"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, March 24, 2014

நட்பு....


” உன்னை தினமும் பாக்கணும் “

ம்ம்…

” உன்கிட்ட தினமும் பேசணும் “

சரி…

” எனக்காக ஒரு பாட்டு பாடணும் தினமும் “

சகிச்சுப்பியா?

உன்னை ரொம்ப பிடிச்சதால தானே கேட்கிறேன். 

சரி சரி.. அது ஏன் ஒரு பாட்டு?

சரி உன்னிஷ்டம்… என்னை தினமும் காலைல எழுப்பறச்சே பாட்டுப்பாடி எழுப்புவேன்னு சொன்னேன்.

அதுல எதுக்கு கஞ்சத்தனம்? நைட் தூங்கும்போது ஒரு தாலாட்டு?

” இதுவும் நல்லாத்தான் இருக்கு..”

ஸ்ரீ… என்னைப்பாரேன்…

” உன்னைப்பாக்கலன்னாலும் நீ சொல்றதை காதுக்கொடுத்து கேட்டுட்டு தானே இருக்கேன். இந்த கடல் அலைகளுக்கு மட்டும் ஓய்வே கிடையாதா? பாரேன் ஓய்வே இல்லாம அலை வந்து வந்து வந்து நம்பிக்கையோடு என் அழகைப்பார்னு நம்ம காலைத்தொட்டு கூப்பிட்டு கிச்சுக்கிச்சு மூட்டுதுல்ல? “

” நான் உன்கிட்ட பேசறதுக்கு தான் பீச்சுக்கு வரச்சொன்னேன். நீ கடல் அலைய ரசிச்சுக்கிட்டு இருக்கே.. என் மனசு உனக்கு புரியவே மாட்டேங்குது.. இந்த கடலும் அலையும் எப்பவும் இருக்கத்தான் செய்யும்… “

” அதேப்போல் நீயும் நானும் நம் நட்பும் எப்பவும் இருக்கும் பார்க்கவி..” 

“ ஸ்ரீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. “

“ நல்ல விஷயம் தானே பார்க்கவி? இதை சந்தோஷமா தான் சொல்லேன்? “

” ஸ்ரீ நீ நிஜமா தான் சொல்றியா? இல்ல என் மனசு உனக்கு புரியலையா? “

பார்க்கவியின் கண்கள் கண்ணீர் கொட்ட தயாராக இருந்தது.. மூக்கு விடைத்து உதடு துடித்து.. வந்தே விட்டது கண்ணீர் கன்னத்தில் உருண்டு… 

ஸ்ரீ முன் தான் இப்படி தலைக்குனிந்து காதலுக்கு யாசிப்பதை தன் ஈகோ விரும்பவில்லை என்பது அவள் தலையை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதில் உணரமுடிந்தது..

ஸ்ரீ அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை சிமிட்டாமல் உற்று நோக்கினான்.

அவன் பார்வையின் தீக்ஷண்யம் தாங்காமல் தலை குனிந்துக்கொண்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நாம எப்ப முதன் முதலா சந்திச்சோம்னு நினைவிருக்கா உனக்கு? “

“ ஏன் இல்ல? ரெண்டு பேரும் ஒன்னா இந்த கம்பனிக்கு இண்டர்வ்யூக்கு வந்திருந்தோம். ஒன்னாவே செலக்ட் ஆனோம்.. ஒன்னாவே ட்ரெயினிங் முடிச்சோம். சீட்டும் பக்கத்து பக்கத்துல… இன்னியோட 5 வருஷம் முடியப்போறது “

“ இந்த 5 வருஷத்துல உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யார் பார்க்கவி? “

“ சொல்லனுமா? சிடுமூஞ்சியா இருந்த என்னை சிரிக்கவெச்சே.. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் அழகை ரசிக்க வெச்சே… ரோட்டில் நடக்கும்போது யாராவது பிச்சை எடுத்து வந்தால் அவங்கக்கிட்ட கூட சிநேகமா தோளில் கைப்போட்டு பேசி என்னையே திகைக்க வெச்சே இப்படி நிறைய… தினமும் ஒரு அற்புதம் நடத்துவே.. பார்க்கிறவங்களுக்கெல்லாம் அது சாதாரணமா இருந்தாலும் எனக்கு மட்டும் அது ஆச்சர்யமா இருக்கும் நீ நீயே தான்பா என் பெஸ்ட் ஃப்ரெண்ட் “

பார்க்கவி கண்களை மூடிக்கொண்டு எங்கோ சஞ்சரிப்பதை ஸ்ரீ உணர்ந்தான். 

