என்ன பிரச்சனை என்றாலும் சட்டுனு டென்ஷனாகிடாதீங்கப்பா…
டென்ஷன் ஆகாம பிரச்சனை என்னன்னு கண்டுப்பிடிச்சு அதை தீர்க்க
என்ன தீர்வுன்னு பொறுமையா யோசிச்சு அதன்படி செயல்பட்டால் டென்ஷனும் காயப்…. பிரச்சனையும்
காயப்… போயே போயிந்தி…
உங்களுக்கெல்லாம் ஒரு டென்ஷன் பார்ட்டியை நான் அறிமுகப்படுத்தப்போறேன்…
சரியான அதிர்ச்சிக்கு பிறந்தவங்க.. பெயர் அலமேலு… இந்தம்மாவோட டென்ஷன் எவ்ளோ தூரத்துக்கு
போய்ருச்சுன்னு பார்ப்போமா??
வீட்டில் நல்லா சிரிச்சு சந்தோஷமா வேலைகள் செய்துக்கொண்டு
கணவர், பிள்ளைகளிடம் சந்தோஷமாய் இருந்துக்கொண்டு அம்மாவுக்கு பணிவிடை செய்துக்கொண்டு
நாட்கள் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது துக்கடா சார் மேனேஜரா அவள் ஆபிசில் வரும்வரை….
அன்று முதல் டென்ஷன் தொடங்கியது அலமேலுக்கு…
என்ன சொன்னாலும் பரபரவென்று இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை
செய்வது… பயந்து பயந்து டென்ஷனை ஏற்றிக்கொள்வது இப்படி… ஒரு சின்னத்தவறு வேலையில் செய்துவிட்டாலும்
துக்கடா சார் அலமேலுவைப்பார்த்து சொல்வது என்னத்தெரியுமா? “ என்ன மேடம் வீட்டில் ஆத்துக்காரரோட
பிரச்சனையா? வீட்டு டென்ஷன் வீட்டோட வெச்சுக்கோங்க… ஆபிசுல வந்தா வேலையில் மட்டும்
தான் கவனம் இருக்கணும் “ உறுமிட்டு போவான்… பின்னாடியே இவளோட முணுமுணுப்பு ஆரம்பமாகிடும்
“ கட்டைல போறவனே கழிஷட என் டென்ஷனே நீ தாண்டா எருமையே “ மனசுக்குள்ள நல்லா திட்டி திட்டி…
என்னிக்கு திடிர்னு நேர்ல துக்கடா சாரைப்பார்த்தா திட்டிரப்போறாளோ
அலமேலு...
அவளோட வேலைகளை ஒழுங்கா நிதானமா நிம்மதியா செய்யவிடாம ஏஜெண்ட்
க்ளையண்ட் போதாதகுறைக்கு துக்கடா சார் வேலைகள் எல்லாமே இவ தலைல… ஏண்டா இப்படி எருமைன்னு
கேட்டாக்க “ வேலையே செய்யாம சம்பளம் வாங்கினா ஜீரணம் எப்படி ஆகும்னு ”டயலாக் விடறான்….
அவளோட வேலைகளோட இந்த வேலைகளும் சேர அவளுடையே டென்ஷனும் பிபியும்
அவளுக்கே தெரியாம கூடிக்கொண்டே இருந்தது…
ஒரு நாள் ரோட்டில் நடந்துவரும்போது யாரோட கைங்கர்யமோ ஷர்ட்
பேண்ட் போட்டு மாட்டவேண்டிய ஹாங்கரை நல்லா கண்ணுக்கே தெரியாம வளைச்சுப்போட்டு யாராச்சும்
விழுந்து கோயிந்தா போட்டுக்கிட்டே அங்கப்ரதட்சணம் பண்ண வராங்களோன்னு அங்க ரோட்டோரத்தில்
வாலுகள் பார்த்துக்கொண்டிருக்க…. அலமேலுவைத்தவிர மீதி எல்லாரும் கவனமா அந்த ஹாங்கரை
தவிர்த்து ஓரமா நடக்க ஆரம்பித்தனர்… ச்சே என்னாடா போணியே ஆகல அப்டின்னு அலுத்துக்கொள்ளும்போது
டமால்னு ஒரு சத்தம்…
சாக்ஷாத் நம்ம அலமேலுவே தான்… என்னிக்குமே தரைப்பார்த்து
நடக்கிற அலமேலு அன்னிக்குன்னு பார்த்து மொபைல் அடிக்கவே எடுத்து காதுல பொருத்திக்கிட்டு
ஹல்லோஓஓஓஓஓவ் அடுத்து அங்க ஹல்லோ சொல்றதுக்கும் இங்க அலமேலு தொபுகடீர்னு விழுந்து வாரவும்
சரியா இருந்தது…. அவ போட்டிருந்த கூலிங்கிளாஸ் முகம் சுளுக்கிக்கொள்ள…. கையில் இருந்த
மொபைல் அக்குவேறா ஆணிவேறா அம்போன்னு பரிதாபமா விழுந்து கிடக்க.. நம்ம அலமேலு திருப்பிப்போட்ட
கரப்பாம்பூச்சி கணக்கா விழுந்துக்கிடக்க… அவ ட்ரெஸ் எல்லாம் கிழிந்து தாறுமாறா…
அவளோட ராசி என்னன்னா என்ன உடம்பு சரியில்லாம போறதுன்னாலும்
கரெக்டா வாரக்கடைசில தான்….இப்படி விழுந்து வாரினதும் வாரக்கடைசி… அதனால மெடிக்கல்
லீவ் எடுக்கிறது என்பது அலமேலுவால் முடியாமயே போய்ருச்சு….
