"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, June 14, 2011

தாயின் குமுறல்...
இதயம் இன்னும் கனியவில்லை
ரணம் இன்னும் ஆறவில்லை
நினைக்கும்போதெல்லாம்
நெஞ்சம் பதறுகிறது....

நீயா நீயா....
நெருப்பில் என்னை
தள்ளியது நீயா?
தவறு எங்கே தொடங்கியது?

அன்பு ம‌ட்டும் தானே வைத்தேன் உன்னிட‌ம்
என்னை வேறுப‌டுத்திய‌து நீ தானே..
இனி எப்ப‌டி திரும்பும் 
உன்னிட‌ம் என் ம‌ன‌ம்

என்ன‌ சொல்லி ஆற்றுவேன்
பாவ‌ம் இது சிறுபிள்ளை என்றா?
சிறுபிள்ளை என்றாலும் 
ந‌ம்பின‌வ‌ரை துரோகிக்க‌லாமா?

திருந்தினாலும் என் ம‌ன‌ம் திரும்பாதே...
என்ன‌ செய்வேன் என்ன‌
சொல்லி ஆற்றுவேன்....
ம‌ன்னித்து விடு ம‌க‌ளே....

ஒட்ட‌வில்லை உன்னிட‌ம் என் ம‌ன‌ம்
துண்டாக்கி நெருப்பிலிட்ட‌து நீயே
ம‌றக்க‌வோ ம‌ன்னிக்க‌வோ
மஹாத்மா இல்லைய‌ம்மா நான்

சாதார‌ண‌ மானிட‌ப்பிற‌வி
நேசிக்க‌ ம‌ட்டுமே தெரிந்த‌
பைத்திய‌க்கார‌ தாய்....

2 comments:

 1. நேசிக்க மட்டுமே தெரிந்த
  பைத்தியக்காரத்தாய்
  அருமையான ஈற்றடி
  எனக்கென்னவோ மஹாத்மாவை விட
  தாய்தான் உயர்ந்தவள்
  எனப்படுகிறது

  ReplyDelete
 2. சத்திய வார்த்தை ரமணி சார். நான் போன பிறவியில் எத்தனை புண்ணியம் செய்தேனோ அறியேன். ஆனால் தெய்வம் போன்ற தாயை பெற்றேன். தெய்வத்தினினும் உயர்வு தாய் மட்டுமே. அன்பு நன்றிகள் ரமணி சார்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...