"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 23, 2012

பக்தமீரா தொடர்ச்சி (5)


13. 
கசடில்லா வெண்ணையாய் உருகினேன் நானும்
கள்ளமின்றி காதலை வளர்த்திட்டேன் நாளும்
கபடமில்லா மனதால் வசியம் செய்தவனே
காந்த கண்ணழகனே மன்னனே என் கண்ணா...

14. 
உலகமே என்னை பழித்திட்ட போதும்
உனக்காய் உயிர் வாழ்வேன் நானும்
உனதன்பை பெறவே இத்தனை தவமும்
உன்மனதில் உறையவே காத்திருப்பேன் கண்ணா 

15.
தாளாத துயர் எல்லாம் உனக்காய் பொறுத்தேன்
மழலையாய் உன்மடி சேரக் காத்திருந்தேன்
உன் பார்வை என்மீது படாதது ஏன் கண்ணா
கற்கண்டே சுவையே என் இனியக்கண்ணா

28 comments:

  1. பகத மீராவின் அன்பும் காதலும் இணைந்த
    பக்திரசம் சொட்டும் கவிதை அருமையாகத் தொடர்கிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. /Ramani said...
    பகத மீராவின் அன்பும் காதலும் இணைந்த
    பக்திரசம் சொட்டும் கவிதை அருமையாகத் தொடர்கிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    அன்பு நன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. ஆழமாக அன்பை வெளிக்காட்டி நிற்கும் அழகிய கவிதை இது .தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  4. வண்ணமயமான படத்துடன் வரைந்திருக்கும் கவியில் மீராவின் பக்தி உயர்தனியாய் நிற்கின்றது.


    14ஆம் பாடல் சிறப்பு :)


    நன்றி அக்கா

    ReplyDelete
  5. காதல் மிக சந்தோசம் தரக்கூடியது அதோடு பக்தியும் சேர்ந்துவிட்டால் அது சொர்க்கமாகவே இருக்கும்...உங்கள் இந்த பக்த மீராவின் உணர்வுகளை உங்கள் வரிகளில் படிக்கும் போது மனம் மிக மகிழ்ச்சி அடைந்து சொர்க்கத்தில் இருபது போல ஒரு உண்ர்வு. மிக நன்றாக வந்து கொண்டிடுக்கிறது இந்த தொடர்.........வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி நலமா?
    நீண்ட நாட்களின் பின்னர் வருகை தருவதற்கு மன்னிக்கவும்.. அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி.!

    ReplyDelete
  7. பக்திரசம் சொட்டும் கவிதை...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  8. //அம்பாளடியாள் said...
    ஆழமாக அன்பை வெளிக்காட்டி நிற்கும் அழகிய கவிதை இது .தொடர வாழ்த்துக்கள் சகோ .//

    அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  9. //சிவஹரி said...
    வண்ணமயமான படத்துடன் வரைந்திருக்கும் கவியில் மீராவின் பக்தி உயர்தனியாய் நிற்கின்றது.


    14ஆம் பாடல் சிறப்பு :)


    நன்றி அக்கா//

    அன்பு நன்றிகள் தம்பி.

    ReplyDelete
  10. //Ramani said...
    tha.ma 2//

    அன்பு நன்றிகள் ரமணிசார்.

    ReplyDelete
  11. //Avargal Unmaigal said...
    காதல் மிக சந்தோசம் தரக்கூடியது அதோடு பக்தியும் சேர்ந்துவிட்டால் அது சொர்க்கமாகவே இருக்கும்...உங்கள் இந்த பக்த மீராவின் உணர்வுகளை உங்கள் வரிகளில் படிக்கும் போது மனம் மிக மகிழ்ச்சி அடைந்து சொர்க்கத்தில் இருபது போல ஒரு உண்ர்வு. மிக நன்றாக வந்து கொண்டிடுக்கிறது இந்த தொடர்.........வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்//

    அன்பு நன்றிகள் அவர்கள் உண்மைகள் நண்பரே தங்களின் கருத்து பகிர்வுக்கு. ஒரு பஜன் இருக்கிறது... அதில் கூட ஒரு வரி வரும். இறைவன் மேல் எப்படி பற்று வைக்கவேண்டும் என்று.. மீராவைப்போல் என்று...

    ReplyDelete
  12. //காட்டான் said...
    வணக்கம் சகோதரி நலமா?
    நீண்ட நாட்களின் பின்னர் வருகை தருவதற்கு மன்னிக்கவும்.. அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி.!//

    உங்களை ரொம்ப நாட்கள் கழித்து பார்த்ததே சந்தோஷம் தம்பி. சௌக்கியமா? அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
  13. //சே. குமார் said...
    பக்திரசம் சொட்டும் கவிதை...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...//

    அன்பு நன்றிகள் சே. குமார் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  14. கற்கண்டே.. சுவையே... என்னமாய் பொங்கி வருகின்றன வார்த்தைகள். வசியம் செய்கின்றன மனதை. அருமை தோழி.

