"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, January 2, 2012

நான் எப்படி இருப்பேன்?நான் எப்படி இருப்பேன்?
நான் என்ன தருவேன்?
அழகாய் இருப்பேனா?

அமைதியுடன் இருப்பேனா?
மனிதம் வளர்ப்பேனா?

அண்டை நாடுகளுடன்
வம்பு வளர்க்காது
நட்பு கொள்வேனா?

ஊழல் இல்லா அரசியல் 
அமைப்பேனா?
கலகம் மறைந்து
அமைதிப்பூங்காவாக இருக்க
என் பங்கு எத்தனை?

என்னை வரவேற்பதில் தான்
எத்தனை எத்தனை ஆசை
என்னென்ன வார்த்தைகள்
எத்தனை வாழ்த்துகள்
எத்தனை கவிதைகள்

கவிஞர்களின் கவிதைவேட்டை
இன்னமும் தொடர்ந்திருக்க….

அரசியல்வாதிகளின் நமுட்டுச்சிரிப்பில்
எதிர்க்காலம் தொய்வுற்றிருக்க….

இன்றாவது ஒருவேளை சோறு
கிடைக்குமா என ஏழைகள் காத்திருக்க….
இந்தவருடம் எனக்கு ஏழரைச்சனி
தொடங்குதே என்று சிலர் அங்கலாய்க்க….

ஹப்பாடா இந்தவருடத்துடன்
ஒழிந்தது என்னைப்பிடித்து
இதுநாள்வரை ஓ(ஆ)ட்டிய சனி
என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட….

மறைந்தவரை நினைவுக்கொண்ட
நல்லவர் சிலர்….

மனதில் இருந்த கசப்பெல்லாம்
மறையாதா என்ற வேண்டுதலோடு
ஒருசிலர்…

தட்டில் விழும் காசு
பையன் படிப்புக்கு ஆகுமா
ஏழை பூசாரி….

குடிக்காமல் வருவானா 
இன்றொருநாளாவது உலைகொதிக்குமா
குடிகாரனின் மனைவியின் கண்ணீர் கேள்வி….

மனிதர்களின் ஆட்டம் போதாதென்று
இயற்கையும் ஆடிய ஊழித்தாண்டவம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை
சில தெரிந்து
பல மறைத்து......


ஈழத்து மக்களின் கண்ணீர்காயாத
ரத்தநிலமாகிப்போய்
இன்னமும் இருக்கும் துளி உயிரிலும்
ஈழம் மலரும் என்ற‌
நம்பிக்கை விளக்கெரிந்துக்கொண்டிருக்க….

இன்றோடு நடந்தவை எல்லாம்
கடந்து போன அனுபவ‌ங்களாக
தீண்டிவிட்டு சென்ற கருநாகமாக
தூண்டிவிட்டு சென்ற வில்லன்களாக
எப்படியோ முடிந்தது 2011….

இனி வரும் நான்….
எப்படி இருப்பேன்?

என்ன கொண்டுவந்து தருவேன்?
நல்லதை செய்வேனா?
புரட்சியை விதைப்பேனா?

அரசியலில் தூய்மையை ஆக்ரமித்து
கொள்ளையர்களை கொன்று குவிப்பேனா?

என்னை ஆரவாரம் செய்து
ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
அடியெடுத்து வைக்கிறேன்....

92 comments:

 1. அப்ப்பப்பா
  நான் எப்படி இருப்பேன் என ஆரம்பித்து
  சமூகத்தில் உள்ள அத்தனை நிதர்சன பிழைப்பு மற்றும்
  நிலைப்பு நிலைகளை ஒருசேர சொல்லிட்டீங்க அக்கா...

  புதுவருடம் உங்களுக்கு புதுத் தெம்பைக் கொடுக்கட்டும்.
  ஆரம்பியுங்கள் உங்களின் அடுத்த அத்தியாயத்தை...

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி நலமா..!?
  அவர் வருகையை ஆர்பாட்டமாக வரவேற்கும் நாம் அவர் நல்லதையே செய்வார் என்று நம்புவோம்.. நம்பிக்கைதானே வாழ்கை..? அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி சகோதரி..!!

  ReplyDelete
 3. அருமையான கவிதை. உங்கள் வருகையை ஆர்பாட்டமாக வரவேற்கும் உங்கள் தோழர்.  ஒவ்வொரு வருடமும் நண்பர்களுடன் சேர்ந்து ஆரவாரமாக வரவேற்கும் நான் இந்த வருடம் மனது சரியில்லையததால் தனியாக ப்திய ஆண்டை மெளனமாக வரவேற்தேன் நல்லது செய்தாலும் நன்றி இல்லாத உலகத்திற்கு என்ன செய்து என்னபயன்? அதனால் எதையும் எதிர்பார்க்காமல் வருவது நல்லதோ கெட்டதோ எதையும் சந்திக்கும் மனவலிமையோடு இந்த ஆண்டை எதிர் நோக்கி உள்ளேன். இந்த ஆண்டு நான் வலைத்தளத்தில் எதிர்பார்ப்பது உங்களை போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதுதான். எழுதுங்கள் நான் தொடர்கிறேன்

  ReplyDelete
 4. த்ங்களது வருகையைப் போலவே
  புத்தாண்டும் மகிழ்வோடு வலுவோடு
  நல்ல வளத்தோடு உறுதியாக விளங்கும்
  பதிவாயினும் பின்னூட்டமாயினும்
  மிக ஆழ்ந்தும் பரந்து விரிந்த பார்வையோடும்
  தருகிற உங்களிடம் நிறையப் பெற்றுக் கொள்ள
  பதிவுலகும் காத்திருக்கிறது என்னைப் போலவே
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 5. நம்பிக்கையோடு வந்திருக்கும் ‘அவர்’ நல்ல விஷயங்களை வழங்குவார் என்று பொறுத்திருப்போம். நம்பிக்கை தானே வாழ்க்கை! அழகான, ரசிக்கத் தக்க வார்த்தைகளால் கவிதைமாலை தொடுத்திருக்கீறர்கள் தோழி! அருமை!

  ReplyDelete
 6. நல்ல எதிர்பார்ப்புகள் .நல்லதே நடக்கும் என நம்புவோம்.ஒருவேளை
  நம்பிக்கைப் பொய்த்தாலும் இவ்வாண்டு , ...வரும் ஆண்டு உள்ளதே என
  பொறுமை காப்போம். புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. //ஊழல் இல்லா அரசியல்
  அமைப்பேனா?
  //

  இது பேராசை

  ReplyDelete
 8. என்னை ஆரவாரம் செய்து
  ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
  நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
  நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
  மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
  அடியெடுத்து வைக்கிறேன்....


  நம்பிக்கைதானே வாழ்க்கை.

  ReplyDelete
 9. என்னை ஆரவாரம் செய்து
  ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
  நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
  நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
  மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
  அடியெடுத்து வைக்கிறேன்...

  நம்பிக்கைப்பகிர்வு.. மகிழ்ச்சியுடன் அருமையான வரவேற்புக்கவிதைக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 10. நம்பிக்கைதானே வாழ்க்கை!

  சென்றது இனித்திரும்பாது..

  நம்பிக்கைவிதை விதைத்து
  அன்பு நீர்பாய்ச்சி
  சந்தோஷத்தை அறுவடை செய்வோம் புத்தாண்டில்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. என்னை ஆரவாரம் செய்து
  ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
  நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
  நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
  மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
  அடியெடுத்து வைக்கிறேன்..//

  வாருங்கள் வாருங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறேன்...!

  ReplyDelete
 12. தட்டில் விழும் காசுபையன் படிப்புக்கு ஆகுமாஏழை பூசாரி//


  மனசு வலிக்கச்செய்யும் வரிகள்...

  ReplyDelete
 13. நடந்தவை கடந்து சென்றிருக்க நடக்கவிருப்பவை நல்லவையாய் இருக்கட்டும்....புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. எல்லோரின் வரவேற்ப்புக்கும் பதில் கொடுத்தது போல் இருக்கு நல்ல இருக்கு

  ReplyDelete
 15. நல்லதே நடக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் 2012 ல் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.அப்படியே நடக்கும்.
  அருமையான கவிதை மஞ்சு.

  ReplyDelete
 16. வணக்கம் சகோதரி புத்தாண்டை வரவேற்க நாம் பல கவிதைகள் எழுதியிருப்போம் மாறாக ஒரு
  புத்தாண்டே எம் எதிர்பார்ப்பினைக் கருத்தில்க்கொண்டு
  தன்னம்பிக்கையுடன் பிறப்பதுபோல்
  மிகவும் வித்தியாசமான முறையில் மிகச் சிறப்பாக கவிதை வடித்த தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு
  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அழகிய கவிதைக்கு உரித்தாகட்டும் .