பார்க்கவியின் தோளைத்தட்டி…. “ உனக்கு இப்ப என்ன ப்ரச்சனை பார்க்கவி சொல்லு “ என்று கேட்டுக்கொண்டே மணலை அளைந்தான்.

மறுபடியும் ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்க சொல்றியா ஸ்ரீ? அதான் சொன்னேனே… தினமும் உன்னை பாக்கணும் உன்னிடம் பேசணும்.

இதைக்கேட்டதும் ஸ்ரீ சிரித்தான்.. “ லூசு தினமும் அதானே பண்றோம் ஆபிசுல? “ என்றான்.

“ நீ புரிஞ்சுக்கலையா ஸ்ரீ என் காதலை? நான் இப்படி வெட்கத்தை விட்டு என் காதலை சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறியா ஸ்ரீ ? சோகத்துடன் கேட்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அந்த எல்லையை நான் என்னிக்குமே தாண்டினதில்லை… தாண்ட முயற்சித்ததும் இல்லை… அதைத்தாண்டி உன்னை வேறவிதமா என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியலை உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது பார்க்கவி? 

” ஸ்ரீ உன்னோட ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் என்னை உன்னிடம் ஈர்க்க வெச்சுட்டுது.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணித்து. “

“ பார்க்கவி…. காதலுக்குள் நட்பு இருக்கணும்… அப்ப தான் இருவருக்குள் நல்ல புரிதல் இருக்கும்… ஆனால் நட்புக்குள் காதல் வந்தால்… காதலும் நிலைக்காது…. நட்பையும் இழக்கும் அபாயம் இருக்கு பார்க்கவி…சப்போஸ் நீ சொன்னது போல நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்னே வெச்சுக்கோ…. ஏதாவது நமக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரலாம் இல்ல ப்ரச்சனை வரலாம். அப்ப உன்னால என்னை நண்பனாவும் பார்க்க முடியாது காதலனாவும் பார்க்க முடியாது கணவனா உன் கண்முன்னாடி நிப்பேன் உன் ஈகோ என் மேல் ஈட்டி எறியும்… பதிலுக்கு என் ஈகோ தடுக்கவோ உன்னை சமாதானப்படுத்தவோ முயலாமல் உன்னை மட்டம் தட்ட முயலும்..என் மேல் உனக்கு கோபம் வெறுப்பு ஆயாசம்… ச்சே இவனைப்போய் கட்டினோமே.. இப்படி எல்லாம் எண்ண வைக்கும்…”

எனக்கு நட்பு ரொம்ப நல்லாருக்கு பார்க்கவி… நாம நட்புடனே இருப்போமே அவள் கண்களைப்பார்த்து சொன்னான் ஸ்ரீ.

” நான் அழகா இல்லையா ஸ்ரீ? என்னை பிடிக்கலையா உனக்கு? நீ வேண்டாம்னு சொன்னா இப்பவே இந்த கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிப்பேன் “ மூக்கு சிவக்க உதடுகள் துடிக்க கண்ணீர் கண்களுடன் கெஞ்சினாள் பார்க்கவி.

ஸ்ரீக்கு தர்மசங்கடமானது…. நீ ஒரு தேவதை பார்க்கவி. என்று சொல்லும்போது ஒரு பந்து வந்து அவன் முகத்தை உரசி கீழே விழுந்தது. “ அங்கிள் பால் தாங்க “ என்று கேட்டபடி 5 வயது குழந்தை ஓடி வந்து பூவாய் சிரித்து பாலை ஸ்ரீயிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றது.

” பார்க்கவி…. எப்பவும் நாம நட்புடனே இருக்க முடியாதா? “

“ நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிருக்கோமே நண்பர்களா இருந்தோம் இதுவரை இனி காதலித்தால் என்னவாம்? முனகினாள் பார்க்கவி.

“ என் மனசுல உன்னை அப்படி ஒரு தடவை கூட நினைச்சு பார்க்கல பார்க்கவி.. இனியும் என்னால அப்படி முடியும்னு தோணலை… நட்பை நான் மதிப்பவன்… நட்புக்குள் ஆண் பெண் என்ற பேதம் வயசு அழகு நிறம் படிப்பு இதெல்லாம் அவசியமற்றது… நட்பு நட்பாகவே இருந்தால்... அது நிலைத்து இருக்கும் பார்க்கவி...