    ReplyDelete
  15. வரிகளிலேயே மனம் லயித்து விட்டது தங்கள் இனிமையான குரலில் இன்னும் பாடக் கேட்டால் என் நிலை என்னவாகுமோ ? அருமை அக்கா.

    ReplyDelete
  16. //பால கணேஷ் said...
    கற்கண்டே.. சுவையே... என்னமாய் பொங்கி வருகின்றன வார்த்தைகள். வசியம் செய்கின்றன மனதை. அருமை தோழி//

    அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  17. //Sasi Kala said...
    வரிகளிலேயே மனம் லயித்து விட்டது தங்கள் இனிமையான குரலில் இன்னும் பாடக் கேட்டால் என் நிலை என்னவாகுமோ ? அருமை அக்கா.//

    அப்ப பாடிருவோமா சசி இன்னைக்கே??

    அன்பு நன்றிகள் சசி கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  18. Sasi Kala said...

    வரிகளிலேயே மனம் லயித்து விட்டது தங்கள் இனிமையான குரலில் இன்னும் பாடக் கேட்டால் என் நிலை என்னவாகுமோ ?
    >>
    உனக்கு ஓக்கே. மஞ்சு அங்கிருந்து பாடினால் அவங்களுக்கு தொண்டை கட்டி போகுமே. டாக்டர் ஃபீஸ் நீயா தருவே சசி?

    ReplyDelete
  19. //ராஜி said...
    Sasi Kala said...

    வரிகளிலேயே மனம் லயித்து விட்டது தங்கள் இனிமையான குரலில் இன்னும் பாடக் கேட்டால் என் நிலை என்னவாகுமோ ?
    >>
    உனக்கு ஓக்கே. மஞ்சு அங்கிருந்து பாடினால் அவங்களுக்கு தொண்டை கட்டி போகுமே. டாக்டர் ஃபீஸ் நீயா தருவே சசி?//

    ஆஹா ராஜி ஆரம்பிச்சுட்டீங்களா? :)

    ReplyDelete
  20. நல்ல வரிகள் இனிமை.
    நல்ல படமும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  22. //உலகமே என்னை பழித்திட்ட போதும்
    உனக்காய் உயிர் வாழ்வேன் நானும்//

    உச்சக்கட்ட பக்தியின் உன்னத நிலை!

    அருமையான பதிவு கண்ணா! ;)))))

    பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அன்புடன் VGK அண்ணா

    ReplyDelete
  23. அன்பின் மஞ்சு,

    நாளை 01 10 2012 திங்கட்கிழமை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ளீர்கள் என்பதை சற்றுமுன்பு தான் அறிந்தேன்.

    வலைச்சரப்பக்கத்தில் அன்பின் சீனா ஐயா அவர்கள் இப்போது ஒரு மணி நேரம் முன்பு இதை அறிவித்துள்ளார்கள். இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/search/label/*%20%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    எனக்கு மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களின் பணி மிகச்சிறப்பாக அமைய என் அன்பான இனிய நல் வாழ்த்துகள்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  24. //kovaikkavi said...
    நல்ல வரிகள் இனிமை.
    நல்ல படமும்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.//

    அன்பு நன்றிகள் வேதாம்மா.

    ReplyDelete
  25. //Easy (EZ) Editorial Calendar said...
    மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)//

    அன்பு வரவேற்புகள் பிரியா.... அன்புநன்றிகள் தங்களின் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  26. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    //உலகமே என்னை பழித்திட்ட போதும்
    உனக்காய் உயிர் வாழ்வேன் நானும்//

    உச்சக்கட்ட பக்தியின் உன்னத நிலை!

    அருமையான பதிவு கண்ணா! ;)))))

    பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அன்புடன் VGK அண்ணா//

    அன்பு நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  27. //அன்பின் மஞ்சு,

    நாளை 01 10 2012 திங்கட்கிழமை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ளீர்கள் என்பதை சற்றுமுன்பு தான் அறிந்தேன்.

    வலைச்சரப்பக்கத்தில் அன்பின் சீனா ஐயா அவர்கள் இப்போது ஒரு மணி நேரம் முன்பு இதை அறிவித்துள்ளார்கள். இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/search/label/*%20%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    எனக்கு மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களின் பணி மிகச்சிறப்பாக அமைய என் அன்பான இனிய நல் வாழ்த்துகள்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா//

    தங்களின் ஆசி அண்ணா.

    ReplyDelete
  28. அன்பின் மஞ்சு - பக்தி ரசத்தினை காதல் ரசமாக எழுதிய பாடல்கள் அருமை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...