  ReplyDelete
 17. அட இந்த பாணி நல்லா இருக்கு சகோ...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.... [நான் கொஞ்சம் தாமதமோ!]

  ReplyDelete
 18. மனதில் உள்ள அத்தனையும் கொட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளீர்கள். நன்று நன்று. அதே போன்று நல்லது செய்யட்டும் புத்தாண்டு. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 19. மனதில் உள்ள அத்தனையும் கொட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளீர்கள். நன்று நன்று. அதே போன்று நல்லது செய்யட்டும் புத்தாண்டு. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 20. மனதில் உள்ள அத்தனையும் கொட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளீர்கள். நன்று நன்று. அதே போன்று நல்லது செய்யட்டும் புத்தாண்டு. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 21. மனதில் உள்ள அத்தனையும் கொட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளீர்கள். நன்று நன்று. அதே போன்று நல்லது செய்யட்டும் புத்தாண்டு. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 22. இவ்வளவு தானா, இன்னும் இருக்குதா?
  அத்தனையும் கொட்டி எழுதியிருக்கீங்க. உங்கள் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறட்டும்.

  ReplyDelete
 23. உங்கள் (2012) வருகையையும் உங்கள் ( மஞ்சு) வருகையையும் ஆவலுடன் வரவேற்கிறேன் .

  ReplyDelete
 24. அன்பு அக்கா..
  உங்களுக்கு இந்தவருடமும் இனிதே அமைந்திட வாழ்த்துகிறேன்..

  "நாம் நினைப்பதும் நடப்பதும்
  நல்லபடி அமைந்து விட்டால்.
  நலமாய் அமையும் இந்த வருடமும்.."

  அன்பு தம்பி..தேனி சூர்யா..

  ReplyDelete
 25. மிகவும் அழகான நம்பிக்கையளிக்கும் கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  என் முதல் படைப்பான “இனி துயரம் இல்லை” படித்துவிட்டு மிகவும் பெரியதொரு உணர்ச்சிபூர்வமான பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  // இராஜராஜேஸ்வரி said...
  நம்பிக்கைதானே வாழ்க்கை!

  சென்றது இனித்திரும்பாது..

  நம்பிக்கைவிதை விதைத்து
  அன்பு நீர்பாய்ச்சி
  சந்தோஷத்தை அறுவடை செய்வோம் புத்தாண்டில்.. வாழ்த்துக்கள்..//

  இவர்களின் கருத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதையே நானும் வழிமொழிகிறேன்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 26. நம்பிக்கைதானே வாழ்க்கை! தங்களின் உயர்வுகளையே நானும் பிரதிபலிக்கிறேன். வாழ்த்துக்களுடன் கவிப்ரியன்.

  ReplyDelete
 27. சென்ற கமெண்டில் தற்செயலாக பிழை ஏற்பட்டுவிட்டது. 'உயர்வுகளையே' என்பது 'உணர்வுகளையே' என்று வந்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 28. அன்பின் சகோதரர் (காட்டான்)

  உண்மையேப்பா.. நம்பிக்கையே வாழ்க்கை...

  அன்பு நன்றிகள் தங்கள் வரவிற்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்..

  ReplyDelete
 29. அன்பின் சகோதரர் (அவர்கள் உண்மைகள் )

  நான் சோர்ந்தபோது நம்பிக்கையுடன் எனக்கு நீண்ட வரிகளால் மீண்டு எழவைத்தீர்... உங்கள் மனதில் இருக்கும் வருத்தம் என்னவென்று தெரியாது. ஆனால் எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் நீங்கள் செய்யும் எந்த ஒரு நல்லவை பற்றியும் நீங்களே நினைவுக்கொள்ளவே மாட்டீர்கள்.. ஆனால் உங்கள் நல்லவை மட்டும் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கும். நன்றிக்கெட்ட உலகத்திற்கு செய்து என்ன தான் பயன் என்று சொல்லிக்கிட்டே இன்னொரு பக்கம் நீங்க நல்லவை செய்துக்கொண்டே தான் இருப்பீங்க... ஏன்னா அது தான் உங்க இயல்பு....

  நல்லது நல்லவை அல்லாது எதையுமே சமநோக்குடன் பார்க்கும் பக்குவம் நமக்கு வந்துட்டால் நமக்கு நாமே கடவுள்...