அதே நட்புக்குள் காதல் நுழைந்தால் இவள் எனக்கு மட்டும் தான். இவன் எனக்கு மட்டும் தான் என்ற பொசசிவ்நெஸ் வரும். அது கொஞ்சம் கொஞ்சமா சந்தேகத்துக்கு வழி விடும்.. இப்படியே பிரிவு வரைக்கும் கொண்டு போயிரும்… அப்படி ஆகும் நிலை வந்தால் காதலும் நிலைக்காது… நட்பும் நிலைக்காது…. “ அதை விட இப்படி நட்புடனே இருந்துப்பார் ..என்ன சிரமம் உனக்கு?

ஸ்ரீயின் எந்த பதிலும் பார்க்கவியை சமாதானப்படுத்தவில்லை.

ஸ்ரீயின் முதுகில் படார்னு ஒரு அறை விழுந்தது… அதோடு குரல் வேறு…”ஹே பாஸ் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு… அட பார்க்கவி.. என்ன ரெண்டு பேரும் இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு கடலை விலைக்கு வாங்க பலமான யோசனை நடக்குது போல? என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தாள் மீனலோசனி இருவருடன் ஆபிசில் பணிபுரிபுவள்.

மீனலோசனி ஸ்ரீயிடம் காட்டும் நெருக்கம் பார்க்கவிக்கு சந்தோஷம் தரவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு அலைகளை வேடிக்கைப்பார்ப்பது போல் பார்த்தாள்.

“ என்ன பார்க்கவி என்ன விஷயம் உன் முகம் சோகமா இருக்கு? ஐஸ்க்ரீம் கேட்டால் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டானா? கஞ்சன் என்று சொல்லி ஸ்ரீயின் தலையில் குட்டினாள் மீனலோசனி.

இவற்றுக்கெல்லாம் அமைதியாக சிரித்துக்கொண்டே இருந்தான் ஸ்ரீ.

பார்க்கவிக்கு கோபம் தலைக்கேறியது. தன் கண்ணெதிரே தன் மனம் விரும்பியவனிடம் இத்தனை நெருக்கமாய் முதுகில் அடிப்பதும் தலையில் குட்டுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை.. இவன் இப்படித்தானோ? எல்லா பெண்களிடமும்.. மனம் முதல் முறையாக சந்தேகப்பட்டு அவனிடம் கொண்ட காதல் சரியா என்று யோசித்தது…. சடுதியில் மனித மனம் குரங்குப்போல் தாவுகிறதே என்று தலையில் அடித்துக்கொண்டாள் பார்க்கவி…

பார்க்கவின் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் அவள் முக குறிப்புகள் உணர்த்தியது. 

ஸ்ரீ அமைதியாக பார்க்கவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பார்க்கவியின் கவனமோ மீனலோசனி இன்னும் ஸ்ரீயை என்னென்ன தொந்திரவு செய்வாளோ என்ற பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததை ஸ்ரீ கவனித்துக்கொண்டிருந்தான்.

பார்க்கவியின் மனம் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தான் ஸ்ரீ…

பார்க்கவின் மனம் இனி தன் வசப்படாமல் இருக்க என்ன செய்வது என்ற யோசனையுடன் உடையில் ஒட்டி இருந்த மணற்துகளை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான். 

“ இருட்டிடுத்து மீனலோசனி. நாளை ஆபிசில் பார்ப்போம். 

பார்க்கவி உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன் எழுந்து வா என்று பார்க்கவி எழ கைக்கொடுத்தான் ஸ்ரீ..

“ நான் டி நகர் ரூட்ல தான்பா போறேன். நானே ட்ராப் பண்ணிடவா? நீ அவளை விட்டுட்டு திரும்ப தாம்பரம் போகணும் “ என்று சொன்ன மீனலோசனியை அனல் தெறிக்க பார்த்துவிட்டு ஸ்ரீயிடம் “ வேண்டாம் ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கறேன் “ முறைப்பாய் சொல்லிவிட்டு மீனலோசனி பக்கம் திரும்பாமல் ஆட்டோ என்று அழைத்து ஏறி அமர்ந்து போய்விட்டாள் காற்றாய்.

“ என்னாச்சு பாஸ் எனிதிங் ராங்? பார்க்கவி கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கலந்தமாதிரி இருப்பது போல தோணுதே? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? “ தர்மசங்கடத்துடன் மீனலோசனி கேட்க

“ ச்சே ச்சே அப்டி எல்லாம் ஒன்னுமில்லப்பா.. கொஞ்சம் டயர்ட் அவ்ளோ தான்.. நாளை சரியாயிருவா சரி நான் கிளம்பட்டுமா “ என்று சொல்லிக்கொண்டே செருப்பணிந்து நடக்க ஆரம்பித்தான் தன் வண்டி பார்க் செய்த இடம் நோக்கி ஸ்ரீ..