ஒரு நாள் என்னடான்னா ஓயாத முதுகுவலி…. துக்கடா சார் கிட்டப்போய்
அலமேலு பவ்யமா எனக்கு லீவ் வேணும்னு கேட்டப்ப… துக்கடா சார் துச்சமா அலமேலுவைப்பார்த்துட்டு
சாரி நிறைய்ய வேலை இருக்கு.. லீவ் எல்லாம் தரமுடியாதுன்னு நிர்தாட்சண்யமா சொல்லிட்டார்…
அவ்ளோ தான் அலமேலு என்னென்ன திட்டினா பாவம் எத்தனை மிருகத்தோட பெயர் எல்லாம் நினைவுப்படுத்தினாளோ
துக்கடா சாரைத்திட்ட… டென்ஷன் பாட்டுக்கு பிபியை ஏத்திக்கிட்டே போச்சு ரயில்வே பட்ஜெட்
போல….
நாலு நாளா துக்கடா சார் டார்ச்சர் ஒரு பக்கம்…. வேலைகள் பளு
ஒரு பக்கம்… எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா நெஞ்சுவலிக்க ஆரம்பிச்சு திடிர்னு ஒரு
நாள் மொத்தமா நெஞ்சுவலியில தலைச்சுத்திச்சு அலமேலுக்கு…. (அட இன்னாப்பா நெஞ்சுவலின்னா
தலைச்சுத்துமா? அப்டின்னு ரொம்ப வியாக்யானம் எல்லாம் கேக்கப்படாது) நெஞ்சுவலி மன அழுத்தத்துனால
(துக்கடா சார் தர டார்ச்சர் தான்) தலைச்சுற்றல் (கங்க்ராஜுலேஷன்ஸ் அப்டின்னு சொல்லிரக்கூடாது
அலமேலு தொண்டுக்கிழம்) பிபி அதிகமானதால தலைச்சுற்றல்….
இழுத்துட்டு ஆஸ்பிட்டல் போயிடலாம்னு ஒருவழியா முடிவெடுத்து
அலமேலு ஆத்துக்காரர் லீவ் போட்டுட்டு வான்னு சொல்ல…. அலமேலு துக்கடா சாருக்கு பயந்துக்கிட்டு “ இருங்க இன்னும்
கொஞ்ச வேலைகள் இருக்கு முடிச்சிட்டு வரேன்னு “ சொல்லிட்டு வேலைகளைத் தொடர…
அலமேலுக்கு மயக்கம் வர ஆரம்பிச்சிருச்சு பிபி கன்னாபின்னான்னு
எகிற ஆரம்பிச்சிருச்சு… அலமேலுக்கு மரணபீதி மனசுல… அச்சச்சோ இன்னைக்கு தான் எனக்கு
லாஸ்ட் டேவா அப்டின்னு யோசிக்க….ஆஸ்பிட்டல்ல ஒருவழியா அவங்க ஆத்துக்காரர் கொண்டுப்போய்
சேர்க்க… அங்க ஆபிசுல எல்லார் முன்னாடியும் இதெல்லாமே சினிமாக்காட்சி போல நடக்க அங்கிருந்த
ஏஜெண்ட் க்ளையண்ட் எல்லாரும் நம்ம துக்கடா சாரை சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் தாக்க
ஆரம்பிச்சிட்டாங்க… நம்ம துக்கடா சாரோ திருட்டுவடையை வாய்ல வெச்ச காக்கா நரிக்கிட்ட
மாட்டிக்கிட்டு திருதிருன்னு முழிக்கிற மாதிரி முழிக்க….
அங்க அலமேலுவை டாக்டர் பரிசோதித்துவிட்டு கேட்டார் முதல்
கேள்வி… என்னம்மா ப்ரெக்னெண்டா?? ச்சீ போங்க டாக்டர் சஷ்டியப்தப்பூர்த்தி பண்ற வயசுல
ப்ரெக்னெண்டா….
வலியில் துடிச்சுக்கிட்டு இருந்தாலும் நக்கலப்பாரு அப்டின்னு
தலைல அடிச்சுக்கிட்டு அப்ப என்ன தான் டிப்ரெஷன் உங்க மண்டைக்குள்ள அப்டின்னு டாக்டர்
உசுப்பேற்ற…. “ துக்கடா சார் தான் என் ஒரே டிப்ரெஷன்னு” சொல்லி மூக்கு சிந்த ஆரம்பிச்சிட்டா
அலமேலு…
சரி சரி… ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறோம். இனிமே டிப்ரெஷனை வெளியே
தூக்கிப்போடு….
முடியலன்னா??? அப்பாவியா அலமேலு கேட்க….
முடியலன்னா துக்கடா சாரை தூக்கி வெளியே போடு ஆத்தா அப்டின்னு
சொல்லிட்டு டாக்டர் ஜகா வாங்கிட்டார்….
இங்க துக்கடா சாருக்கு டென்சனும் பிபியும் எகிற ஆரம்பிக்க
பயத்துல ஆஸ்பிட்டல் நோக்கி படையெடுத்துட்டார்….
“ இப்ப எப்படி இருக்கு அலமேலு மேடத்துக்கு “ அப்டின்னு பரிதாபமா
முகத்தை வெச்சுக்கிட்டு அலமேலு ஆத்துக்காரர் கிட்ட கேட்க…..
அலமேலு ஆத்துக்காரர் அவர் பங்குக்கு பொரிஞ்சு அப்பளமா தள்ள…..
துக்கடா சாருக்கு நாக்கு வெளித்தள்ள ஆரம்பிச்சிருச்சு…
துக்கடா சார் அலமேலு கிட்ட ஓடிப்போய் “ மேடம் மேடம் இனிமே
டென்ஷன் மொத்தம் லீசுல வேணாம் நானே குத்தகை எடுத்துக்கிறேன்… நீங்க நிம்மதியா இருங்க
மேடம். வேணும்னா ஒரு வாரம் முழுக்க லீவ் எடுத்துக்கோங்க மேடம் அப்டின்னு சொல்லி கூழக்கும்பிடு
போட….
சரி சரி நாளை வரும்போது ஆரஞ்ச் ஆப்பிள் ஹார்லிக்ஸ் இதெல்லாம்
வாங்கிட்டு வாங்க சார் பேஷ்ண்ட்டை வெறும் கையோட பார்க்க வரக்கூடாதுன்னு தெரியாது???
அப்டின்னு ஸ்டைலா அலமேலு கேட்க….
“ நேரம்டி “ அப்டின்னு ஒரு முறை முறைச்சுட்டு நம்ம துக்கடா
சார் தலைல அடிச்சுக்கிட்டு அங்கிருந்து காயப் ஆகிட்டார்….
இந்த கதைல இருந்து என்ன தெரியுது??
டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…
டென்ஷன் நாம எடுத்துக்க கூடாது… என்ன தான் பிரச்சனை என்றாலும்
டென்ஷன் ஆறதுனால எதுனா தீர்வு கிடைக்குதா என்ன?? மாறா உடம்பு தான் கெடுது…. அதனால தயவு
செய்து மக்களே டென்ஷ்ன் எடுத்துக்காதீங்க… முடிஞ்சா துக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர்
பண்ணிடுங்க…..
Tweet |
Tension nahi lena ka.... bilkul sahi bola.... dhene ka... :)
ReplyDeleteபாவம் அந்த துக்கடா.... ஆனாலும் இத்தனை நாள் கொடுத்த பாவத்துக்கு கொஞ்சம் அவரும் டென்ஷன் ஆகட்டுமே...
நல்ல பகிர்வு.... தொடரட்டும் பகிர்வுகள்.
த.ம. 1
ஹாஹா கண்டுப்பிடிச்சிட்டீங்களாப்பா வெங்கட்...
Deleteஆமாம் ஆமாம் டென்ஷன்ல ரொம்பவே ஆடிப்போயாச்சு....
அன்புநன்றிகள்பா முதல் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் தம வுக்கும்....
அனேகமா, துக்கடா சார் வேறு அலுவலகத்துக்கு மாறி இருப்பார் என்று நினைக்கிறேன்... ஹிஹி...
ReplyDeleteஇன்றைய அவரச உலகத்திற்கு தேவையான பகிர்வு...
நன்றி...
இப்ப இல்லப்பா.... இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து.... ஆனா அதுவரை??? கரெக்ட் வெங்கட் சொன்னது போல.... :)
Deleteஅன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.. த.மவுக்கும்...
ஐந்து மாதம் கழித்து தான் நாயகிக்கு விடிவு பிறக்குமோ அக்கா.. ப்ரம்மன் ரெம்ப அநியாயம் செய்து விட்டார் போல.. நாயகிக்கு இருப்பதைக் கொண்டு சிறப்புற அமைத்திட தெரியாவண்ணம் படைத்து விட்டாரோ என்று கூட எண்ணிடத் தோன்றுகின்றது. கதையோடு எதிர்கால முடிவையும் நாயகிக்கு வழங்கியிருப்பது கூடுதல் இணைப்பா அக்கா.!
Delete//தயவு செய்து மக்களே டென்ஷ்ன் எடுத்துக்காதீங்க… முடிஞ்சா துக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க….//
ReplyDeleteok. ....ok...
ஏ கிழவி !! சீக்கிரம் ஃபோனைப் போடு... !!
என்னது ராத்திரி 11 மணி ஆயிடுத்து. இப்ப யாருக்கு ஃபோன் பண்ணச்சொல்றீக...
டாக்டர் ஜெயச்சந்திரன் நம்ம கார்டியாலஜீஸ்டுக்குத்தான்.....
என்னங்க... என்ன விசயம்... நெஞ்சு, மார், முதுகு, கால், காது, மூக்கு , நாக்கு ஏதேனும் வலிக்குதா >
வலிக்குதான்னா கேட்கற !! உயிரே போகும்போல இருக்கே ...
அப்படி என்னாங்க விசயம் ??
அந்த மஞ்சு எழுதின கத படிச்சேனா ?
ஆமாம்.
அதிலேந்து ஒரே டென்சன்....
எதுக்கும் நாளைக்கு ஒரு இ.சி.ஜி. எகோ, த்ரெட் மில், ப்ள்ட் டெஸ்ட், எல்லாம் எடுத்துடுங்க... அப்பறம்...
என்ன அப்பறம்....
பில் ஐ மஞ்சுபாஷிணிக்கு அனுப்பிச்சுடுங்க...
அவங்க தானே டென்சனை மத்தவங்களுக்கு கொடுங்க அப்படின்னாக....
சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
ஓஹோ இந்த கதை வேற தனி ட்ராக்ல போகுதே என்ன விஷயம் அப்பா?? பில்லு தானே அனுப்பி வைங்க அப்பா....நான் அதை அப்டியே துக்கடா சாருக்கு அனுப்பிடறேன் :)
Deleteஅப்பா உங்க கமெண்ட் ரசிக்க வைத்தது அப்பா... கலாட்டா பண்றீங்க.....
tm2
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா...
Delete//தயவு செய்து மக்களே டென்ஷ்ன் எடுத்துக்காதீங்க… முடிஞ்சா துக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க….//
ReplyDeleteஏ கிழவி !! சீக்கிரம் ஃபோனைப் போடு... !!
என்னது ராத்திரி 11 மணி ஆயிடுத்து. இப்ப யாருக்கு ஃபோன் பண்ணச்சொல்றீக...
டாக்டர் ஜெயச்சந்திரன் நம்ம கார்டியாலஜீஸ்டுக்குத்தான்.....
என்னங்க... என்ன விசயம்... நெஞ்சு, மார், முதுகு, கால், காது, மூக்கு , நாக்கு ஏதேனும் வலிக்குதா >
வலிக்குதான்னா கேட்கற !! உயிரே போகும்போல இருக்கே ...
அப்படி என்னாங்க விசயம் ??
அந்த மஞ்சு எழுதின கத படிச்சேனா ?
ஆமாம்.
அதிலேந்து ஒரே டென்சன்....
