"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 3, 2012

சொல்லிவிடு....


நீ அன்று குளிர் மழையில்
நனைந்தபடி என்னுடன் உடல்
ஒட்டி உரசியபடி  நடந்தபோது.....
பிறந்ததா உனக்குள் காதல்?

நம் பார்வைகள் ஒன்றோடொன்று
முட்டி மோதி பூகம்பமாய்
உனக்குள் புயல் உருவானபோது
பிறந்துவிட்டதா உனக்குள் காதல்?

கூட்ட நெரிசலில் மற்றவரின்
விகார பார்வையும் தொடுதலும்
பட்டுவிடாமல் நான் தடுத்தபோது
அப்போது பிறந்திருக்குமா என் மேல் காதல்?

நீ என்னை ரசித்த நொடியில்
உன் வசமிழந்து என் வசமான
அந்த அற்புத உணர்வை
உணர்ந்த நொடிகளை....

என் கல்லறையிலாவது
வந்து சொல்லிவிடு

16 comments:

  1. இறுதி வரி வந்ததும்
    சட்டென அதிர்ந்து போனேன்
    உண்மைக் காதலில் உணர்வை படிப்பவரும்
    உணரச் செய்துபோகும் அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உன் வசமிழந்து என் வசமான அற்புத உணர்வை உணர்ந்த நொடிகள்.. சூப்பர்!

    ReplyDelete
  3. //Ramani said...
    இறுதி வரி வந்ததும்
    சட்டென அதிர்ந்து போனேன்
    உண்மைக் காதலில் உணர்வை படிப்பவரும்
    உணரச் செய்துபோகும் அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//

    அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  4. //பால கணேஷ் said...
    உன் வசமிழந்து என் வசமான அற்புத உணர்வை உணர்ந்த நொடிகள்.. சூப்பர்!//

    அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. நீ என்னை ரசித்த நொடியில்
    உன் வசமிழந்து என் வசமான
    அந்த அற்புத உணர்வை
    உணர்ந்த நொடிகளை....

    என் கல்லறையிலாவது
    வந்து சொல்லிவிடு…

    உயிரோட்டம் உள்ள வரிகள் அருமை !!!!......
    தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete


  6. // நீ என்னை ரசித்த நொடியில்
    உன் வசமிழந்து என் வசமான
    அந்த அற்புத உணர்வை
    உணர்ந்த நொடிகளை....


    என் கல்லறையிலாவது
    வந்து சொல்லிவிடு…//

    ஏனிந்த முடிவு? சோகம் மனதை வாட்டுகிறதே!

    ReplyDelete
  7. அந்த அற்புத உணர்வை
    உணர்ந்த நொடிகளை....

    என் கல்லறையிலாவது
    வந்து சொல்லிவிடு…//

    இறுதி வரிகள் கலங்க வைத்துவிட்டது மஞ்சு ..அருமையான கவிதை

    ReplyDelete
  8. இறுதி வரி கண்கலங்க வைத்தது மஞ்சு அக்கா. எல்லா நிலையிலும் காதலை சொல்லாமல் கல்லறையிலாவது வந்து சொல்ல ஏங்கும் ஏக்கம். சான்சே இல்ல அக்கா.ரொம்ப நல்லா எழுதுறீங்க.

    ReplyDelete
  9. இறுதி வரிகள்.... அற்புதம்.

    காதலித்தது எதனால் என்பதை தெரிந்து கொள்ளாத கஷ்டம் ரொம்பவே சோகம்....

    இனிய கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  10. //அம்பாளடியாள் said...
    நீ என்னை ரசித்த நொடியில்
    உன் வசமிழந்து என் வசமான
    அந்த அற்புத உணர்வை
    உணர்ந்த நொடிகளை....

    என் கல்லறையிலாவது
    வந்து சொல்லிவிடு…

    உயிரோட்டம் உள்ள வரிகள் அருமை !!!!......
    தொடர வாழ்த்துக்கள் தோழி //

    அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்துப்பகிர்வுக்கு...

    ReplyDelete
  11. //புலவர் சா இராமாநுசம் said...


    // நீ என்னை ரசித்த நொடியில்
    உன் வசமிழந்து என் வசமான
    அந்த அற்புத உணர்வை
    உணர்ந்த நொடிகளை....


    என் கல்லறையிலாவது
    வந்து சொல்லிவிடு…//

    ஏனிந்த முடிவு? சோகம் மனதை வாட்டுகிறதே!//

    அடடா ஐயா முடிவு உயிர்ப்புள்ளதா இருக்கட்டும் என்று....

    அன்பு நன்றிகள் ஐயா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  12. //angelin said...
    அந்த அற்புத உணர்வை
    உணர்ந்த நொடிகளை....

    என் கல்லறையிலாவது
    வந்து சொல்லிவிடு…//

    இறுதி வரிகள் கலங்க வைத்துவிட்டது மஞ்சு ..அருமையான கவிதை//

    அன்பு நன்றிகள் அஞ்சு கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  13. //அமுதா கணேசன் said...
    இறுதி வரி கண்கலங்க வைத்தது மஞ்சு அக்கா. எல்லா நிலையிலும் காதலை சொல்லாமல் கல்லறையிலாவது வந்து சொல்ல ஏங்கும் ஏக்கம். சான்சே இல்ல அக்கா.ரொம்ப நல்லா எழுதுறீங்க.//

    அன்பு நன்றிகள் அமுதா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  14. //வெங்கட் நாகராஜ் said...
    இறுதி வரிகள்.... அற்புதம்.

    காதலித்தது எதனால் என்பதை தெரிந்து கொள்ளாத கஷ்டம் ரொம்பவே சோகம்....

    இனிய கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துகள் சகோ.//

    அன்பு நன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  15. மிகவும் அழகான அற்புதமான காதல் உணர்வுகளைச் சொல்லும் கவிதை ....... கடைசி வரிகள் மட்டும் இல்லாவிட்டால். இறுதிவரிகளில் இப்பட்டிக் கலங்க வைத்து விட்டீர்களே!

    போங்க மஞ்ச்[சு] கடைசியில் இப்படி ஒரு பஞ்ச், தேவையா?

    ReplyDelete
  16. உன் வசமிழந்து என் வசமான
    அந்த அற்புத உணர்வை
    வார்த்தைகளுக்குள் அடைத்து வெளிப்படுத்திய விதம் ரசிக்க.. இறுதி வரியில் திடுக்கிட வைக்கிறது. உண்மை அன்பு வெல்லட்டும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...