  இப்ப வேலைப்பளுவும் அதிகம் க்ளோசிங் இயர் என்பதால், அதனுடன் அடிக்கடி உடல்நலக்குறைவு...

  முயற்சிக்கிறேன் எழுத... மனம் தான் எப்பவும் ஆக்டிவாக இருக்கிறது. உடல் ஒத்துழைப்பதில்லை....

  இந்த வருடம் மட்டுமல்லாது கண்விழிக்கும் ஒவ்வொரு நாளுமே உங்களுக்கு நல்லதே நடக்கும்பா.

  அன்பு நன்றிகள்பா..

  ReplyDelete
 30. அன்பின் ரமணி சார்,

  தங்கள் ஆசியும் அன்பும் என்றும் என்னை வழி நடத்தட்டும் நல்வழியில்...

  வேலைப்பளுவும் (க்ளோசிங் இயர்) உடல்நலக்குறைவு அடிக்கடி ஏற்படுவதால் பதிவுகளில் தொய்வு ரமணி சார்...

  அன்பு நன்றிகள் ரமணி சார் தங்களின் வரவுக்கும் ஆசி நிறைந்த பின்னூட்டத்திற்கும்.

  ReplyDelete
 31. அன்பின் கணேஷா,

  கரெக்ட்.... நம்பிக்கையோடு வரவேற்போம் இவ்வருடம் நல்லவைகளையே எல்லோருக்கும் வாரி வழங்கட்டுமென்று....

  அன்பு நன்றிகள்பா தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும்...

  ReplyDelete
 32. அன்பு வரவேற்புகள் ராஜப்பாட்டை ராஜா...

  ReplyDelete
 33. அன்பின் ஸ்ரவாணி,

  வாவ், அருமையான பாசிட்டிவ் தாட்....

  ஆமாம்பா... நம்பிக்கையோடு முயல்வோம் நல்லதைப்பெற என்றும்...

  அன்பு நன்றிகள் தங்களின் வரவேற்புக்கும், நம்பிக்கை தரும் வாழ்த்துக்கும்...

  ReplyDelete
 34. அன்பின் லக்‌ஷ்மிம்மா,

  தங்கள் அன்பு வரிகள் மனதை நெகிழவைக்கிறது...

  அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு லக்‌ஷ்மிம்மா..

  ReplyDelete
 35. அன்பின் ராஜராஜேஸ்வரி,

  நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்துகிறேன்பா...

  அன்பு நன்றிகள் தங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும்...

  ReplyDelete
 36. அன்பின் நாஞ்சில் மனோ,

  அன்பு நன்றிகள் தங்களின் மனம் நிறைந்த அன்புக்கும், கருத்து பகிர்வுக்கும்...

  ReplyDelete
 37. அன்பின் ஸ்ரீராம்,

  இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்ற தங்கள் அன்பு ஆசிக்கு என் அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete
 38. அப்பப்பா..
  எத்தனை அருமையான சிந்தனைகள்..
  எத்தனை ஆழமான வரிகள்..
  எத்தனை உள்ளார்ந்த உணர்வுகள்..
  வாழ்த்துகள்..

  ReplyDelete
 39. என்னை பொறுத்தவரை கடந்த ஆண்டு
  என்னை சோகம் வறுத்தெடுத்த ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
  நிறைய இழப்புகள், நிறைய சோதனைகள்.
  அதே நேரத்தில் சில நேரங்களில்
  சில மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டேன்.
  அதற்கு நன்றி சொல்வதா..? இல்லை மீண்டும் வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.
  இருப்பினும் இந்த ஆண்டு எப்படி செல்லப் போகிறது என்பது ...
  பொறுத்திருந்து பார்கின்றேன்..

  ReplyDelete
 40. அன்பின் சசிகலா,

  அன்பு நன்றிகள்பா தங்களின் வரவிற்கும் கருத்துக்கும்...

  ReplyDelete
 41. அன்பின் ராம்வி,

  அன்பு நன்றிகள்பா தங்கள் கருத்துக்கு...

  ReplyDelete
 42. அன்பின் அம்பாளடியாள்.

  அன்பு நன்றிகள்பா தங்களின் வரவுக்கும் கருத்துக்கும்...

  ReplyDelete
 43. அன்பின் வெங்கட் நாகராஜ்,

  இந்த வருடம் முழுதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்பா....

  அன்பு நன்றிகள் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்...

