"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, May 30, 2011

வார்த்தைகள்....

காதலில்
திக்கி திணறுகிறது…..

அழுகையில்
வெம்பி வெதும்புகிறது….

கோபத்தில்
இரக்கமில்லாது
பிரிவைத் தூண்டுகிறது…..

மகிழ்ச்சியில்
நிலை கொள்ளாமல்
தவிக்கிறது….

மயக்கத்தில் ஆழ்த்துகிறது……
வசியம் செய்கிறது…..

ஊடல்களில்
தப்பி மனதுக்குள்
செல்கிறது…

ஒருவரையொருவர்
அறிய உதவுகிறது….

ஒன்றாய் இணைக்கிறது….

கூடலில்
மனம் அமைதிக்கொள்கிறது….

கொஞ்சம் ஓய்வெடுக்கிறது
மௌனத்தில் உறைகிறது...


வார்த்தைகள்...

11 comments:

 1. அருமை அருமை
  மொத்தத்தில் வார்த்தைகள்தான்
  வாழ்க்கையாகிறது
  எனச் சொல்லிப்போகும்
  உங்கள் பதிவு அருமையிலும் அருமை
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Akka no words to appreciate your words poem. simply superb.

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் தமிழ்....

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் ரமணி சார்... உங்க ப்ளாக் சென்று இப்போது தான் பார்த்தேன் மனதை அசைத்த வரிகள் கொண்ட மயான சங்கல்பம் கவிதை படித்தேன்..

  அன்பு நன்றிகள் தங்களின் வருகைக்கும் கருத்து தந்தமைக்கும்.... உண்மையே வார்த்தைகள் தான் வாழ்க்கையாகிறது...

  ReplyDelete
 5. உன்னை பார்த்ததே இங்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்பா...உன் கவிதை வரிகளின் தாக்கம் ஒட்டிக்கொள்ளும் படிப்போரையும்... அவர்களில் நானும் ஒருத்தி, மிகைப்படுத்தா அழகிய வரிகளில் எளிய நடையில் எல்லோரையும் தென்றல் போல் வருடிச்செல்லும் அருமையான் வரிகள் அமைத்து நீ எழுதும் கவிதைகளின் ரசிகை நான்.
  அன்பு நன்றிகள் ஹேமா...

  ReplyDelete
 6. வார்த்தைகள் பற்றிய மாறுபட்ட சிந்தனை. வாழ்த்துக்கள். வார்த்தைகள்தான் நமக்கு துன்பத்தையும் தருகின்றன வாரி இன்பத்தையும் இறைக்கின்றன. நம்மை அறிவுறுத்துகின்றன. எச்சரிக்கை செய்கின்றன. சமயங்களில் ஒன்றுமே தெரியாதததுபோல் நம்மோடு இழைகின்றன. இந்த வார்த்தைகளை நம்பக்கூடாது என்று அவைதான் கூறுகின்றன. நம்மை இத்தனை பாடும் படுத்துகின்றன. வார்த்தைகள் நமது வாழ்க்கையின் ஏடுகளில் பகடையாடுகின்றன நம்மை காய்களாக நிறுத்தி. அருமையான கவிதை.

  ReplyDelete
 7. வார்த்தைகள் பற்றிய மாறுபட்ட சிந்தனை. வாழ்த்துக்கள். வார்த்தைகள்தான் நமக்கு துன்பத்தையும் தருகின்றன வாரி இன்பத்தையும் இறைக்கின்றன. நம்மை அறிவுறுத்துகின்றன. எச்சரிக்கை செய்கின்றன. சமயங்களில் ஒன்றுமே தெரியாதததுபோல் நம்மோடு இழைகின்றன. இந்த வார்த்தைகளை நம்பக்கூடாது என்று அவைதான் கூறுகின்றன. நம்மை இத்தனை பாடும் படுத்துகின்றன. வார்த்தைகள் நமது வாழ்க்கையின் ஏடுகளில் பகடையாடுகின்றன நம்மை காய்களாக நிறுத்தி. அருமையான கவிதை.

  ReplyDelete
 8. ஆஹா ஹரணி ஐயா, நீங்கள் சொன்ன கோணம் இன்னும் அருமையாக கவிதைக்கு மகுடம் சேர்ப்பது போல வித்தியாச வரிகளுடனான விமர்சனம் மிக அருமை.....

  அன்பு நன்றிகள் ஐயா....

  ReplyDelete
 9. அருமையான கவிதை. உங்கள் கவிதைகளுக்கெல்லாம் இதுதான் மணிமகுடம்.

  வார்த்தை பற்றி எங்கோ படித்தது,
  "நீ
  பேசிய வார்த்தை
  உனக்கு எஜமான்.
  பேசாத வார்த்தைக்கு
  நீ எஜமான் "

  ReplyDelete
 10. அன்பு நன்றிகள் சிவகுமாரன் இங்கு வருகை தந்தமைக்கும் படித்து கருத்து இட்டமைக்கும்...

  நீங்கள் எங்கோ படித்த வார்த்தைகள் எனக்கு என் அம்மா சொன்னது, சொல்லிக்கொண்டு இருப்பதும்.... பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான், பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்... என் தாய் எனக்கு குரு.....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...