எதுக்கும் நாளைக்கு ஒரு இ.சி.ஜி. எகோ, த்ரெட் மில், ப்ள்ட் டெஸ்ட், எல்லாம் எடுத்துடுங்க... அப்பறம்...
என்ன அப்பறம்....
பில் ஐ மஞ்சுபாஷிணிக்கு அனுப்பிச்சுடுங்க...
அவங்க தானே டென்சனை மத்தவங்களுக்கு கொடுங்க அப்படின்னாக....
சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
அம்மாவையும் விட்டு வைக்கலையாப்பா நீங்க :)
Deleteஅப்பா நீங்க பண்ற கலாட்டாவில் அம்மாக்கு டென்ஷன் ஆகிட ப்போறது பார்த்துக்கோங்கப்பா :)
அதுக்குத்தான் சொல்றது எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்கன்னு.. கேட்கிறீங்களா ஒண்ணா?ஹாஹாஹா..
ReplyDeleteகதைக்குள் நுழையும் முன்பு கதை அடங்கியிருக்கும் வகையினைப் பற்றி சொல்லிட விரும்புகின்றேன், அவ்வண்ணமே தொல்காப்பியரின் வரிகளை இங்கே எடுத்துக்காட்டிட கடமைப்பட்டிருக்கின்றேன்.
ReplyDeleteநகையே யழுகை யிளிவரால் மருட்கை
யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்
றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப (தொல். பொருள்.மெய். நூ.251)
எண்வகை மெய்ப்பாடுகளை விளக்கிய தொல்காப்பியர் நகையென்னும் சுவையினை முதலாக எடுத்துக் கூறியிருக்கின்றார். இது எள்ளலாலும், இளமையாலும், பேதமையாலும், மடமையாலும் பிறக்கும் என்றே மேலும் தெளிவு படுத்தியிருக்கின்றார்
எள்ளல் இளமை பேதமை மடனென்று
உள்ளப்பட்ட நகை நான்கென்ப. (தொல். பொருள். மெய்.நூ.252)
நகைச்சுவை உணர்வு இல்லையெனில் இந்த உலகம் என்றோ மண்ணில் மாய்ந்திருக்கும் என்று படித்த வரிகளை இங்கே நினைவுபடுத்தியும் கொள்கின்றேன்.
நகைச்சுவை உணர்வே ஒருவரை அழுத்த நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய ஊக்கியாகும். அந்த வகையிலே நகைச்சுவை ததும்பும் ”துக்கடா சாரும் டென்சன் அலமேலுவும்…” என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கதையானது கதம்ப உணர்வுகளின் கர்த்தவான என் மஞ்சு அக்காவின் எண்ணச் செறிவினையும், இயல்மிகு நகைச்சுவைப் பாங்கினையும் தழுவி வடித்த சிலையாய் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.
கதையின் ஆரம்பத்திலேயே மன அழுத்ததிற்கு உட்படாதீர்கள் என்று நமக்கு ஓர் அரிய ஆலோசனையினைத் தந்து சிறந்த ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் அக்கா இக்கதையின் மூலமாக பரிமாணம் கொள்கின்றார் என்பதனை மறந்திடவோ மறுத்திடவோ இயலாது.
வளரும்....
கதாநாயகியின் மனநிலையினை ஒவ்வொரு இடத்திலேயும் தன் எண்ணவோட்டங்களாகச் சொல்லியிருப்பதைக் காண்கையில் நாமும் அந்த நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றோம் என்ற உள்ளுணர்வின் ஒலிகள் செவிக்கு எட்டாமல் சிந்தைக்கு பாய்ந்து கொண்டிருக்கின்றது.
ReplyDeleteஎன்ன சொன்னாலும் பரபரவென்று இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் வேலையில் ஒரு மன நிம்மதி கிடைத்திருந்ததா என்று கதாநாயகியின் சார்பில் அக்கா எடுத்தியம்பியிருந்தால் நானும் அதனையே பின்பற்ற ஏதுவாகியிருந்திருக்கும்.
இருந்தாலும் பரபரவென்று இழுத்துப் போட்டு வேலை செய்த நாயகிக்கு வந்த உடல் நலக்கேட்டினை படித்ததில் படிப்போடு படிப்பினையும் கூடி வந்து விட்டது. அந்த வகையிலே கருவிற்கு ஒரு வணக்கத்தை முதலில் வைத்துக் கொள்கின்றேன் அக்கா.
” என்னிக்கு திடிர்னு நேர்ல துக்கடா சாரைப்பார்த்தா திட்டிரப்போறாளோ அலமேலு...” வரிகளைப் படித்திடும் போது நானும் என்னைக்கு என் மேலாளரை திட்டப் போறேனோ என்று கூட எண்ணிட வைத்து விட்டது.
”வேலை செய்யாம சம்பளம் வாங்கினா ஜீரணம் எப்படி ஆகும்” இந்த வரிகளை நானும் கேட்டதுண்டு இங்கே இல்லை தாயகத்திலே. நாம் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்குகின்றோம் என்று மேலாளர்கள் நம் உழைப்பின் மகத்துவத்தை பாராட்ட விடிலும் இது போன்று தூற்றாமல் இருந்தால் நாயகிக்கு வந்த சூழலிருந்து நாமும் தப்பித்துக் கொள்ளலாம் அக்கா.
அடுத்து சாலையில் நாயகி திருப்பிப் போட்ட கரப்பான் பூச்சி போல விழுந்துகிடப்பதை சொல்லியிருக்கும் வரிகளைப் படிக்கும் போது வாய் விட்டுச் சிரித்தே விட்டேன் இருந்தாலும் பாவம்ல கதையின் நாயகி. கதையாசிரியையான அக்கா இப்படி வெளுத்து வாங்கலாமோ.
வளரும்....
அடுத்து நாயகிக்கு தலைவலியோடே நெஞ்சு வலியும் சேர்ந்து வந்திருக்கு.. பாவம்ல. எல்லாத்திற்கும் இந்த துக்கடா சார் தான் காரணம் என்று நாமும் கதையாசிரியையோடு சேர்ந்து துக்கடா சாரை கண்டிப்போம் வாருங்கள்.
ReplyDeleteகடைசியாய் வடித்திருக்கும் மருத்துவம் உள்ளிட்ட வரிகளுக்கு என்னால் கருத்து எழுதிட முடியவில்லை. காரணம் அந்த நிலையில் நம்மையோ, நம் உறவையோ வைத்துப் பார்க்கிடும் போது வளரும் வலிகள் அதிகமே என்பது தான், ஆனால் அக்கா அவர்கள் நமக்கு கதம்ப உணர்வலைகளாய் மெல்லிய வருத்த நிகழ்வோடு நகைச்சுவையினை முழுதும் மேலேற்றி படிக்கத் தந்திருப்பது உண்மையிலே சிறந்த கதாசிரியை என்ற நிலையை சொல்லாமல் சொல்லியிருக்கும் முறையென்றே நினைக்கின்றேன்.
” டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…” எதிர் பார்த்த நகைச்சுவை முடிவு இது தான். கதையாசிரியையின் கதை முடிவு அட்டகாசம்.
கடைசி பத்தி நல்லதொரு அறிவுரையோடு நாயகியின் எதிர்பார்ப்பும் இருந்திருக்கின்றது. அதை அக்கா சொல்லியிருக்கும் விதமும் அருமை.
கதை நகைச்சுவை தன்மையுடன் வரைந்திருந்தாலும் தமிழோடு மற்ற மொழிகள் அதிகம் கலந்திருப்பது எனக்குக் கொஞ்சம் நெருடலை தருகின்றது.
நல்லதொரு நகைச்சுவைக் கதையினைப் படைத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல அக்காவிற்கு
அடடடா...ஆரம்பத்திலேருந்து முடிவு வரை எத்தனை தரம் இந்த டென்ஷன் வந்திருக்கு பாருங்கோ.
ReplyDeleteடென்ஷன் டென்ஷன் டென்ஷன்.... கதை வாசிச்சு முடிக்குறதுக்குள்ளே அவங்க டென்ஷனை பார்த்து நான் டென்ஷனாகீட்டேன்...:)))
நல்ல நகைச்சுவையாய் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அருமையாக அட்வைஸும் கொடுத்திருக்கிறீங்க...;)
வாழ்த்துக்கள்!
துக்கடா சாரும் அடுத்தநாள் வந்திருப்பார் அதே மருத்துவ மனையில் நோயாளியாக செர்ந்திருப்பாரே?
ReplyDelete//டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…//
ReplyDeleteகதையை டென்ஷன் ஆகாமல் படித்தேன் ஆனால் கதையின் முடிவில் இருந்த இந்த வரிகளை பார்த்த பின் எனக்கு டென்ஷன் ஆகிவிட்டது, காரணம் இந்த வரியில் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று புரியவில்லை... அதனால்தான் எனக்கு இப்போ டென்ஷன் யாரவது சீக்கிரம் வந்த அர்த்தம் சொல்லிப் போங்கப்பா
நமக்கு ஹிந்தி தெரியாதுங்கோ
என்ன விசயம் அப்படின்னெ புரியல்லையே !!
ReplyDeleteநேத்திக்கு பின்னூட்டம் போட்டேன் இன்னும் அது பப்ளிஷ் ஆவல்லயே !!
காலைலெ வந்திருக்கும்னு நினைச்சு கணிணியைத் துறந்தால் அப்பவும் வல்லையே !!
என்னவாயிருக்கும் அப்படின்னு நினைச்சு நினைச்சு டென்சனாயிடுச்சே !!
துக்கடா ஸார் நமக்கு வந்த துக் ரொம்ப படா ஸாரே !!
ஹார்ட்டு பட படங்குதே !!
கை கால் எல்லாமே வெட வெடங்குதே !!
ஏ கிழவி ! அந்த பி.பி. இன்ஸ்ட்ருமென்டைக் கொண்டுவா ?
இந்தக்க்கிழவன், என்ன டென்சன் தர்றாரு எனக்கு ?
திருப்பதி ஏழுமலையானே !! இந்த டென்சன் கிழவனிடமிருந்து என்னைக் காப்பாத்து.
சுப்பு தாத்தா. ... மீனாட்சி பாட்டி. சம்வாதம்.
டென்ஷனை ஏன் நாம எடுத்துக்கிடணும்....துக்கடா சாருக்கு தள்ளிடுங்க....:))
ReplyDeleteஎதுக்கடா இந்த டென்ஷன், அலட்டாம இருக்கிறதே மேலு! சரிதாங்க!
ReplyDeleteநம்ம அலமேலு திருப்பிப்போட்ட கரப்பாம்பூச்சி கணக்கா விழுந்துக்கிடக்க…
ReplyDeleteடாக்டர் பரிசோதித்துவிட்டு கேட்டார் முதல் கேள்வி… என்னம்மா ப்ரெக்னெண்டா?? ச்சீ போங்க டாக்டர் சஷ்டியப்தப்பூர்த்தி பண்ற வயசுல ப்ரெக்னெண்டா
துக்கடா சாரோ திருட்டுவடையை வாய்ல வெச்ச காக்கா நரிக்கிட்ட மாட்டிக்கிட்டு திருதிருன்னு முழிக்கிற மாதிரி முழிக்க….
வார்த்தைகளில் விளையாடி டென்ஷனை ஏத்திகிட்டே போய்.. முடிவில் துக்கடா ஸாரை நினைச்சு பாவமாயிடுச்சு.. இப்படி எல்லாரும் துக்கடா ஸாரை திட்டினா அவர் என்னதான் பண்ணுவாரு..
எழுத்துல நகைச்சுவை திலகமாயிட்டீங்க..
