"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 28, 2010

பார்த்த தருணங்கள்.....

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டப்பின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே
கவிதையும் அணைத்தாண்டும் கரையாக புரளுமே
காத்திருப்பின் பலனும் கண்டும் அனுபவித்தோமே

தாலாட்டும் கனவுகளும் சற்றே ஓய்வெடுத்து
உன் மடியும் என் உடல் பாரத்தை சுமந்து
உன் கன்னக்கதுப்பை தொட்டு விளையாடும்
என் விரல்களை உன் கைகளும் மன்னித்து

தொடரும் உறவாக இணைந்து கைக்கோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....

3 comments:

  1. உங்களின் நினைவுகள் அனைத்தும் நிஜங்களாக வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் சிவா... உங்கள் வருகைக்கும் கவிதை படித்து கருத்து தந்தமைக்கும்...

    ReplyDelete
  3. அன்பின் மஞ்சு - வலைச்சரம் மூலமாக வந்தேன் - கவிதை அருமை - நினைத்தது நிறைவேற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...