"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, October 20, 2013

என்னை அம்மா ஸ்தானக்கு உயர்த்திய அன்பு அஞ்சான்....எங்கள் வாழ்க்கையில் என்னை அம்மா ஸ்தானத்துக்கு உயர்த்தி, பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு இவர் காத்திருந்தபோது ஆண் மகவாய் பிறந்து... எனக்கு ரொம்ப சந்தோஷம்.. தினமும் கீர்த்தி வினாயகருக்கு செய்த குங்குமார்ச்சனை வீண் போகவில்லை.. ஆண்குழந்தை தான் பிறக்கும் என்று என் கணவரின் அண்ணன் Hemanth Kumar அவ்ர்களிடம் பந்தயம் 100 ரூபாய் கட்டி... பிரசவம் முடிந்ததும் பாவா வந்து என்னிடம் சிரித்துக்கொண்டே பணம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது....

நான் கர்ப்பிணியாக இருந்தபோது அது வேண்டும் இது வேண்டும் என்று எதுவும் கேட்காமல் இருந்தாலும் எனக்கு என்ன வேண்டும் என்று ஆசையாக என் கணவர் Sampath Kumar Narayanaswamyவாங்கிக்கொடுத்த நாட்களை நினைவுக்கொள்கிறேன்.

பிரசவ வலி அதிகமானபோது ஆஸ்பிடலுக்கு கிளம்பு என்று அம்மா துரிதப்படுத்தினாலும் மொபைல் இல்லாத காலம் அது எங்க வீட்டுக்காரர் வந்தா தான் நான் கிளம்புவேன் என்று பிடிவாதம் பிடிக்க, என் அப்பாவும், தம்பியும் ஒவ்வொரு பக்கம் போன் செய்து பின் என் கணவருக்கு விஷயம் தெரிந்து அரக்கப்பறக்க வந்தப்பின்னரே நர்சிங்ஹோமுக்கு கிளம்பினேன்.

மனதில் ஆயிரம் பயம்... செத்துவிடுவேனோ? என் பிள்ளையை பார்க்காமல் என் மரணம் ஏற்பட்டுவிடுமோ... நிறைய பயம்... கீர்த்தி வினாயகரை விடாமல் பிரார்த்தித்துக்கொண்டு போய் அட்மிட் ஆயாச்சு...

என்னங்க நான் பிரசவத்தில் இல்லாம போயிட்டால்.. உடனே இவர் அழ.... அம்மா எல்லோரும் சேர்ந்து என்னைத்திட்ட.. மூன்று நாட்கள் 
என்னை வலியில் துடிக்கவைத்தான் 21.10.1990 அழகாக பொன் நிறத்தில் க்ருஷ்ண விக்ரஹம் போல குழந்தையை கொண்டு வந்து காட்டினார்கள். எத்தனை அழகு... பொன் நிறம்.... பிஞ்சு விரல்கள்... சிமிட்டி சிமிட்டி கண் மலர்த்திப்பார்த்தான் அஞ்சான்..தலை நிறைய்ய்ய்ய முடி...

நர்சிங்ஹோம்ல இருந்த ஒரு வாரமும் நர்ஸுகளுக்கு ராத்திரி வேலையை ஒழுங்காக செய்யவைத்தான் அஞ்சான்.  முழுக்க அழுகை... ஆலாபனை.. கச்சேரி தான்..

பிரசவத்தில் மட்டுமே படுத்திய என் தங்கம் என் மூத்தப்பிள்ளை இன்று வரை இந்த நொடி வரை என்னை தாயாய் பார்த்துக்கொள்கிறான்.. இன்று என் மகனுக்கு 24 வயது தொடங்குகிறது..

தாய் தந்தையர் செய்யும் நல்லவை கெட்டவை எல்லாமே பிள்ளைகளை போய் சேரும் என்று சொல்வார்கள்.

நானும் சரி என் கணவரும் சரி யாருக்கும் எந்த கெடுதலும் மனதால் கூட நினைக்கவில்லை. எனக்கு கெடுதல் செய்துக்கொண்டிருப்போரைக்கூட அமைதியாக மன்னிக்கிறேன். ஏனெனில் தண்டிப்பதோ வெறுப்பை உமிழ்வதோ நம் வேலையில்லை. தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும் எல்லாவற்றையும். என் பிள்ளைகள் என்றும் சௌக்கியமாக இருக்க எங்களின் நல்லவைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ஆசிகளாக..

