22.
கண்ணனாய் பிறந்தாய் தேவகி துயர் தீர்த்தாய்
கீதையாய் மலர்ந்தாய் பாண்டவர் குறை தீர்த்தாய்
உனைச்சேராது வாழ்க்கை வீணென்றான போதும்
துறவியாய் வாழ வழிகாட்டுவாய் கண்ணா...
23.
மலரும் மலர்களின் உள்ளிலும் உயிராய் நீ
கனவின் கற்பனையில் காதல்இணையாய் நீ
மதிமறந்த வேளையிலும் என்மனதில் நீ
என்னுள் உயர்ந்த உத்தமனே கண்ணா
24.
குழலூதி குறைகளை முற்றிலும் தீர்த்தாய்
மழலையாய் என்மனதில் நிறைந்து நின்றாய்
கேட்காது வரங்களை அள்ளிக் கொடுப்பவனே
கேட்கிறேன் உனையே தருவாய் என்றோ கண்ணா
Tweet |
உருக வைக்கும் வரிகள்... அருமை...
ReplyDeletetm1
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன்...
Deleteமலரும் மலர்களின் உள்ளிலும் உயிராய் நீ
ReplyDeleteகனவின் கற்பனையில் காதல்இணையாய் நீ
மதிமறந்த வேளையிலும் என்மனதில் நீ
என்னுள் உயர்ந்த உத்தமனே கண்ணா.
மெய் மறந்து நிற்க வைத்த வரிகள் அக்கா.
நீலவண்ண கண்ணா வாடா அப்டின்னு பாடச்சொல்லி கேட்ட தங்கம் தானே நீ....
Deleteமிக்க மகிழ்ச்சி சசி....
ஒவ்வொரு வரிகளும் ரசிக்கவைக்கின்றன.
ReplyDeleteமனதை மயக்க வைத்த வரிகள் நன்றி..
ReplyDeleteஅழகு ... அழகோ அழகு. ;))))) அனைத்து வரிகளும்.
ReplyDeleteபடத்தேர்வு ரொம்பப்பிரமாதம். சந்தோஷமாக உள்ளது.
பாராட்டுக்கள் மஞ்சு.
அன்புடன்
கோபு அண்ணா
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...
Deleteஅருமை அருமை
ReplyDeleteகண்ணன் குழலுக்கு மயங்கிய ஆவினமாய்
கண்ணன் மீதான பக்த மீராவின் அன்பில் காதலில்
கவிதையில் மயங்கினோம்
தொடர வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்....
Deleteகுழலூதி குறைகளை முற்றிலும் தீர்த்த கோவிந்தனைபாடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅற்ப்புதமான வரிகள் நெஞ்சத்தை தொடுகிறது.
ReplyDeleteவாழ்த்துகள் தோழி.
அன்பு வரவேற்புகள்பா ஆகாஷ்....
Deleteமனம் நிறைந்த அன்புநன்றிகள்...
நாம் 23ஆம் பாடலை ஈண்டு நோக்கினால் பக்தையின் திறம் கூடுதலாகத் தெரிய வரும் என்று நினைக்கின்றேன்.
ReplyDeleteசிற்பமான வரிகள் அக்கா
நன்றி
அருமையான ஆக்கம் அக்கா...
ReplyDeleteமனம் லயித்துப் படித்தேன்....
நின்னை வரம் வேண்டினேன்
நீயன்றி எனக்கு
வேறொன்றும் அறியேன்
உனையன்றி என்னில்
யாதொருவரும் இலரே
உன் கருணை ஒன்று போதுமடா
என்னிருள் நீங்கி போகுமடா..
என்னை நான் மறந்திட
உன்னை நான் யாசிக்கிறேன்
என்னுள்ளே கலந்திடுவாய் கண்ணா....
கவிதை அருமை. கேடக வேண்டாம் அவனே அள்ளி தருவான் உண்மை!.
ReplyDelete''...கேட்காது வரங்களை அள்ளிக் கொடுப்பவனே
ReplyDeleteகேட்கிறேன் உனையே தருவாய் என்றோ கண்ணா...
இனிய பக்தி வரிகள்.
இரசித்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அன்பின் மஞ்சு - பக்த மீரா காதலில் இருந்து பக்திக்கு மாறி விட்டாரே - பாடல்கள் அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete