரியங்கள் செய்மையற்றும் போகலாம். செஞ்சோற்றுக் கடன் செய்வாரற்றும் போகலாம்.

  தந்தையே உன்னை தட்டிக் கழிக்கலாம். தாயும் உன்னை ஏட்டி உதைகலாம்.
  நீ! கடக்கும் கடவையெங்கும் கற்கள் கிடக்கும். காண்பவை எல்லாம் கடினமாய்த்தோன்றலாம்.

  சுற்றம் கூட சுயநலம் ஆகலாம். சுருதியில்லை ஏன்று சுடு சொல்லும் பேசலாம்.
  நீ! சுமக்கும் சுமையே காலனும் ஆகலாம். காலமும் உனக்கு கணைகள் வீசலாம்.

  பள்ளியை விட்டு தள்ளியும் வரலாம். பாதைகள் தோறும் பள்ளங்கள் இருக்காலாம்.
  நீ! படிக்கும் படிப்பும் பயனற்றும் போகலாம். அடிமேல் அடிவாங்கி அனாதையும் ஆகலாம்.

  நினைப்பவை யாவும் நிரந்தரமற்றும் போகலாம். நிழலே உன்னை நிந்தனை செய்யாலாம்.
  நீ! நிற்கும் இடத்திலும் புதர்கள் தோன்றலாம். நிர்வாணம் தான் உன் ஆடையும் ஆகலாம்.

  பார்க்கும் இடம் எங்கும் பருந்துகள் பறக்கலாம். பகலில் கூட பகலவன் மறையலாம்.
  நீ! படு க்கும் படு க்கையும் முள்ளாய் மாறலாம். பஞ்சமே உந்தன் வாழ்கையாய் மாறலாம்.

  நஞ்சு மனிதர்கள் உன்னை நகைத்தும் காட்டாலாம். பிஞ்சு மழலையும் நஞ்சைக் கக்கலாம்.
  நீ! கற்றவை யாவும் கானல் ஆகலாம். கடக்க கடக்க கானகமே கணாலாம்.

  இவையென்ன எவைவரினும் வரட்டு ம்.....
  ஆனால் மனம் தளராதே!

  தோழி சுபாஷினி நான் சொல்கிறேன், நம்பு உன்னால் முடியும்,
  உணர்ந்து அறிவது பல, வாழ்கையில் படிப்பது சில. . . உன்னால் முடிந்தவரை நீ போராடினாய், போராடுவாய்
  மனம் தளராதே. . நட்புடன் நான் வருகிறேன்
  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 22. அடடா! வருத்தமா இருக்குங்க. நலமடைய வாழ்த்துக்கள். எதுவுமே நிலையானதில்லை. துன்பங்களும் தான். தளறாமல் இருங்கள். விடிந்தால் தெளிந்துவிடும்.

  ReplyDelete
 23. அன்புள்ள மஞ்சு அக்கா.........


  என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு...

  இபானு கூட இப்படி சொல்லமாட்டான்...

  நீங்க இப்படியெல்லாம சொல்லக்கூடாது... எல்லாம் சரியா போகும் விரைவில்.. இன்னும் 4 மாதம் கண்மூடி கண் திறந்தா காணாமல் போய்விடும்...

  நாங்க இருக்கிறோம்... மனக்கவலை எதற்கு...

  காலம் பிறரை நமக்கு உணர்த்தும்...
  அதே காலம் பிறருக்கு நம்மை உணர்த்தும்....

  ReplyDelete
 24. அன்பின் மதுரைத்தமிழன்....

  சகோ தங்களின் வரிகள் நின்று நிதானிக்கவைக்கிறது..... பற்றற்ற தன்மையுடன் இருந்துவிட்டால் என்றும் வாழ்க்கையில் இன்னல்கள் இல்லை என்பதை உணர்த்துகிறது.... இறையிடம் பற்று வைத்தால் மோக்‌ஷம் முக்தி சத்தியம்... ஆத்மபலம் பெற இந்த வரிகள் எனக்கு ரொம்ப அவசியமாகிறது.....

  மனதை ஆறுதல்படுத்திக்கொள்கிறேன் என்று இன்னமும் என்னை அடைத்துக்கொண்டு இருட்டில் இருக்காதே என்று சொன்ன மதுரை தமிழன் சகோவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்பா...

  ReplyDelete
 25. விடிந்தது என்று நம்புகிறேன் அப்பாதுரை...

  அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete
 26. வாசா சௌக்கியமா? நல்லது நடக்கட்டும் உனக்கு இறைவன் அருளால்... அம்மாவிடம் என் வணக்கத்தை சொல்லுடா.....

  ReplyDelete
 27. பூரண உடல்நலம் பெற்று விட்டீர்களா...ஊரிலிருந்து திரும்பிய சோகமா (ஹோம் சிக்)? பதிவுலகைச் சுற்றி வாருங்கள். அதுவே மாறுதலாய் அமைந்து இழந்த உற்சாகத்தை மீட்டுத் தரும்! விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. இறைவன் துணையுடன் உடல்நலம் மனநலம் சரியானப்பின் கண்டிப்பாக வந்து பதிவுகள் தொடர்வேன்./

  காலம் ஒருநாள் மாறும்..
  கவலைகள் யாவும் தீரும்..

  வருவதை எண்ணி மீண்டுவரப்பிரார்த்தனைகள்..
  மனக்கவலைகள் மாயமாய் மறையும்..

  ReplyDelete
 29. சரியா சொன்னீங்க ஸ்ரீராம்..

  அன்பும் பிரார்த்தனையும் மனம் நெகிழவைக்கிறது.... ஆரம்பிச்சிட்டேனே ரமணி சார் கவிதை படிச்சிட்டு கருத்தும் போட்டுட்டேன்பா...

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம். தங்களும் தங்கள் குடும்பமும் என்றும் நலமுடன் இருக்க இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள்பா....

  ReplyDelete
 30. மனம் நிறைந்த நன்றிகள் ராஜேஸ்வரி.... உங்களை ஆன்லைன்ல பார்க்கும்போதெல்லாம் பேச முற்படுவேன். ஆனால் எங்கே உங்களை தொந்திரவு செய்கிறேனோ என்று அமைதி ஆகிவிடுவேன்பா..

  தாங்கள் தங்கள் குடும்பம் என்றும் நலமுடனிருக்க இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள்பா.

  ReplyDelete
 31. அக்கா விரைவில் நல்லபடியாக
  உடல் நலமும்,
  மன நலமும் தேறிட பிரார்த்திக்கிறேன்

  தம்பி யூஜின்
  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 32. எங்களை எல்லாம் உற்சாக உச்சத்தில் வைக்கும் உங்களுக்கு எப்பவுமே நலக் குறைவு வராதே..

  இந்த இடைவெளி மீண்டும் புத்துருக் கொண்டு வருவதற்கே.

  ReplyDelete
 33. நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
  மீண்டு வருக.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...