"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 28, 2010

நினைவுகள் நிஜங்களாகுமா....

நினைவுகள் வாழவைக்கும்
நினைவுகள் நிஜமாகுமா
முடிந்த நிமிடங்கள்
கழித்த காலங்கள்
பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?

என் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் உன்னுடனே
என் மனம் நிறைந்த காதலும்
உன்னுடனே
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே

உன்னுடன் சந்தோஷித்த
தருணங்கள் என்னுடனே
உன் நினைவுகள்
என்னோடு இன்றும்

உன்னை அடைய
நினைக்கும் நினைவுகள்
நிஜமாகுமா பெண்ணே
உன் மடியில் தலை சாய்க்கும்
அந்த அற்புத நொடிகள்
எனக்கு கிடைக்குமா கண்ணே

என் கண்ணீர் உன் தோள்
நனைக்குமா கண்ணே
உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…

7 comments:

 1. மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் கவிதைகளை இன்று வாசித்தேன் .மிகவும் அருமையாக இருந்தன.
  எனது வாழ்த்துக்கள்

  எஸ் வி சாயி பாபா

  ReplyDelete
 3. தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பதியலாமே

  http://tamilthottam.nsguru.com

  ReplyDelete
 4. ///தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பதியலாமே

  http://tamilthottam.nsguru.com///

  இதெல்லாம் ஒரு பிழைப்பு! ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் யூஜின்.....வருகை தந்தமைக்கும் என் கவிதை படித்து கருத்து பதிந்ததைமைக்கும்....

  ReplyDelete
 6. அன்பு நன்றிகள் சாய்பாபா...உங்கள் வருகைக்கும் கவிதை படித்து கருத்து பதிந்தமைக்கும்....

  ReplyDelete
 7. அன்பின் கலைலிங்கம்,

  நீங்கள் எதற்காக இதெல்லாம் ஒரு பிழைப்புன்னு போட்டிருந்தீங்க புரியலை :( ஆனால் என் வரிகள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லையாயினும் என் மன்னிப்புகள்....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...