"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, August 22, 2011

நட்பூ......

நட்பூ
நட்பு கிடைப்பது அரிதில்லை 
ஆனால் நல்நட்பு கிடைப்பது அரிது 
அதனினும் அரிது 
உண்மையான நட்பு

தன் தேவைக்கென கேட்பது 
காரிய நட்பு
அவசியத்துக்கு மட்டும் 
நட்பு நாடுவது சுயநல நட்பு 

ஏதோ என்று நட்பு கொள்ளுவது 
பொழுதை போக்கும் நட்பு
எனக்கும் உண்டு பார் இத்தனை நட்பு 
என்று கொள்வது தற்பெருமை நட்பு

உல்லாச நட்பு, ஊர் சுற்ற ஒரு நட்பு
காசுக்காக நட்பு, அலட்டிக்கொள்ளும் நட்பு
வேண்டாத நட்பு அவசியமற்ற நட்பு

உண்ணும் போது உடனிருந்து
உள்ளத்தை அன்பாய் பகிர்ந்து
கலங்கும்போது அணைத்து
துன்பம் வரும்போது காத்து

தோல்வியில் துவளும்போது
வெற்றிக்காய் ஊக்குவித்து
நீயே அறியாது நன்மை செய்து
உண்மை உரக்க உரைக்கும் நட்பே 
உன்னதமான உயிர் நட்பு... 

மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து 
மாலையில் உதிரும் காகிதப்பூ

21 comments:

  1. andavan meedhu amarndhirukkum arpudhamaana malar pondra natpai mattume mugarndhirukkira naan kaagidha poovai mugarndhadhillai... manadhirkul nimmadhi! sagodhariye! un thamizhukku thalai vanangugiren. vaazhthukkal!

    ReplyDelete
  2. அருமை அருமை
    உங்கள் கவிதைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கருவும்
    சொல்லிச்செல்லும் விதமும் வார்த்தை ஜாலங்களும்
    மிக மிக அருமையாக இருக்கும்
    இந்தக் கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல
    நான் போன கவிதையில் சொன்ன விஷயத்தை
    இக்கவிதையில் மிக அழகாகச் செய்திருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிர்மலா அஞ்சானை வீட்டுக்கு கூப்பிடு...

    நெட் இணைத்தாயிற்றா? அஞ்சானிடம் சொல்லி NHM writer install செய்ய சொல்லு. செய்து தருவான் குழந்தை....

    நீ ஆல்ட் 2 ப்ரெஸ் செய்துவிட்டு டைப் செய்தால் தமிழிலேயே அழகா டைப் செய்யலாம்..

    இல்லன்னா நான் லீவுக்கு அக்டோபர் 13 மாதம் இந்தியா வருகிறேன், அஞ்சானுக்காக தான் நான் வருவதே. அப்ப நானே உனக்கு செய்து தருகிறேன்.

    நான் வெள்ளிக்கிழமை உனக்கு கால் செய்கிறேன் சரியா?

    இவ்ளோ மரியாதையா எனக்கு பதிவு போட்டதை பெத்தம்மா பெத்தநைனாவுக்கு ஷோபிக்கு வாசித்து காமிச்சியா நீ :)

    நான் கிரி பின்னி கிட்ட வாசித்து காமிச்சேன்... சிரிக்கிறாங்க.. இரு வெள்ளிக்கிழமை இருக்குது உனக்கு கச்சேரி :)

    ReplyDelete
  4. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  5. நட்புப் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது காகிதப் பூக்கள்தான் அதிகம் என்று நினைக்கின்றேன். உண்மை நட்பை உங்களுடன் உயிராய்ப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

    ReplyDelete
  6. உடுக்கை இழந்தவன் கைபோல
    உதவும் நட்பினை பலவகையில்
    தொடுத்தக் கவிதை பூமாலை
    தூய சொற்களின் பாமாலை
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. அன்பு வரவேற்புகள் சமுத்ரா....

    அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு.....

    உங்கள் தளம் வந்து பார்த்தேன்... மிக அருமையாக இருக்கிறது...

    அன்பு வாழ்த்துகள்பா..

    ReplyDelete
  8. அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு....

    இந்த கவிதை எனக்கும் மிகவும் பிடித்த கவிதை....

    ReplyDelete
  9. ஹை சந்திரகௌரி வாங்க... எப்படி இருக்கீங்க?

    ரொம்ப சந்தோஷம்பா இறைவன் கொடுக்கும் வரம் இப்படி ஒரு நல்ல உள்ளத்தை எனக்கு நட்பாய் தர இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்பா....

