"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 17, 2012

காதலாய்.....




சுவாசிக்கும் மூச்சாய்…
தெறிக்கும் கோபமாய்….
சிந்திய புன்னகையாய்…
உறக்கத்தில் கனவாய்
துளிர்க்கும் அன்பாய்…
கண்ணீர் துளியாய்….
என்னில் நீயாய்…
உன்னில் நானாய்….
காதலாய்….

57 comments:

  1. கவிதை மிக அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

      Delete
  2. Replies
    1. ரசித்தமைக்கு அன்புநன்றிகள்பா தனபாலன்...

      Delete
  3. என்னில் அக்கா நீயாக
    உன்னில் சசி நானாக
    இப்படியாக்கா ?

    ReplyDelete
    Replies
    1. இல்ல இல்ல ..அவசரப் படாதீங்க எங்க அக்கா
      என்னைத்தான் சொன்னாங்க :)

      Delete
    2. ஆமாம் சரி... நீயும் நானுமே தான்பா... அக்கா தங்கை அன்பில் என்றும் நிலையாய் இருப்போம் தங்கமே...

      Delete
    3. //அம்பாளடியாள்November 17, 2012 2:03 PM
      இல்ல இல்ல ..அவசரப் படாதீங்க எங்க அக்கா
      என்னைத்தான் சொன்னாங்க :)//

      ஹௌ ஸ்வீட் அம்பாளடியாள்.... அன்புத்தங்கையே.... சரி வாங்க போலாம் ஒன்றாய் சேர்ந்து சசிகலா வீட்டுக்கு...

      Delete
  4. சம்பத் ஸாரே !!

    இன்னமுமா ஆஃபீசிலே இருக்கீக ??

    வீட்டுக்குக் கிளம்புங்க.....


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஹ் அப்பா இதென்ன கலாட்டா :)

      Delete
  5. நல்லாருக்கு! ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு வரவேற்புகளுடன் கூடிய அன்பு நன்றிகள் ஆகாஷ்....

      Delete
  6. ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
    இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இதை எப்படி பயன்படுத்துவது தெரியலப்பா... தம்பி வீட்டுக்கு வரட்டும்.. எனக்கு இதை செய்து தரச்சொல்றேன்பா...

      Delete
  7. Replies
    1. அன்பு நன்றிகள் லக்‌ஷ்மிம்மா...

      Delete
  8. கவிதை படத்தை போல அழகாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் சகோ கருத்து பகிர்வுக்கு.

      Delete
  9. மலரும் நினைவுகளா மேடம்?! பையன் தன் கேர்ள் ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு வந்திருக்கானாம் உங்களை கூப்புடுறான் பாருங்க

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா. ராஜி..... அன்னைக்கே வீடு திரும்பல் மோகன் குமார் கரெக்டா சொன்னார்.. நான் உன்னை ஊர்ல வந்து பார்த்துக்கிறேன்.. என்ன ஒரு கலாட்டா... ஹாஹா :)

      Delete


  10. என்னில் அக்கா நீயாக
    உன்னில் சசி நானாக
    இப்படியாக்கா ?
    >>
    சிவ பூஜைல கரடி போல இங்க என்ன வேலை சசி? அக்கா லவ் மூடுல இருக்காங்கடி

    ReplyDelete
    Replies
    1. ராமா ராமா.... இந்த பிள்ளைகள் (சசிகலா, ராஜி) கிட்ட இருந்து என்னை காப்பாத்துப்பா... :)

      Delete
  11. சுருங்க சொல்லி விளங்க வைத்தாய்

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் கண்ணதாசன்... சௌக்கியமா இருக்கீங்களாப்பா?

      Delete
  12. அன்பின் மஞ்சு,

    படைப்பின்
    வரிகள்
    எல்லாமே

    அருமையாய்
    அசத்தலாய்
    அழகாய்
    அன்பாய்

    உள்ளது.

    பாராட்டுக்கள்.

    அன்புடன்
    கோபு அண்ணா

    [இருப்பினும் பதிவு பற்றி மெயில் தகவல் தராததால்
    நான் மஞ்சுவின் மேல் கோ ப மா ய் ! ;( ]

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா... அடடா.. கோபம் ஏன் அண்ணா?

      Delete
  13. சுருக்கமான ஆயினும்
    ஆழமாக அருமையாக...
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கு...

      Delete
  14. குட்டியா இருந்தாலும் நல்லா இருக்கு. நம்ம தளத்துக்கும் வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அன்பு வரவேற்புகள் பாரதி... கண்டிப்பா வருகிறேன்பா...

      அன்பு நன்றிகள் கருத்து பகிர்வுக்கு...

      Delete
  15. குட்டியா இருந்தாலும் நல்லா இருக்கு. நம்ம தளத்துக்கும் வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  16. அழகா சில வரியில காதலை கவிதையா செதுக்கிட்டீங்க மஞ்சு..

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராதாராணி கருத்து பகிர்வுக்கு...

      Delete
  17. எல்லாமுமாய் உள்ள நிறைவான கவிதை !

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி கருத்துப்பகிர்வுக்கு...

      Delete
  18. பட்டு அரை முழம்.. ஜரிகை பார்டரோ மூணரை முழம்னானாம்.. உங்க கவிதையையும், பின்னூட்டங்களையும் நினைச்சேன்.. சிரிச்சேன்.. ரசிச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா மோகன் ஜி.... கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டீங்களேப்பா....

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..... பட்டு அரை முழம் பார்டர் மூணரை முழம்.. ரசித்தேன்பா...