இறைவன் கிருபையால் எல்லோரின் ஆசியால் சௌக்கியமாக, சந்தோஷமாக, நிறை ஆயுள், ஆரோக்கியம், மூத்தோர் ஆசிப்பெற்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஞ்சான் Vignesh Ram.

48 comments:

 1. நானும் சரி என் கணவரும் சரி யாருக்கும் எந்த கெடுதலும் மனதால் கூட நினைக்கவில்லை. எனக்கு கெடுதல் செய்துக்கொண்டிருப்போரைக்கூட அமைதியாக மன்னிக்கிறேன். ஏனெனில் தண்டிப்பதோ வெறுப்பை உமிழ்வதோ நம் வேலையில்லை. தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும் எல்லாவற்றையும். என் பிள்ளைகள் என்றும் சௌக்கியமாக இருக்க எங்களின் நல்லவைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ஆசிகளாக..//

  பெருமைக்குரிய இந்த நற் குணத்தைக் கண்டு
  மகிழ்ந்த நெஞ்சத்தில் இருந்து கசிந்த
  பிறந்த நாள் வாழ்த்து இதோ தங்கள் செல்லக்
  குழந்தைக்காக அக்கா .//

  பண்பில் சிறந்த பெற்றோரைப்
  பரிசாய்ப் பெற்ற இனியவனே
  என்றும் இறைவன் அருளாலே
  எல்லா நலனும் பெற்றிடுவாய் ....

  கல்விச் செல்வம் பொருட் செல்வம்
  கடல் போல் உன்னைச் சூழ்ந்திருக்க
  மண்ணில் உள்ள அனைவருமே
  மகிழ்வாய் உனக்கு வாழ்த்துரைப்பர் ..

  கண்ணே மணியே உன் வாழ்க்கை
  கனிவாய் இருக்கும் எந்நாளும்
  அன்னை தந்தை அடி பேணி
  அகிலம் இதனை வென்றிடுவாய் ...

  சொல்லுகிதமாய் பொருள் சேர்த்து வெறும்
  சொக்க வைக்கும் வரிகளல்ல இது என்
  உள்ளக் கமலம் மிக உணர்ந்து
  உனக்கென வடித்த வாழ்த்துப்பா ........

  வாழ்க வாழ்க மகனே உன்
  வாழ்க்கை சிறக்கும் என்றென்றும்
  நல்ல தாயின் வயிற்றில் பிறந்தவனே
  நன்றி சொல்வாய் அந்த இறைவனுக்கும் !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துகளுடன் கவிதை வரிகளும் அஞ்சானுக்கு ஆசிகளாகட்டும்பா. அற்புதமான கவிதை வரிகள்பா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

   Delete

 2. அன்பின் மஞ்சு பெற்ற
  அருமைக் குஞ்சு அஞ்சு அல்ல அஞ்சான்
  திரு விக்னேஷ் ராம் அவர்களுக்கு என் இனிய அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

   Delete
 3. கீர்த்தி விநாயகர் அருளாலும் எல்லோரின் ஆசியாலும் சௌக்கியமாக, சந்தோஷமாக, நிறை ஆயுள், ஆரோக்கியம், மூத்தோர் ஆசிப்பெற்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அன்புத்தங்கம் அஞ்சான் Vignesh Ram அவர்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துகள் ஆசிகளாகட்டும் அஞ்சானுக்கு. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

   Delete
 4. //பிரசவத்தில் மட்டுமே படுத்திய என் தங்கம் என் மூத்தப்பிள்ளை இன்று வரை இந்த நொடி வரை என்னை தாயாய் பார்த்துக்கொள்கிறான்.. இன்று என் மகனுக்கு 24 வயது தொடங்குகிறது..//

  அம்மா ஸ்தானக்கு உயர்ந்து 23 ஆண்டுகள் ஆகியுள்ள குழந்தை மஞ்சுவுக்கும் எங்கள் அன்பான இனிய நல் வாழ்த்துகள்.

  எல்லோரும் இன்றுபோல எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ பிரார்த்திக்கிறோம்.

  அன்புடன்

  கோபு அண்ணா + மன்னி


  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா மன்னி இருவருக்கும்.

   Delete
 5. வாழ்த்துக்கள் சகோதரியாரே. படிக்கவே மனம் மகிழ்கின்றது.
  தங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 6. எங்கள் அன்பு அஞ்சானுக்கு இனிய பிறந்த நாள்
  நல்வாழ்த்துக்கள்.
  இவ்வாண்டில்
  மாமியார் மெச்சும் மருமகள் அமையவும்
  இல்லம் வந்து விளக்கேற்றி வைக்கவும்
  அருள வேண்டுமாய்
  அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்...
  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார் தங்களின் ஆசிகளுக்கு. கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்சம் டைம் இருக்கு ரமணி சார்.

   Delete
 7. பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்துகளும் ஆசிகளும்.

  அஞ்சான் எதற்குமே அஞ்சாதவனாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா துளசிமேம்.. :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மேம் தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 8. இனிய நினைவுகள்... மிக்க மகிழ்ச்சி... தங்களின் செல்லத்திற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 9. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 10. உங்கள் மகன் (அஞ்சான் Vignesh Ram )
  என்றென்றும் சிறப்புடன் வாழ இதயம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 11. தெய்வம் உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறது உங்களின் மூலமாக அதனால் எல்லாம் நல்லவைகளும் அவர்களை தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ஆசிகளாக.

  ReplyDelete
 12. அஞ்சானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... பதிவு மனம் நெகிழ வைக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சரவணா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் சுகமுடன் செல்வங்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மனோ தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 14. ஐப்பசித் திங்களில்
  எனை
  ஆலிங்கனம் செய்திட
  ஆவாரம் பூபோல
  அழகாய் வந்தவனே!
  கருபூண்ட
  கார்மேகங்கள்
  செந்தாமரை மலர்களை
  பிரசவிக்கட்டும்
  பிரசவித்த மலர்கள்
  உன்மேல்
  வாழ்த்து மழையாய்
  பொழியட்டும்...
  ==
  வாழிய வளமுடன் மருமகனே..
  வாழிய பல்லாண்டு..
  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அற்புத கவிதையோடு ஆசிகளுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி.

   Delete
 15. இறைவன் கிருபையால் எல்லோரின் ஆசியால் சௌக்கியமாக, சந்தோஷமாக, நிறை ஆயுள், ஆரோக்கியம், மூத்தோர் ஆசிப்பெற்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஞ்சான் Vignesh Ram./

  மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு ..!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 16. அஞ்சானுக்கு 'எங்கள்' அன்பும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா “எங்கள் ப்ளாக்” ஆசிகளுக்கு.

   Delete
 17. தங்கள் அன்பு மகன் அஞ்சான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 18. இறைவன் அருளால் திரு. விக்னேஷ் ராம் நிறை ஆயுள், ஆரோக்கியம் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 19. சகோதரி வணக்கம்,
  தங்களின் நல்ல குணம் பதிவில் தெரிகிறது. தங்களது குணத்திற்கு நன்மையே என்றும் நடக்கும்.
  சகோதரர் திரு. விக்னேஷ் ராம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலமும் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்... மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோததரே..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 20. அக்கா...
  முதலில் செல்லம் அஞ்சானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
  உங்கள் பகிர்வு மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 21. பதிவு மனதை நெகிழ செய்தது!! தங்கள் மகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு.

   Delete
 22. அஞ்சானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் . கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்...,

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்களின் ஆசிகளுக்கு. அதனால் என்னப்பா...

   Delete
 23. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 24. வணக்கம் தோழி!...
  இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டேன்!
  இனிய வாழ்த்துக்கள்!

  சில மாதங்களின் முன்பும் நான் இங்கு வந்துபோயுள்ளேன்.. .

  மனம் நெகிழவைக்கும் பதிவு இங்கு!...

  அஞ்சானுக்கு அன்பான பிறந்ததின வாழ்த்துக்கள்! (மிகவும் காலதாமதமாகிவிட்டது.. மன்னிக்க)

  உங்களுக்கும் அன்புடன் வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 25. இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் & மன்ச்சூ மற்றும் குடும்பத்தில் அனைவருக்கும்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...