    அன்பு நன்றிகள் சந்திரகௌரி கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  10. அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா அருமையான கவிதை வரிகளில் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  11. பூப்பூவா பூத்திருக்கிற இந்த நட்புக் கவிதை உண்மையில்
    ஒரு அழகிய வனப்பு .வாழ்த்துக்கள் சகோ .என்தளத்தில் உங்கள்
    வருகையைக் காணாமல் மனம் வாடியது .அது தவறு நானும் இங்க
    கன விசயத்தைக் காணாமல் விட்டுவிட்டேன் .எல்லாத்துக்கும்
    முடிஞ்சவரக் கருத்துச் சொல்லி .போட வேண்டியதப் போட்டுர்றேன்.
    நன்றி சகோ பகிர்வுக்கு ....வாருங்கள் என் தளத்துக்கும் ...

    ReplyDelete
  12. உங்கள் நட்பில் நானும் ஒருவனாக இருப்பதில் என்றும் ஆனந்தமே...

    நட்பின் வழியே இனிய உறவாக மாறியதில் எனக்கு மகிழ்ச்சி அக்கா..

    ReplyDelete
  13. அடடா என்னாச்சு அம்பாளடியாள் நான் வந்துட்டே இருக்கேனேப்பா உங்க வலைத்தளத்துக்கு.... வெள்ளிக்கிழமைகளில் அதிகம் வர இயலுவதில்லை.. அன்று ஆபிசு லீவாக இருந்தாலும் வீட்டில் பூஜை வேலை இபான் படிப்பு என்று சமயம் வேகமாக போய்விடுகிறதுப்பா.... அதனால் அன்று ஒரு நாள் வீட்டுக்கு....

    எப்பவும் சந்தோஷமா இருங்கப்பா.....மனசுல கவலைகள் வேண்டாமே ப்ளீஸ்...

    நான் உங்க வலைத்தளத்துக்கு வந்தால் கருத்து இடாமல் போகமாட்டேன்பா...

    அன்பு நன்றிகள் அம்பாளாடியாள் உங்க நட்பு உண்மையில் உயர்வான நட்பே...

    ReplyDelete
  14. அன்பு வரவேற்புகள் வாசா....

    அன்னிக்கு ஷோபி வீட்டில் இருந்து போன் செய்தே... அதோடு இப்ப தான் பார்க்கிறேன் இங்கே உன் பதிவை....

    சௌக்கியமாப்பா?

    அன்பு நன்றிகள் வாசா கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  15. // அன்பு வரவேற்புகள் வாசா....

    அன்னிக்கு ஷோபி வீட்டில் இருந்து போன் செய்தே... அதோடு இப்ப தான் பார்க்கிறேன் இங்கே உன் பதிவை....

    சௌக்கியமாப்பா?

    அன்பு நன்றிகள் வாசா கருத்து பதிந்தமைக்கு.... //

    இதை நான் கேட்க வேண்டும் அக்கா... ஒருநாள் கூட தம்பியை நினைத்துகூட பார்ப்பதற்கு நேரமில்லை தங்களுக்கு... அப்படிதானே.. வேண்டுமென்றால் அவனே பேசட்டும் நாம் ஏன் பேச வேண்டும் என்று இருந்துவிட்டீர்கள்... இருக்கட்டும்.. பரவாயில்லை... தங்களின் பதில் மறுமொழிக்கும்.. நலம் விசாரித்தமைக்கும்....

    நான் நலம்.. நாடுவதும் அதே....

    ReplyDelete
  16. //தோல்வியில் துவளும்போது
    வெற்றிக்காய் ஊக்குவித்து
    நீயே அறியாது நன்மை செய்து
    உண்மை உரக்க உரைக்கும் நட்பே
    உன்னதமான உயிர் நட்பு...

    மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து
    மாலையில் உதிரும் காகிதப்பூ//

    இந்த வரிகளில் நட்பின் மெய்
    நட்பை பற்றிய வரிகள் அருமை தோழி

    ReplyDelete
  17. //ugust 30, 2011 9:28 AM
    செய்தாலி said...
    //தோல்வியில் துவளும்போது
    வெற்றிக்காய் ஊக்குவித்து
    நீயே அறியாது நன்மை செய்து
    உண்மை உரக்க உரைக்கும் நட்பே
    உன்னதமான உயிர் நட்பு...

    மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து
    மாலையில் உதிரும் காகிதப்பூ//

    இந்த வரிகளில் நட்பின் மெய்
    நட்பை பற்றிய வரிகள் அருமை தோழி//

    அன்பு நன்றிகள் செய்தாலி கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  18. நட்பைப்பற்றி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ஒவ்வொரு வரியும் அழகோ அழகு தான்.

    இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது

    //கலங்கும்போது அணைத்து
    துன்பம் வரும்போது காத்து

    தோல்வியில் துவளும்போது
    வெற்றிக்காய் ஊக்குவித்து

    நீயே அறியாது நன்மை செய்து

    உண்மை உரக்க உரைக்கும் நட்பே
    உன்னதமான உயிர் நட்பு... //

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள,
    VGK

    ReplyDelete
  19. உன்னதமான உயிர் நட்பை பகிர்ந்த விதம் அருமை..

    ReplyDelete
  20. kaagitha poo dhan pa vaadipogama orey mari irukkum athu maari dhan natpum venum

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...