  ReplyDelete
 44. அன்பின் வேதாம்மா,

  அன்பு நன்றிகள் நான்குமுறை கருத்திட்டமைக்கு....

  ReplyDelete
 45. அன்பின் அப்பாதுரை,

  அன்பு நன்றிகள்பா... உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

  ReplyDelete
 46. அன்பின் சிவகுமாரன்,

  அன்பு நன்றிகள்பா தங்கள் கருத்துக்கும் வரவுக்கும்...

  ReplyDelete
 47. அன்பின் பாஸ்கரா,

  எப்படி இருக்கேப்பா? ஊருக்கு வந்தப்பின்னும் ஒரு தகவலும் இல்லை...

  அன்பு நன்றிகள் பாஸ்கரா...

  ReplyDelete
 48. அன்பின் வை. கோபாலக்ருஷ்ணன் சார்,

  அன்பு நன்றிகள் தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்....

  ReplyDelete
 49. அன்பின் கவிப்ரியன்,

  அன்பு நன்றிகள்பா தங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும்... உணர்வுகள் என்றே எடுத்து படித்தேன்...

  ReplyDelete
 50. அன்பின் அட்வகேட் ஜெயராஜன் சார்,

  அன்பு வரவேற்புகள் தங்களுக்கு...

  நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்போமே...

  துன்பங்கள் எல்லாம் அனுபவங்களாக
  நல்லவைகள் எல்லாம் நம் முன்னேற்றங்களாக எடுத்துக்கொள்வோம் சார்...

  அன்பு நன்றிகள் ஜெயராஜன் சார்...

  ReplyDelete
 51. அன்பின் இனிய சகோதரி!
  நலமா!
  இடையில் நீண்ட நாட்கள் ஓடிவிட்டன! காலம் கடந்து வந்தது
  வருந்தத் தக்கதே
  அடிக்கடி உடல் நலக்குறை!
  மேலும் பத்து தினங்களுக்கு மேலாகியும் பழுதடைந்த என்கணிணீ
  இன்னும் சரியாகவில்லை
  மடிக்கணிணீ இயக்கிப் பழக்க மில்லாத காரணத்தால் தட்டச்சு செய்ய
  தடுமாற்றம்!

  பொறுத்தருள்க!
  கடந்த ஆண்டுக்கு விடையும் வரும்
  ஆண்டுக்கு வரவேற்பும் சொல்லியுள்ள
  கவிதை அருமை!
  புத்தாண்டு+பொங்கல்
  வாழ்த்துக்கள்!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 52. அன்பின் இனிய சகோதரி!
  நலமா!
  இடையில் நீண்ட நாட்கள் ஓடிவிட்டன! காலம் கடந்து வந்தது
  வருந்தத் தக்கதே
  அடிக்கடி உடல் நலக்குறை!
  மேலும் பத்து தினங்களுக்கு மேலாகியும் பழுதடைந்த என்கணிணீ
  இன்னும் சரியாகவில்லை
  மடிக்கணிணீ இயக்கிப் பழக்க மில்லாத காரணத்தால் தட்டச்சு செய்ய
  தடுமாற்றம்!

  பொறுத்தருள்க!
  கடந்த ஆண்டுக்கு விடையும் வரும்
  ஆண்டுக்கு வரவேற்பும் சொல்லியுள்ள
  கவிதை அருமை!
  புத்தாண்டு+பொங்கல்
  வாழ்த்துக்கள்!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 53. அன்பின் ராமானுசம் ஐயா,

  தங்கள் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது?

  உடல்நலம் முதலில் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா....

  தங்கள் வரவுக்கும் அன்புக்கும் என் அன்பு நன்றிகள் ஐயா....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 54. உங்கள் வலை பூவுக்கு முதல் வருகை .......... அருமையான வரிகள்.

  ReplyDelete
 55. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய மனதிடம் கேட்டு மனசாட்சியோடு எதிர்கொள்ளவேண்டிய வருட வேண்டுதல் இது அருமை.

  ReplyDelete
 56. அன்பு வரவேற்புகள் ஹரணி சார்.. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சே...

  அன்பு நன்றிகள் ஹரணி சார்...

  ReplyDelete
 57. உங்கள் வருகையை எத்தனை பேர் வரவேற்கிறார்கள்................... நான் உங்கள் வலை பூவுக்கு புதியவன் நானும் உங்களை வரேவேற்பதில் மகிழ்ச்சி.....

  ReplyDelete
 58. நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
  நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
  மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
  அடியெடுத்து வைக்கிறேன்...

  நலமான நம்பிக்கைப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 59. Hope this will be a happy new year as everyone wished... Happy new year to you too... nice write up

  ReplyDelete
 60. எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
  என் மனம் கவர்ந்த பதிவினைத் தரும் தங்களுடன்
  பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
  தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. ரொம்ப நன்றி மஞ்சுபாஷிணி தேடிப் பிடிச்சு வந்து பிடிச்சதுக்கு கமெண்ட் போட்டதுக்கு..

  ReplyDelete
 62. மஞ்சுபாஷிணி மேடம். நலமா?

  வெகு நாட்களாய் காணவில்லை.

  ReplyDelete
 63. வலைச்சரம் மூலம் வந்தேன். கவிதை அருமை.நம்பிக்கை கொள்வோம்.

  ReplyDelete
 64. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 65. நான் அப்படியே தான் இருப்பேன் அக்கா.. என்ன ஹைட்டு மட்டும் தான் கொஞ்சம் கூடும் அவ்வளவு தான்..

  ReplyDelete
 66. அக்கா சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை அருமையான கவிதை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 67. அழகிய கவிதை 2012காக பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!

  ReplyDelete
 68. என் இனிய நட்பே... நலம்தானே... உங்கள் நலத்திற்காய் இங்கு என் பிரார்ததனைகள். நீண்ட நாட்களாய் உங்கள் எழுத்தைப் பார்க்காத வெறுமை இன்னும் நீண்டு கொண்டே...

  ReplyDelete
 69. http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

  RESPECTED MADAM,

  I WOULD LIKE TO SHARE AN AWARD WITH YOU.

  PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

  THANKING YOU,
  VGK

  ReplyDelete
 70. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 71. மஞ்சு ...உங்களுடன் அவ்வளவு பழகவில்லை ஆனால் ...ஒவ்வொருவர் கவிதைகளுக்கும் நீங்கள் அருமையாய் தரும் விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது .. ...மீண்டும் நீங்க அவ்வாறு வரணும் என்பது என் விருப்பம் ..

  ReplyDelete
 72. Respected Madam,

  I am very Happy to share an award with you in the following Link:

  http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

  This is just for your information, please.

  If time permits you may please visit and offer your comments.

  Yours,
  VGK

  ReplyDelete
 73. //
  இடி முழக்கம் said...
  உங்கள் வலை பூவுக்கு முதல் வருகை .......... அருமையான வரிகள்.

  இடி முழக்கம் said...
  உங்கள் வருகையை எத்தனை பேர் வரவேற்கிறார்கள்................... நான் உங்கள் வலை பூவுக்கு புதியவன் நானும் உங்களை வரேவேற்பதில் மகிழ்ச்சி....//

  அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் நண்பரே...

  ReplyDelete
 74. // இராஜராஜேஸ்வரி said...
  நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
  நான் (2012) நல்லதை தருவேன் என்ற‌
  மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
  அடியெடுத்து வைக்கிறேன்...

  நலமான நம்பிக்கைப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..//

  அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி ஹப்பா நல்லவேளை இந்த வருடம் முடியறதுக்குள்ள மீண்டு வந்துட்டேன்...

  ReplyDelete
 75. //
  அப்பாவி தங்கமணி said...
  Hope this will be a happy new year as everyone wished... Happy new year to you too... nice write up//

  thanks a lot pa....wish u the same too..

  ReplyDelete
 76. //Ramani said...
  எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
  என் மனம் கவர்ந்த பதிவினைத் தரும் தங்களுடன்
  பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
  தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்//

  அன்பு நன்றிகள் ரமணி சார்... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்...

  ReplyDelete
 77. //
  தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ரொம்ப நன்றி மஞ்சுபாஷிணி தேடிப் பிடிச்சு வந்து பிடிச்சதுக்கு கமெண்ட் போட்டதுக்கு..//

  :) அன்பு நன்றிகள் தேனம்மை..

  ReplyDelete
 78. //ஸாதிகா said...
  தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.//

  அன்பின் ஸாதிகா....

  அதிக நாட்கள் நான் இணையத்திற்கு வராததால் மிஸ் பண்ணிட்டேன்பா :(

  அன்பு நன்றிகள் என் அன்புத்தோழியே..

  ReplyDelete
 79. //

  சத்ரியன் said...
  மஞ்சுபாஷிணி மேடம். நலமா?