      Delete
  19. வரிகளில் சொல்ல வந்ததை வரையோவியங்களில் சொல்லிச் சென்றிருக்கின்றனர் நம் முன்னோர்கள். அதன் வழி இங்கே படத்தோடு வரிகளை நோக்கிப்பார்த்திடுகையில் எழுத்தாளினியின் உணர்வுகளை நம்மால் புரிந்து ரசிக்க முடிகின்றது. கணவன் மனைவி, தாய் குழந்தை என்ற எல்லையை விடுத்து சகோதரம், நட்பு என்ற வகையில் காதலை/அன்பை/பாசத்தை தெளித்த வரிகளாக எடுத்துக் கொள்ள முடிகின்றது. பயணித்த கருவும் அருமை அக்கா.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மையே தம்பி.... எல்லாவற்றுக்குமே அன்பு தான் பிரதானம்.... மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.

      Delete
  20. வணக்கம் அக்கா...
    நலமா??

    அழகான கவிதை ..
    உணர்வின் அச்சு...

    மெய்யாக நானிருந்தேன்
    தனித்து இருக்கையிலே
    தடம் கூட தெரியவில்லை......
    உயிராக நீ வந்தாய்
    என்னோடு நீ கலந்தாய்
    உயிரும் மெய்யும்
    இரண்டறக் கலந்ததால்
    உயிர்மெய் ஆனோம்...
    இன்றோ சபைதனில்
    மதிப்பை உணர்ந்தேன்...
    உன்னன்பின் இசைதனில்
    எனை மறந்தேன்....

    ReplyDelete
    Replies
    1. அன்பு வணக்கங்கள் மகி.... நலமேப்பா இறைவன் அருளால்... என் கவிதை வரிகளை விட இதோ இங்கே தம்பியின் வரிகளில் லயிக்கிறேன்பா... ரசிக்கவைத்த ரசனையான வரிகள்....

      மனம் நிறைந்த அன்புநன்றிகள் மகி அழகிய கவிதைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

      Delete
  21. குட்டிக் கவிதை! அழகு, குட்டி சுட்டிகள்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா...தங்களின் ஆசி....

      Delete
  22. என் முதல் வருகை. மஞ்சு வை.கோ ஸாரின் அழைப்பை ஏற்று ஒடோடி வந்து வலைசர்த்தில் எட்டி பார்த்தேன். வார்த்தைகள் இல்லை புகழ, எழுத என்னிடம். அன்பு மட்டும் தான் உள்ளது. எப்படி நான் உங்க வலைதளத்தை மிஸ் செய்தேன். தெரியவில்லை. எனக்கு இப்ப தான் தெரிய வந்தது. நான் உங்க வலைதளத்தை தொரடுகிறேன். நல்ல அருமையான் வரிகள் அமைந்த கவிதை. எனக்கு கவிதை என்றால் ரொம்ப பிடிக்கும்.
    நிங்க டைம் இருக்கும் போது இந்த ஒரு சின்ன வலைதளத்தை உங்க கவி + கதம்ப உணர்வுகளோடு வருகை தாங்க.

    ReplyDelete
  23. நெருக்கமான உணர்வுகளை சுருக்கமாகச் சொல்லும் கவிதை. அருமை.

    ReplyDelete
  24. மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பார்களே அதுபோல சின்னக் கவிதை ஓராயிரம் கருத்துக்கள்.

    படித்தவுடன், உணர்வுகள் கதம்ப மாலையாய் மனதில் மலர்ந்தன.

    பாராட்டுக்கள் மஞ்சு!

    ReplyDelete
  25. வயது என்னவாக இருந்தால் என்ன. காதலுக்கு அளவு உண்டா என்ன.
    வம்பு என்ன என்றால்
    இதே உணர்வு அன்பாக எல்லோரிடமும் மஞ்சு என்ற உருவத்தில் வியாபித்திருக்கிறது.
    அருமையான கவிதை மஞ்சு.

    ReplyDelete
  26. காதல் பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள்...

    அருமை, ரசித்தேன்...

    ReplyDelete
  27. காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கிய வரிகள்!

    ReplyDelete
  28. கண்களா !
    காதலாகிக்
    கசிந்தது போதுமடா.

    அம்மாவைக்கூப்பிட்டு
    அடுத்த பதிவைப்
    போடச்சொல்லுங்க..

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.in
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  29. So little words... But they sing a song so sweet! Beautiful!

    ReplyDelete
  30. வணக்கம்... நேற்று உரையாடியது மனதிற்கு அவ்வளவு சந்தோசம்... அதை வாத்தைகளால் சொல்ல முடியாது... நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  31. வணக்கம் மஞ்சுபாஷினி .உங்கள் உரிமையான அறிமுகம் நெகிழவைத்தது . . உங்கள் வலைப்பூ மிக நேர்த்தியாய் வாசிக்க எளிதாய் அற்புதமாய் இருக்கிறது. தொடர்ந்து வருவேன் வாசிப்பேன்

    ReplyDelete
  32. கவிதை அருமை. என்னில் நீ. உன்னில் நான். இதற்கு மேல் வார்த்தை உண்டா! அன்பை வெளிபடுத்த.
    வாழ்த்துக்கள் மஞ்சு.

    ReplyDelete
  33. கடுகு சிறியதானாலும் காரம் பெரிது என்பர்.
    கவிதை சிறியது ஆனால் அதில் பொதிந்துள்ள கருத்து மனதை அள்ளிக்கொண்டு போகிறது...

    அருமை! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...