ReplyDeleteஅது எப்படி என்னோட நாத்தியோட ஃபோடோ மஞ்சுவுக்கு கிடைச்சது அப்படின்னு
வூட்டு இல்லத்தரசி கேட்குதுல்ல...
பதிலே சொல்லாம இருந்தா எப்படி?.
சுப்பு தாத்தா
ஹா.. இன்னும் 5 மாதம் வெயிட் செய்யனுமா?!
ReplyDeleteசிவஹரி பின்னூட்டங்கள்.... சபாஷ் சரியான போட்டி! :))))
//துக்கடா சாரும்.... டென்ஷன் அலமேலுவும்...//
ReplyDeleteஆஹா, அருமையான தலைப்பு....
பக்கோடா மிக்சரும் திருநெல்வேலி அல்வாவும் போல! ;)
//நம்ம அலமேலு திருப்பிப்போட்ட கரப்பாம்பூச்சி கணக்கா விழுந்துக்கிடக்க…
ReplyDeleteஅங்க அலமேலுவை டாக்டர் பரிசோதித்துவிட்டு கேட்டார் முதல் கேள்வி… என்னம்மா ப்ரெக்னெண்டா?? ச்சீ போங்க டாக்டர் சஷ்டியப்தப்பூர்த்தி பண்ற வயசுல ப்ரெக்னெண்டா….//
நல்ல நகைச்சுவை மஞ்சு. பாராட்டுக்கள்.
//துக்கடா சார் அலமேலு கிட்ட ஓடிப்போய் “ மேடம் மேடம் இனிமே டென்ஷன் மொத்தம் லீசுல வேணாம் நானே குத்தகை எடுத்துக்கிறேன்… நீங்க நிம்மதியா இருங்க மேடம். வேணும்னா ஒரு வாரம் முழுக்க லீவ் எடுத்துக்கோங்க மேடம் அப்டின்னு சொல்லி கூழக்கும்பிடு போட….//
ஆஹா! துக்கடாவே இப்படிச்சொல்லும்படி ஆகிவிட்டதே! ;)))))
//சரி சரி நாளை வரும்போது ஆரஞ்ச் ஆப்பிள் ஹார்லிக்ஸ் இதெல்லாம் வாங்கிட்டு வாங்க சார் பேஷ்ண்ட்டை வெறும் கையோட பார்க்க வரக்கூடாதுன்னு தெரியாது??? அப்டின்னு ஸ்டைலா அலமேலு கேட்க….//
மஞ்சூஊஊஊஊஊ .... இது சூப்பர்! வாய் விட்டுச்சிரித்தேன்! ;)))))
//“ நேரம்டி “ அப்டின்னு ஒரு முறை முறைச்சுட்டு நம்ம துக்கடா சார் தலைல அடிச்சுக்கிட்டு அங்கிருந்து காயப் ஆகிட்டார்//
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் ..... நேரம் தான்ன்ன்ன்!
>>>>>>
//இந்த கதைல இருந்து என்ன தெரியுது??
ReplyDeleteடென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…
டென்ஷன் நாம எடுத்துக்க கூடாது… என்ன தான் பிரச்சனை என்றாலும் டென்ஷன் ஆறதுனால எதுனா தீர்வு கிடைக்குதா என்ன?? மாறா உடம்பு தான் கெடுது…. அதனால தயவு செய்து மக்களே டென்ஷ்ன் எடுத்துக்காதீங்க… முடிஞ்சா துக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க…..//
கதையின் நீதி புரிஞ்சுபோச்சு.
இந்தக்கதை வெளியிட்டதைப்பற்றி ஒரு தகவலும் மஞ்சு தராததால் அலமேலுவின் டென்ஷன் துக்கடா சாருக்கும், துக்கடா சாரின் டென்ஷன் எனக்கும் மஞ்சுவால் இப்போ ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளது. ;(((((
-0-0-0-0-0-0-0-0-0-
நகைச்சுவைக்குப்பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். மஞ்சுவுக்கு வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
ReplyDeleteசேட்டைக்காரருக்குப் போட்டியா ?செம நக்கல்! எழுத்தும் நடையும் அருமை!
பதிவைப் படித்து முடித்ததும்
ReplyDeleteஇருந்த கொஞ்சம் டென்சனும்
பஞ்சாய் பறந்து போய்விட்டது
டென்சன் குறித்து நகைச்சுவையாய்
சொல்லிப்போன முரண் அதிகம்
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeleteடென்ஷன் நாம எடுத்துக்க கூடாது… என்ன தான் பிரச்சனை என்றாலும் டென்ஷன் ஆறதுனால எதுனா தீர்வு கிடைக்குதா என்ன?? மாறா உடம்பு தான் கெடுது…. அதனால தயவு செய்து மக்களே டென்ஷ்ன் எடுத்துக்காதீங்க… முடிஞ்சா துக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க…..
ReplyDeleteதுக்கடா சாருக்கு டென்ஷனை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட துக்கடா சார் அட்ரஸ் ப்ளீஸ் ...
படிக்கும் போதே பயங்கர டென்ஷனோட படிச்சேன் !
ReplyDeletehttp://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/12/blog-post_5.html
அன்பு மஞ்சு,
ReplyDeleteடென்ஷன் எடுத்துக்காதீங்கன்னு நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள். எல்லாருக்கும் ஒரு துக்கடா சார் கிடைக்கணுமே!
இந்தக் கதை படித்து என் டென்ஷன் குறைந்தது நிஜம்!
பதிவுக்கு பின்னூட்டமாக இன்னொரு சுவாரஸ்யமான பதிவு போடும் உங்களுடன் திரு சிவஹரி போட்டி போடுகிறார் போலும்! சபாஷ் சரியான போட்டி!
டென்ஷன் இல்லாமலே வாசித்தேன். ஆனால் நாளை மீண்டும் தொடங்கிவிடும். இந்த மனம் இருக்கிறதே அதற்கு மறதி அதிகம். மறந்து போய் மீண்டும் டென்ஷன் படும் .எங்கேப்பா கொஞ்சநாளா எங்க வீட்டுக்கு ஆளையே காணோம் .