  வெகு நாட்களாய் காணவில்லை.//

  தடங்கலுக்கு வருந்துகிறேன் கண்ணா...

  இறைவன் அருளால் சௌக்கியம்பா.. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமா?

  ReplyDelete
 80. //விச்சு said...
  வலைச்சரம் மூலம் வந்தேன். கவிதை அருமை.நம்பிக்கை கொள்வோம்//

  அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் விச்சு....

  ReplyDelete
 81. //
  கூகிள்சிறி .கொம் said...
  நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு//

  இதைப்பற்றி இன்னும் எனக்கு அதிகப்படி தகவல்கள் தாங்கப்பா...

  அன்பு வரவேற்புகளுடன் கூடிய அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete
 82. //
  சிவஹரி said...
  நான் அப்படியே தான் இருப்பேன் அக்கா.. என்ன ஹைட்டு மட்டும் தான் கொஞ்சம் கூடும் அவ்வளவு தான்..//

  ரொம்ப சமர்த்துடா தம்பி....சௌக்கியமா இருக்கியாடா?

  ReplyDelete
 83. //ஹிஷாலீ said...
  அக்கா சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை அருமையான கவிதை
  வாழ்த்துக்கள்//

  அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் தங்கமே...

  ReplyDelete
 84. //
  பா.கணேஷ் said...
  என் இனிய நட்பே... நலம்தானே... உங்கள் நலத்திற்காய் இங்கு என் பிரார்ததனைகள். நீண்ட நாட்களாய் உங்கள் எழுத்தைப் பார்க்காத வெறுமை இன்னும் நீண்டு கொண்டே...//

  அன்பு நன்றிகள் தோழனே... என் நலத்திற்காக பிரார்த்திக்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் அன்பு வணக்கங்கள்...

  என் எழுத்துக்கள் மீண்டும் மீண்டு....

  ReplyDelete
 85. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

  RESPECTED MADAM,

  I WOULD LIKE TO SHARE AN AWARD WITH YOU.

  PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

  THANKING YOU,
  VGK//

  அன்பின் ஜீ கே சார்,

  உங்கள் அன்பை அறிந்தேன்.... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய அன்பு நன்றிகள் ஜீ கே சார்...

  ReplyDelete
 86. //
  ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம்பா எனக்கும்.... உங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அன்புத்தோழி//

  ReplyDelete
 87. //
  angelin said...
  மஞ்சு ...உங்களுடன் அவ்வளவு பழகவில்லை ஆனால் ...ஒவ்வொருவர் கவிதைகளுக்கும் நீங்கள் அருமையாய் தரும் விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது .. ...மீண்டும் நீங்க அவ்வாறு வரணும் என்பது என் விருப்பம் ..//

  உடல்நலம் சரி இல்லைஎன்றாலும் வந்துவிடுவேன்பா... மனசுல விழுந்த மரண அடியில் இருந்து மீண்டு வர ரொம்ப அதிக நாட்களாகிவிட்டது....

  உங்கள் அன்பு அழைப்பும், உங்கள் அன்பு வரவும் என் மனம் நிறைத்ததுப்பா...

  கண்டிப்பாக மீண்டும் மீண்டு....

  அன்பு நன்றிகள் அன்புத்தோழி...

  ReplyDelete
 88. //
  இராஜராஜேஸ்வரி said...
  Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR.//

  ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ரெண்டு தடவை வாழ்த்திட்டீங்களே ராஜேஸ்வரி... அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete
 89. //
  வை.கோபாலகிருஷ்ணன் said...
  Respected Madam,

  I am very Happy to share an award with you in the following Link:

  http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

  This is just for your information, please.

  If time permits you may please visit and offer your comments.

  Yours,
  VGK//

  மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய அன்பு நன்றிகள் ஜீகே சார்..

  ReplyDelete
 90. அருமை.இன்று இதனை வாசித்தேன்.கதம்ப உணர்வுகள் கவிதையில் பளிச்சிடுகிறதே!நம்பிக்கை தானே வாழ்க்கை.

  ReplyDelete
 91. //Asiya Omar said...
  அருமை.இன்று இதனை வாசித்தேன்.கதம்ப உணர்வுகள் கவிதையில் பளிச்சிடுகிறதே!நம்பிக்கை தானே வாழ்க்கை.//

  அன்பு வரவேற்புகள் ஆசியா உமர்... தங்கள் மேலான கருத்து பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...