” பார்க்கவி மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்பட நான் காரணமா இருந்துட்டேனே.. இனியும் அவளுடன் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்வது இன்னும் அவளை துன்புறுத்துவதற்கு சமம்…

வேண்டாம். கொஞ்ச நாட்கள் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொள்ளவேண்டும்…

மும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் “

என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ

23 comments:

  1. மும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் “

    என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ…//

    இல்லை..சரியில்லை..தப்பான முடிவு..!1

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க :)

      Delete
  2. நட்பைப்பற்றிய மிகவும் அழகான கதை மஞ்சு.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    இருப்பினும் என் வோட்டு அந்த பார்க்கவி கட்சிக்கு மட்டுமே.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. அண்ணா என்ன நீங்களும் இப்படி சொல்லிட்டீங்க...

      Delete
  3. மும்பை போயிட்டு வரட்டும். அப்ப என்ன தோணுது ஸ்ரீ க்குன்னு பார்க்கலாம்!!!

    ReplyDelete
    Replies
    1. அதானே மும்பைக்கு போன ஸ்ரீயின் மனநிலை எப்படி இருக்கும் இதன்பின்னர்? அருமையான யோசனைப்பா..

      Delete
  4. எனக்கென்னவோ இது ஸ்ரீ செய்கிற
    இரண்டாவது தவறாகப் படுகிறது
    உணர்வுப் பூர்வமான அருமையான படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் தவறு ஸ்ரீ பார்க்கவிக்கு நோ சொன்னதா ரமணி சார்? :)

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணிசார்..

      Delete
  5. நட்பு காதலில் முடிவதில் எனக்கும் இஷ்டம் இல்லை. என் ஓட்டு ஸ்ரீக்கு தான்....

    ஆணும் பெண்ணும் ஏன் நட்பாக இருக்கவே முடியாதா? இல்லை இருக்கக் கூடாதா......

    நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹை எனக்கு சப்போர்ட் :) தாங்க்யூ வெங்கட்...

      Delete
  6. //ஆணும் பெண்ணும் ஏன் நட்பாக இருக்கவே முடியாதா? இல்லை இருக்கக் கூடாதா...//அதானே?
    ஸ்ரீ கரக்டா முடிவெடுத்திருக்கார்!
    but பார்கவி மாறுவது சந்தேகமே!
    நட்பை போற்றும் நளினமாய க(வி)தை !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பண்றதே இந்தப்பிள்ளை :)

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மைதிலி கஸ்தூரிரங்கன்

      Delete
  7. வெங்கட் சாரோட கருத்துதான் என்னோடதும்....முக நூலிலேயே அதைத்தான் சொல்லியிருந்தேன்..

    ReplyDelete
  8. மனம் தொட்ட பகிர்வு வாழ்த்துக்கள் அக்கா .

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கை...

      Delete
  9. நட்பு வாழட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஸ்ரீ எடுத்திருப்பது சரியான முடிவுதான். பார்கவியின் மனத்தில் காதல் தோன்றியவுடனேயே ஸ்ரீ இன்னொரு பெண்ணுடன் சிநேகமாய்ப் பழகுவதை அவளால் ஏற்கமுடியவில்லையே... அவனுடன் திருமணமாகிவிட்டால்... இது பெரிய பிரச்சனையை அல்லவா உண்டாக்கும்? கசக்கி முகர்வதை விடவும் நல்ல அபிமானத்துடனே விலகுவது எவ்வளவோ மேல் அல்லவா? நல்லதொரு கதையைப் படைத்தமைக்குப் பாராட்டுகள் மஞ்சு.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் கீதா....

      பூவை கசக்காமல் காக்க வேண்டும்.. குழந்தையை அன்பாய் கொஞ்ச வேண்டும்... தனக்கே தனக்கென்று உரிமை கொண்டாட ஆரம்பித்தால் துன்பம் குழந்தைக்கே... நட்பும் அதே போல் தான்.... சௌக்கியமாப்பா கீதா? மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கீதா..

      Delete
  11. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  12. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் தளத்தை அவரது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. உங்களது தளம் பற்றி நான் அறிவேன். பாராட்டுக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  13. பிரிந்து மும்பை சென்ற ஸ்ரீ தானும் பார்கவிமேல் காதல் கொண்டிருந்ததை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்து பார்கவியின் கை கோர்ப்பான் என்பது எதார்த்தம்.

    கற்பனைகள் வேறு எதார்த்தங்கள் வேறு.

    உணர்வு பூர்வமான கதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...