ReplyDeleteஎள்ளல் துள்ளும் நடை ... இயல்பான கதையாக்கம் அருமை
ReplyDeleteடென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி nice one ma'm
ReplyDeleteநல்ல ஒரு நகைசுவயோட சொல்லிடிங்க. ஆனா இந்த நூற்றாண்டில் அவசர விஞ்ஞாண யுகத்தில்+உலகத்தில் இருக்கிறவங்க எல்லாருக்கும் டென்ஷன் என்கிற பேர் சொல்லி நிறய்ய
ReplyDeleteவிஷயங்களை பார்க்க முடிகிறது. எல்லாதுக்குமே டென்ஷன்.நானும் நம்ம ரஞ்சனி மேடம் சொல்வதை போல் ஒரு துக்கடா ஸார் கிடைத்தால் ரொம்ப சிம்பிள். ஆல் இஸ் வெல். நல்ல பதிவு. டென்ஷனே போயே போயிந்தி.
உங்கள் இந்தக் கதையை வாசித்தபின் உண்மையிலேயே மனம் மிகவும் வேதனைப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம் ...?
ReplyDelete# நகைச்சுவை ஊடாக எளிய படிப்பினைக்கதையை வழங்கி இருந்தாலும் அந்த எழுத்துகளின் பின்னணியில் ஊடாடும் வேதனை தெளிவாகக் கைப்புண் போலத்தெரியவருகிறது. உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களின் பின்னணியையும் சூழல்களையும் வாசிக்கப் போந்தால் அவர்தம் துயரும் இன்னலும் தெரியவரும். அதற்காக இந்த கதாசிரியர் இன்னலையும் துயரையும் அனுபவிக்கிறாரோ என்னும் அனுமானத்தைக் கணித்திட விழைவில்லை. ஆயினும் சிறந்த எழுத்தாளர்களின் பின்னணியில் எத்தனையோ வேதனைகள் வடுக்கள் காணப்படுமென்றும் அவை அவர்கள் எழுதும் எழுத்துகளில் நேரடியாகவோ மறைபொருளாகவோ அமையும் என்பதை சில அறிஞர்கள் கூறிக் கேட்டிருக்கிறேன்.
# இக்கதையில் இரண்டு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. டென்ஷன் அலமேலு என்னும் கதாபாத்திரம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாய்ந்து மாய்ந்து பணி புரியும் விதமும் அலுவலகத்தில் மேலாளருக்கு அஞ்சி நடுங்கும் குணமும் முன்னரே கதை நாயகி அறிமுகத்தில் கூறிவிட்டு அதன் பின் அந்த மனநெருக்கடி காரணமாய் வெளி உலகத்தொடர்புகளில் செய்கைகளில் கவனமின்மையும் கவனப்பிசகும் பெருகிவருவதாய்க் காட்டிக்கொள்ள இரண்டு சம்பவங்களை - அவை வெவ்வேறு காலகட்டத்திலோ அல்லது அடுத்தடுத்ததாகவோ - காட்டிவிட்டு இறுதியில் அதன் நீதியையும் அதற்கான தீர்வையும் குறிப்பிடும் போது ஆங்கே நகைச்சுவை உணர்வு பூசிமெழுகப்பட்ட அடக்கிவைக்கப்பட்ட ஆதங்க எண்ணங்கள் வெளியேற்றமாகக் காணப்பட்டுள்ளது.
இனி இத்தகு மனநெருக்கடிகளுக்குத் தீர்வு..? நம் நெருக்கடிகளை மற்றவர்களுக்கு கடத்திவிடுவதா..? என்றால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்லவேண்டும்.
இயன்றவரை மனக்கட்டுப்பாடுகளும் மன அமைதிக்காய் வேண்டி ஆழ்நிலை தியானங்களும் சமூக பங்கெடுப்புகளும் கடைக்கொள்வதே ஆகும்.
இறைவழிப்பாடு இதற்கு மிகுந்த பயன்களைத் தரும். எது நடந்தாலும் அது நன்மைக்கே என்னும் மனப்பாங்கினை கைப்பிடித்து நடந்திடல் வேண்டும்.
சிறந்த இலக்கியங்களை வாசித்தலும் இனிய இசையினை நேசித்தலும் இயற்கை அழகினையும் அதன் சுகந்தத்தை சுவாசிப்பதும் மன நெருக்கடிகள் மன அழுத்தங்கள் ஆகியவற்றைப் போக்கிடும் வன்மை பெற்றவை.
அதை விடுத்து நமது நெருக்கடியை இன்னொருவருக்குக் கொடுப்பது என்பது சுழல் போல பூமராங் என்னும் மீள்திருப்புக் கருவிபோல மீண்டும் நம்மையே வந்தடைய வாய்ப்பு உண்டு.
அழகிய நகைச்சுவைக் கதையும் அரியதொரு படிப்பினை நீதியையும் தந்து நம்மை உய்விக்க வந்த கதாசிரியை இறுதியில் சொன்ன ஏதோ ஒருமொழிக்கூற்றினைக் கூறாமல் மேற்கண்ட பல வழிமுறைகளில் ஒன்றினைக் கூறி இருத்தல் நலமாய் இருந்திருக்கும்.
தமிழில் எழுதும் போது இயன்றவரை பிறமொழிக்கலவையின்றி நோக்கிக்கொள்ளுதல் நமது எழுத்துத் திறனை மேம்ப்படுத்தும். கதாசிரியை அறியாததொன்றல்ல இது.
மனமார்ந்த நல்வாழ்த்துகளும் மனநெருக்கடி இல்லா வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்லோன் அந்த ஒருவனை வேண்டிக்கொண்ட வேண்டுதலும் உங்களுக்கு உரியதாகட்டும். நன்றி.
உலகத்தில் என்னை டென்ஷன் ஆக்கதே அப்புறம் மனிதனாய் இருக்க மாட்டேன் என்பது தான். அப்போ கோபம் வந்தால் மனிதனாய் இருப்பது இல்லை.
ReplyDeleteகோபத்தை தவிர்த்தால் மனிதன் மனிதனாய் இருப்பான்.
எல்லோருடனும் அன்பாய் பேசி வேலை வாங்க தெரிந்து இருக்க வேண்டும் மேல் அதிகரிகளுக்கு,
அப்போது இன்னும் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள் அவருக்கு கீழ் உள்ளவர்கள்.
நகைச்சுவையாய் எல்லோரும் சினம் தவிர்த்து உடல் நலத்தோடு இருக்க அருமையாக கதை சொல்லிவிட்டீர்கள் மஞ்சுபாஷணி
சிறப்பான நகைச்சுவையுள் ஆழமான துன்பம்.
ReplyDeleteஆனால் சரியான நகைச்சுவை.
அழகிய எழுத்து நடை . இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்படைப்பு 25.12.2012 வலைச்சரத்தில் திருமதி உஷா அன்பரசு என்பவரால் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் சார்பில் நானே நன்றி தெரிவித்து பின்னூட்டம் கொடுத்து விட்டேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
நேரம் கிடைக்கும் போது 24/12/2012 + 25/12/2012 இரு நாட்களும் நான் வலைச்சரத்தில் எழுதியுள்ள பின்னூட்டங்களைப் படித்துப்பாருங்கோ.
http://blogintamil.blogspot.in/search/label/வகுப்பு-இரண்டாம்%20நாள்
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_6824.html
பிரியமுள்ள கோபு அண்ணா
அன்புள்ள மஞ்சு,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று திரு கோபு ஸார் கூறியிருந்தார் வலைச்சரத்தில். இந்தப் புதுவருடம் உங்களுக்கு எல்லா நன்மைகளும் கொடுக்கட்டும்.
அன்புடன்,
ரஞ்சனி
இன்றுதான் உங்க பக்கம் வருகிறேன் மேடம் . முதலில் உங்களுக்கும் உங்கள்குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத்தெரிவிச்சுக்கறேன். கதை ரொம்ப நல்லா இருக்குங்க. அவங்க நிலமையில் யாரா இருந்தாலும், ஏன் நாமாக இருந்தாலும் டென்ஷந்தாங்க வரும்.
ReplyDeleteஅன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
ReplyDeleteஅன்புள்ள மஞ்சு,
ReplyDeleteநாளை 20.02.2013 வலைச்சரத்தில் தங்களை நம் நண்பர் திரு. தி தமிழ் இளங்கோ அவர்கள் அறிமுகம் செய்வதாக உள்ளார்கள். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
தாங்கள் ஒருவேளை வலைச்சரம் பக்கம் வரமுடியாமல் சூழ்நிலைகள் இருக்குமாயின், நானே உங்கள் சார்பில் பின்னூட்டமிட்டு நன்றி கூறிக்கொள்வேன். இது தங்கள் தகவலுக்காக. Please take care of your health ..... Manju.
My dr akka due to this exam session i dnt hv time pubish our ibans drawings. soon it will be pubish akka. Im using mbl to type this comments. Tk cr of ur health akka
ReplyDeleteMy dr akka due to this exam session i dnt hv time pubish our ibans drawings. soon it will be pubish akka. Im using mbl to type this comments. Tk cr of ur health akka
ReplyDeleteவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html
தங்கள் கதையை படித்தவுடன் டெண்ஷன் போயி வயிற்று வலி வந்தாது போங்க
ReplyDeleteநலமா சகோதரி ?
ReplyDeleteநான் தான் வலைப்பக்கம் நீண்ட நாட்களாக வரவில்லை என நினைத்தேன். தாங்களுமா ?
எல்லாப் பிரச்சினைகளும் தீர பிரார்த்திக்கிறேன்.
சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு மூத்த பதிவர் GMB அவர்கள் தமது வலைப் பதிவில் உங்களை பாராட்டி எழுதியுள்ளார்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
http://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_8.html
துக்கடா சார் போல் நிறைய இடத்தில் இருக்கின்றார்கள்.
ReplyDeleteஉங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி, லிங்க் இதோ http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_16.html
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தங்கமணி....
Deleteநலம் தானா? வானவில்லுக்கு வரவும்...
ReplyDeleteவந்தேன்னு நினைக்கிறேன் மோகன் ஜீ.. திருச்சி வந்தும் உங்களை பார்க்க இயலவில்லை. ஏன்னா முந்தின நாள் வந்தேன் :)
Deleteநலமா சகோதரி ?
ReplyDeleteசௌக்கியம்பா சிவகுமாரன்....
Deleteநலமா.................????????
ReplyDeleteஎன்னாச்சு??????????????????????????
இறையருளால் நலமே சிவகுமாரன். நீங்க சௌக்கியமாப்பா?
Delete/டென்ஷன் பில்குல் லேனேக்கா நஹி..தேனேக்கா சப்கோ…//
ReplyDeleteஹா ஹா யஹ் பாத் சஹி,
மே ஆஜ் சே ஷுரு கர்தி ஹூ டென்ஷன் சப்கோ தேனேக்கோ///
டீ க்கே...
அன்பு நன்றிகள்பா ஜலீலா கமல்...
Deleteஅன்புள்ள மஞ்சு, வணக்கம்.
ReplyDeleteஇன்று 25.07.2013 வலைச்சரத்தில் முதல் அறிமுகமே உங்களின் வலைத்தளம் தான்.
http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
என்னுடைய வலைப்பூவில் நான் எழுதவில்லை என்றாலும் நிறைந்த அன்புடன் என் மேல் கொண்ட அக்கறையுடன் எல்லோரும் இங்கே வந்து கருத்துகள் எழுதி என்னைப்பற்றி நலன் விசாரித்து.... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....
ReplyDelete