"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 22, 2014

அவசர சமையல்....

அவசர சமையல்... ஆனால் அரைகுறை சமையல் இல்லை...

அவசரத்துக்கு இட்லி மாவு குறைவா இருந்தால் என்ன செய்வது??

நேற்று இட்லிக்கு அரைத்துவிட்டு பாதி மாவு எடுத்து ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டு போய் உட்கார்ந்தாச்சு.. கொஞ்சம் நேரம் கழிச்சு போய் பார்த்தால் இந்த மாவு எல்லாருக்கும் மறுநாள் இட்லிக்கு போறாது போலிருக்கே என்ன செய்யலாம் என்று யோசித்து கோதுமை மாவை தேடினால்... “மஞ்சு கோதுமை மாவு தீர்ந்துவிட்டது வாங்கணும் அம்மாவின் குரல் அசரீரியாய்  ... ரவை டப்பா திறந்து தூக்கக்கலக்கத்துடனே ரெண்டு கப் ரவை எடுத்து மாவில் கொட்டிவிட்டு ஒரு ஸ்பூன் உப்பு, ொஞ்சம் நீர் விட்டு கரைத்துவிட்டு வந்து படுத்துட்டேன்.

இன்னைக்கு காலை எழுந்து வந்து பார்த்தால் ஜம்முனு பொங்கி இருக்கு... “ மஞ்சு எனக்கு டயமாச்சு... என்ன ரெடியா?” எங்க வீட்டுக்காரர்.... என்ன செய்ய தோசை செய்ய நோ டயம்.. அப்படியே எடுத்து இட்லி தட்டில் நல்ல எண்ணை தடவி மாவு விட்டு வெச்சுட்டேன்.. தொட்டுக்க வெங்காய சட்னியும்...

அட அட அட  ரவா இட்லி சூப்பரா சாஃப்டா வந்திருச்சுப்பா.. நம்புனா நம்புங்க... ரவா இட்லிக்கு மெனக்கெட்டு செய்தால் ரவா இட்லி இச்சுக்கு பிச்சுக்குன்னு வரும்... இப்ப என்னடான்னா அழகா வந்திருச்சு...

அம்மாட்ட மூச்... அம்மாக்கு மிக்சிங் பிடிக்காது  சரி அம்மாவை டேஸ்ட் பண்ண சொன்னேன்.. சாப்பிட்டு ரொம்ப நல்லாருக்கே.. அப்டின்னு சொன்னாங்க.. “ மம்மி அது ரவா இட்லிஎன்றேன்.. ஹுஹும் நல்லாவே இல்ல அப்டின்னுட்டாங்க..

சாப்பிட்ட அஞ்சான் சூப்பர்னு சொல்லிட்டான் மாலை இவரிடம் கேட்கணும்.. இட்லி எப்படி இருந்திச்சு.. எப்படியோ எதையோ செய்யப்போனால் நல்லா வந்துடுது பாருங்க ரவா இட்லி 

7 comments:

 1. ஹா...ஹா...ஹ...நானும் ட்ரை பண்றேன்:)

  ReplyDelete
 2. ரவா இட்லிக்கு மெனக்கெட்டு செய்தால் ரவா இட்லி இச்சுக்கு பிச்சுக்குன்னு வரும்... இப்ப என்னடான்னா அழகா வந்திருச்சு...

  ஆச்சர்ய சமையல்...

  ReplyDelete
 3. !! ஆமாம் மஞ்சு ..நீங்க செய்தது சரவணபவன் தோசை குறிப்பு :) அவங்க குறிப்பு ஒண்ணு மங்கையர் மலர் புக்கில் இருந்து கிழிச்சி கொண்டுவந்தேன் லாங் ago !!.அதில் இப்படிதான் பாம்பே ரவா சேர்ப்பாங்க :) அம்மா கேட்டால் இது ஒரிஜினல் சரவணா பவன் அண்ணாச்சி சொன்ன ரெசிப்பின்னு சொல்லுங்க .என் ப்ளாகில் அந்த குறிப்பு அப்படியே போட்டுடறேன் :)

  ReplyDelete
 4. முன்பே படித்து விட்டேன். அருமையான யோசனை.
  மாவு கொஞ்சமாய் இருந்தால் காரட், பீட்ரூட் துருவி கொண்டு, வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி போட்டு லேசாக வதக்கி கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தோசை செய்து கொடுக்கலாம் ம்ஞ்சு.

  ReplyDelete
 5. :) Manju's Special Super idea :)


  //அம்மாட்ட மூச்... அம்மாக்கு மிக்சிங் பிடிக்காது சரி அம்மாவை டேஸ்ட் பண்ண சொன்னேன்.. சாப்பிட்டு ரொம்ப நல்லாருக்கே.. அப்டின்னு சொன்னாங்க.. “ மம்மி அது ரவா இட்லி “ என்றேன்.. ஹுஹும் நல்லாவே இல்ல அப்டின்னுட்டாங்க..//

  Ahaa Supoer Comedy ! :)))))

  ReplyDelete
 6. சூப்பர் ஐடியா ...........happy to follow u ....வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...