"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, August 26, 2012

பக்தமீரா...


1.
வாழும் நொடிகளில் உன் நினைவன்றி ஏதுமில்லை
சொர்க்கம் தேடி வழி அறிந்ததில்லை என்றும்
மீராவாய் உந்தன் மனம் சென்றடைந்து
நீயே நானாய் என்றாவேன் கண்ணா?

2.
உயிராய் உன்னை நினைத்ததாலே நானும்
என்னை உனக்கு இன்முகத்தோடு தந்தேன்
தளிர்நடையிட்டு என்னை மயக்கிய மாதவா
புன்னகை பூக்களால் சீராட்டு கண்ணா....

3.
உன் மௌனம் என்று கலையும் சொல்நீ
பாராட்டி சீராட்டி என் மடி சேர்வதெப்போது
வாழ்த்தி பாமாலைகள் பலநூறு சூட்டி
சேயாக உன்னை நானணைத்தேன் கண்ணா...

20 comments:

  1. ம்ம்ம் ..அருமை
    வெகு நீண்ட நாட்களுக்குப் பின் அழகிய கவிதையுடன்
    சந்தித்ததில் மகிழ்ச்சி

    நலமா தோழி

    ReplyDelete
  2. //மீராவாய் உந்தன் மனம் சென்றடைந்து
    நீயே நானாய் என்றாவேன் கண்ணா?//

    கண்ணனை மனதில் எப்போதும் நினைத்து பக்த மீரா பாடுவது அழகோ அழகு!

    ReplyDelete
  3. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக மிக அருமையான கவிதை....

    வாழ்த்துகள் சகோ. கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
  5. மீரா ம்ம் கவிதை அருமை.

    ReplyDelete
  6. பக்தை மீராவாக வந்து நீண்ட நாட்களுக்கு அப்புறம் வந்து அழகிய கவிதை தந்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. //அ .கா . செய்தாலி said...
    ம்ம்ம் ..அருமை
    வெகு நீண்ட நாட்களுக்குப் பின் அழகிய கவிதையுடன்
    சந்தித்ததில் மகிழ்ச்சி

    நலமா தோழி//

    அன்பு வரவேற்புகள் செய்தாலி... சௌக்கியமாப்பா?

    அன்பு நன்றிகள் செய்தாலி கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  8. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    //மீராவாய் உந்தன் மனம் சென்றடைந்து
    நீயே நானாய் என்றாவேன் கண்ணா?//

    கண்ணனை மனதில் எப்போதும் நினைத்து பக்த மீரா பாடுவது அழகோ அழகு!//

    அன்பு நன்றிகள் கோபாலக்ருஷ்ணன் சார் கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  9. // சே. குமார் said...
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.//

    அன்பு நன்றிகள் சே.குமார் கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  10. //வெங்கட் நாகராஜ் said...
    மிக மிக அருமையான கவிதை....

    வாழ்த்துகள் சகோ. கவிதையை ரசித்தேன்//

    அன்பு நன்றிகள் வெங்கட் ரசித்து கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  11. // தனிமரம் said...
    மீரா ம்ம் கவிதை அருமை.//

    அன்பு வரவேற்புகள் தங்களின் வரவிற்கு நண்பரே...

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  12. //Avargal Unmaigal said...
    பக்தை மீராவாக வந்து நீண்ட நாட்களுக்கு அப்புறம் வந்து அழகிய கவிதை தந்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். வாழ்க வளமுடன்//

    அன்பு நன்றிகள் நண்பரே தங்களின் கருத்து பகிர்வுக்கு... சௌக்கியமாப்பா?

    ReplyDelete
  13. அருமையான கவிதைகள்
    கவிதைகளும் தாங்கள் மீண்டும் பதிவிடத்
    துவங்கியதும் மனதிற்கு அதிக
    மகிழ்வு தருகிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பக்தை மீரா பலங்கொண்டு மீட்டுகிறாள்!

    பலனும் கிட்டிடும் கண்ணனிடம்..

    தொடருங்கள் அக்கா..

    ReplyDelete
  15. நன்றி அக்கா உங்களது வாழ்த்துகளுக்கு

    என்னுடைய பெயர் பூபாலன்

    அக்மார்க் கிராமத்தான் அக்கா

    கிராமத்து காக்கை
    கிராமத்தில் கூடுகள் காணாமல் போக நகரத்தில் கூடுகளை தேடி

    நன்றி அக்கா உறவுகள் ஒரு தொடர்கதை

    ReplyDelete
  16. //Ramani said...
    அருமையான கவிதைகள்
    கவிதைகளும் தாங்கள் மீண்டும் பதிவிடத்
    துவங்கியதும் மனதிற்கு அதிக
    மகிழ்வு தருகிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பகிர்வுக்கு என்னை எழுத ஊக்குவித்தமைக்கும்...

    ReplyDelete
  17. //சிவஹரி said...
    பக்தை மீரா பலங்கொண்டு மீட்டுகிறாள்!

    பலனும் கிட்டிடும் கண்ணனிடம்..

    தொடருங்கள் அக்கா.//

    அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  18. //கிராமத்து காக்கை said...
    நன்றி அக்கா உங்களது வாழ்த்துகளுக்கு

    என்னுடைய பெயர் பூபாலன்

    அக்மார்க் கிராமத்தான் அக்கா

    கிராமத்து காக்கை
    கிராமத்தில் கூடுகள் காணாமல் போக நகரத்தில் கூடுகளை தேடி

    நன்றி அக்கா உறவுகள் ஒரு தொடர்கதை//

    அட பூபாலன்...

    கிராமத்து காக்கையிடம் ஒற்றுமையை கண்டேன் உங்கள் வலைப்பூவில்.. இங்கே அழகிய கவிதையில் கருத்தும் கண்டேன்...

    அன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் பூபாலன்.

    ReplyDelete
  19. கண்ணனை நினைக்காத நாளில்லையே, காதலில் குளிக்காத நாளில்லையே என்று ஒரு மயக்கும் பாடல் கேட்டதுண்டு... மீரா பக்திபூர்வமாய் கண்ணனிடம் பிரேமையில் உருகும் உருக்கம் இங்கே கவிதையிலும். மனசைப் பறிச்சிடுச்சு.

    ReplyDelete
  20. அன்பின் மஞ்சு - அருமையான பாடல்கள் - பக்த மீரா கண்ணனை நினைத்துப் பாடும் பாடல்கள் - நன்று - நல்வாழ்த்துகள் மஞ்சு - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...